6.29.2011

ஏம்மா இவ்வளவு பெரிசு கஷ்டமா இல்லை ???

டென்னிசி (Tennessee) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும்.அங்கே ஒரு ஆசாரி பிரமாண்டமான மர வீடு (tree house)கட்ட விரும்பினார். அதற்காக கிட்டத்தட்ட பத்து லட்ச ருபாய் வரை செலவு செய்து 1993 இல் தொடங்கிய பணி இப்பொது முடிவடையும் நிலையில் உள்ளது. அனேகமாக இந்த மர வீடுதான் உலகத்திலேய பெரிய மர வீடாக விரைவில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற போகுது அதை முன்கூட்டியே உங்களிடம் பகிர்வது மகிழ்ச்சி....

இந்த வீடு நூறடி உயரம் , பத்து மாடிகள் கொண்டது ,இதில் ஒரு பாஸ்கட் பால்  கோர்ட்டும் கூட உள்ளது ...இன்னும் எதுக்கு பில்ட் அப்பு நீங்களே பார்த்துக்க வேண்டியது தானே 
ஹோரசே  புர்கேச்ஸ் இவர்தான் இந்த வீட்டின் உரிமை யாளர் மற்றும் வடிவமைப்பாளர் 
Horace Burgess Horace Burgess Horace Burgess Horace Burgess Horace Burgess இது தான் அவரின் மனைவி,இப்படி ஒரு ச்பிரல் மாடிப்படி தான் வேணும் என்பது
இவரின் விருப்பம் தானாம் .
 எம்ம்மா இவ்வளவு பெரிய வீட்டுல இப்படி பத்து மாடி ஏற
கஷ்டம்மா இல்லை ஹி ஹி 
6.27.2011

கிளு கிளு வேட்டையாடு விளையாடு


நியூ கினி (New Guinea), ஆஸ்திரேலியாவுக்கு வடக்கே உள்ள உலகின் இரண்டாவது பெரிய தீவாகும். தற்போது டொரெஸ் நீரிணையில் இருந்து கடைசிப் பனிக்காலத்தின் போது ஏற்பட்ட வெள்ளத்தினால் இது ஆஸ்திரேலியப் பெரும் பகுதியில் இருந்து பிரிந்தது. இத்தீவின் மேற்குப் பகுதியான மேற்கு நியூ கினி இந்தோனீசியாவின் பப்புவா மற்றும் மேற்கு பப்புவா ஆகிய மாகாணங்களை உள்ளடக்குகிறது. இத்தீவின் மீதமுள்ள கிழக்குப் பகுதி விடுதலை பெற்ற நாடான பப்புவா நியூ கினியின்முக்கிய பிரதேசத்தை உள்ளடக்குகிறது.
இங்கே கடந்த பத்து வருட காலத்தில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்ப்பiட்ட புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்க பட்டுள்ளன அவற்றில் சில உங்கள் பார்வைக்கு ..............
இந்த மாதிரி பாலுட்டிகள்வருடத்திற்கு ஒன்று என்கிற விகிதம் கடந்த பத்து வருஷமா  கண்டுபிடிக்க பட்டுள்ளது . இந்த படத்தில் உள்ள உதா கண் கொண்ட இந்த பாலுட்டி 2004 ஆண்டு
அகப்பட்டது !!பெயர்: Spilocuscus wilsoni


இது வானவில் மீன் ..இதை போல இன்னும் ஏழு வகைவானவில் மீன்கள் இங்கே
கண்டுபிடித்துள்ளனர் 


கடந்த பத்து ஆண்டுகளில் 33வகை மீன்கள் கண்டுள்ளனர்கள் .அதில் இந்த ப்ளூ பிஷும் ஒன்று 
இது ச்னுப் பின் டால்பின் 2005 கண்ணில் பட்டது 

லிடோரியா துக்ஸ் என்னும் பெயர் கொண்ட தவளை .
இந்த லாட்டின் பேருக்கு தலைவன்னு அர்த்தம் .

