என் கழுத்தை அறுத்த கத்தி
--------------------------------------ரியாஸ்
அதை வாங்கி தந்த பெரியோர்
அதற்க்கு சானை பிடித்த சான்றோர்
என் கழுத்து அறுப்படும் போது தோள்கொடுத்தோர் !
யாரையும் மன்னிக்கும் பக்குவம்
மரணிக்கும் வரை இல்லை!
அவர்கள் முயற்சியில் உயிர் பிரிந்து இருந்தால்
அடங்கி அடக்கம்மாகி இருப்பேன் ,
ஆனால் இருவருக்குமே தோல்வி !
வலியுடன் நான், வேறு வழி தேடி அவர்கள் !
இரத்தம் வழிந்தால் தான் வன்முறை
என்று எவன் சொன்னது ?!
துரத்தும் காலம் விரட்டும் நாள் வரும்
அன்று ஏமாற்றியோருக்கு தண்டனை நிச்சயம் உண்டு !
ஏமாந்த என்போன்றோருக்கு
பரிசுயேதும் உண்டோ பரம்பொருளே !
| Tweet |

