5.31.2011

நடிகர் ராஜ்கிரண் மெண்டல் ஆஸ்பத்தரியில் வாழ்கிறார் ???!!!

                          பிரபல !!!??? பாலிவுட் நடிகர் ராஜ்கிரண் (காரிஜ் , அர்த் ) போன்ற படங்களில் நடித்தவர் பத்து வருடங்களுக்கு மேலாக படங்கள் எதிலும் நடிக்க வில்லை.  அவருடைய நண்பர்களுக்கு கூட அவர் எங்கே என்ற விபரம் தெரியாமல் இருந்தது. ராஜ்கிரண் இறந்துவிட்டார் என்று கூட செய்திகள் வந்தன ஆனால் அவரை சமிபத்தில் அவரது நண்பர் நடிகர் ரிஷி கபூர் அமெரிக்காவில் அட்லாண்ட நகரில் ஒரு மெண்டல் ஆஸ்பத்திரியில் பார்த்தார் . மனைவியும் மகனும் கைவிட்டதால் தான் இங்கு வந்து சேர்ந்து உள்ளதாக கூறியுள்ளார் .மேலும் தனது ஆஸ்பத்திரி செலவுகளை கவனித்து கொள்ள அங்கேயே வேலை செய்வதாகவும் கூறியுள்ளார் .அங்கு அவருக்கு மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளிக்கபடுகிறது .



 உண்மையிலேயே இப்ப சொல்லலாம் என்ன கொடுமை சார் இது ???

5.30.2011

கரீனா கபூரின் வெளிவராத குத்து பாட்டு

சாருக் கான் ,கரீனா கபூர் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் ரா ஒன் படத்தில் அமெரிக்க பாப் பாடகர் அகான் பாடியுள்ள் இந்த குத்து பாடல் எப்படியோ வெளியாகி விட்டது ...உங்களோடு பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது முறையா இதோ உங்கள் காதுகளுக்கு விருந்தாக இந்த பாடல் ...(கண்களுக்கு ஹி ஹி )



5.28.2011

காந்தியின் கண்ணீர் துடைக்காத காங்கிரஸ்

வரலாறு ரொம்ப முக்கியம் நண்பர்களே , வரலாற்றில் பிழைகள் இருந்தால் திருத்த வேண்டியது நமது கடமை.கலைஞரின் பாடலுக்காக (தவறு தான் இருந்தாலும் )சமச்சீர் பாட திட்டமே கைவிட பட்டது போல் அரங்கேறி இருக்க வேண்டிய ஒரு நிகழ்வை ஆளும் கட்சிக்கு நினைவூட்டவே இந்த பதிவு.

வீர சாவர்க்கர் பிறந்தநாளை முன்னிட்டு பார்லிமென்டின் மத்திய மண்டபத்தில் அவரது படத்துக்கு சபாநாயகர் மீரா குமார், பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.இந்த புகைப்படம் பா.ஜ.க ஆட்ச்சியின் போது காங்கிரஸின் (சிறுபான்மையினரின் ஓட்டிற்காக ) பலத்த எதிர்ப்பிற்கு இடையில் வைத்தார்கள் . காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் கொள்ளை அடிப்பதிலேயே கவனமாக இருப்பதால் (தீயா வேலை செய்யணும் ) இந்த புகைப்படத்தை கண்டுகொள்ளவே இல்லை . காந்தி அடிகளின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஒருவருக்கு இந்த மரியாதையை கிடைத்துவிட்டால் இந்த நாட்டில் ஜனநாயகம் என்பது உண்மையை இருட்டடிப்பு செய்வதற்கு மட்டும் தான் பயன்படும் என்பது உண்மையாகி விடும் . அப்படியென்ன தவறு இதில் இருக்கிறது இதோ சில உண்மைகள் நீங்களே படித்து முடிவு செய்யுங்கள் ..

அந்தமானில் சவர்க்காரின் சிறை வாழ்க்கை நிறைய சுவாரசியமானது. அவருடன் சிறையிலிருந்த 92 வயதான தினேஷ் குப்தா என்பவர் ஆக. 9, 2003 அன்று டில்லியில் அளித்த ஒரு பேட்டியில்,

"வி.டி. சவர்க்காரும் நானும் ஒன்றாக சிறையில் இருந்தவர்கள். அவர் ஒன்றும் சிறையிலேயே உயிரைவிட்டு விடவில்லை. சிறையிலேயே உயிரைப் பறிகொடுத்த 8 விடுதலை தியாகிகளுக்கு அவர்களின் நினைவைப் போற்ற போர்ட்ப்ளேயரில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகளுக்கு மத்தியில் சவர்க்காரின் சிலையையும் வைத்திருப்பது அந்த மற்ற விடுதலை வீரர்களையும் அவமானப்படுத்துவதாகும். மேலும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உதவுவதாகக் கூறி மன்னிப்புக் கடிதம் எழுதியனுப்பிய சவர்க்காரை விடுதலைப் போராட்டத் தியாகியாக சித்திரிப்பது மாபெரும் தவறாகும்; தாங்கமுடியாத துன்பமாகும்" என்று குறிப்பிட்டார்.


அவருடன் சிறையிலிருந்த விஸ்வநாத் மாத்தூர் என்பவர், "ஒரு கோழையைப் புரட்சியாளனாக தூக்கி நிறுத்துவது கேலிக் கூத்தாகும்" என்று கடந்த பி.ஜே.பி. ஆட்சியில் சவர்க்கார் படத்தை நாடாளுமன்றத்தில் வைத்தபோது தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
தினேஷ் குப்தாவும், மாத்தூரும் மட்டுமல்ல, சவார்க்கருடன் சிறையில் இருந்த வங்காளத்தின் திரிலோகநாத் சக்ரவர்த்தி அவர்கள் தனது சுயசரிதை நூலில் தங்களை சிறை அதிகாரிகளுக்கு எதிராகப் போராடத்தூண்டி விட்டு, தான் மட்டும் (சவார்க்கர்) நல்ல பிள்ளையாக இருந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளாமல் விட்டதைக் குறிப்பிட்டிருக்கிறார். இதை சவார்க்கரும் 'அந்தமானில் எனது ஆண்டுகள்' என்ற நூலில் ஒப்புக் கொண்டுள்ளதாக பிரபல வரலாற்றாளர் பிபின் சந்திரா கூறுகிறார்.
காந்திஜி படுகொலை தொடர்பாக ஒன்பது பேர் மீது குற்றம் சுமத்தப்படிருந்தது. ஆத்ம சரண் ஐசிஎஸ் என்பவர் சிறப்பு நீதிபதியாக நியமிக்கப்படிருந்தார். செங்கோட்டையில் வழக்கு நடைபெற்றது. அந்த ஒன்பது பேர் மீநாதுராம் கோட்சே. நாராயண ஆப்டே, விஷ்ணு கார்கரே, மதன்லால் பாவா, சங்கர் கிஸ்தயா, கோபால் கோட்சே, டாக்டர் பார்ச்சுரே, சாவார்க்கர், திகம்பர் பட்கே ஆகியோர்.

இவ்வளவு சர்ச்சைகள் நிரம்பிய மனிதருக்கு இந்த மரியாதையை கொடுத்து வருங்கால சந்ததிகளுக்கு தவறான முன்னுதாரணம் ஆவதை தடுக்குமா காங்கிரஸ் ??????????????????


ரஜினிகாந்த் சிங்கப்பூர் செல்லும் முன் ரசிகர்களுக்கு அளித்த பேட்டி


மேல உள்ள வீடியோவில் கேட்க்கும் குரல் , ரஜினி ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது .ரஜினியின் குடும்பத்தினர் நல்ல வீடியோ பேட்டியின் மூலமே ரசிகர்களை அமைதியடைய செய்ய முடியும் . அதற்கு அவர்கள் முயற்ச்சிக்க ரசிகர்கள் சார்பில் அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம் ..

5.27.2011

இவன் எவன் ?

 ஒரு அழகிய கிராமம் , ரியல் எஸ்டேட் காரர்களின் கண்களின் இருந்து தப்பித்து இன்றும் மழை பொய்க்காததால் பச்சை பசேல் என காட்சி அளிக்கும் வயல்வெளிகள் .காலை பனி,சாரல் மழை,தங்க கீற்றாய் மின்னி மறையும்  மிதமான வெயில் என அனைத்தையும் இங்கு காணலாம் .இந்த இயற்க்கை அழகை ரசிப்பதற்காகவே தோட்டத்துடன் ஒரு பண்ணைவீடு கட்டி விடுமுறைகளுக்கு மட்டும் வந்து போகும் ஒரு செல்வந்தர்  இன்று காலையில்தான் வந்துசேர்ந்தார்.அவருடன் " தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்வுஇலாள் பெண்" என்ற குறளுக்கு ஏற்ற அவர் மனைவியும் ஆஜர்.

இங்கு அவர் வந்துவிட்டால் இளமை திரும்பியது போல்  உணர்வார். கை தொலைபேசியை கூட உபயோக்கிகாமல் இயற்க்கை அழகை கண்டுகழிப்பார். இவர் சினிமா பிரபலமோ அல்லது அரசியல் புள்ளியோ அல்ல.விளம்பர பிரியரும் அல்ல மாறாக கூச்ச சுபாவம் கொண்ட உழைத்து முன்னுக்கு வந்த நல்ல மனிதர்.பல நல்ல காரியங்களையும் நன்மைகளையும் சத்தமின்றி செய்பவர் .


         அவர் வீட்டு எதிர்புறத்தில் உள்ள டீ கடையில் நாள்தோறும் அன்றைய செய்திதாளுடன் அர்த்தமற்ற  பட்டிமன்றம் நடக்கும், ஆனா நம்ம பெரியவர் கிராமத்திற்கு வந்துவிட்டால் அவர் புராணம் தான் பேச்சே.அள்ளி அள்ளி கொடுக்குறான் மனுஷன், வேலை ஆளுகளுக்கு நல்ல சம்பளம் ,இவர் கிட்ட வேலை செய்தவன் பல பேர் இன்னைக்கு இவரை விட பணக்காரான இருக்காங்களாம் ,அப்படி இப்படீன்னு எந்த மாற்றுக்கருத்தும் இல்லாமல் இவர் புகழ் பாடுவார்கள்.ஆனா இந்த வெட்டி அரட்டையில சிலர் இவர் நம்மவர் தான் என்று அவரின் அடையாளம் தேடுவதிலேயே குறியாக இருந்தனர்.சிலசமயம் இந்த வாக்குவாதம் முற்றி சண்டையில் கூட முடிந்து இருக்கிறது .இன்று காலையிலதான் பெரியவர் வந்தார் அதற்குள்ள மூன்று நான்கு முறை கைகலப்பே வந்துவிட்டது.


           இதையெல்லாம் பார்த்து பார்த்து பொறுமை இழந்த அதே டீ கடையில் வேலை செய்யும் சிறுவன் இதற்கு முற்றிபுள்ளி வைக்க முடிவுசெய்தான் .அதற்காக அந்த வீட்டு தோட்டகாரர்களிடம் கேட்டுபார்தான் "அய்யா எங்களோட சேர்ந்து ஒண்ணா வேலைசெய்வார் சிலசமயம் சடுகுடு கூட விளையாடுவார் என்ன ஜாதி என்ன மதம்ன்னு அவரு சொன்னதும் இல்ல நாங்க கேட்டதும் இல்ல " என்றனர் .

அடுப்படி சென்று பணிப்பெண்களிடம் கேட்டான் "இந்த அம்மா கிட்ட தாலியும் இல்ல பொட்டும் இல்ல பர்தாவும் இல்ல ஆனா நல்ல சிறுச்ச முகம் கொண்ட சீதேவியான மனுசி ஆள் யாரும் வேலைக்கு வரைலேன்னா எங்ககூட சேர்ந்து பாத்திரம் கூட கழுவுவாக , இந்த மாதிரி கேள்வி கேட்டா  சிருச்சுகிட்டே மலுப்பிடும் " என்றனர் .எங்கும் சிறுவனுக்கு பதில் இல்லை.இந்த கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டால் டீ கடையில் நடக்கும் அடிபுடி சலசலப்புகள் நீன்றுவிடும் என உறுதியாக எண்ணினான் .

                 இளம் கன்று பயம் அறியாது என்பதற்கு இணங்க அந்த  சிறுவன் நேராக அந்த பெரியவரிடமே டீ கடையில் நடப்பதை சொல்லி அய்யா நீங்க யாருன்னும் உங்கள் மதம் என்னன்னும் கேட்டான் . அந்த பெரியவர் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக வாழ நினைத்து கண்ணியமான வாழ்க்கை வாழ்ந்துவரும் நமக்கு இது சோதனையோ என நினைத்து வருந்தினார்.

பின்பு ஒரு முடிவுக்கு வந்தவர் ,அந்த சிறுவனிடம் இறைவனின் பத்து கட்டளைகள் நிரம்பிய ஒரு தாளை கொடுத்து ,"இறைவன் நம்மிடம் வணக்க வ்ழிபாடுகளையோ ,அராதனைகளையோ எதிர்ப்பார்பதில்லை.நல்ல பண்பையும் அவன் இட்ட கட்டளைகளுக்கு பணிந்து நடப்பதையும் தான் விரும்புகிறான்.இதைதான் நான் பின்பற்றுகிறேன்" என்றார்.சிறுவனை  கூட நன்றாக உபசரித்தே அனுப்பினார் , நன்றியுடன் விடைபெற்றான் சிறுவன்.
மறுநாள் டீக்கடையில் இந்த தலைப்பில் பேசியவர்கள் அனைவரிடமும் பெரியவர் கொடுத்த தாளை நீட்டினான் ,படித்த அனைவரும் சொல்லிவைத்தது போல  காலரை தூக்கி விட்டுகொண்டு " சொன்னேன்ல இவர் நம்ம ஆளுன்னு " என்று சொன்னார்கள்.இந்த பெருமை விரும்பும் வெட்டி கூட்டம் பெரியவர் சொன்ன செய்தியை காதில் வாங்கவே இல்லை.

பதில் கிடைத்தும் முடிவு பிறக்காததால் குழம்பிய சிறுவன் ,அனைவரின் மத கோட்பாடுகளுக்குள் பெரியவர் கொடுத்த பத்து கட்டளைகள் பொருந்தி போவதை கண்டு வியந்தான் . அடையாளத்தை மட்டும் தேடி திருப்தி கொண்ட அந்த மனிதர்களை கண்டு நொந்த சிறுவன்,இவர்கள் திருந்த போவதில்லை என்று எண்ணி  இறைவனின் கட்டளைகளை கவனிக்க தொடங்கினான்.

                                                                                            ரியாஸ் 


குறிப்பு :
            இது என் கன்னி முயற்சி.அமெச்சூர் தனமாக தான்   இருக்கும் உங்கள் கருத்துக்களும், விமர்சன்களும்,குட்டுகள் என் எழுத்துக்கு வலு சேர்க்கும். பொறுமையா படித்ததற்கு நன்றி . 

5.26.2011

எரிமலை எப்படி வெடிக்கும் ?

சமிபத்தில் அயர்லாந்தில் வெடித்து கிளம்பிய எரிமலை சீற்றத்தின் "புகை"படங்கள் இவை ..
ஒரு நாளை இப்படி ஒப்பேத்திவிட்டேன் ஹி ஹி .......










5.25.2011

5 நிமிட பீப்ளி லைவ்

எனக்கு பிடித்த பாடல்கள் சில உங்களோட பகிர்ந்து கொள்ள ஆசை ...அதில் ஒரு மாறுதல் இருக்கணும் என்றும் விரும்பினேன் .இல்லாத மூளையை கசக்கி பிழிந்ததில் எல்லோராலும் கவனிக்க படாத பாடல்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்புள்ள பாடல்கள் என வித்தியாசம் காட்டுவோம் என்று தொடங்குகிறேன் .
இந்த பாடல் 5 நிமிட பீப்ளி லைவ் என்று சொல்லலாம். ஒரு கிராமத்து வெள்ளந்தி மனிதனின் சுக துக்கங்கள் வைரமுத்துவின் வரிகளில் மிளிரும் தோதான இசையும் அழகு சேர்க்கும்.மறைந்த மலேசியா வாசுதேவனோடு சேர்ந்து இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களும் பாடிய பாடல். கேட்டு பாருங்க ..
இந்த படமே கவனிப்பாரற்று போனதால் இந்த பாடலும் ஹிட் ஆகவில்லை . மிக சிறந்த இசைஞானியின் பாடல்களுள் இதுவும் ஒன்று.இதை ஒரு புதியவர் பாடியிருந்தார் ..நாளில்  பாதி  இருளில்  போகும் இயற்கையில் ,வாழ்வின்  பாதை  நன்மை  தீமை  தேடலில் என அழகிய வாலியின்  வரிகளும் குறிபிடத்தக்கவை.
இப்ப எனக்கு மட்டும் தோன்னும்ன்னு நினைக்கிற தொடர்ப்பு பாடல் ரெண்டு நீங்க கேட்டு பார்த்து உங்க கருத்தை சொல்லுங்க ...இந்த ரெண்டு பாடல்களின் மொழியே வேற,இசை அமைப்பாளரும் வேற  இருந்தும் எனக்கு ஒன்னை கேட்டால் மற்றொன்று ஞாபகம் வருவதை தவிர்க்க முடியல.ரெண்டும் சிறந்த பாடல்கள் இதோ 
இப்ப இதை கேளுங்களேன் ...ஒருவேளை பாடலின் situvation ஒரே மாதிரி இருப்பதாலயோ 


              

5.23.2011

பிழையற்ற கனிமொழியும் நிலைபெற்ற கலைஞரும்

            2  ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குல தீர்ப்பு வெளியாகிவிட்டதோன்னு நினைச்சி வந்தா உங்களுக்கு ஏமாற்றமே ,இல்ல கலைஞர் தான் தன் மக்களை காப்பதை விட நாட்டின் இறையாண்மையை காப்பதே என் கடமைன்னு சொல்லுவார் நம்பி இங்க வந்து இருந்தாலும் ஏமாற்றமே.சும்மா நான் எல்லோரும் திட்டி தீர்த்து கொண்டுயிருக்கையில் ஒரு மாற்றத்திற்கு கனிமொழியின் கவிதை தொகுப்பில் இருந்து ஒரு நல்ல கவிதையை தேடி பிடித்து பாராட்டிட்டு போவோமேன்னு பார்க்குறேன் ... அதுல பாருங்க நான் இதுக்கு முன்னால இவங்க கவிதைகளை படித்தது இல்ல ,இதற்காகவே வலைபாயுந்து தேடி பிடித்தேன் ,கனிமொழியின் கவிதை படித்தவர்கள் பாராட்டியதை .(விமர்சங்களை விட்டுடுவோம் கனி பாவம் )


அப்பா

சின்ன வயதில்
செய்த தவறுகளுக்கெல்லாம்
பூச்சாண்டியாய் உன்
பெயரைத்தான் சொன்னாள்
அம்மா

காலையில் கணக்குப் பாடம்
குழம்பியபோது
பத்திரிகையில் புதைந்த
உன் தியானத்தை எப்பிடிக்
கலைப்பது?

விடுமுறை நாள்களில்
சினிமாவுக்குப் போக
அம்மாவைத் தூதுவிடுவதே
ஆபத்தற்றதாய் இருந்தது

வாரம் ஒருமுறை
பின் சீட்டில் வைத்து
தேக்காவுக்கு அழைத்துச் சென்றது

உன் கால் செருப்பு
ஓசையில்
வீடு அமைதியானது

அப்பாவுக்குப் பிடிக்கவில்லை
என்று குட்டை ஸ்கர்ட்டை
அம்மா எதிர்த்தது

இதுதான் நீ என்று
பதிந்துபோய்விட்டது

பெருமாள் கோயிலில்
யாரோ ஒருவன்
கையில் பிடித்துக்கொடுத்தபோது
நடுங்கிய உன் கைகளில்
தெரிந்த நேசத்தை ஏன் ஒளித்துவைத்தாய்
இத்தனை காலமாய்?


-கனிமொழி --------இனி  
பாராட்டு வரிகள் சில ...


எண்ணங்கள் மட்டுமல்ல கனிமொழியின் கவிதையின் வடிவமும் புதிது. அவரிடம் தனி கற்பனை வளம் உள்ளது. மாற்றுக் கட்சியினரும் பாராட்டும் அளவுக்கு அவரது படைப்புகள் உள்ளன.
கனிமொழியின் கவிதை திறனுக்கு அவரது ஜீன்களும் ஒரு காரணம். அதனால் தந்தைக்கு மட்டுமல்ல பாட்டனாருக்கும் அவர் கடமைப்பட்டுள்ளார் என்கிறார் முன்னாள் அமைச்சர் அன்பழகன்.

எழுத்தாளர் ஜெயகாந்தன்: கனிமொழியின் “சிகரங்களில் உறைகிறது காலம்’ என்ற கவிதை நூலை ஒரு மாதமாக திரும்ப திரும்ப படித்து வருகிறேன். படிக்க படிக்க யோசிக்க தூண்டுகிறது
என்று குறிப்பிட்டுள்ளார் .
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ம. இராஜேந்திரன்: தமிழக நவீன இலக்கிய வரலாற்றில் ஏற்பட்ட வெற்றிடத்தை சரியான நேரத்தில் நிரப்பியுள்ளார் கனிமொழி.“புதிரான விளைச்சல்’ என்று அனைவரும் வியக்கும் அளவுக்கு கனிமொழியின் படைப்புகள் உள்ளன. மரபுகளை அப்படியே ஏற்காமலும், முற்றிலும் புறக்கணிக்காமலும் அதனை விசாரணைக்கு உள்படுத்தியுள்ள பாங்கு பாராட்டத்தக்கது என்கிறார்.
எழுத்தாளர் சுஜாதா விகடனில் கனிமொழியின் மற்ற அடையாளங்களை மறந்துவிட்டு, கவிதைகளை மட்டும் தனிமைப்படுத்திப் பார்க்க இந்தத் தொகுப்பில் சந்தர்ப்பம் கிடைக்கிறது. 
பெண்ணியம் பேசும் கவிஞராக இவரைச் சிலர் தப்பர்த்தம் பண்ணிக் கொள்கிறார்கள். மற்ற விஷயங்களுடன் பெண்ணின் சமூக பாத்திரத்தை உன்னிப்பாகக் கவனிக்கும் கவிஞராகத்தான் இவரைப் பார்க்கிறேன். பெண் கவிஞர், கவிதாயினி போன்ற அடைமொழிகள் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார் .


சரி இதெல்லாம் சொல்றதால என்னைய தி.மு.க காரன்னு நினைச்சுராதிங்க 
நம்மள நன்றி மறந்த தமிழர்கள்ன்னு யாரும் சொல்லக்கூடாது இல்லையா அதனால இந்த மறுப்பக்கத்தை நினைவு கூர்ந்தேன் ..


கல்யாணம் கல்யா.............ண........................ம்!!

                             டைம் பத்திரிக்கையில இந்த வாரம் இந்திய ஆடம்பர திருமணங்களை பிரிட்டிஷ் அரசகுடும்ப திருமணத்தோடு ஒப்பிட்டு ஒரு கட்டுரை எழுதி இருக்காங்க.அட பெருமையான விஷயம்னு தோனுதா ..வீண் விரயம்ன்னு எனக்கு தோணுது ,தோனுனதை புலம்பிட்டு போறேன்..

இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இத்தகைய ஆடம்பர திருமணங்கள் தேவையான்னு பெரிய விவாதமே நடத்தலாம் . ராயபதி  சாம்பசிவ  ராவ் அப்படிங்குற ஒரு எம்.பி "இத்தகைய திருமணங்களுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்வதை தவிர்கனும் மேலும் அந்த பணத்தை தர்மச்தலதிற்கு செலவு செய்யலாம் "ன்னு கருத்து சொல்லிருக்கார்.

                             இது யார் பெரியவன் என்னும் போட்டி மனப்பான்மையின் வெளிபாடே அப்படீன்னு மனோதத்துவ நிபுணர்கள் சொல்றாங்க . ஏன் பாஸ் இதே போட்டியை தர்மம் செய்யுறதுல காட்டலாமே ..சரி பதுக்கல் பணக்காரங்க தான் இப்படீன்னா மிடில் கிளாஸ் மக்களும் வட்டிக்கி கடன்வாங்கி இதே ஆடம்பர மயித்துக்கு (மன்னிக்கவும் ) அடிமையயிடுறாங்க.அந்த கடனில் இருந்து மீள்வதற்குள் மன உளைச்சலுக்கு ஆளாகி எல்லா வாயில நுழையாத பேருள்ள நோய்களை வாங்கி மடிகிறோம். 

                    மற்றவர்களையும் ,ஊழல் அரசியல்வாதிகளும் மட்டும் விலைவாசி ஏற்றத்திற்கு பொறுப்பு கிடையாது,நாமும் கூட  இந்த மாதிரி வீண்விரயங்களை தவிர்க்க வேண்டும்.திருமண நாள் அப்படிங்குற ஒரு நாள் கூத்துல நூறு பேர் வந்தா அதுல எதுன்னை பேர் நல்ல மனசோட வாழ்த்திட்டு போறாங்க யோசிச்சு பாருங்க .குறை கூரிகிட்டும் சவுடால் செய்துகொண்டும் திரியும் இம்சை அரசர்களே அதிகம் .எனவே நண்பர்களே அந்த நல்ல நாளிலே எத்துனை பேர் வர்றாங்க ,பக்கத்து வீடுக்காரனைவிட சிறப்பா செய்யணும் அப்படிங்குற எண்ணத்தை வீசி விட்டு ,விரல் விட்டு எண்ணகுடியவர்கள் வந்தாலும் அந்நாளை அர்த்தமுள்ள விஷேசமாக மாற்றும் எண்ணம் கொள்ளுங்கள் ப்ளீஸ் ..
               நீ யார் இதை சொல்லன்னு கேகுறீங்களா?நானும் எளிமையா கல்யாணம் செய்யணும் விரும்பினேன் ,ஆனால் சொந்தபந்தங்கள் நிர்பந்தம் செய்து ஆடம்பர வழியில் வீழ்ந்து இன்று கடன்பட்டு கஷ்டப்படும் முட்டாள் .நான் படும் வேதனை உங்களோடு பகிர்ந்து கொண்டேன் ,என் பதிவு அடுத்த தலைமுறை மாற்றத்திற்கு ஒரு தூசலவாவது உதவட்டுமே ..

5.20.2011

ஊக்கமருந்தின் விபரீதங்கள் .....


             ஆளே இல்லாத கடைக்கு டீ போட்டுக்கிட்டு இருந்த எனக்கு , நேத்து வலைச்சரத்தில என்னை நம்ம சௌந்தர் அண்ணன் அறிமுக படுத்தி ஊக்க மருந்து கொடுத்துட்டாங்க .இப்ப இதனால விபரீதங்கள் என்னன்னா நான் தொடர்ந்து எழுத போறேன் ( டைட்டில்லை நியாப்படுத்தியாச்சு அப்பாடா)

தொடர்ந்து எழுதுறதுக்கு முன்னாடி-இன்று  நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்ற படுகிறது ....

# கவிதை வீதி # சௌந்தர்--- நீங்க என்னை வலைச்சரத்தில் அறிமுக படுத்தியது தேசிய விருதுபெற்றது  வெற்றிமாரனுக்கும் தனுஷுக்கும் நேத்து எவ்வளவு சந்தோசம் தந்து இருக்குமோ அவ்வளவு சந்தோஷம் நானும் அனுபவித்தேன் . மிக்க நன்றி .



A.R.ராஜகோபாலன் - உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. வீரிய வரிகளுக்கு சொந்தக்காரர் பகத் சிங் . பகத் சிங்கின் தீர்க்க தரிசனம் எனக்கு பிடிக்கும் அதனால அந்த வரிகளை மேற்கோள் கட்டினேன் . நன்றி (நானும் கூட ஹே ராம் ரசித்து பார்த்தவன் .நம்ம டேஸ்ட் ஒத்துப்போகுது )


சிராஜ் -உங்கள் பதிவுகள் அனைத்தையும் சுட சுட படித்திருகிறேன்.நீங்க சொல்லறது நச்சுன்னும் நறுக்குனும் இருக்கு .உங்கள மாதிரி எழுத ஆசைபடுறேன் .உங்கள் வாழ்த்துக்கும் நன்றி.மே மாசம் மட்டும் இல்ல எப்பவுமே அய்யா வெட்டி தான் ஹி ஹி ..

எனக்கு அடிகடி கருத்து தெரிவித்து சந்தோஷ படுத்திய நண்பர் அதிரடி ஹாஜா  அவர்களுக்கும் நன்றி ... 
மேலும் அவ்வபோது வந்து ஓட்டுபோட்டும்,கருத்து சொல்லியும்,பின்பற்றியும் ஆதரவளித்து வரும் நல்ல உள்ளங்கள் (மத்தவங்க எல்லாம் கெட்ட உள்ளமான்னு கேட்க பிடாது )அனைவருக்கும் நன்றி..

இதற்கெல்லாம் காரணமான குருவை சொல்லாம போவேனோ ..இன்றும் எனக்கு தாயுள்ளத்தோடு பல (என் இம்சை காரணமாக ) உதவிகள் செய்யும் அன்பு நண்பர் "அண்ணன் கசாலி "அவர்களுக்கும் நன்றி ...
                           
         எல்லா புகழும் இறைவனுக்கே .....மீண்டும் நன்றியுடன் விடைபெறுகிறேன் ...     


      5.19.2011

      நல்லபடியா வசிக்க வாசிங்க



       "கற்றுணர்'' எனும் முழக்கமே என் மனத்தாழ்வாரங்களில் கணந்தோறும் எதிரொலித்தது...

      ""நான் கற்றுணரத் துவங்கினேன். என்னுடைய பழைய நம்பிக்கைகள் மாறுதலுக்குள்ளாகத் துவங்கின. எமது முந்தைய புரட்சியாளர்களிடம் பிரதானமாக விளங்கிய நம்பிக்கையின் அடிப்படையிலான வழிமுறைகள், இப்பொழுது தெளிவான, உறுதியான கருத்துக்களால் நிரப்பப்பட்டன. மாயாவாதமோ, குருட்டு நம்பிக்கையோ அல்ல, மாறாக யதார்த்தவாதமே எங்கள் வழியாயிற்று. அத்தியாவசியத் தேவையையொட்டிய பலாத்காரப் பிரயோகமே நியாயமானதாகும். அனைத்து மக்கள் இயக்கங்களுக்கும் சாத்வீகம் ஒரு விதி என்ற அடிப்படையில் இன்றியமையாததாகும். மிக முக்கியமாக, எந்த லட்சியத்திற்காக நாம் போராடுகிறோம் என்பதைக் குறித்த தெளிவான புரிதலோடிருக்க வேண்டும்."
      ....
      பகத் சிங் அவர்களின் கடிதங்களில் காண பட்ட வரிகள் இவை ....

      வாசிக்கும் அல்லது படிக்கும் பழக்கத்தால் ஓர் புரட்சி உருவான வரலாறுகள் இப்படி பல இருக்க . அந்த நல்ல பழக்கத்தை டிவி பெட்டியிடமும் ,சினிமாவிடமும் அடகு வைத்துவிட்ட நாம் எங்கே செல்கிறோம் .படிக்கும் பழக்கத்தால் ஏற்படும் நன்மைகள் என்னனு பார்போமா


      புத்தகங்கள் அதிகம் வாசிப்போர், குறைவாக புத்தகங்கள் வாசிப்பவர்களுடன் ஒப்பிடும் பொழுது பத்தில் ஒரு பங்கு அளவே மிக குறைவாக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். எனவே, வாசித்தல் என்பது மன அழுத்தத்தை வெகுவாக குறைப்பதில் பெரும் பணியாற்றுகிறது.


       வாசிப்பானது சிறுவர்களின் மூளையின் கட்டமைப்பை ஆக்கபூர்வமாக மாற்றிவிடுகின்றது என்று சிறுவர் விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள் கூறுகின்றனர்.

      நூல்கள் வாசிப்பது என்பது ஓர் அற்புதக் கலை. இசைக் கருவிகளை மீட்டுவது மட்டும் வாசிப்பல்ல. நூல்களைப் படிப்பதும் வாசிப்புதான். வாசிப்பு மனதை ஒருமுகப்படுத்தி நினைவுத்திறனைக் கூட்டும். கற்பனையையும் அறிவின் மேதா விலாசத்தையும் செழுமை செய்யும். புதிய புதிய பொருள்களைத் தந்து கொண்டே இருக்கும். வாசிப்பது என்பது சிறுகதையல்ல, அது ஒரு தொடர்கதை.

       சரி வாசிக்கும் பழக்கம் பழக வேணும் புரிந்துரிச்சு அதுக்காக கில்மா பட விமர்சனம் ,சினிமா கிசுகிசு ,மஞ்சள் பச்சை கதைகள் இதெல்லாம் படிச்சிப்புட்டு பிட்டு படம் பாக்க கிளம்பபிடாது..கொஞ்சம் இப்படி யோச்சிச்சு பாருங்க, உலக பயங்கரவாதியான ஒசாமா தன்னுடைய வேதத்தை படித்து இருந்தால் இவள்ளவு உயிர் சேதத்தை தவிர்திருக்கலாம் ,அதே மாதிரி நரேந்திர மோடி தன்னுடைய வேதத்தை படித்திருந்தால் ஒரு இனப்படுகொலையை தவிர்திருக்கலாம்....இப்படி வேதங்களை படித்தால் ஆன்மிக குழப்பக்கங்க்களை தவிர்த்து மக்கள் மத்தியில் ஒற்றுமை பிறக்கலாம். போலி மதபோதக்கர்கள் ,மதவாத அரசியல் ,ஜாதி கட்சிகள் அனைத்திற்கும் குட் பை சொல்லலாம் ..நல்ல நடுநிலையான அரசியல் பத்திரிக்கைகள் பதிவுகள் படிப்பதன் மூலம் பாமர மக்களை நம்பி அரசியல் வியாபாரம் செய்யும் சுயநல நயவஞ்சகர்களிடம் இருந்து நாட்டை காக்கலாம் , நல்ல இல்லக்கிய்களை புரட்ட புரட்ட கலாச்சார சீரழிவை குறைக்கலாம் , அப்படியே மூன்றாம்தர சினிமாக்கள் படைப்புகள் அனைத்துக்கும் முற்றுபுள்ளி வைக்கலாம் .
        
                     
      ஆதலினால் வாசிபோம் நல்லதை தேடி தேடி .....


      டவுட்டு :: நான் இன்னும் வாசிக்க ஆரம்பிச்ச ஒருவேளை கொஞ்சம் சுவாரசியமா எழுதுவேனோ ? 





      5.18.2011

      "வார்த்தைஜாலம் " ஓர் கவிதை காட்சியாக

      சில சமயம் சில விஷயம் பாத்ததும் ரொம்ப மனசுக்கு பிடிச்சு போயிறும் , இது அப்படி எனக்கு பிடித்தது .ஏற்கனவே பார்த்து இருந்தால் மன்னிக்கவும் புதிதாய் பார்த்தவர்கள் வாக்களிக்கவும் .............நன்றி 

      வீடியோ கவிதை 

      5.17.2011

      பாலிவுட் இசை பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி ..



      செய்திகளை முந்தி தரும் பதிவு என்னும் பாரம்பரியம் தொடர்கிறது ...( ரொம்ப ஓவர் தான் என்ன பண்றது நீங்க சொல்லமாடீங்க)..

       யாஷ் சோப்ரா என்னும் ஐம்பது ஆண்டுகள் இந்தி திரையுலகை தன் நிகர்ரற்ற படைப்புகளால் கட்டி போட்டிருக்கும் ஓர் இயக்குனர்.முதன் முதலாக நம்ம இசை புயல் எ.ஆர் . ரஹ்மான் கூட கூட்டணி அமைகிறார்.இது இசை பிரியர்கள் ரொம்ப நாள் எதிர்ப்பார்த்த கூட்டணி.யாஷ் சோப்ரா தாதாசாகெப் பால்கே விருது,பத்மா புஷன் விருதுகளால் சிறப்பிக்க பட்டவர் .யாஷ் சோப்ரா அவர்களின் திரை பட பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியா கானங்கள் .நம்மவர் அவரது இன்னும் பெயரிட படாத இந்த ஷாருக்கான் படத்துக்கு துள்ளல் இசை தர போகிறார் ...

      இந்த கூட்டணி பற்றி ரஹ்மான் கூறுகையில் "இசையும் காதலும் இன்றியமையாத கரு பொருட்களாக இருக்கும் யாஷ்ஜி அவர்களின் படத்திற்கு 
      இசை அமைப்பதில் மகிழ்ச்சி " என்றார் .மேலும் யாஷ் சோப்ரா "இந்தியாவிற்கு உலகெங்கும் இருந்து பெருமை தேடி தந்த ரஹ்மான், என் படத்திற்கு இசை அமைப்பது  மகிழ்ச்சி " என்றார் .

       நான் காத்திருகிறேன்  கேட்பதற்கு , நீங்க கேட்டதுக்கு ஒட்டு போடுங்கோ ...




      5.16.2011

      வலை விரிக்கிறோம்.......


      போன வாரம் கடல் ஆராய்சியாளர்கள் இந்தோனேசியா பாலி  மாகானதுக் கிட்ட சில அரிய வகை மீன்களை கண்டு பிடிச்சாங்களாம். நான் வலைபாய்ந்து உங்கள் கண்களுக்கு விருந்தா தரேன் ..கிட்ட தட்ட  350 மணி நேரம் கடலுக்கு அடியில் காத்து இருந்து பிடித்த படங்கள், நம்ம நோகாம நொங்கு திம்போம் , வந்து பார்த்துட்டு கமெண்ட் சொலிட்டு போங்க ... 

      வரும் வாரத்தில் தமிழ் நாளிதழ்களில் வரபோகும் செய்தியை முந்தி தந்த முதல்வனே இப்படி எல்லாம் புகழக்கூடாது .. ஹி ஹி














      5.15.2011

      தேடலாம் ...



       கோர்டியன் செய்திதாளில் ஸ்டீபன் ஹவ்கிங் ஒரு பேட்டி கொடுத்து இருக்கார். இறைவன் ,சொர்க்கம் நரகம் என்பதெல்லாம் கட்டுக்கதைகள் என்று.முதல்ல ஸ்டீபன் ஹவ்கிங் யாருன்னு தெரிந்து கொள்வோமா ?

      ஸ்டீஃபன் ஹாக்கிங்கலீலியோ மறைந்துசரியாக 300 ஆண்டுகளுக்குப் பிறகுஆக்ஸ்ஃபோர்டில் 1942ல் அவதரித்தார்.
      அவர் ஆக்ஸ்ஃபோர்டில் இயற்பியல் பட்டம் பயின்றார். இளவயதிலேயே அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்கெலரோசிஸ் என்ற நரம்பியக்க நோயால் ஆட்கொள்ளப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. கேம்பிரிட்ஜில் நியூட்டன் வகித்த பதவியான லூக்காசியன் கணிதவியல் பேராசிரியர் பதவியினை வகிக்கிறார்.

      நியூட்டன், ஐன்ஸ்டீன் வரிசையில் ஹாக்கிங் வைக்கப்பட்டு போற்றப்படுகிறார். ஹாக்கிங் உடைய மிகப்பிரபலமான நூல் "காலம்-ஓர் வரலாற்றுச் சுருக்கம்" (A brief history of Time)ஆகும். விற்பனை பட்டியல் வரிசையில் முன்னிலை வகித்த நூல்.
      பெருவெடிப்புக் (Big Bang) கொள்கைக்கான கணிதப்பூர்வ நிரூபணத்தை அளித்ததன் மூலம் இயற்பியல் உலகில் புகழின் உச்சிக்கு வந்தார், ஸ்டீஃபன் ஹாக்கிங். இம்முழு பேரண்டமும் ஒரு சிறு புள்ளியிலிருந்து வெடித்து வெளிப்பட்டது என இக்கொள்கை கூறுகிறது. அப்புள்ளியானது முடிவற்ற சிறிய புள்ளியாகவும், முடிவற்ற அடர்த்தியுடனும், முடிவற்ற நிறையீர்ப்பு கொண்டதாகவும் இருந்தது. ரோஜர் பென்ரோஸ்(Roger Penrose) என்பவருடைய கணித நுணுக்கங்களை பயன்படுத்தி தன்னுடைய நிரூபணங்களை ஹாக்கிங் நிறுவினார். இந்நுணுக்கங்கள் அண்டப்பிறப்பினை பற்றி ஆராய்வதற்காக மேம்படுத்தப்பட்டவை அல்ல, மாறாக கருந்துளைகளை (Black holes) பற்றி ஆராய்வதற்காக வளர்த்தெடுக்கப்பட்டவை.
      ஸ்டீபன் ஹவ்கிங் புராணம் போதும் இனி என் புராணம்.
      ஸ்டீபன் ஹவ்கிங் அவரது துறையில் (கொஸ்மொலோஜிஸ்ட் அதாவது  பௌதீகவியலாளர் ) சிறந்து விளங்கும் ஒரு ஞாநி .அவர் நாத்திகம் பேசுவது தவறென்று நான் சொல்லவில்லை . மாறாக நாத்திகம் எனபது ஒரு வரவேற்க தக்க மாணவ நிலையே . அதில் நின்று விட கூடாது .மாறாக விடை தேட வேண்டும் உலகில் உள்ள வேதங்கள் அனைத்தையும் நடுநிலையுடன் படித்து புரிந்து சரியான வழியை தேட வேண்டும் . அறிவியல் புரிந்துவிட்டது ஆன்மிகம் தவறு என்பதும் தவறு ,ஆன்மீகம் துணை போதும் அறிவியல் வேண்டாம் என்பதும் தவறு. வாங்க தேடுவோம் ..நிச்சயம் மூட நம்பிக்கை இல்லாத புது உலகம் பிறக்க இந்த தேடல் உதவும் ...


      மலை மலை .... கண்களுக்கு விருந்து மலை ஹையோ

      மயிரிழையில் உயிர் வாழும் மலைகள் .... ஒரு பட தொகுப்பு .... பார்ப்பது நோ கிராபிக்ஸ் மாமு ....



      கடைசி படம் பதிவின் டைட்டில் மாதிரியே கவிதையா இருக்கு இல்ல !!!!!!
      (எப்படி ஹி ஹி )

      5.13.2011

      இனி வரும் காலம் ...........


                                                    ஒரு வழியாக அ.தி.மு .க பெருபான்மையான இடங்களில் வாகை சூடி விரைவில் முடி சூடவும் போகிறது . வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன் .இனி பலி வாங்கும் படலம் தொடரும், ஆரம்பமே அதிரடியா தான் இருக்கு.இதனால் நாட்டின் இழப்புகள் ஈடுசெயயப்டுமாயின் சரிதான் .ஒன்றை நினைவு கூற விரும்புகிறேன் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு எதிர்கட்சி தலைவியாக சட்டபேரவைக்கு வந்து ஜனநாயக கடமையை செய்ய தவறியவர் தான் இன்று முதல் அமைச்சர் . கொடை நாட்டில் இருந்து கோட்டை வரை வந்து அமர்ந்தற்கு மீடியாக்களும்,தி.மு .கவின் குடும்ப அரசியலும், ஊழலும் உதவியது . இதை தக்க வைத்துக் கொள்ள செல்வி முயற்சிக்க வேண்டும் .செய்வார் என நம்புவோம் ...



      தி.மு .க வின் எதிர்காலம் கலைஞர் ஐயாவின் வயதை வைத்து பார்க்கும் பொழுது கேள்வி குறியாக இருப்பதை தே.தி.மு .க பயன்படுத்தி கொள்ள வேண்டும்.வரும் ஐந்து ஆண்டுகளில்  சிறப்பான எதிர்கட்சியாக செயல்பட்டு மக்கள் மன்றத்தில் நீங்கா இடம் பிடிக்க வேண்டும் .அதற்கு அவர் சினிமாவுக்கு முழுக்கு போட்டு முழு நேர களப்பணி ஆற்றவேண்டும் . இதுவும் நடக்கும் என்று நம்புவோம் ...


      தி.மு.க தனது உட்கட்சி புசல்களை களைந்து (அட குடும்ப சண்டையை தான் சொல்றேன் ) சம்பாதித்தது எல்லாம் போதும் என நினைத்து ,கட்சி ஒருகிணைப்பு மற்றும் மக்களின் நிஜமான பிரச்சனைக்கு குரல் கொடுத்தும் வந்தால் மீண்டும் காட்சிகள்  மாறும் . 



      5.11.2011

      வெளிவராத ஒசாமாவின் திக் திக் பேட்டி!!



                                  புத்தகத்தில் படித்த படி அனைத்தும் செய்துவிட்டேன்.நானும் வெள்ளை உடையுடன் மெழுகு வர்த்தியை கொளுத்திவிட்டு தியானா நிலையில் அமர்தேன்.

      ஆவிகளுடன் பேசுவது எப்படி என்ற புத்தகம் வாங்கியதில் இருந்து இது  எனது எட்டாவது  முயற்சி.அரை மணி நேரத்திற்கு பிறகு ஓர் அழுகுரல் என்னை தொந்தரவு செய்தது.நான் என் மேல் மிகுந்த அன்பை பொழிந்த என் பாட்டியையோ அல்லது தீர்க்க தரிசனம் நிறைத்த பெரியவர்களையோ காணும் ஆவலில் அழுகுரலை பொருட்படுத்த வில்லை .ஆனால் அழுக்குரல் அதிகரித்து இம்சை பண்ணியது .யாரென்று பார்த்தால் உலகமே கண்டு பயந்த ஒசாமா , சரி இவன்கிட்ட பேசினால் தான் என்னவென்று தோன்றவே நெருங்கி சென்றேன் .

                ஒசாமா "நான் மண்ணாய் பிறந்தஇருக்க  கூடாதா! கை சேதமே " என்று புலம்பியவாரே  அழுதுகொண்டு இருந்தான். நான் திக் திக் என்று மனம் படபடப்புடன் "சார்"  என்றேன் ...(இனிஎங்கள் உரையாடல் )

       

      ஒசாமா: நல்லவுங்க எல்லாம் வலதுபக்கம் இருக்காங்க , அங்க போ

      விட்டு செல்ல மனமில்லாமல் நான் : உங்க காயத்துக்கு மருந்து போட்டது யாரு ?

      ஒசாமா:வலதுபுறத்தில் இருந்து தெரசான்னு ஒரு அம்மா வந்து மருந்து போட்டாங்க!

       

      நான் : உங்ககிட்ட சில கேள்வி கேக்கலாமா ?

      ஒசாமா: இங்க ஏற்கனவே என்கிட்டே கேட்ட கேள்விகளுக்கு என்னால பதில் சொல்ல முடியல?என் கை,கால்,வாய்,கண் எல்லாமே எனக்கு எதிரா சாட்சி சொல்லிக்கிட்டு இருக்கு நீ வேற என்ன கேக்க போற ?

       

      நான் :நீங்க 2001 லயே இறந்து விட்டீங்கன்னு  சொல்றாங்க சிலர்?நீங்க நேசமா எப்ப இறந்தீங்க ?

      ஒசாமா:5வினாடியோ 10 நிமிஷமோ முன்னாடி தான் இங்க வந்த மாதிரி இருக்கு ?

      நான்: நீங்க எப்படி இறந்தீங்க ?

      ஒசாமா : என் உயிர் பிரியும் நேரம்  மிகுந்த வலி நிறைந்ததாக இருந்தது.என் உயிர் பறிக்கப்பட்டதை தவிர வேர் எதையும்  நான் அறியமாட்டேன் ?வேணும் என்றால் ஒபாமா இங்க இருந்தா கேட்டுகோ...


      நான்: ஏன் அழுகுறீங்க ?

      ஒசாமா: மனிதனாய்  பிறந்தும் மிருகமாய் வாழ்ந்ததை  எண்ணி அழுகுறேன் ?

      நான்:நீங்க போராளின்னு சொல்றாங்க சிலர் ?

      ஒசாமா : இல்லை நிச்சயம் இல்லை.போருக்கு  என்று உள்ள நெறிகள் ஏதையும் பின்பற்றவில்லை . அப்பாவி மக்கள்ளை கொன்ற நான் போராளி இல்லை .

      காந்தி,புத்தர்,ஏசு,முஹம்மது வழியில் வாழ ஆசை படுகிறேன் ? மீண்டும்  ஓர் வாய்ப்பு கேட்டு இறைவனிடம் அழுகிறேன்

       

      நான்:காந்தி, ஏசு  பற்றி உங்களுக்கு தெரியுமா ?

      ஒசாமா :இங்க வந்து எனக்கு உபதேசம் பண்ணிட்டு போனாங்க . அன்பு வழியே சிறந்ததுன்னு ?இப்ப நான் என்ன பண்ணமுடியும் ஐயோ கை சேதமே .....(அழுகை )

      நான் : உங்கள்  வேதம் நீங்க படித்தது இல்லையா ?

      ஒசாமா : படித்தேன் ஆனால் ஷைத்தான் என்னை வழி கெடுத்து விட்டான்.நமது  குரானில் தெளிவாக இறைவன் சொல்லிவிட்டான் "எந்த மனிதன் ,கருணைமிக்க இறைவனின் அறிவுரையை விட்டுவிட்டு அலட்சியமாக  இருக்கின்றானோ அவன் மீது ஒரு ஷைத்தானை நாம் ஏவி விடுகின்றோம் . அவன் இவனுக்கு நண்பனாகி விடுகின்றான்.அந்த ஷைத்தான்கள் இப்படிப்பட்டவர்களை நேர்வழியில் வரவிடாமல் தடுக்கின்றன. ஆனால் அவர்களோ தாம் சரியான வழியில் சென்றுகொண்டு இருபதாக எண்ணிக்கொண்டு இருகேன்றனர் " என்பதர்க்கு ஏற்ப வாழ்ந்து விட்டேனே நான் ,கை சேதமே(அழுகை )

      நான்:ஜிஹாத் என்னும் வார்த்தையே குர்ஆனில் இல்லைன்னு சொல்றாங்களே ?

      ஒசாமா :ஆம்.பாலஸ்தீனிய மக்களுக்காக அமெரிக்காவை நான் அஹிம்சை  வழியில் எதிர்த்து இருக்கணும் . இஸ்லாம் என்ற மார்க்கத்துக்கும் மனித இனத்துக்குமே கூட தவறான முன் உதாரணம் ஆகிவிட்டேன் ..(அழுகை )

       நான்: அண்ணல் நபி முகம்மதை பார்த்தீர்களா ?

      ஒசாமா:  தாய் மொழியில் உபதேசம் செய்தும் படித்து புரிந்து கொள்ளாத என் மீது மிகுந்த கோபத்தில் இருக்காராம் . அதனால அவரை எந்த முகத்துடன் பார்பேன் நான் ...

      ஓ( வென்று அழுகை பெரிதாகிறது ..)

       

      பரிதாப நிலை பார்த்து , மேலும் அங்கு நிற்க முடியாமல் வெளியேறிவிட்டேன் .{முற்றும்}

       

      குறிப்பு :பேய் ,ஆவி பிசாசு ,பில்லி ,சூனியம் , செய்வினை  இதில் எனக்கு அறவே நம்பிக்கை இல்லை .. பிரசார  நெடி இல்லாமலும் யாரும் மனமும் நோகும் படியும் இல்லாமலும் நல்ல விஷயம் பகிரவே இந்த ஆவி பேட்டி .

       

      வேண்டுகோள் : நண்பர்களே என் கருத்து கூறிய விதம் தவறாக இருப்பின்னும் நோக்கத்திற்கு மதிபளித்து மன்னிக்குமாறு கேட்டு கொள்கிறேன் .