சில நாட்களுக்கு முன் ஒரே மெட்டுக்கு வாலி அவர்களும் ,வைரமுத்து அவர்களும் பாடல் எழுதுவது போல கற்பனை செய்து எழுதினேன் (வாலி + வைரமுத்து = தமிழ் +நான் = டூமீல்).அது நிஜத்தில் ஒரு முறை நடந்து இருப்பது நினைவுக்கு வந்தது .அந்த பாடல் இரண்டையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ...
இது பாபா திரைபடத்தில் இடம்பெற்ற பாடல் ரஹ்மான் இசையில் வைரமுத்து அவர்கள் எழுதிய பாடல்.ரஜினியின் நட்சத்திர அந்தஸ்துக்கு தகுந்த புயலான இசை , புகழ்பாடும் வார்த்தைகள் என நம்மை கடந்து சென்ற பாடல் .
இதே மெட்டை ரஹ்மான் ஸ்வதேஸ் என்னும் இந்தி படத்தில் மீண்டும் பயன்படுத்தினார்.புயல் இசை தவிர்த்து தென்றல் போல வருடும் இசையில் அழகிய காதல் பாடலாக உருமாறி இருந்தது .இந்த படம் தேசம் என்ற பெயரில்
தமிழில் டப் செய்யப்பட்டது .அப்போது இந்த காதல் பாட்டிற்கு காதல் தமிழ் சேர்த்தது கவிஞர் வாலி அவர்கள் ....
நீரும் இன்றி வேரும் இன்றி பூ பூக்கும் வித்தைதானா காதல் ஓஓஓஓ ...
சொல்லும் இன்றிமெட்டும் இன்றி கண் பார்க்கும் கவிதை தானா காதல்
இப்படி நல்ல வரிகள் பல நிறைத்த காதல் தாலாட்டை கேட்டு பாருங்க ..
ஒரு மெட்டையும் பாடல் வரிகளையும் நட்சத்திர அந்தஸ்து தீர்மானிக்கும் பொழுது அது கேட்பாரற்று போகிறது ...அதே மெட்டையும் பாடல் வரிகளையும் கதையும் கதையின் களமும் தீர்மானிக்கும் பொழுது அழகிய படைப்பாக மாறுவதை கண்டீரா ..
| Tweet |