4.30.2011

என்னிலை விளக்கம்

நான் என்னை பற்றி (about me ) இவ்வாறாக குறிபிட்டுள்ளேன் "வேர்கள் அறுந்து வெளிநாட்டில் வாழும் நான் , வலை பதிவு எனும் விழுதின் துணையுடன் மண்மணம் தேடுகிறேன் ..." இதை படித்த என் நண்பர் (பெயரை சொன்ன திட்டுராறுங்கோ)  இதை பொய் என்றார் . 

           பொய் என்று நண்பர் சொனதற்கு காரணம்  நான் வெளிநாட்டில்  இருந்தாலும் மனைவியுடன் இருப்பதால் வேரருந்துவிடவில்லை என்பதே ஆகும் ."ஊரை  விட்டு  எங்கயோ   வேர்  அறுந்து  நிக்கிறேன்
கூடு தந்த  கிழி  பெண்ணே  உன்னால  தான்  வாழுறேன்" என்ற
பாடல் எனக்கு பொருத்தமான பாடல் .சரி விஷயத்திற்கு வருவோம் .

  "வீடு என்பது ஓர்  அஃறினை பொருள் தான் " அதில் வாழ்தல் மனிதர்கள் மட்டுமே   புரிந்துகொள்ள கூடிய ஓர் உணர்வு .மனித உணர்வுகளை வார்த்தைகளுக்குள் அடைக்க இயலாது . நாட்டுபற்றும் மொழிபற்றும்   கூட அவ்வகையானதே. 
 உலகில் எங்கு போய் நாம் திரவியம் (பணம் தாங்கோ ) தேடினாலும் செல்வசெழிபுடன்   வாழ்ந்தாலும்   பிறந்த நாட்டை பிரிந்து இருக்கும் போது சட்டென்று தோன்றி மறையும் வெறுமையை மறைக்கவும் மறுக்கவும் இயலாது .வெறுமை என்று ஓர் வார்த்தைக்குள் அடைக்க முடியாத உணர்வு .

இதோ நான் படித்த கல்லூரியில் இருந்து அலுமினி association அழைப்பு வந்திருக்கு என்னை தவிர எல்லா நண்பர்களும் அங்கு வருவார்கள் .பிறந்த நாட்டில் வாழும் போது பஸ் பயணத்திலோ ,கோவிலிலோ ,பாங்கிலோ யாராவது ஓர் நண்பனையோ உறவையோ பார்த்து உற்காகமஅடைய வாயிப்பு அதிகம் உள்ளது .  இவையெல்லாம் நான் இழந்தவை .
 
மேலும் ,நடந்து முடிந்த தேர்தல்  ,ஓட்டிற்கு கிடைத்த துட்டு ,IPL கிரிக்கெட், ARரஹ்மான் கச்சேரி ,டி கடை (வடை பஜ்ஜி ப்ளாக் அல்ல ), முட்டை மாஸ் ,குண்டும் குழியுமான ரோடு ,பஸ்ஸில் ஜன்னலோர பயணம் ,வாட்டும் வெயில் ,விரட்டும் மழை , தூசு காற்று ,அக்கம் பக்கத்தார் , நண்பர்கள் , எத்துனை எத்துனை இழப்புகள் . தாயின்  அன்பு ,தந்தையின் திட்டு , சொந்தங்களின் விமர்சனம் போனில் கேட்டாலும் நிஜம் போல் இனித்திடுமா ?

இந்நாட்டவர் "நீ இந்தியானா " என்று கேட்கும்போதெல்லாம் நான் அன்னியபடுகிரேன் ? பிழைபிற்காக திணிக்கப்பட்ட  மொழியை அரைகுறையாக பேசித்திரியும் போதெல்லாம் அன்னியபடுகிரேன் ?
 கூழோ கஞ்சியோ சொந்தமண்ணில் குடிப்பவன் தான் ராஜா . நானெல்லாம் கோழைத்தனமாக வெறும் கூடாக வாழும் புழுக்கள் தான் .
 
எனவே இப்ப சொலுங்க நான் சொன்னது பொய்யா ? ( ஒரு வழியா முடிச்சுட்டேன் )

 







                                  


ஹையோ ஹையோ நானும் எழுதறேன்

  நண்பர்களே ......
                     என்னத்த நம்மல்லாம் எழுதபோறோம் என்ற கேள்வியோடு தொடங்குகிறேன் . நான் அரசியல்,இலக்கியம் இரண்டிலும் நுனிப்புல் மேன்தவனே (ஒத்துக்குறேன் அரைகுறை தான்  கொஞ்சம் decent  ஆக சொன்னேன் ) . அதே சமயம் நிறைய படிக்க விருப்பம் உள்ளவன் . 

கட் ,காப்பி ,பேஸ்ட்  என்கிற தாரக மந்திரத்தோடு தான் பதிவை  சுடதோனுதே என்று பேர்  வைத்தேன் . ஆனால் நண்பர் கசாலி காப்பி ,பேஸ்ட் பதிவர் ஒரு பதிவை போட்டு , என் திட்டத்தை டூமில் ஆகிட்டார் .காப்பி அடிப்பது தப்புன்னா கம்பராமயணமே காப்பி தான் . ஆனால் கம்பனிடம் ஓர் நேர்மையும் தனித்துவமும் இருந்தது. அது மிஸ்ஸிங் அதான் நண்பர் கசாலி அவர்களின் வருத்தம் .நான் கொஞ்சம் நேர்மையா காப்பி அடிக்கபோறேன்.(எப்படி என் வில்லத்தனம் )
              நான் ரசித்தவை, நெகிழ்ந்தவை ,பாதித்தவை இப்படியாக எங்கிருந்தாலும் சுடுவேன் உங்களோடு பகிர்வேன் .சொந்த சரக்கும் இருக்கு அதை நல்ல  மெருகேற்றி ஒப்படைகுறேன்."வாசகா  ஓ வாசகா நீ வாசி நாளை உன் எழுத்தில் நான் தெரிவேன் " என்னும்  கமலஹாசன் கவிதை கூற்றுப்படி  நாளை என் எழுத்தில் நான் படித்த எல்லா பதிவர்களும் தெரிவார்கள் .
     
        என் பதிவுகளில் அரசியல் கம்மியாகவும் கலை கொஞ்சம் தூக்கலாகவும் இருக்கும்.
 

 


4.29.2011

ரணகளமாக ராணா













வாழ்த்துக்கள் ......................................

4.27.2011

நண்பர் ரஹீம் கஸாலி அவர்களுக்கு நன்றி ....

என் இனிய நண்பர் ரஹீம் கஸாலி அவர்கள் என்னை பதிவுலகிற்கு அறிமுகம் செய்தார் . அறிமுகம் செய்து ஆறு மாசம்  ஆயிடுச்சு .என் சோம்பேறித்தனம் காரணமாக நான் இது நாள் வரை ஒன்னும் உருபடிய செய்யலை ... இனிமேல் ஏதாவது செய்து தொலை என்றும் என்னை ஊக்குவிக்கும் நண்பர் கஸாலி  அவர்களுக்கு நன்றி சொல்லி தொடங்குகிறேன் ...

"ரசனை என்னும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணைய கண்டேன் " அப்படின்னு ஒரு வைரமுத்து சார் பாட்டு இருக்கு . இந்த பாடல் வரியை மெய்ப்பிக்கும் நட்பு எங்களது . வாதம் விவாதம் கடந்து இன்று வலைபாயும் நட்பாய் தொடர்கிறது .
இந்த பதிவுலகில் நண்பர் கஸாலி  அவர்களின் பெயரை கெடுக்காமல் இருப்பதையே நான் சாதனையாக நினைகிறேன் . 

விரைவில் புது பதிவுடன் வந்து கொல்கிறேன் .....ஹி ஹி