தந்தை
கலவிக்கு பின் கருவாகி
கருவறையில் சிசுவாகி
மகளாக பிறந்ததும்
எப்படி தாயானாய் !
தாய்
கணிக்க முடியாத இறைவனின் அன்பை
நினைத்து போற்ற தாய்மை தந்தவளிடம்
என்னவரின் முத்தங்களை குத்தகைக்கு
கொடுத்ததில் பொறாமை துளியும் இல்லை !
மகள்
திணிக்கப்பட்ட தாய்பால் நிறுத்தியதும்
மனதில் பதிந்தது முதல்ஏக்கம்,
இதை சொல்லவோ பாடவோ
இன்னும் தமிழ் உதவவில்லை !
அதற்குள் என் ஏக்கம் மறந்தும் மறத்தும்
போய்விடும் -அதுவரை உங்கள்
தவறுகளுக்கும் சரிகளுக்கும் மத்தியில்
சிறகடித்துக்கொண்டு இருக்கிறேன் !
சந்திக்க போகும் ஏக்கங்கள் என்
சிறகுகள் அனைத்தையும் ஓடிக்கும்வரை !
முற்றும் -------------------------
நன்றி ... இதுவும் மீள் பதிவு .
Tweet |