புகைபிடிப்பது உடல் நலத்திற்கு கேடானது ..
குடி குடியை கெடுக்கும் அப்படின்னு இனிமே ரொம்ப சின்னதாக கண்ணுக்கே தெரியாத அளவுல எழுதிபுட்டு இந்த மாதிரி மக்கள் உயிரை குடிக்கும் சிகரெட்டு வியாபாரம் செய்ய முடியாது .
புகைபிடிப்பதால் ஏற்ப்படும் தீமைகளை அதற்கான விளம்பரங்கள் மற்றும் சிகரெட்டு பெட்டிகள் அனைத்திலும் படங்களாக (பாடங்களாக ) காண்பிக்க வேண்டும் என்று ஒரு சட்டம் அமலுக்கு வந்துள்ளது அமெரிக்காவில் .இது சிங்கப்பூர்,மலேசியா போன்ற நாடுகளில் ஏற்கனவே உள்ள சட்டம் தான் என்றாலும் இது கூடுதல் சிறப்பு வாய்ந்தது ஏனென்றால் ஒரு சிகரெட்டு பெட்டியில் இருபது முதல் ஐம்பது சதவித இடத்தை இந்த படங்கள் ஆக்கிரமிக்க வேண்டும் என கூறியுள்ளது தான் .
இதோ சில மாதிரி புகைபடங்கள் ,இதனை பார்த்து சொல்லுங்கள் நண்பர்களே நம்ம நாட்டிலும் இந்த சட்டம் வரணுமா வேணாமா ....
இந்த மாதிரியே குடி பழக்கத்தின் கொடுமையை விளக்கும் படங்கள் நம்ம குடி மகன்களின் கண்ணில் படும்படி செய்தால் மாற்றம் வரும் .
நம் கைகளை கொண்டு நமக்கு நாமே தேடி கொள்ளும் தீமைகளில் இருந்து நம்மை காக்க இது மாதிரி செயல்கள் நம் நாட்டிலும் வரவேண்டும் இதற்கு அரசாங்கம் முன் வரவேண்டும் ,,,,,
Tweet |
சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்ல பதிவு.நன்றி.
ReplyDeleteபுகை நமக்கு பகை
ReplyDeleteசிகரட்டுக்கு நாம் வைக்கும் நெருப்பு நமக்கு நாமே வைத்துகொள்ளும் கொள்ளி என்பதை இந்த மாதிரியான பழக்கம் உள்ளவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் , அது மட்டும் இல்லாம அவர்கள் கெடுவது மட்டும் இன்றி அவர்கள் மூலமாக சுவாசிக்கும் நாமும் உடல் பாதிக்க படுவது கொடுமையிலும் கொடுமை, இது மாதிரியான சமூக உணர்வுள்ள கருத்தை பதிவிட்டதற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பா
@@@ வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteசமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்ல பதிவு.////
@@@@@
ஐயா நீங்க முதல் முதலாக கருத்திட்டு மகிழ்வித்து உள்ளீர்கள் ..நன்றி நன்றி மகிழ்ச்சி
A.R.ராஜகோபாலன் said...
ReplyDeleteபுகை நமக்கு பகை
சிகரட்டுக்கு நாம் வைக்கும் நெருப்பு ...........வாசிக்கும் நாமும் உடல் பாதிக்க படுவது கொடுமையிலும் கொடுமை, இது மாதிரியான சமூக உணர்வுள்ள கருத்தை பதிவிட்டதற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பா
@@@@@@
நன்றி நன்றி மகிழ்ச்சி நண்பா
உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் புகைப்பிடித்தல் தொடர்பான விழிப்புணர்வினை எமது நாடுகளில் வலியுறுத்த வேண்டும் உங்களது விழிப்புணர்வுப் பதிவு அருமை சகோ,
ReplyDelete@@@@நிரூபன் said...
ReplyDeleteஉடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் ....... உங்களது விழிப்புணர்வுப் பதிவு அருமை சகோ,
@@@@@@@@@@@@@@@@
நன்றி நன்றி மகிழ்ச்சி சகோ
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.ரியாஸ்..!
ReplyDelete///...என்று ஒரு சட்டம் அமலுக்கு வந்துள்ளது அமெரிக்காவில்...///---????
மெய்யாலுமே தன் மக்கள் மீது அக்கறை இருந்தால்... உலகில் உள்ள அனைத்து அரசுகளும் சிகரட் தயாரிப்புக்கும் விற்பனைக்கும் புகைப்பதற்கும் மொத்தமாய் சேர்த்து தடை விதிக்கட்டும்..!
அதுக்கு அப்புறம் பேசலாம் அவர்களின் பெருமையை பல பதிவுகளுக்கு..!
அதுவரை...
இதெயேல்லாம் நம்பவே நம்பாதீர்கள்..!
ஏனெனில்...
மக்களை ஏமாற்றும் சந்தர்ப்பவாதிகளின்... பன்னாட்டு சிகரெட் கம்பெனிகளின் எலும்புத்துண்டை நக்கும் அரசுகளின் பக்கா காமெடி விளையாட்டுக்கள் சகோ..!
தம்பீ
ReplyDeleteஉங்கள் பதிவுக்கும, இந்த
சமுதாய மக்கள் மீதும் நீங்கள்
கொண்டிருக்கிற அக்கரைக்கும்
என் உளங்கனிந்த பாராட்டுக்கள்
ஆனா என்னுடைய கருத்து--
குடி, புகை இரண்டையும தடை
செய்தால் ஓரளவு கட்டுப்படுத்தலாம்
புலவர் சா இராமாநுசம்
@@@@@@ முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ.ரியாஸ்..!
@@@@@@
வலைக்கும் சலாம் சகோ ...
வாவ்..
ReplyDeleteஅசத்தல் பதிவு...
சமுகம் படித்து திருந்த வேண்டும்...
//////
ReplyDeleteநம் கைகளை கொண்டு நமக்கு நாமே தேடி கொள்ளும் தீமைகளில் இருந்து நம்மை காக்க இது மாதிரி செயல்கள் நம் நாட்டிலும் வரவேண்டும் இதற்கு அரசாங்கம் முன் வரவேண்டும் ,,,,,
////////
கண்டிப்பாக...
புலவர் சா இராமாநுசம் said...
ReplyDeleteதம்பீ...............
ஆனா என்னுடைய கருத்து--
குடி, புகை இரண்டையும தடை
செய்தால் ஓரளவு கட்டுப்படுத்தலாம்
@@@@@@@@@@@@@
ஐயா அது தான் என் ஆசையும் ஆனா அதற்கு குரல் கொடுத்தாலும் யாரும் கேக்க போறதில்லை ..குறைந்த பட்சமாக இந்த மாதிரி படம் போட்டால் அதில் மனோதத்துவ ரீதியா ஒரு மாற்றம் வரும் என ஒரு குருட்டு நம்பிக்கை
# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteவாவ்..
அசத்தல் பதிவு...
சமுகம் படித்து திருந்த வேண்டும்...
@@@@@@@@@@@
நன்றி சகோ
# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDelete//////
நம் கைகளை கொண்டு நமக்கு நாமே தேடி கொள்ளும் தீமைகளில் இருந்து நம்மை காக்க இது மாதிரி செயல்கள் நம் நாட்டிலும் வரவேண்டும் இதற்கு அரசாங்கம் முன் வரவேண்டும் ,,,,,
////////
கண்டிப்பாக..
அதே அதே நன்றி சகோ
நல்ல பதிவு சகோ.. புகைப்பழக்கம் உள்ளவர்கள் இலகுவில் திருந்தமாட்டார்கள்
ReplyDelete