6.15.2011

வாலி + வைரமுத்து = தமிழ் +நான் = டூமீல்


என்னப்பா என்ன ரெண்டு டுயுனும் ரெடியா ?

சார் அது வந்து ?

என்னாப்பா வாலி சாரும் வைரமுத்து சாரும் வந்துக்கிட்டு இருக்காங்க என்னப்பா ஆச்சு ?

சார் ஏ.ஆர்.ரஹ்மான் சார் ஜூன் 17 ஹாலி வுட்ல ஹாலி வுட் பௌல் (HOLLYWOOD BOWL) அப்படீங்குற இடத்தில் ஒரு கச்செரி அதுக்காக திடீர்னு கிளம்பி போயிட்டார்.ஒரு டுயுன் தான் ரெடியா இருக்கு . ஜூன் 25 சார் வந்ததும் ரெண்டாவது டுயுன் தர்றதா சொன்னாரு?

திடீர்ன்னு இப்படி சொன்னா எப்படி இப்ப ரெண்டு பெரும் வந்து நிப்பாங்களே நான் அவங்ககிட்ட என்ன சொலுவேன்?யாரை பாட்டெழுத சொல்றது யாரை வீட்டுக்கு அனுப்புறது ? ரெண்டு பேருமே சுயமரியாதை தமிழர்கள் .

சார் ஒரே டுயுனை ரெண்டுபேரையும் எழுத வைத்து ? விக்ரமன் சார் படம் மாதிரி ஒரே பாட்டை திருப்பி திருப்பி போட்டுடலாம்....

நிலைமை இப்படிதான் சமாளிக்கணும் என்ன பண்றது ...வாங்க கவி பேரரசே வாங்க 
கொஞ்சம் ட்ராபிக் அதுதான் தாமதம் 
நல்ல தமிழுக்கு எத்துனை நேரம் வேண்ணாலும் காத்திருக்கலாம் சார் 
பாடலின் சூழல் சொலுங்களேன் ..
சார் ஹீரோயின் தன் மாமாவின் மேல் காதல் கொள்கிறாள் .குழந்தை யாக இருக்கும் போதே அரும்பிய காதல் மாமா தன் தாழ்வு மனப்பான்மையால் ஒதுங்கியே இருக்கிறான்.மாமனை நினைத்து இந்த காதல் கனவு பாட்டு ..இது முழுக்க முழுக்க கிராமத்தில் நடக்கும் கதை இந்த ஒரு பாட்டிற்கு மட்டும் ரஷ்யா போறோம் சார் 
சரி டுயுனை போடுங்க கேட்ப்போம் ...(கேட்கிறார்) அஹா நல்ல மெட்டு 
(யோசிக்குறார்)
தம்பி 
சொல்லுங்க சார் ...
குழந்தை கருவில் இருக்கும் முதல் இரு வாரங்கள் வரை பெண் சிசுவாக தான் இருக்கும் இது விஞ்ஞான தகவல் அதை தமிழோடு காதலை  சேர்த்து சொல்லலாம்ன்னு நினைக்குறேன் ..
சூப்பர் சார் .
அருமை என்று தமிழில் சொல்லுங்க உங்கள் சம்பளத்திற்கும் கூட வரிவிலக்கு வாங்கி தருகிறேன் 
மன்னிக்கணும் ..
சரி இதோ உங்களுக்கு பாட்டு

கருவறையில் ஆணாய் மாற சாத்தியங்கள் உண்டாம் 
உன்மீது அன்றே அரும்பிய காதலால் பெண்ணாய் பிறந்தேன்.
பூப்படைந்தேன் பூச்சூடினேன்
மீண்டும் மீண்டும் பூக்கிறேன்
நீ உன் காதல் சொல்லும்வரை 
விடுமுறை எனக்கில்லை 
பூச்சூடவும் பூக்கவும் 

கவிபேரரசு விடை பெறவும் வாலிப கவிஞர் வருவதற்கும் சரியாக இருந்தது ...
வணக்கம் ஐயா...
வணக்கம் எங்க மான் இல்லையா ....
சார் US போயிருக்கார் 
இவன் பறக்குற மான்யா பிடிக்க முடியாது ..சரி டுயுனை போடு சிட்டுவஷனை சொல்லு ..
ஐயா (மீண்டும் அதே சிட்டுவஷன் தான் ) .................................
ஏன்டா கிராமிய கதை எதுக்கு ரஷ்யாவுக்கு போறே ? என்னோமோ போ இந்தா பாட்டு வெட்டு எனக்கு துட்டு ....

உண்ணாவிரதத்தால் ஊழலை ஒழிக்க முடியாது 
கண்ணா உன்னாலும் காதலை ஒளிக்க முடியாது 
சொன்னா நீ கேளு என் காதலில் 
BLACK MONEY கிடையாது.
டுக்கா விட்டாலும் அட நீ 
மக்கா இருந்தாலும் 
என் காதல் குறைவதில்லை 
உனக்கது என்றும் புரிந்தது இல்லை .

வாலி விடைபெற தயாரிப்பாளர் கலாநிதி மாறன் வருகிறார் ..அவரிடம் டைரக்டர் நடந்ததை சொல்லி .....
சார் இப்ப ரெண்டும் நல்ல இருக்கு எதை யுஸ் பண்றது 
முதல் பல்லவியா வாலி சார் எழுதினதையும் ரெண்டாம் பல்லவியா வைரமுத்து எழுதினதையும் போடுவோம் ...முதன்முறையாக இரு கவிஞர்களின் வரிகளில் ஒரு காதல் பாடல்ன்னு பப்ளிசிட்டி கிடைக்கும் ..
-------------------------------------------------------------------------------------------
வாலி ஐயாவும் 
வைரமுத்து ஐயாவும் 
மன்னிப்பார்கள் என்ற நம்பிக்கையில் 
ரியாஸ் 

19 comments:

 1. டமால் டுமீல் காமெடி வெடி

  ReplyDelete
 2. ரெண்டுபேரையும் சேர்த்துக் கலக்கிடீங்க!

  ReplyDelete
 3. டமால் டுமீல் காமெடி வெடிBy சி.பி.செந்தில்குமார் ////உங்களை போல முடியாது இது சும்மா சும்மா எழுதுனது ..நன்றி நன்றி

  ReplyDelete
 4. சரியான கற்பபனை ரசிக்கும் படி இருந்தது...

  ReplyDelete
 5. ரெண்டுபேரையும் சேர்த்துக் கலக்கிடீங்க!By சென்னை பித்தன் ////////////////////////////////////////ஐயா வாங்க வாங்க ...ரொம்ப நன்றி

  ReplyDelete
 6. அவங்க இரண்டுபெரும் ரொம்ப நல்லவங்க கண்டிப்பா தப்பா நினைக்கமாட்டாங்க.. மன்னிச்சிடுவாங்க..

  ஆனா கையில் சிக்கின...

  ReplyDelete
 7. அவங்க இரண்டுபெரும் ரொம்ப நல்லவங்க ......மன்னிச்சிடுவாங்க.. ஆனா கையில் சிக்கின...By # கவிதை வீதி # சௌந்தர். நீங்க மனசை பதற வைத்தீர்கள் நான் கொஞ்சம் இளைப்பாற இப்படி.. நன்றி நன்றி

  ReplyDelete
 8. சரியான கற்பபனை ரசிக்கும் படி இருந்தது...
  By # கவிதை வீதி # சௌந்தர்//////////நன்றி சகோ

  ReplyDelete
 9. கவிஞர் ரியாசுக்கு வணக்கம்
  வைரமுத்து கவிதை அருமையிலும் அருமை
  பிரமித்து போனேன்
  வாலி கவிதை வளமையிலும் வளமை
  சிலிர்த்து போனேன்

  டியுனுக்கு பாட்டு
  போட்டேன் ஓட்டு
  தமிழ்மணமும் இன்ட்லியும்

  ReplyDelete
 10. கவிஞர் ரியாசுக்கு வணக்கம் வைரமுத்து கவிதை .....தமிழ்மணமும் இன்ட்லியும்By A.R.ராஜகோபாலன்'''''''''''''''''''''''''நன்றி சகோ ,,,நான் சும்மா காமெடி பேசு நீங்கெல்லாம் தான் boss

  ReplyDelete
 11. அசத்தல் கற்பனை.. ஸ்கூல் க்கு போயிருந்தேன் நண்பா/

  ReplyDelete
 12. அசத்தல் கற்பனை.. ஸ்கூல் க்கு போயிருந்தேன் நண்பா/By !* வேடந்தாங்கல் - கருன் *! //////////சரி சரி ...ஆனா வடை போச்சு ஹிஹி நன்றி நண்பா

  ReplyDelete
 13. நல்லாத்தான் சிந்தித்து இருக்கின்றீர்கள்.இரண்டு
  கவிஞர்களும் நிட்சயம் மன்னிப்பார்கள்.காரணம்
  விளையாட்டாய் தொடங்கினாலும் கிட்டமுட்ட பாடல்வரிகள் சூப்பர்!..வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
 14. நல்லாத்தான் சிந்தித்து இருக்கின்றீர்கள்.இரண்டு கவிஞர்களும் நிட்சயம் மன்னிப்பார்கள்.காரணம் விளையாட்டாய் தொடங்கினாலும் கிட்டமுட்ட பாடல்வரிகள் சூப்பர்!..வாழ்த்துக்கள் சகோ.By அம்பாளடியா////நன்றி சகோ ..உங்கள் வாழ்த்து மகிழ்ச்சி அளிக்கிறது

  ReplyDelete
 15. சகோ, உண்மையில் காமெடி கலந்த அருமையான கற்பனையினைப் பகிர்ந்திருக்கிறீங்க.

  வாலி, வைரமுத்து பாணியில் இக் காலத்திற்கேற்ற உங்களின் கவிச் சிந்தனை அருமை சகோ.

  ReplyDelete
 16. சகோ, உ>.............. கவிச் சிந்தனை அருமை சகோ.By நிரூபன்/// வாங்க சகோ வாங்க ..என்ன ஆளையே காணோம் ....லேட்டா வந்ததற்கு குட்டு கருத்து சொன்னதற்கு சொட்டு ...ஹி ஹி நன்றி நன்றி

  ReplyDelete
 17. வைரமுத்து கவிதை கலக்கலோ கலக்கல்...

  இதையும் பாருங்கள்
  http://faaique.blogspot.com/2011/06/normal-0-false-false-false-en-us-x-none.html

  ReplyDelete
 18. என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........

  ReplyDelete
 19. அன்பின் ரியாஸ் - சரி சரி - சிந்திச்சீங்க எழுதிட்டீங்க - பரவால்ல - நேர்ல நடந்தா எப்படி இருக்கும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete