6.19.2011

இதுவரை நாம் பார்த்திராத சச்சின் டெண்டுல்கர்


மிக சமிபத்தில் ஒரு மராட்டிய தொலைக்காட்சிக்கு சச்சின் அளித்த பேட்டியில் இருந்து சுட சுட சுட்ட சில துணுக்குகள்.....

படிப்பில் மார்க் வாங்குவதை விட கிரிக்கெட்டில் ரன் ஸ்கோர் பண்ணுவதில் அதிகம் ஆர்வம் உள்ளதை பார்த்த அப்பா அதில் சச்சினை முழுமையாக ஈடுபட ஊக்கமளித்து உள்ளார்.

அதற்க்கான பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதற்கு ஆரம்பித்தார் சச்சின். அப்போது அவரின் நண்பர்கள் பலர் பயிற்சி வகுப்பை கட் அடித்துவிட்டு பக்கத்தில் உள்ள வடபவ் கடைக்கு செல்வது வழக்கமாம் .நம்ம சச்சினுக்கும் அந்த சபலங்கள் வந்தாலும் நம்ம அப்பா தன் மேல் கொண்டுள்ள நம்பிகையைக்கும் அன்பிற்கும் மதிப்பளித்து அந்த மாதிரியெல்லாம் செய்தது இல்லையாம் .

அந்த தருணங்களில் தனது அண்ணன் மற்றும் தனது பயிர்ச்சியாளரின் பங்கு மிகவும் முக்கியமானது என்றும் கூறினார் சச்சின் .

சச்சினுக்கு நிச்சல் என்றாலே ஒரு உதறல் வந்துடுமாம்.தலைக்கு மேலே தண்ணீர் வந்தாலே பயம் வந்து விடுவதால் நிச்சலை முடிந்த அளவு தவிரித்து விடுவாராம்.


பத்திரிக்கைகளிலும் நாளிதழ்களிலும் தன் புகைப்படமோ செய்தியோ வருவது என்பது தன் குடும்பத்தினருக்கு பெரிய ஆச்சிரியமும் சந்தோசமும் அளிக்கும் என்கிறார் டைம் பத்திரிகைகயின்  அட்டையில் கூட இடம் பிடித்து விட்ட நம்ம சச்சின் .

தனது வெற்றின் ரகசியம் ஒழுக்கம் தான் என்கிறார் சச்சின். கிரிக்கெட் மேல் கொண்டுள்ள தீராத பற்றின் காரணமாக தனது உணவு பழக்கங்களில் கூட ஒரு ஒழுக்கத்தை கடைபிடிதாராம் .அதற்கு உதாரணமாக இரண்டு சம்பவங்களை நினைவு கூறுகிறார் .....

அஹ்மேடபாத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு ஆட்டத்தின் போது,அஹ்மேடபாத்தில் உள்ள சூடான தட்பவெப்பத்தை சமாளிக்க காரமான உணவுவகைகள் மற்றும் அசைவ உணவுகளை நான்கு நாட்களுக்கு தவிர்த்து விட்டாராம்.இதனால் உடல் சூடு அதிகரிக்காது அந்த இடத்தில் விளையாட உடலும் பொருந்தி போகும் என்கிறார் .

அட நம்ம சென்னையில் விளையாடனும்ன்னா சச்சின் என்ன பண்ணுவார் தெரியுமா ...இங்கேயும் வெயில் காலம் என்றால் நடுஇரவில் அலாரம் வைத்து எழுந்து நிறைய தண்ணீர் குடித்து விட்டு தூங்குவாராம். தன் உடல் விளையாட்டிற்கு முன் ஹைட்ரேட் ஆக இது உதவுமாம் .

அது இஷ்ட்டத்துக்கு அதிஸ்ட்டம் எல்லாம் யாருக்கும் வரவே வராது ,,இந்த மாதிரி கஷ்ட்ட பட்டு தேடினால் மட்டும் தான் வரும் !!சரிதானே ...இனி சச்சின் பற்றிய படங்கள் சில 




























12 comments:

  1. புதிய தகவல்கள் நன்றி

    ReplyDelete
  2. இதுவரை பார்க்காத புகைப்படங்கள் நன்றி

    ReplyDelete
  3. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    asaththal thagavalgal.. nice..
    /////////////////////
    tq tq tq ...

    ReplyDelete
  4. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    புதிய தகவல்கள் நன்றி
    @@@@@@@@@@@@@
    nanri nanbaa

    ReplyDelete
  5. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    என்று எனது வலையில்

    ஆத்தாவா?தாத்தாவா ?- மாறன் குழப்பம்
    @@@@@@@@@@@
    partthen nanbaa

    ReplyDelete
  6. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    இதுவரை பார்க்காத புகைப்படங்கள் நன்றி
    @@@@@@@@@@@@@2
    tq tq tq

    ReplyDelete
  7. நல்ல வித்தியாசமான படங்களின் தொகுப்பு..

    ReplyDelete
  8. Riyas said...
    நல்ல வித்தியாசமான படங்களின் தொகுப்பு..
    @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
    @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
    @@@@@@@@@@@@@@@@@@@@@
    tq tq tq

    ReplyDelete
  9. எந்த ஒரு வெற்றிக்கும்
    அர்ப்பணிப்பின்
    அவசியத்தை
    அழகாய்
    அசத்தலாய்
    சொன்ன பதிவு நண்பா
    தாமதத்திற்கு மன்னிக்கவும் நேற்று நான் ஊரில் இல்லை

    ReplyDelete
  10. சச்சின் பற்றி நான் இதுவரை அறிந்திராத தகவல்களைப் பகிர்ந்திருக்கிறீங்க. நன்றி சகோ..

    தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete