5.01.2011

உலா வரும் சரித்திரமும் தரித்திரமும்

 நம்ம டைரக்டர் மணிரத்தினம் சார் பொன்னியின் செல்வன் பட location பாக்க சொல்லி இருக்கார்.பிரம்மாண்டமான அரண்மனை தேடி கேரளா சென்றேன்  . அங்கு காந்தளுர் எனும் ஊரில் மிக பெரிய அரண்மனை பார்த்தேன் ..சுற்றிலும் கிரானைட் கற்களால் ஆன கோட்டை இது .கேரளக் கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த சான்று இந்த அரண்மனை. 86 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்தது .This Way என்று அங்கங்கே வழிகாட்டிகள். மலையாளப் பெண்களும், ஆண்களும் ஆங்கிலத்தில் அரண்மனை குறித்து விளக்கமளிக்கிறார்கள். அரண்மனையை அவர்கள் பராமரிக்கும் பாங்கு பெருமையாகவும், பொறாமையாகவும் இருந்தது.common wealth கேம்ஸ்காக கட்டிய கட்டிடம் எல்லாம் இடிந்து விழும் போது இவைகள் நிலையாக இருப்பது அதிசயமே .

  நான் கொண்டுசென்ற நவீன கேமராவில் பல கோணங்களில் படம் பிடித்தேன்  .எப்படியாவது டைரக்டர்கிட்ட காட்டி associate டைரக்டர் ஆகிடனும்ன்னு  எண்ணம். எனது போட்டோ படலத்தில் ஓர் அரியணையை (chair )  பார்த்தேன் . பச்சை கலர் சுவிட்ச் ஒன்றையும் பார்க்க ஆர்வகோளாரில் தட்டிதொலைத்த  மறுவினாடி தலைசுற்றி மயங்கி விழுந்தேன் .
                                     மயக்கம் தெளிந்து எழுந்த போது எனது உடை, இடம் அனைத்தும் மாறியிருந்தது .நான் பார்த்துகொண்டிருந்த  அரண்மனை பத்து கி.மி தொலைவில் இருக்குது .ஒரு வேளை மணி சார் டெஸ்ட் சூட் பண்ணுரரோ சந்தேகம் .ரசிக்க வேண்டிய இடமாக தான் இருக்கு ஆனால் மனநிலை எனக்கு அவ்வாறில்லை .ஹையோ ஐயோ என்ன கொடுமை சார் இது மணி சார்கிட்ட நல்லபேர் எடுக்க விட்டாலச்சரியார்  பட வேலையெல்லாம் பாக்கவேண்டி இருக்கே . நான் கண்ணில்பட்ட மனிதர்களிடம் பேசி பார்த்தேன் , எல்லோரும் லூசுன்னு ஒரு மார்க்கமா பாத்தாங்க .கண்ணகட்டி எங்க விட்டாங்கனே தெரியலையே. ஒரு கோவில் கண்ணில் பட உள்ள போனேன் இலவசமா மோர் தந்தாங்க ஆஹா ஓஹோ என்ன சுவை .பாலில் ஒரு துளி தண்ணீர் கலக்காம மொராக்கி இருப்பாங்க போல. அப்போது  அருகில் ஒருவர் கல்வெட்டை பார்த்துகொண்டு இருக்கார் . அவர் உடையும் என் உடையும் ஒரே மாதிரி இருக்கு மேலும் அவர் மட்டும் கொஞ்சம் odd ஆக கண்ணாடி போட்டு இருகார்.நான்  கல்வெட்டை சத்தமாக படிக்க ஆரம்பிதேன் .
                                 ஸ்வஸ்திஸ்ரீ மதிரை கொண்ட
                                  கோப்பரகேசரி வன்மர்க்கு
                                   யாண்டு 22 ஆவது வட
                                       கரைத் தேவதான பிரமதேய 



                    நான் தப்பு தப்பாக படிகிறத பார்த்து அந்த மனுஷன் கோபமாய் பார்த்தார் . நான் ஹி ஹின்னு  வழிந்தேன் ." கல்வெட்டு தமிழ் தெரியதா? "  என்னை பார்த்து கேட்டார் நான் மனதிற்குள் பூரித்துப்போனேன்.அய்யா இது என்ன இடம்னு நான் பயந்து கேட்டேன்  காந்தளுர் தான் தம்பி . நாம்ம  டைம்மெஷின்ல இங்க வந்திருகோம் . இது கி பி 997ஆம் வருடம் ராஜராஜ சோழன் ஆட்சி காலம் .இந்த ஊரை பிடித்து பத்து நாள்தான் ஆச்சு அதன் இலவச மோர் தராங்க .இவர் சொல்றத நம்பாம இருக்கவும் முடியல நம்பவும் முடியல. நான் சுதாரித்துகொண்டு  ஓஹோ ஆட்சிய பிடித்தால் இலவசம் என்பது இந்த மோரில் தான் தொடங்கியதோன்னு  கேட்டேன் .ச்ச்சே ச்ச்சே இது ஒரு காவிய காலம் தம்பி ,அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. தம்பி பயபடாம கலப்படமில்லா காற்று நதி எல்லாம் சுற்றி பாக்கலாம் வாங்க என்று அழைத்தார் ..பின் தொடர்ந்தேன் ..

                                                           நீங்களும் வாங்களேன் ....நாளை தொடரும் 
 


1 comment: