தந்தை
கலவிக்கு பின் கருவாகி
கருவறையில் சிசுவாகி
மகளாக பிறந்ததும்
எப்படி தாயானாய் !
தாய்
கணிக்க முடியாத இறைவனின் அன்பை
நினைத்து போற்ற தாய்மை தந்தவளிடம்
என்னவரின் முத்தங்களை குத்தகைக்கு
கொடுத்ததில் பொறாமை துளியும் இல்லை !
மகள்
திணிக்கப்பட்ட தாய்பால் நிறுத்தியதும்
மனதில் பதிந்தது முதல்ஏக்கம்,
இதை சொல்லவோ பாடவோ
இன்னும் தமிழ் உதவவில்லை !
அதற்குள் என் ஏக்கம் மறந்தும் மறத்தும்
போய்விடும் -அதுவரை உங்கள்
தவறுகளுக்கும் சரிகளுக்கும் மத்தியில்
சிறகடித்துக்கொண்டு இருக்கிறேன் !
சந்திக்க போகும் ஏக்கங்கள் என்
சிறகுகள் அனைத்தையும் ஓடிக்கும்வரை !
முற்றும் -------------------------
டிஸ்கி :
வறண்டு போன வருகை பதிவை அதிகரிக்கவே இந்த தலைப்பு மன்னிக்கவும் ! நிற்க முதன் முறையாக இவர்கள் மூவரும் ஒரு கவிதைக்கு மாடலாக இருந்தது கூகுளுக்கே தெரியாத செய்தி !! ஹி ஹி ஹி
Tweet |
ரியாஸு..
ReplyDelete// திணிக்கப்பட்ட தாய்பால் நிறுத்தியதும்
மனதில் பதிந்தது முதல்ஏக்க //
அருமையான வரிகள்..
தம்பி சொந்தமா எழுதிறியா, இல்ல ஏதும் புக்கா??? ஏன் கேட்கிறேன்னா கவிதைலாம் நல்லாவே இருக்கு.. நீயா இப்டினு மைல்டா ஒரு டவுட்டு..அதேன்...
நீங்க சந்தேகம் படும் அளவுக்கு எழுதி இருக்கேன் .. அதுவே சந்தோசம் அண்ணே ... டக்குனு தோணுது நேரம் இருக்கும்போது எழுதி விடுறேன் .நன்றி
ReplyDeleteகவிதை சூப்பர் சகோ.............
ReplyDeleteரொம்ப ரொம்ப நன்றி சகோ !முதன் முதலாக வந்து இருக்கீங்க தொடர்ந்து வாங்க நிறை குறை சொல்லுங்க
Deleteஅழகு...
ReplyDeleteவாங்க வாங்க சகோ...நன்றி
Deleteநல்லது இதுமாதியே செய்யுங்க தல ஹிட்ஸ் எடுத்துடலாம்...
ReplyDeleteகுருவே நீங்க சொன்னா சரி ...அப்படியே ஆகட்டும் ...
Deleteவரிகளை ரசித்தேன்...
ReplyDeleteநன்றி...
tm8
ரொம்ப ரொம்ப நன்றி சகோ
Delete