1.23.2013

ஆஸ்காருக்கு பின் ஆசையாய்......



வாழ்கையை ..........
வாழ்ந்து விடு ....
வழி பிறக்கும் என்றே 
வாழ்ந்து விடு .....


வாழ்கையை ..........
வாழ்ந்து விடு ....
இருளும் விலகும் ஓர் நாள் 
வாழ்ந்து விடு ....
தொலைவில் அல்ல 
தொடும் தூரம் 
என்றெண்ணி வாழ்ந்திடு 
ஏணி எதற்கு 
ஏக்கம்  எதற்கு 
கண்ணில் வெளிச்சம் இருக்கு 
உன் கனவில்'
புதிர் இருக்கு விடையும் இருக்கு 
விழித்து பார்த்தால் 
விடை அறிந்தால் 
உனதே உனதே வெற்றி 
துணிந்து செல் ........
துணிந்தே செல் 
துணை யாரும் வேண்டாம் துணிவே தோழனென்று 

துணிந்து செல் ........
துணிந்தே செல் 

துணிந்தே செல் 
துணை யாரும் வேண்டாம் துணிவே தோழனென்று .......



--------------------------------------------------
ஆஸ்காருக்கு பின் ரஹ்மான் ஆசையாய் இசையமைத்த படம் டெல்லி-6 அதில் இடம் பெற்ற பாடல் இது ...இதை தமிழில் கேக்க ஆவல் பாடி பாருங்கள் ..

1.20.2013

விஸ்வரூபம் Y? இதுவரை பாக்காத புகைப்படங்கள்

 இது 500 வருட பாரம்பரிய திருவிழாவின் போது எடுத்த படம்.பாவங்களை போக்கும் திருநாளாக கொண்டாடப்படும் ஸ்பெயின் நாட்டு திருவிழா!100க்கும் மேற்பட்ட வீரர்கள் குதிரையில் நெருப்பையும் புகையையும் கடந்து வந்து அந்த மிருகங்களின் பாவத்தையும் துடைக்கும் நாளாம். .....
 இது 9 மாத குரங்கு குட்டி .. செம வாலுங்க இது புத்திசாலியும் கூட .. இது இப்ப கித்தார்(Guitar) வாசிக்க பழகிக்கிட்டு இருக்கு .........
 நெருப்பு இல்லாம புகையாதுன்னு சொல்லுவாங்க ! வெறுப்போட விஸ்வரூபம் தான் இந்த போர் காட்சி ! ஏன் இந்த போர் ....சிரியாவில் !
 இது வீடியோ கேம் இல்லைங்க ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் போது அதி நவீன கமெராவின் உதவியுடன் எடுத்த புகைப்படம் ...........
 கும்பா மேளாவில் எடுத்த அழகிய காட்சி .............
 பனி சறுக்கு போட்டியின் போது எடுத்த படம் இது ........

 ஆடுகளம் மீண்டும் சூடு பிடித்து விட்டது .........யாருக்கு விருது இப்ப ?????
 ஈரானில் கற்பழிப்பு குற்றவாளிக்கு மரண தண்டனைக்கு முன் கொடுக்க படும் சவுக்கடி ......இது ஈரானில் எப்போ இந்தியாவில் .............
காற்றின் விஸ்வரூபம் புயல் ! புயல் மெல்ல ஓயுந்த தருணத்தில் கயனாவில் ....

1.17.2013

பிரபல கவர்ச்சி நடிகை திடீர் மரணம் -அதிர்ச்சி

 
இவங்க யாரு என்று ஞாபகம் இருக்கா ?V சானல் VJ ஆக இருந்து நடிகையான சோபியா ஹக் . இன்னும் ஞாபகம் வரலையா அலைபாயுதே படத்தில் செப்டம்பர் மாதம் ன்னு ஒரு பாடலுக்கு ஒரு கவர்ச்சி கலவரமே செய்திட்டு போனாரே அவர் தான் இவர் .......

நீண்ட நாட்களாக புற்றுநோயால் பாதிக்க பட்டு அவதிப்பட்டு வந்த சோபியா நேற்று லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் ...

அவரின் மரணத்திற்கு திரையுலகை சேர்ந்த பலரும் அதிர்ச்சியும் வருத்தத்தையும் twitter இல் பதிவு செய்து வருகிறார்கள் ....

சோபியா ஹக் பிரபு தேவா இயக்கிய வான்ட்டட் படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிட தக்கது. அவரின் பிரிவால் வாடும் உறவினர்  மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் !

1.15.2013

சூடுப்பிடித்தது ஆட்டம் :ரஜினிகாந்த் VS பவர் ஸ்டார்


ரஜினியுடன் போட்டி என்று அறிவித்து விட்டு கமலுடன் கைகுலுக்கி கொண்டு இருக்கும்  நம்ம பவர் ஸ்டாரின் ஆட்டம் எப்படி சூடு பிடித்துவிட்டது என்று அறிய ஆவலா .......

                                             இங்கே போங்க

                                         பவர் ஸ்டாரின்      ராணா


1.14.2013

தலைவா -ரெண்டு சொட்டு கண்ணீர் !



உறவுகள் முட்கள் என்றான பின்பும்
கொண்டாட்டங்கள் குறைந்திடவில்லை!
சிக்கனமின்றி சிரிக்கும் போதும்
மகிழ்ச்சி மட்டும் எட்டாக்கனி !

பிராத்தனைகள் போதும் பரிசேதும் வேண்டாம்
என்றனர் முட்களுக்கு நடுவிலும் பூக்களாய்
பூத்து குலுங்கும் உறவினர் சிலர்....

உன் பிராத்தனைகளையும் எதிர்பார்க்கவில்லை
என் ஆசிகள் உனக்கு என்றும் என
வாழ்த்தினர் வசதியுள்ள மனம்கொண்ட சிலர் ....

மெய்யும் பொய்,நான் என்கிற
நானும் பொய்,நிலையில்லா உலகில்
அன்பை நிலைநாட்டியதற்கு சான்றாய்
நீ சிந்தும் ரெண்டு சொட்டு கண்ணீர்
போதும் என்றனர் புத்தனை மிஞ்சிய
நண்பர்கள் சிலர் !

முட்கள் தந்த வலியையும் மறக்கடித்த
மலர்கள் வாடிட காண வலிமையில்லாத
நானோ கஞ்சன் ! ரெண்டு சொட்டு
கண்ணீரையும் எனக்காகவே சேமியுங்கள்
முந்தி செல்ல போவது நானே என்றேன் !


1.13.2013

டெல்லி : வக்கிரமும் உத்தமமும்






சட்டத்தின் முன்பு -
அதிகபட்ச தண்டனை கேட்டு
நாடே கொந்தளிக்கும் வேளையில்,
இறைவனின் முன்பு -
குறைந்தபட்ச தண்டனை கேட்டு
பிராத்தனையில் ஆறு வக்கிரக்காரர்களின்
உத்தம தாய்மார்கள் !


1.11.2013

வெள்ளை மாளிகையும் முதலாளியின் தற்கொலையும்



என் வயது தான் உனக்கும்

நீ எனக்கு முதலாளி
நான் தொழிலாளி.

நிரம்பி வழியும் கல்லாபெட்டியின்
இலட்ச்சங்களை கூட அலட்சியமாக
கடந்து செல்கிறாய் முதலாளியின் மும்முரத்துடன் !
கல்லாபெட்டி என் பொறுப்பில்,முனங்கல்களுடன் !

என் லட்சியங்களை உன் லட்சங்களுடன்
அடைந்திடவே தடுமாறியது மனம்!
உன் நம்பிக்கை எனக்கு நம்பிக்கையளித்ததால்
தடம்மாறினேன் நான் தவிப்புகளுடன் !

ஆண்டுகள் செல்ல செல்ல, இதோ
என் வீட்டுக்கு வெள்ளை அடிக்கிறார்கள்!
உறவினர்கள், வெள்ளை மாளிகை
என்று கைதட்ட தட்ட என்
குற்ற உணர்வுகள் தவிடுபொடியாயின !

விடுமுறையில் வீட்டை பார்க்க போகிறேன்
நதிமூலம் ரிஷிமூலம் என்ற வியாக்கியானங்கள் உதவிசெய்ய,
உறவினர்கள் முன் பெருமை தலைக்கு ஏறி 
பலருக்கு நாட்டாமையாக நான் !

நாட்டமை சொம்பை பாதுகாத்தவனாக
விடுமுறை முடிந்து வேலைக்கு
திரும்பிய நாள், நீ (முதலாளி ) தற்கொலை
செய்துகொண்டு பிணமாக கிடக்கிறாய் !
என்னை மரணத்திலும் முந்திவிட்டாய்!
இன்று மட்டும் பொறாமை இல்லை !


உன் அலட்சியத்தை கண்கொட்ட பார்த்த நான்
உன் நம்பிக்கையை, கண்மூடி பார்த்தது புரிந்தது!
உன் தொழில் தொங்கவும் இன்று
தலை தொங்கவும் நானும் ஒரு காரணம்!
இல்லை !நான் மட்டுமே காரணம் !
புண்பட்ட என் மனதில் ஈட்டியாக பாய்ந்தது
உன் வீட்டார் மீண்டும் என்னை நம்பி
பொறுப்பு அனைத்தையும் தந்தது !

வெற்றிகளை ருசித்த பின் மனம் 
கற்றுக்கொள்ள் துணிவதே இல்லை!
அந்தரத்தில் நீ தொங்கி - என் 
வெற்றிகளையும் கொன்றுவிட்டதால் 
கற்க தொடங்கினேன் மாணவனாக !

உன் மனைவி மறுமணமே வேண்டாம் என்கிறாள்
அவ்வளவு காதலிலும்  முதலீடு செய்திருக்கிறாய் நீ!
நான் மனிதனாக நேர்வழியை நேசிக்கவும் 
கற்றுக்கொண்டேன் உன்னால் !


தொழிலை தலைநிமிர்த்த  பாடுபட்டேன்,
என் சேமிப்பை சத்தமின்றி கொட்டினேன் ,
நான் சில காலம் சம்பளமும் துறந்தேன்.
இவை அனைத்தும் உன் உழைப்பே !
அதை நான் மட்டும் அறிவேன் !


பின்பு ஒரு நாள் வெற்றிக்கு பரிசாக 
உன் திருமதி எனக்கு வெகுமதி தந்தாள்,
வேண்டாம் என்றேன்,கணக்கு தீர்க்க வழியில்லாமல் !
திருடிய போது திருத்தாத உறவுகள் ,
இன்று என்னை ஏமாளி என்று ஏளனம் செய்தனர்!

நீ என்னை மன்னிக்காதவரை
என் நன்மைகளில் உனக்கும்
பங்கு உண்டாம் ,அதற்காகவே
அதிகமாக நன்மைகள் செய்கிறேன்
இருவரும் மோட்சம் பெற !


ஒருமுறை மரணித்து விட்டு
என்னை ஓராயிரம் முறை கொன்றவனே ,
உன்னை சந்திக்கும் நாளில்
என் தலை குனிந்தே இருக்கும்,
நாக்கை தொங்கவிட்டுவிட்ட உனக்கு
என்னை திட்டிதீர்க்க வலு இருக்குமா?

1.10.2013

இசை ஆர்வமுண்டோ ?வாங்க நீங்களும் பாடலாம் !


A.R ரஹ்மான் இசையில் ஒன் டூ கா பௌர் (ONE 2 KA 4)என்ற திரைபடத்தில் இடம்பெற்ற மிக சிறந்த காதல் பாடல் இது .இதை தமிழில் பாட ஆசைப்பட்டேன் . வார்த்தைகளை கோர்த்தேன் ராகத்தோடு ,அவை கானோளியோடும் ஒத்துபோக வேண்டுமென்றும் சிரத்தை கொண்டேன் . பாடி பாருங்கள் பிடித்து இருந்தால் வாக்களித்து கருத்து சொல்லுங்கள் நன்றி 

பல்லவி :
பெண் :   முதல் பார்வையில் காமம் கண்டேன் 
                ரெண்டாம் பார்வையில் பயம் கண்டேன் 
                காதலை சொல்லிடு நானும் உன் பின் வருவேனடா 


பெண் :   முதல் பார்வையில் காமம் கண்டேன் 
                ரெண்டாம் பார்வையில் பயம் கண்டேன் 
                காதலை சொல்லிடு நானும் உன் பின் வருவேனடா 
                மூன்றாம்  பார்வையில் காதல் கண்டேன் 
                நான்காம் பார்வையில் தயக்கம் ஏனோ  
                காதலை சொல்லிடு நானும் உன் பின் வருவேனடா

ஆண் :     ஆம்..................
                 அழகை கண்டேன் உண்மை தான் 
                 அச்சம் கொண்டேன் நிஜம் தான் 
                 காதல் சொல்ல வார்த்தை தேடி தோற்தேனடி      
                 உண்மை அறிவாயே நீ !

பெண் :   முதல் பார்வை
                  நான்காம் பார்வை 
                 தயக்கம் ஏனோ  தோற்தேனடி
                 காதலை சொல்லு 
                 தோற்தேனடி
                 காதலை சொல்லிடு நானும் உன் பின் வருவேனடா 
                 உண்மை அறிவாயே நீ !


சரணம் 1:
பெண் :     காதல் சொல்ல வார்த்தை வேண்டாம் 
                 கண்களாலே சொல்லிவிடு !
                 கவிதை வேண்டாம் மௌனம் போதும் 
                 ஒருமுறை நீ சொல்லிவிடு !

ஆண் :     மௌனமே சம்மதம் புரிந்தது தோழியே !
                 இருந்தும் எனக்கு கவிஞனாக
                ஆசை உண்டு தோழியே !

பெண் :    உந்தன் பெயரே கவிதை எனக்கு 
                 காதில் சொல் மன்மதா 
                 உன் கண்ணை மிஞ்சும் கவிதை 
                 உலகில் ஏதும் ஏதும் உள்ளதா !

ஆண் :     அடி கள்ளி வென்றாய் என்னை 
                 என் காதலை கண்ணில் பார் !

பெண் :      கண்டேன் காதலை .....
                   கண்டேன் காதலை கண்ணில் தான் 
                   காதல் கொண்டேன் உன் மேல் தான் 

ஆண் :      அட காதல் கொண்டேன் நானும் தான் 
                  எந்தன் தேவி நீயே தான்   
                  உலகம் வியக்கும் காதல் செய்வோம் வா உயிரே
                 
                                                
சரணம் 2:

ஆண் :   ஒ ,,,,,,ஒ ....
               கள்ள பார்வை எதற்கு பெண்ணே 
               என்ன வேண்டும் சொல்லிவிடு 
               கள்ள பார்வையை தாங்கும் இதயம் 
               எனக்கு இல்லை புரிந்துகொள் !

பெண் :    காதல் சொன்ன காதலா 
                 இதயம் சொல்வதை செய்திடு !
                 கண்ணில் ஏதும் கள்ளமில்லை 
                 உள்ளத்தில் ஆசைகள் உள்ளது !

ஆண் :    கூந்தல் அழகை எண்ணி எண்ணி 
                முத்தங்கள் நான் தந்திடவா !
                முத்தம் முதலீடு என்று சொல்லி  
                வட்டி கேட்டால் பாவமா !

பெண் :   கண்கள் மூடி காத்திருக்கேன் 
                கணக்கை பாரு காதலா 

ஆண் :     நீண்ட நாட்கள் பாக்கி உதட்டில் ......
                 தேனீ போல பருகவா  !
கோரஸ் :   
                    காதல் வெல்லும் 
                   காலம் வந்தது !
                   கைகூடும் ......
                   நேரம் வந்தது ! உங்களுக்கு ....
                   
                    மௌனம் போதும் வார்த்தை எதற்கு ?
                    முத்தம் போதும் கவிதை எதற்கு ?  

                     மௌனம் போதும் வார்த்தை எதற்கு ?
                     முத்தம் போதும் கவிதை எதற்கு ? 


                     மாலை சூடும் வேளை வந்தது 
                     மங்கள இசைதான் எங்கும் முழங்குது 


                     மாலை சூடும் வேளை வந்தது 
                     மங்கள இசைதான் எங்கும் முழங்குது 


--------------------------------------------------------------------------நன்றி 


இரண்டாவது சரணம்  கானோளியோடு  மிகவும் பொருந்தி வருவது போல் எனக்கு ஒரு மாயை . இது பரிட்சார்த்த முயற்சி நான் பாஸா பெயிலா ???!!
குறை நிறை சொல்லுங்கள் திருத்தி கொள்கிறேன் .............

வலைச்சரத்தில் ....



1.09.2013

கொலை +தற்கொலை =சிறை





வங்கியில் பணம் செலுத்தி
மடியில் கணம் குறைந்ததை எண்ணி
மகிழ்ச்சியுடன் வரும் என்னை நோக்கி
பாய்ந்தன முரட்டு கைகள்
தோலில் வலி உணரும்போதே
செவிக்கும் வசைமொழி விருந்தானது
முரண்டு பிடித்த அந்த கணத்தில்
பளபளவென ஒரு கத்தி
காற்றில் மிதந்தபடி வந்து
வயிற்றில் பாய்ந்தது !

என்னிடம் ஏதும் இல்லாததால்
அவர்களுக்கு இது தோல்வி !
கோபம் அதிகரிக்க சுருண்டு
விழுந்து கிடக்கும் எனக்கு
இலவச இணைப்பாக முகத்தில்
 ஓங்கி ஒரு மிதி !


என்னை குத்திய திருடர்கள்
நிச்சயம் கஞ்சர்களே - சொருகிய
கத்தியையும் விட்டு வைக்காமல்
பிடுங்கி செல்கின்றனர் !

வயிற்றில் வழியும் இரத்தத்தை காண
தைரியம் இல்லை ஆனால் கைகளில்
உணர்கிறேன்- என் ஐம்புலனும்
சிவந்திருப்பதையும்  சிந்தை உணர்த்துகிறது!

பற்களை கடித்துகொண்டு வலியை
பொறுத்துக்கொண்டு இப்படியே என்னை
மாய்த்துகொள்ள  விரும்புகிறேன்.
இது தற்கொலை அல்ல, மரணிக்க
கிடைத்த நுழைவு சீட்டு இதையாவது
சரியாக பயன்படுத்த நாடினேன்.

ஆள் நடமாட்டம் அதிகமில்லை
நானும் சத்தமிடவில்லை
வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில்
முயற்சி செய்துகொன்டிருக்கும் எனக்கு
இது நிரந்தர தோல்வி அவ்வளவே !

தோற்றவர் ஏமாந்தோருக்கு கூட
ஞானிகள் என்று பட்டம் தந்து மகிழ்கிறோம் !
முயற்சிக்கும் என் போன்றோருக்கு
வெறுமையும் விரக்தியும் பரிசானால்
மரணமே மோட்சம் !

மனைவியின் காதலும்
மழலையின் மொழியும்
கண்களில் காட்சிகள் மங்கி
மறையும் கணத்தில் வாழவேண்டும்
என்ற ஆசை தீயை பற்றவைகிறது !

வேண்டாம் நான் இல்லாமல் போனால்
என் உலகம் இன்னும் அழகாக வாய்ப்பிருக்கிறது !
அதை கெடுக்க மனமின்றி கண்மூடி போகிறேன் !
நிச்சயம் கண்விழிப்பேன்  பெரும் பாவம்
செய்யாததால் அது சொர்க்கமாகவே இருக்கும் !


மெல்ல மெல்ல கண் விழிக்கிறேன்
என்னை பார்த்ததும் கதறி மண்டியிட்டு
இறைவனுக்கு நன்றி சொல்கிறாள் மனைவி
வரவேற்கும் வண்ணம் மழலையின் சிரிப்பை
கண்டதும் அன்பும் அறனும் நினைவுக்கு வர
மீண்டும் சிறைப்பட்டேன் !


-------------------

இது மீள் பதிவு --


வலைச்சரத்தில்..........
இன்று :2518.சிரிக்க !ரசிக்க !வலிக்க .........

நேற்று :2517.சிகரெட்டும் சின்சியாரிட்டியும்

1.08.2013

விஸ்வரூபம் விஷபரிட்சையே !



பழக்கம் இல்லாத சப்தம் ,திடுக்கிட்டு திரும்பினால்
பீதியில் அலறி ஓடும்  மக்கள் ஒருப்பக்கம்
குருதிபுனலில் கதறும் மக்கள் ஒருப்பக்கம்
இல்லாத வீரத்தை தேடாமல்
இருக்கின்ற ஈரத்தினால் கதருவோருக்கு
உதவ நாடியது மனம் !

இது மனிதகூட்டத்தின் எரிமலை கோபம்
இயலாமையால் இன்று வெடித்துள்ளது
இன்னும் வெடிக்கும் என்ற அச்சத்தால்  பல
தோழமை கைகள் தடுக்கின்றன உதவிடும் என்னை !

அங்கே ரத்த வெள்ளத்தில் மிதப்பதும் நண்பர்களே

பாதுகாப்பு வளையம் தாண்டி செல்லும் போது 
கண்டகாட்சிகள் பலவற்றை கண்ணீர்
 மறைத்துவிட்டதால் கண்ணீருக்கு நன்றி! 
எஞ்சிய  சில மனக்கண்ணில் நிலைத்ததே சாபம்!

பால்வாங்க வந்த பெரியவர்,

பால்குடி மறக்காத குழந்தை, 
தாயின் அணைப்பில் இருந்ததற்கு 
சாட்சியாய் தாயின் கைமட்டும் 
குழந்தையோடு இருக்க -தாய் 
எங்கோ சின்னாபின்னமாகி! 
அனைவருக்கும் பால் ஊற்ற கூட 
பிரோயோஜன படாததால்  பால் பாக்கெட்டும்
உயிரிழந்து கொண்டிருக்கு!

இன்னும் உயிர் உள்ளவர்களுக்கு உதவிட

அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு நான்
சிவப்பு விளக்குகளுடன் அம்புலன்சுகள்
சீறி பாயுந்து சென்றதும் வீதியில்
பிணமானவர்களும் உதவியவர்களும்
மட்டுமே இருக்கிறோம் !

ஜாதி மத பேதங்கள் தொலைந்து
ஒற்றுமையாக பிணக்குவிலாக மனிதர்கள்
வழிந்து ஓடும் குருதிப்புனலில்
குருதி பேதமும் தொலைத்திருந்தது!


நடக்கையில் எறும்புகளை மிதித்து
கொன்ற அனுபவங்கள் அனைவருக்கும் உண்டு .
இது எறும்புகளின் கோவமோ ?!
புத்தனுக்கும் கோபம் வரும்
காலம் இது -என் சந்தேகத்தில் பிழையில்லை !

சமர்பிக்க சொல்லும் இறைவனிடம்
சமர்ப்பித்து இருந்தால் சங்கடங்கள் தீரும்!
பொறுமையின்றி உயிரெடுத்து கொன்றுகுவித்து
யாருக்கு நீதியை நிலைநாட்ட போகிறார்கள்
இந்த ஆத்திரக்காரர்கள் -கோபத்தின்
 விஸ்வரூபம் விஷபரிட்சையே !

என் கருப்பு சட்டையிலும் செங்குருதி
திட்டு திட்டாய் தெரிவதை பார்த்து நொந்த
அதே கணம் மீண்டும் ,
அதே சப்தம் கேட்டது.-இந்த முறை
எனக்கு உதவிட அழைக்க யாருமில்லை !


தீப்பிடித்து எறியும் சட்டையையும்
அணைக்க வலுவில்லாமல் நான் !
ஐயோ சற்றுமுன்  காலிழந்த ஆடவனின் 
முகம் போல் என் முகமும் 
சிதைந்திருக்குமோ -எங்கே வலிக்கிறது 
கூறிப்பிட்டு சொல்ல வலுவின்றி 
மயக்க நிலைக்கு செல்கிறேன்!
மிருகங்களுக்கு நடுவில் மனிதனாக
இருக்கத்தானே முயற்சிதேன் எனக்கேன்
இந்த தண்டனை இறைவா ?

இல்லை!சரியே !கண்ட காட்சிகள்
சாபம் என்றேன் சாகும் வரம் தந்துவிட்டாய்
நன்றிகள் கோடி பரம்பொருளே !
வலிதான் பொறுக்க முடியவில்லை
சீக்கிரம் முற்றுப்புள்ளி வை
எனக்கும், நடக்கும் அத்தனை போருக்கும் !


-----------------
இதுவும் மீள் பதிவே ....

வலைச்சரத்தில்
இன்று :2517.சிகரெட்டும் சின்சியாரிட்டியும்

நேற்று :2516.சூரியனுக்கு எதுக்கு டார்ச் லைட் !!


1.07.2013

மீண்டும் ஒரு காதல் Take Off!



பேருந்தில் பயணிக்கும் போதெல்லாம்
ஜன்னல் ஓர இருக்கைக்காக பிராத்தனைகள் செய்ததுண்டு !
இன்று முதல் விமான பயணம்
சற்றே கூடுதலான பிராத்தனையுடன்
இருக்கை தேடின  கண்கள் ,ஏமாற்றமே !
ஆனால் கொஞ்சமும் வருத்தமில்லை !
ஆம் ஜன்னல் ஓரத்தில் அழகிய இளம் பெண்
அவள் அருகில் நிலவில் கால்பதித்த சந்தோசத்துடன் நான் !

பொய் சொல்லி வர்ணிக்க வேண்டிய அவசியமில்லா அழகு !
கண்ணியமான உடையில் புத்தக புழுவாய் அவள் !
என் குளியலை நானே சந்தேகத்துடன் நினைத்துபார்க்க வைத்தது
அவள் கூந்தல்,காற்றில் தெளித்த வாசனை !

இறுக்கமாக மூடப்பட்டுள்ள ஜன்னல் வழியே
காற்று வர வழியே இல்லை !
யாரின் பாடலுக்கு உன் கூந்தல் நடனமாடுதோ !
ஓ .. தலைக்கு மேலே குளிறுட்டி !!

முதல் விமான பயணத்தின் நடுக்கம்  மறைத்து
கதாநாயகனாய் முயற்சிக்கும் எனக்கு,
ஒவ்வொரு கணமும் பரிட்சையாகி விட்டதே!
ஆமாம் எந்த பரீட்சைக்கு நீ  இப்படி படிக்கிறாய்!!



உணவு வருகிறது வேண்டாம் என்கிறாய்
உன் குரலும் இனிமை ! உணவை
வாங்கி உண்ணாமல் தவிக்கையில்
என்னை அன்புடன் சாப்பிடுங்கள் என்று அனுமதி தருகிறாய் !
வரபோகும் மனைவி ஊட்டிவிடவேண்டும் என கனவுகள் உண்டு ,
அது நிறைவேறியாதகவே தோன்றுதடி!



உண்ட நான் தெளிவாய் இருக்க
மயக்கத்தில் அவள் புத்தகத்தில்
முகம் புதைத்து தூங்கிபோனாள்!
இதுவரை ஓரக்கண்ணில் பார்த்துவந்த எனக்கு
முழுதாய் முகம் பார்க்க ஆவல்!
அந்த புத்தகத்தை என்னை போல்,
வேறு எவரும் சபித்திருக்க மாட்டார்கள் !!

பயணம் இனிதே நிறைவடந்தாம்!!!
விமானம் தரை இறங்கியது .
என் பயனதட்டுமுட்டுகளை சேகரித்த பின்
அவள் பக்கம் திரும்பினேன்!
யாருக்கோ காத்திருக்கிறாள்
பணிப்பெண் நான்கு சக்கரநாற்காலியுடன் வர
அதில் நன்றியுடன் அமர்கிறாள் என்னவள் !


பின்பு ஒரு நாள் ...,
விழி ஈரத்தோடு நல்ல துணையின்றி
என்னால் நகரக்கூட முடியாது என்கிறாய் ?!
நானும் நல்ல துணையே என வாக்களித்தேன் .

உன்னிடம் காதல் சொன்ன
அந்த கணம் மட்டுமே
நானும் வீரன் என சொல்லிக்கொள்ள  உதவும் !


ஈர்ப்பு தான் காதலா?
பரிதாபம் தான் காதலா?
அவள் நிலைதெரியாமல் அணுஅணுவாய்
ரசித்த குற்றஉணர்வு தான் காதலா?
என்ற கேள்விகளுடன் நான் இருக்கையில்
என் தியாகமே காதல் என்று நன்றியுடன்  அவள் !

என் கேள்விகளோடு காதலும்
நிலைதிருப்ப்பதால் இன்றும்
வானிலேயே மிதக்கிறோம் !

இன்றைய வலைச்சரத்தில் :

1.06.2013

வலைச்சரத்தில் நான் !


நண்பர்களே சகோதர சகோதரிகளே ...
இன்று முதல் வலைச்சரத்தில் ஆசிரியர் பணி எனக்கு (அட நம்புங்க )..எனவே இந்த வாரம் மீள்பதிவு வாரம் ...ஆம் ஆசிரியர் பணியை (அதையாவது ) சரியா செய்ய நம்ம பக்கத்துக்கு விடுமுறை கொடுத்து அதே சமயம் . நல்ல கவிதைகளை இந்த வாரத்தில் மீள் பதிவுகளாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவல் ....நன்றி 

ஆணின் வக்கிரமும் பெண் மனமும் !

அலங்காரம் அதிகமானால்
விலை வைத்துவிடுகிறார்கள்
அலங்காரமே இல்லை என்றால்
விலைபோவதில்லை நான்!


வியர்வை துடைத்து,அளவாய் சிரித்து
ஆண்களை எதிர்கொள்ளும் போதெல்லாம்
என் ஐம்புலனும் தன்னிச்சையாய்
உடையை சரிசெய்து கொள்ள பழகிவிட்டது
நிச்சயமாய் கவனம் ஈர்ப்பதற்கு அல்ல!


பெண்ணியம் பேசும் பல
கண்ணியவான்கள் கண்கள் கூட
மத்தியில் நிலைத்து விடுகிறது .
தடுமாறும் வக்கிரத்தால்
நான் தடம் மாறாமல் இருக்க உதவும்
தலையங்கி,துப்பட்டா மட்டுமல்ல 
ரசம் போன கண்ணாடிகள் கூட
எங்களுக்கு இறைவன் தந்த பொக்கிஷமே !

------------------------
இது முகநூளில் நான் கண்ட காணொளி இது இந்த கவிதையோடும் , மேலும் நாட்டு நடப்புகளோடும் ஒத்து போவதால் இதை இங்கே பகிர்ந்து உள்ளேன் .அவசியம் பார்க்க வேண்டிய காணொளி .....


1.05.2013

ar rahman இசையில் என் முதல் பாடல்

வாழ் நாள் தான் போதுமா .........
கடந்து செல்லவும் இயலுமா
உன் இரு விழி காணாவே

இரு விழிகள் பத்தாதடி
இரு விழிகள் பத்தாதடி 
இரு விழிகள் பத்தாதடி ...............
இரு விழிகள் பத்தாதடி 



வானவில்லும் இல்லை
அழகு நிலவும் இல்லை
எப்படி உவமை சொல்வேன்
தமிழே குழம்புதடி ........
இன்பம் மட்டும் தந்தவளை
இணைத்து சொல்ல ஏதும் இல்லை
இணைந்து செல்ல துணிவும் இல்லை
தூரத்தில் ரசிக்கவே
தூக்கத்திலும் பார்க்கவே


இரு விழிகள் பத்தாதடி
இரு விழிகள் பத்தாதடி
இரு விழிகள் பத்தாதடி ...............
இரு விழிகள் பத்தாதடி


இது மனதை வருடும் மீனாக்ஷி திரைப்பட பாடல்.இதை தமிழில் கேக்க ஆவல் எனக்கு.எதற்கு மற்றவர்களை தொந்தரவு செய்ய நாம எழுதுவோம் படிக்கும் அனைவரும் பாடட்டுமே என்று எழுதிவிட்டேன் ..பாடி பார்த்து நல்லா இருக்கான்னு சொல்லுங்க .................

1.03.2013

அக்னி நட்சத்திரம் ! அழகிரி vs ஸ்டாலின்



வேலூர் மாவட்ட பாமக முன்னாள் செயலாளர் சாமுவேல் செல்லப்பாண்டியன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் சேர்ந்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை (3.1.2013) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலைஞர் பேசியபோது,
’’ஒரு காலத்தில் மிகமிக வேண்டிய தலைமையாகத்தான் பாமக எனக்கு இருந்தது.  அந்தத் தலைமையைப் பற்றி நான் அவதூறாகவோ அல்லது விமர்சனம் செய்தோ பேசியதில்லை.  ஆனால் வீணாக என்னை வம்புக்கு இழுத்து, நான் பதில் பேசாவிட்டாலும், என்னைத் தரக்குறைவாக அந்தத் தலைமை பேசி வருகிறது.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு திமுக ஆட்சியில் அம்பேத்கருக்கு மணி மண்டபம், அம்பேத்கர் பெயரில் சட்டக் கல்லூரியை அமைத்திருக்கிறோம்.
என்னுடைய மகன் மு.க.அழகிரிக்கு மனைவியாக வாய்த்தவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த காந்தி. என்னுடைய மனைவியை அத்தை என்று காந்தி அழைக்கும்போதும், என்னுடைய மனைவி அந்தப் பெண்ணை மருமகளாக ஏற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போதும் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இப்படிச் சமுதாயத்தில் கலப்பு ஏற்பட்டு, எல்லோரும் மனித ர்கள் என்ற நிலை ஏற்பட வேண்டும். ஜாதியைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தால், நாடு வாழாது. இந்த நலிவுகளைப் போக்கத்தான் ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெறுகின்றன.
பெரியாருக்கும், அண்ணாவுக்கும் சமத்துவத்திலே ஒரு நம்பிக்கையையும், உறுதிப்பாட்டையும் ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஒத்துழைப்பு காட்டியவர் அம்பேத்கர். அவருடைய செயல்பாடுகளைப் போற்றிப் பாதுகாப்பதுதான் திமுகவின் கடமை. இந்தச் சமுதாய மேன்மைக்காக, என் ஆயுள் இருக்கும்வரை பாடுபடுவேன்.
அப்படியானால் அதற்குப் பிறகு என்ற கேள்விக்குப் பதில்தான் ஸ்டாலின். அவரை நீங்கள் மறந்துவிடக்கூடாது’’ என்றார்.

இது இன்று நக்கீரனில் வெளியான செய்தி ...நடந்து கொண்டு இருக்கும் சகோதர பனி(ணி)போருக்கு முற்றுபுள்ளி வைக்குமா அல்லது அரசியல் யுத்தத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லுமா என்பதற்கு  வரும் நாட்களில் விடை கிடைக்கும் ..........

ஒரு டவுட்டு ஒருவேளை அழகிரி அவர்கள் தனி கட்சி தொடங்கினால் அ.தி.மு.க என்றா பெயர் வைப்பார் (அழகிரி திராவிட முன்னேற்ற கழகம் ) ஹி ஹி