7.31.2012

வாய மூடி சும்மா இருக்க முடியலை !!


UTV Entertainment
முகமூடி

பாடல் : வாய மூடி
இசை : கே
இயக்கம் : மிஷ்கின்
குரல் : ஆலாப் ராஜு

_____________________________________

வாய மூடி சும்மா இருடா!
ரோட்ட பாத்து நேரா நடடா!
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!
காதல் ஒரு வம்புடா!

#### நேற்று

கடிகாரம் தலைகீழாய் ஓடும்  - இவன்
வரலாறு எதுவென்று தேடும்!
அடிவானில் பணியாது போகும் - இவன்
கடிவாளம் அணியாத மேகம்!

பல நிலவொளிகளில்
தலை குளித்திடும் போதும்
இவன் மனவெளிகளில்
கனவுகள் இல்லை ஏதும்.

காணாமலே
போனானடா!
ஏனென்று கேட்காதே போடா !

#### இன்று

பார்வை ஒன்றில் காதல் கொண்டா,
எந்தன் நெஞ்செங்கும் நுண்பூகம்பம்?
பேரே இல்லா பூவைக் கண்டா,
எந்தன் வேரெங்கும் பேரானந்தம்?

என் தோற்றத்தில் மாற்றம்
காற்றெல்லாம் வாசம்
தானாக உண்டானதேனோ?

நீ வாழவென்று
என் உள்ளம் இன்று
தானாக ரெண்டானதேனோ?

ஓயாமலே
பெய்கின்றதே
என் வானில்
ஏனிந்தக் காதல்?

#### நாளை

நாளை என் காலைக்
கீற்றே நீ தானே!
கையில் தேநீரும் நீ தானடி!

வாசல் பூவோடு
பேசும் நம் பிள்ளை
கொள்ளும் இன்பங்கள் நீ தானடி!

கன்னம் சுருங்கிட நீயும்,
மீசை நரைத்திட நானும்,
வாழ்வின் கரைகளைக் காணும்
காலம் அருகினில் தானோ?

கண் மூடிடும்
அவ்வேளையும்
உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்!
 ----மதன் கார்கி 
இந்த பாட்டை கேட்டதில் இருந்து வாயை மூடி சும்மா இருக்க முடியலை ...பாடி கொண்டே இருக்கிறேன் ( பக்கத்தில் இருப்பவங்க தான் பாவம் ).. சினிமா பாடலில்  கடந்த காலம்,நிகழ்காலம், எதிர்காலம் என மாறி மாறி காதலை பதிவு செய்து இருப்பது பாராட்டுக்கு உரியது. நீங்களும் கேட்டு பாருங்க சகோஸ் 

நன்றி - மதன் கார்கி வலைபக்கம் 

7.30.2012

கிசு கிசுன்னா இப்படி இருக்கணும்! செம கிக்இந்த வீடியோவில் நீங்க பர்ர்க்க போவது இந்த உலகில் நாம் பார்க்க முடியாத பத்து இடங்களை தான். இதை பாருங்க சில இடங்கள் சாமானியர்கள் மட்டும் பர்ர்க்க முடியாதாம் சில எவருமே பர்க்கமுடியதாம்.

சரி  தாங்க ரகசியம் நாமே பாதுக்காக்கும் வரைக்கும் தான் அதற்க்கு நாம எஜமான்  .அது இன்னொருவருக்கு  தெரிந்து விட்டால்  அந்த ரகசியம் நமக்கு எஜமான் ஆகிவிடும் ,அப்புறம் அந்த இன்னொருவர் காலடி மண் எடுத்து நெற்றியில பொட்டு மட்டும் இல்லை இன்னும் கேகுரதேல்லாம் வைக்கணும் ..ஹி ஹி ..எனவே ரகசியம் காக்கப்படவேண்டும் . எப்படி இப்படி 

வந்தது வந்துடீங்க நாம போகவே கூடாத பத்து நகரங்கள்  எது ஏன் என்பதையும் பார்த்து விட்டு போங்க ..
டிஸ்கி :
உலக வரலாற்றில் முதன் முறையாக கிசு கிசு என்ற பெயரில் ஓர் பொது அறிவு  செய்தி பதிவு செய்து இருக்கிறேன்.. கின்னசுக்கு அனுப்பலாமா ...

7.26.2012

சிகரம் தொட்டது யாரு ?ராஜாவா A.R.ரஹ்மானா ?சிவாஜி- எம்.ஜி.ஆர்,ரஜினி-கமல்,விஜய்-அஜித்,சிம்பு-தனுஷ்...இப்படி நீளும் ரசிகர்களின் யுத்தங்களில் மேலே குறிபிடப்பட்டுள்ள எல்லா நடிகர்களும் குளிர் காயிந்து இருக்கிறார்கள்.அதிலும் இப்ப சமீப கால நடிகர்கள் இதை ஒரு வியாபார  தந்திரமாகவே பயன்படுத்துறாங்க.பாவம் அது அவர்களுக்கு தேவைபடுது.

ஆனால் திரைக்கு பின்னால் ஜொலிக்கும் ரெண்டு ஜாம்பவான்கலான இளையராஜா மற்றும் ரஹ்மான் இந்த ரெண்டு பேருக்குமே இப்படி ரசிகர்களிடம்   யுத்தம் நடத்தி அதில் குளிர் காயவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஏனோ அந்த யுத்தம் முடிந்தபாடில்லை. தொடரும் இந்த சலசலப்புக்கு என்னை ஊத்துவது என் நோக்கம அல்ல.


இளையராஜா அவர்கள் ஒரு சகாப்பதம். அவர் அறிமுகமான அன்னக்கிளி முதல் 90களின் தொடக்கம் வரை தமிழகம் முழவதும் அவர் கொண்டிருந்த இசை ஆளுமையை குறைத்து பேசினால் அது அபத்தம் . ஆயிரம் படங்களுக்கு இசை அமைத்து பல விருதுகள் வாங்கி குவித்து மிக முக்கியமாக
பாமர மக்களின் சுக துக்கங்களில் கூட ராஜாவின் இசை ஒரு அங்கம் ஆக இருந்தது. இதை மெய்ப்பிக்கும் வண்ணமாகவே சமிபத்தில் அரங்கேறிய நீயா நானா நிகழ்ச்சி அமைந்ததிருந்தது.

மீண்டும் ரசிகர்களின் யுத்தத்திற்கு வருவோம். இளையாராஜா ரசிகரோ ரஹ்மான்  ரசிகரோ இல்லை இப்போ வந்துள்ள அனிர்ருத்துடைய ரசிகரோ நீங்கள் நல்ல இசை எங்கு கேட்டாலும் ரசிப்பீர்கள். அதுவே உங்கள் ரசனைக்கும் நீங்கள் ரசிக்கும் அவருக்கும் பெருமையான விஷயம். மற்றவர் மீது சேற்றை வாரி இறைப்பதால் உங்கள் ரசனையும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் முடங்கி விடுகிறது , நீங்கள் ரசிப்பதாக சொல்பவருக்கும் சொல்லடிகள் (அவர் காதில் விழாது என்றாலும் கூட ) வாங்கி தருகிறது.

நல்ல இசை என்பது இளையராஜா மட்டும் தந்தார் என்று சொல்வதன் மூலம் ஒரு  மிக பெரிய இசை வரலாற்றையே டி .வி .டிக்குள் மறைக்கிரோமே இது தப்பில்லையா ??
எஸ்.ராஜேஸ்வர ராவ் ,எஸ்.வீ .வெங்கட்ராமன்,ஜி.ராமநாதன்,கே .வீ .மகாதேவன் ,விஸ்வநாதன் ராமமூர்த்தி இவர்கள் எல்லாம் காலத்தால் அழிக்க  முடியாத பல பாடல்களை தந்து இருக்கிறார்களே ?மேலும் இந்தி எதிர்ப்பு கடுமையாக இருந்த நேரத்தில்லும் தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் பரவி கிடந்த இந்தி பாடல்களும் மறக்க முடியாதவையே ? அந்த இசையை தந்த  நௌசாத், மதன்மோகன், S.D.பர்மன் , R.Dபர்மன்,லக்ஸ்மிகாந்த்-ப்யாரிலால் அவர்களையும் குறைத்து மதிப்பிடுவது தவறு இல்லையா?


அதே போல் மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள் அதற்கிணங்க அடுத்த தலைமுறை இசையை தொடங்கி வைத்தது ரஹ்மான்.அவர் இசை அமைத்தது மிக சொற்பமான படங்களே அதிலும் பல தோல்வி படங்கள் சில இசைக்காக மட்டுமே வெற்றி பெற்ற படங்கள் இதையெல்லாம் மீறி இந்திய திரை இசைக்கு உலக அங்கீகாரம் கிடைக்க முக்கிய காரணமாக விளங்குபவர். இவரையும் குறைத்து மதிப்பிட கூடாது.நம்ம சங்க காலங்கள் தொட்டே மிகைபடுத்துதல் என்பது நம் காலச்சாரதுடன் பிண்ணி பிணைந்து உள்ளது. ஏன் நாம் நம் குழந்தைகளை கொஞ்சும் போது கூட   மிகைபடுத்தி கொஞ்சுவதே வழக்கம். அதே போல தான் ரசிகர்களின் அன்பும் அவரவர் ரசித்ததை மிகைத்து பேசுகிறார்கள். ஆனால் தாங்கள் ரசித்தது மட்டும் தான் சிறந்தது என்று கூறும்போதும் அவர்கள் ரசிக்கும் ஒருவர் செய்யும் தவறுகளையும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் அபத்தம் இல்லையா ?

நல்ல மனிதனாக வாழ்வதற்கும்  பரப்பரப்பான  வாழ்க்கை ஓட்டத்தில் இருந்து இளைப்பாறுவதர்க்கும் நமக்கு உதவுவது ரசிப்புத்திறன் அதையும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் வைத்து பார்த்து நம்மை மேலும் சிறுமைப்படுத்தி கொள்வானேன்.

பல மேதைகளை கடந்து இளையராஜா வந்தது போல் இன்று ரஹ்மான் நாளை யாரோ ? இதில் உயர் வென்றும் தாழ்வென்றும் ஏதும் இல்லை என்பதே நிஜம் !!!!

                                            எதுவும் கடந்து போகும் !!!!
7.24.2012

ராமதாஸ் ஐயாவுக்கு அரசியல் செய்ய ஒரு டிப்ஸ்


இப்ப உள்ள அரசியல் கட்சிகளில் மதுவிலக்கு பற்றி தில்லா அறிக்கை மட்டும் விட்டு பரபரப்பு செய்வது நமது பா.ம.க மட்டுமே. அதற்க்கு முதலில் பாராட்டுகள். மேலும் எரியுற தீயில எண்ணெய் விடுவது போல நான் ஒரு செய்தி இல்லை இல்லை டிப்ஸ் என்றே வைத்துக்கொள்வோமே..

இப்ப வருகிற சினிமாக்கள் எல்லாத்திலும் மது அருந்துவது உடலுக்கும் குடும்பத்திற்கும் கேடு என்று கவனிக்க முடியாத படி ஒரு CAPTION  கொடுத்துவிட்டு குடியையும் விபாச்சரத்தையும் ஊக்குவிக்கும் பாடல்களும் காமெடிகளும் அதிகம் வருகின்றன. அதிலும் மிஸ்கின் மற்றும் சந்தானம்  என்னோமோ டாஸ்மார்க் கடை பிராண்ட் அம்பாசிடர் மாதிரி செயல் படுறாங்க.

ஆகவே ராமதாஸ் ஐயா அவர்களே ரஜினிகாந்த்,கமல்ஹாசன் பண்ணினா மட்டும் எதிர்த்து அரசியல் பண்ணலாம் என்பதை தாண்டி யார் செய்தாலும் தப்பு  என்று மீண்டும் குரல் கொடுங்கள். இதில் உறுதியா இருந்தா தாய்குலங்களின் ஆதரவு உங்களுக்கு பெருகும்.

எப்படி ஆரம்பிப்பது என்று யோசனை வேண்டாம். இதோ  விரைவில் தமிழில் வரப்போகும் சூப்பர் ஹீரோ திரைப்படமான முகமூடியில் குடி வாழ்த்து என்று பாடல் வருது. அதை தடை செய்ய சொல்லி போராட்டம் செய்யுங்கள் ஐயா.

இந்த மாதிரி திரை படங்களுக்கு குழந்தைகள் அதிகம் வருவாங்க இல்லையா அப்ப அந்த பிஞ்சு மனசுல நஞ்சை விதைக்குற மாதிரி இல்லை இந்த பாடல் இருக்கும்.

நாரதர் கலகம் நன்மையில் முடியும்ன்னு சொல்லுவாங்க நான் பத்த வச்சுட்டேன் ,இனிமேல் இதை யார் வேணாலும் ஊதி பெருசாக்குங்க .. இந்த சினிமாக்காரங்க திருந்தும் வரை ...

அந்த பாட்டு இது தான் இதை மிஸ்கின் எழுதி பாடி வேற இருக்காரு ... சமுக அக்கறை உள்ள கலையே காலம் கடந்து நிற்கும் என்பதை ஏன் இந்த வியாபார வக்கிர மனங்களுக்கு புரிவதில்லை ...

7.23.2012

பேஸ் புக்கை கலக்கும் தல அஜித்தின் பில்லா 2 விமர்சனம்

இவர் கனடா நாட்டை சேர்ந்தவர் பல தமிழ் படங்களுக்கு விமர்சனம் போட்டு யு டுபிலும்  பேஸ் புக்கிலும் கலக்கி கொண்டு இருக்கிறார். இவர் விஸ்வரூபம் பட  ட்ரைலரை கூட விமர்சித்து பல ரசிகர்களை பெற்றுள்ளார் .

7.19.2012

பட்டினி கிடப்பதற்கு பெயர் நோன்பா?
நண்பர்களே 
சகோதர சகோதரிகளே 

உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் இந்த மாதம் விரதம் இருப்பது உங்கள் நண்பர்கள் அண்டை வீட்டார்கள் மூலம் அறிந்து இருப்பீர்கள்.

அவங்க ஏன் இப்படி பட்டினி கிடக்கனும்?

ராத்திரி பூரா FULL கட்டு கட்டிட்டு காலையில விரதமா நல்ல கதை ?

இப்படி பல கேள்விகள் உங்களுக்கு இருக்கலாம் அதை எடுத்து சொல்லி 
நன்மையை கொள்ளை அடிக்க சித்தம் இன்று ...

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 2:184)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இறைவனின் கட்டளையின் அடிபடையில தான் முஸ்லிம்கள் விரதம் இருக்கிறார்கலாம் .அதாவது சூரியன் உதயாமாகியது முதல் (அட தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு எல்லாம் வரலை நல்லா படிங்க ) உண்ணாமல்  பருகாமல்   இருப்பார்கள் சூரியன் அஸ்தமனம் ஆகும் வரை.சரி  அப்ப ராத்திரியில FULL கட்டு கட்டிட்டு கவுந்து படுத்துருவாங்கலான்னா ? இல்லையாம் .. இந்த மாதம் முடிந்த வரை தூங்காமல் விழித்து இருந்து தொழுகையில் ஈடுபடுவான்கலாம் .

ஏன் ?
                         இந்த மனித வாழ்க்கை ஒரு பரிட்ச்சை என்றும் அதில் பாஸ் பண்ணுனா சுவர்க்கம் பெயில் ஆனா நரகம் என்றும் முஸ்லிம்கள் நம்புறாங்க.பாஸ் பண்ணுறதுக்கு நம்மை படைத்த இறைவன்  ஒருவனே என்றும் அவனோட வேதம் உண்மைன்னும் நம்பி தன் விருப்பங்களை இறைவனிடம்  சமர்பிக்கணும் நல்லவனா  வாழனும் பொய் சொல்லாம , திருடாமல், அளவு நிறுவைகளில் வியாபாரத்தில் நேர்மையா இருந்து ,அடுத்தவுங்க சொத்தை அபகரிக்காமல்,எந்த அப்பாவி உயிர்களுக்கும்  தீங்கு விளைவிக்காமல் வாழனும்.இறைவனை தொழுது வணங்கி வரணும் அப்ப தான் நீங்க பாஸ் 
      
இப்படி செய்ய சொல்லுறதுல  அவங்க அல்லாவுக்கு என்ன பயன் ?    
             நம்முடைய வணக்கங்கள் விரதங்கள் மூலம் இறைவனுக்கு ஒரு பயனும் இல்லையாம் .ஆனா இது மனிதனுக்கு ஒரு பயிற்சியாம் ஒரு வருடத்திற்கு ஒழுக்கமாய் இறைவனின் கட்டளைகளை பின்பற்றி வாழ ஒரு மாத பயிற்சியாம்,அதுக்கும்   நமக்கு அதிகமான பலன்களை அள்ளி தருகிறானாம் இறைவன்.

ஒரு நாளின் ஒழுக்கத்திற்கு ஐந்து வேலை தொழுகையும்,அடுத்து  வரும் ஒரு வருட ஒழுக்கமான வாழ்வுக்கு இந்த நோன்பும் மனிதனுக்கு பெரிய உதவி செய்யுறதா மனோத்தத்துவ ஆய்வுகள் கூறுதாம்.

இப்படி நல்லதே போதிக்குற மார்க்கத்துக்கு சில கருப்பு ஆடுகளால் கெட்ட பேர் ,அவங்க  கூட இந்த ரமலான் மாசத்தை  பயன் படுத்தி திருந்தி வாழ இது ஒரு வாய்ப்பாம்.


எப்படி ?

  இப்போ சில புகை பிடிக்கும் நபர்கள் கூட இந்த ஒரு மாத நேரத்தில் பக்தி முத்தி  புகை பிடிபிப்பதை நிறுத்திடு வாங்க ,அதை அப்படியே தொடர்ந்தால் யாருக்கு நல்லது யோசிச்சு பாருங்க. இப்படி எல்லா கெட்ட பழக்கத்துக்கும் குட் பை சொல்லாமாம் ..
பொதுவா ஒரு மொபைல் போன் சார்ஜ் இல்லாமல் போறமாதிரி மனுசனுக்கும் தன் ஆன்மிகத்தில் சார்ஜ் குறைய வாய்ப்பு உண்டு அதில் இருந்து மீண்டு கொஞ்சம் சார்ஜ் இப்படி வருசா வருஷம் எத்திக்கலாமாம் ...

அப்படின்னா இந்த பயிற்சி காலத்தில இருக்குற எல்லா நண்பர்களும் நோன்பு நோற்று அதன் பயனை முழுமையா பெறுவதற்கு வாழ்த்துக்கள் கூறிட்டு ஆபீட்டு ஆயிடுவோம் சரியா 

கடைசியா ஒரு பிட்டு :

உங்களுக்கு இந்த இனிய மார்க்கம் பற்றிய சந்தேகங்கள் ஏதும் இருந்தால் என்னை மாதிரி அரைவேக்காடு கிட்ட கேக்காம , நீங்க வேணும்னா இந்த வலைப்பக்கம் போய் உங்கள் எல்லா சந்தேக்களையும் தெரிந்து கொள்ளலாம்,ஏன் பட்டமே கூட வாங்கலாம் எல்லாம் இலவசமே.

உலகத்துலேயே அதிகமான மக்கள் தப்பா புரிந்து கொண்ட ஒரு மார்க்கம் இஸ்லாம் அதை மாற்றுவோம் வாங்க 


இதுவும் மீள் பதிவே ..

7.18.2012

மீண்டும் ஒரு மைல் கல் -A.R ரஹ்மான்
மைல் கல்லுன்னு தலைப்பு வைச்சு இங்கே வரவைச்சே வந்து பார்த்தா என்னோமோ பொடி எழுத்துல யாரோ நன்றின்னு சொன்னதா போட்டு இருக்கியே தம்பி ..என்ன இது.நாம தான் ரஹ்மானுக்கு கட் அவுட் முதல் பத்மா பூசன் வரை கொடுத்து அழகு பார்த்தாச்சே இது ஒரு சேதியா?

வாங்க அண்ணே ! வந்ததுக்கு நன்றி! ஹான்ஸ் சிம்மர் அப்படின்னு உலகின் முன்னணி இசை அமைப்பாளர் பல ஆஸ்கர் வென்றவர், 2011வருஷம் நம்ம ரஹ்மான் (127 Hours) இந்த ஹான்ஸ் சிம்மர் கிட்ட தான் (Toy Story 3) ஆஸ்கார்  விருதை இழந்தாறு.இப்ப அதே ஹான்ஸ் சிம்மர் அடுத்த படமான 'The Dark Knight Rises' வர்ற வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகுது .. அந்த படத்தின் இசை ஐtunesல  வெளியிட்டு இருக்காங்க. இசை வெளியானதுல இருந்து இந்த வருஷம் ஆஸ்கார் ஹான்ஸ் ஜிமேருக்கு தான்னு சொல்லிக்கிறாங்க. அதில தான் சிம்மர் ரஹ்மானுக்கு நன்றி அப்படின்னு சொல்லி இருக்காரு.ஓ அப்படியா ! சரி அவரு ஏன் A.R.ரஹ்மானுக்கு நன்றி சொல்லணும் ?


காரணம் தெளிவா தெரியலை. பொதுவா A.R.ரஹ்மானின் எதாவது ஒரு பாட்டையோ  அல்லது இசையையோ படத்துல யூஸ் பண்ணி இருந்தா  இப்படி நன்றி சொல்லுவாங்க .ஏற்கனவே Inside Man படத்துல  சைய சையா பாட்டை  யூஸ் பண்ணின மாதிரி.


பாம்பே தீம் மியூசிக் கூட ஏதோ இங்கிலீஷ் படத்துல வந்துச்சுப்பா !


ஆமா.இது பெருமையான விஷயம் தானே, உலகின் மிக சிறந்த  கம்போசர்   நம்மவர் இசையை  உச்சி முகர்ந்து ரசிச்சு  நன்றி சொல்லுறது 
இல்லையா பின்ன ! சரி இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஏதாவது வேலை பர்ர்க்க சாத்தியம் உண்டா?


சரியா போச்சு ஏற்கனவே இவங்க சேர்ந்து தான் சூப்பர் பேண்ட் (SUPER BAND) அப்படின்னு ஒரு குழு அமைச்சு ஆல்பம் வெளியிட போறாங்க. அதுல இருந்து ஒரு பாட்டை தானே ஆஸ்கர் சங்கமம் அப்படிங்குற பேருல ரஹ்மான் இந்த வருஷம் ஆஸ்கர் விழாவுல பாடினார் .
அப்படி போடு.. அப்ப அந்த பாட்டுல எதையாவது கூட இந்த படத்துல யூஸ் பண்ணி இருப்பாரோ?

 இருக்கலாம், அதை நம்ம ஆளு ரஹ்மான் வாய் திறந்து சொன்னா தான் உண்டு .

அட பெருமையா தாம்ப்பா இருக்கு !அப்ப நம்ம என்ன சொல்லணும்

எல்லா புகழும் இறைவனுக்கே !!


சென்ற வருட ஆஸ்கார் விழாவில் (A.R ரஹ்மான் ஹான்ஸ் சிம்மர் இணைந்து இசைஅமைத்த சூப்பர் பேண்ட் அல்பத்தில் இருந்து) பாடிய பாடல் 

7.17.2012

இன்று எனக்கு மரணம் தற்கொலை


இறுதி ஆசை ,இறுதியிலும் ஆசை 


பகலா இரவா தெரியவில்லை 
வீடா மருத்துவமனையா புரியவில்லை 
உடலுடன் உயிருக்கு இன்று என்ன கோபமோ 
முற்றிலும் பிரிவதற்கு தயாராகி விட்டது .

யார் யாரோ என் உணர்வற்ற கைகளோடு 
நேசமாய் இருக்க நிஜமாய் மன்னிப்பு கேட்ககூட 
முடியாமல் குரல் இழந்து நான்.
மொழியின் வலிமை புரிகிறது 
சிந்தையின் முடிவுரை சத்யசோதனையாய் விரிகிறது!

சூடான செய்தி தரும் செய்தித்தாள் கூடமறுநாள் 
சுவையான சாப்பாட்டிற்கும்  பொட்டலமாய் பயன்தரும் 
என் உடம்பின் சூடு ஆறும் முன்பே 
பயனற்று கிடக்குறேனே படுக்கையிலே!

நாடி அடங்கும் வேளையிலே 
ஆடி தள்ளுபடி கூட்டம் போல 
வந்து போகும் மக்கள் கண்டு 
நான் நல்லவனோ என்ற சந்தேகம் 

பொய்யுறைத்த கணங்கள் 
நண்பரின் மனமுடைத்த ஞாபகங்கள் 
வியாபாரத்தில் பதுக்கிய நாட்கள் 
நினைவலையில் தடுமாறிய பொழுதுகள் 
அத்தனையும் வர மீண்டும் சந்தேகம் 
எனக்கு சொர்க்கமா நரகமா?


சாதித்த வேளையிலே கைதட்டியோர் உண்டு 
சோதித்த பொது முகம் திருப்பியோரும் உண்டு 
போதித்தபடி  என் துணைநின்ற மனைவிக்கு 
இன்று போல் கண்ணீர் பலநாட்கள் என்னால்!
நான் பொய் அதிகம் உறைத்தது உன்னிடமே 
அவை அறிந்தும் அறியாமல் ஆதரித்தாய் 

தோழியாய் இன்றுவரை தொடர்ந்தவளே
இனி துரோகியாய் நான் இருக்கமாட்டேன்
விடைபெறும் நேரத்தில் உன் அழுகுரல் 
இசையாய் கேட்கயிலே முத்தமிட 
ஆவல் பொங்குதடி இது 
காதலா காமமா ?

இறைவா இன்று வலுக்கிறது வலி 
காட்சிகள் தர மறுக்கிறது விழி 
வலுவிழந்தபோது நாடினேன் உன் வழி!
பரிட்ச்சைக்கும் சிகிச்சைக்கும் 
இப்படியே நான் பழகிவிட்டேன்.

உன்னை கண்களால் கண்டிருந்தாலும் 
என் உள்ளம் இவ்வாறே இயங்கிருக்கும்.
நன்றி சொன்ன நிமிடங்களை விட 
உன்னை மறந்த தருணங்களே அதிகம்!
யாதுமானவனே இன்று 
ஏதுமில்லாமல் கேக்கிறேன் மன்னிப்பாயா!!

இறுதியாய் நான் திட்டிதீர்த்த பேரனின்
முகம் தேடி தோற்குது விழிகள் !
இமைக்க மறுக்கும் இமைகளில்
எனக்கு பிடித்த கருமை நிறம்
நிரம்பி நிற்கையிலே !

கருணை கொலை விவாதங்கள் ஓய்ந்து 
நான் விரும்பி அருந்தும் குவளையிலே 
என் மூச்சடைக்க பால் 
மீண்டும் மழலை போல 
புரிந்தும் புரியாமல் வாய் திறக்கிறேன் .
இது கொலையா தற்கொலையா ?

கேள்விகள் இன்றி வந்த நான்
கேள்விகளோடு விடைபெறுகிறேன் 
விடை தேடும் ஆசை மட்டும் 
துணையாய் இன்றும் என்னுடன் .

-முற்றும் 

எங்கோ படித்த மாதிரி இருக்கா ..ஆமாம் இது ஒரு மீள்பதிவு ..நன்றி 

7.16.2012

பதிவர் சென்னை பித்தன் ஐயாவுக்கு சவால்

சென்னை பித்தன் ஐயாவுடன் புலவர் ஐயா, 

சில நாட்களுக்கு முன்னாள் சென்னை பித்தன் ஐயா அவர்கள்.
மீண்டும் ஒரு காதல் கதை! என்று ஒரு பதிவு எழுதி இருந்தார்கள். மிக நல்ல பதிவு அந்த பதிவின் கருத்துரைகளை படிக்கும் போது ஸ்ரீராம். என்னும் பதிவர் ஒரு கேள்வி எழுப்பி இருந்தார். அந்த கேள்வி தான் இந்த கிறுக்கலுக்கு inspiration. நண்பர்களே மற்றபடி என்றுமே முதலிடம் வகிக்கும் ஐயாவுக்கு சவால் விடும் அளவுக்கு நான் வோர்த்து (WORTH) கிடையாது ஹி ஹி  ...

படிங்க பிடித்தால் வாக்களிக்கவும் பிடிக்கலை என்றால் திருத்தங்களை கமென்ட்டில் சொல்லவும் ...

மீண்டும்  காதலி  சினேகிதி 


அன்று அக்னி நட்சத்திரம்
சாலையில் தீடிர் மழை
கணவனுடன் நீ
என்னை கடக்கிறாய் .
கோடை மழை என்பதால்
மழை  அதிசயம்!  சந்தோசம்!
உன்னை பார்ப்பதும் அப்படியே !


மழைக்கு குடையாய்
உன் கணவனின் அக்கறை
கண்டு என் இதயம் லேசானது.

அந்த கணப்பொழுதில் உன்
பார்வை என் மீது இப்போது.
சிரிக்க மறுத்த உதடுகள்
உன் கண்ணியம் சொன்னது
இருத்தும் வலித்தது.
கலங்கிய விழிகள்
ஆறுதல் அளித்தன.

உன் கலக்கம் ஆறுதல் அளித்தாலும்
எனக்குள் கேள்விகள் எழுந்தன.
அது தவறோ என குழம்பினேன்
இன்றும் சுயநலமே தெளிவளித்தது !
என் மனைவி எந்நிலையிலும்
கலங்காதிருக்கும் வண்ணம்  காதல்
செய்ய சூளுரைத்தது மனம்.


-முற்றும்


ஒரு flashback 

இதுவும் கூட இதே கருபோருளில் தான் இங்கே போயி பாருங்களேன்7.15.2012

ஆணின் வக்கிரமும் பெண் மனமும்!!!


அலங்காரம் அதிகமானால்
விலை வைத்துவிடுகிறார்கள்
அலங்காரமே இல்லை என்றால்
விலைபோவதில்லை நான்!வியர்வை துடைத்து,அளவாய் சிரித்து
ஆண்களை எதிர்கொள்ளும் போதெல்லாம்
என் ஐம்புலனும் தன்னிச்சையாய்              
உடையை சரிசெய்து கொள்ள பழகிவிட்டது
நிச்சயமாய் கவனம் ஈர்ப்பதற்கு அல்ல!


பெண்ணியம் பேசும் பல
கண்ணியவான்கள் கண்கள் கூட
மத்தியில் நிலைத்து விடுகிறது .
தடுமாறும் வக்கிரத்தால்
நான் தடம் மாறாமல் இருக்க உதவும்
தலையங்கி,துப்பட்டா மட்டுமல்ல 
ரசம் போன கண்ணாடிகள் கூட
எங்களுக்கு இறைவன் தந்த பொக்கிஷமே !
இயக்குனர் ஷங்கரின் ஐ போஸ்டர்

அந்நியன்' கூட்டணி மீண்டும் இணைகிறது. ஆஸ்கர் பிலிம்ஸ், ஷங்கர், விக்ரம் இணையும் இப்படத்திற்கு தலைப்பு 'ஐ'.


முதல் முறையாக ஷங்கர் படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். விக்ரம் நாயகனாக நடிக்க, சமந்தா நாயகியாக நடிக்க இருக்கிறார். சந்தானம், சுரேஷ் கோபி ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள்.

இப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பின் மீண்டும்   நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகனும், பிரபுவின் அண்ணனுமான 'சிவாஜி பிலிம்ஸ்' ராம்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

'ஐ' என்றால் அழகு, அரசன், ஆசான், வியப்பு, மேன்மை மற்றும் இளி என்னும் இசையின் எழுத்து, எசமானன், நுண்மை, அம்பு, ஐயம் என பல பொருள்கள் உள்ளது.


இந்த படத்தின் படபிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது அதனையொட்டி, ஐ படத்த்தின் போஸ்டர் இன்று வெளியானது ...

7.12.2012

தமிழ் மீது கோபம் !! தமிழர்கள் கொதிப்புதேவதை என பாடிவிட்டார்கள்
இராட்சசி  எனவும்  பாடிவிட்டார்கள்
ஐயோ! இனி உன்னை எப்படி நான் பாடுவேன் !


வார்த்தை தேடி தோற்கும் கவிஞன் நான்
கம்பனுக்கு உதவிய தமிழே தமிழே
எனக்கு வார்த்தை தர மறுப்பதால்
உன் மீது கோபமே !

உன் பார்வை கடக்கும் போதெல்லாம்
தோற்று போகிறேன் நான் !
தமிழின் ஆயுள் நீடித்திருப்பதற்கு
என் போன்று தோற்றுப்போனவர்கள்
கூட காரணமாய் இருக்கலாம்
இதை நினைக்கையிலே உன் மீது
காதல் இன்னும் பொங்குதடி!

மீண்டும் ஒரு தரிசனம் தா
மீண்டும் ஒரு பார்வை பார்
நான் முழு கவிஞன் ஆகவேண்டும் !!

-ரியாஸ்

இப்படி கவிதை சொல்லி உங்களை என் கிறுக்கல்களை படிக்க வைத்தால் தமிழர்கள் கொதிக்க தானே செய்வார்கள் ...


7.11.2012

கமலஹாசனுக்கு விஸ்வருபத்தால் வரப்போகும் நஷ்டம்


வருமான வரித் துறையின் 150-வது ஆண்டு விழா  ஞாயிற்றுக்கிழமை (ஜூலை24  2011) சென்னையில் நடைபெற்றது. அவ்விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

அவ்விழாவில் தமிழக ஆளுநர் பர்னாலா கமல்ஹாசனுக்கு வரி ஏய்ப்பு செய்யாமல் இருந்ததற்காகவும், சரியான நேரத்தில் வருமான வரி செலுத்தியதற்காகவும்  சான்றிதழ் வழங்கினார்.

அவ்விழாவில் கமல் பேசும்போது "  வருமான வரி செலுத்துவது எனது கடமை. அதன்மூலம் எனக்கு வருமான வரித்துறையுடன் நெருக்கம் உள்ளது.
வருமான வரியை செலுத்த வேண்டியவர்கள் அதை தவிர்க்காமல், முறையாக செலுத்த வேண்டும்.  இது நாட்டுக்கு நாம் செய்யும் கடமையாக கருத வேண்டும்.


இப்போது நான் நடிக்க இருக்கும் 'விஸ்வரூபம்' படத்தின் மூலம் அடுத்த வருடம் நான் அதிக வருமான வரி செலுத்த வேண்டியவனாக இருப்பேன் " என்று கூறினார்.

தலைப்பு செய்தி /டவுட்டு:அப்ப அதிகம் டக்ஸ் கட்டுனா நஷ்டமா இல்லையா?

இது ஒரு மீள் பதிவு பின் வருபவை மாற்றங்களுக்கு உட்பட்டது !!
சில இன்கம் டேக்ஸ் புள்ளி விபரங்கள் :

பாலிவுட்டில் அதிகம் டேக்ஸ் கட்டுவது அக்ஷய் குமார் ,ஷாருக் கானை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னுக்கு வந்துள்ளார்..

கிரிக்கெட்டில் சச்சினும் தோனியும் முறையே ஆறு கோடி மற்றும் ஐந்து கோடி டேக்ஸ் கட்டி இருக்காங்க 

அரசியல்வாதிகளில் அதிகபட்சமாக டேக்ஸ் காட்டிவருவது மாயாவதி தானாம்,,, 26 கோடி கட்டியிருக்காங்க 2008ல ...அப்ப சொத்து மதிப்பு 75-80 கோடி 
அப்ப இப்போ ????

KJS அஹ்லுவாலியா என்னும் ஒரிசாவை சேர்ந்த தொழில் அதிபர் அதிகபட்சமாக 95 கோடிகள் நடப்பு ஆண்டுக்கு டேக்ஸ் கட்டி முதலிடத்தில் இருக்கார். இவரு இரும்பு வியாபாரம் செய்யுறார் ..இவரோட தம்பி 22 கோடி கட்டி ஆறாவது இடத்தில் இருக்கார் ..7.08.2012

உன் கண்ணில் கண்ட வலி !!!


அப்பாவின் கடன்
அம்மாவின் தாலி                                        
அக்காளின்  பிரசவம்
தங்கையின் திருமணம்
இதற்க்கு உழைப்பதே
பிறவிபயன் என நான் !


தேனொழுக பேசி
வந்தவரை லாபம்
விழிக்கும் வரை
புடுங்குவோம் என உறவுகள்.


 ஐந்தறிவு ஒட்டகம் கூட
தாகத்திற்கு தண்ணீரை
தனக்குள்ளே  சேமித்துக்கொள்ளும்
நானோ அத்துனையும் பகிர்ந்தேன்
சொன்னதெல்லாம் செய்தேன் .


குடும்பத்திற்கு செய்வதெல்லாம் 
கடமை என்றும் 
பெருமை என்றும் 
பொறுமையாய் செய்த 
எனக்கு ஒருநாள் 
வலித்ததும் விழித்துக்கொண்டேன்
அட என்ன கொடுமை
அவர்கள்  கண்களை மூடிக்கொண்டார்கள்.
கறிவேப்பிள்ளை  தானோ  நான்.

 
வலியும் வேதனையும் நான்
மட்டுமே அனுபவிக்கிறேன் !
வால் அறுந்த  பல்லிபோல்
துடித்து நடித்து திசையெட்டும் 
திட்டுவதோ அவர்கள்.


சுமைகள் சுமந்து சுமந்து 
நன்மையை ஏவி ஏவி 
தவறான உதாரணமாகி 
தூக்கமிழந்து வாடும்போது 
ஆறுதலாய் இருப்பதெல்லாம் 
பின்வரும் சத்தியமே!

 


இழந்தவை எல்லாம் 
இழப்புகள் அல்ல
என் இறைவன் வாக்களித்த 
பரிசுக்கு முதலீடே !-மீண்டு(ம்)  ரியாஸ் 
7.07.2012

மீண்டும் நான்

மீண்டும் புதுப்பொலிவுடன் வருகிறேன்......