43 வகை ஊர்வன இங்கே உள்ளன அதில் 5 வகை பாம்புகள்,37 வகை பல்லிகள் மற்றும் ஓடுகள் இல்லா ஆமை ஒன்று 

மர கங்காரு  


மந்தாரை என்னும் ஆர்க்கிட் மலர்களுக்கும் இங்கு பஞ்சமில்லை 

ஒன்பது புது வகையான நத்தைகள் 

இது ஜப்பான் ஐரோப்பில் உள்ளது தான் இங்கும் இருக்குது
பேரு யாபீஸ் 

கூவாத குயில் இதுவரை விஞ்ஞானிகள் இதன் சத்தம் எதையும் பதிவு பண்ணவில்லை .
அமைதி பறவை ஹோனி ஈட்டர் ன்னு பேரு .

இப்படி இந்த லிஸ்ட் பெருசா இருக்கு உங்கள் ஆதரவை வைத்து இதை தொடர்வதா வேண்டாம்மான்னு முடிவு செய்யணும்

6.25.2011

ரஜினியின் ராணாவை கைகழுவிய கம்பெனிகள்

பெரிய பட்ஜெட் படங்களுக்கு எல்லாம் இன்சுரன்ஸ் செய்வது வழக்கம். இதன்மூலம் எதிர்பாரா காரணங்களினால் ஏற்படும் பெரிய இழப்புகளில் இருந்து தப்புவதர்ர்க்கு இது உதவியாக இருக்கும்.அந்த வகையில் ரஜினியின் எந்திரன் திரைப்படத்திற்கு இன்சுரன்ஸ் வழங்கிய யூனைடேட் இன்சூரன்ஸ் மற்றும் நியூ இந்திய அஸ்ஷுரன்ஸ் கம்பெனிகள் ராணா படத்திற்கு இன்சுரன்ஸ் தர மறுத்துவிட்டன.

ரஜினின் உடல்நிலை குறித்து வெளியான வதந்திகள் காரணமாக இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளன.மேலும் ராணா படத்திற்கு எந்த கம்பெனி இனி இன்சுரன்ஸ் தருவதாக இருந்தாலும் அவை ரஜினியின் உடல்நிலை கருத்தில் கொண்டு அதை தவிர்த்து மற்ற விசயங்களுக்கு மட்டும் இன்சுரன்ஸ் வழங்க முன் வரலாம் என தெரிவித்தன.


நாம் அண்ணாந்து பார்க்கும் மனிதர்கள் கூட பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். நாம் அவர்களை இருட்டில் ஜொலிப்பதை மட்டும் பார்க்கிறோம் அவர்களும் நம்மை போலவே அவர்களின் நிலைக்கு தகுந்தாற்போல் சில பல சிரமங்களை சந்தித்தும் போராடியும் வருகிறார்கள். இது இயற்கையின் நீதி ...6.24.2011

பொன்மானை தேடி ஒரு புயல் புதிர் போட்டி வாங்க இங்க


 மிக் ஜக்கேர் 

டேமியன் மர்லே இவர் பாப் மர்லேயின் மகன்  

 டேவ் ஸ்டீவார்ட் 

ஜோஸ் ஸ்டோன் 

செப்டம்பர்  மாசம் ஒரு இசை சங்கமத்திற்கு நாம் நம் செவிகளை தயாரா வைத்து கொள்ளவேண்டும் ..மேலே படங்களில் உள்ள இசை பிரபலங்கள் பிரான்ஸ் ,சைப்ரஸ் ,மியாமி,அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் இவர்களுடன்      நம்ம ஏ.ஆர்.ரஹ்மான் சேர்ந்து சூப்பர் ஹேவி அப்படின்னு ஒரு பான்ட் (band)தொடங்கி இருக்காங்க. அவங்க ஆல்பம் செப்டம்பர் மாசம் வெளிவர போகுது.

பல நாடுகளை சேர்ந்த இசை பிரபலங்கள் ஒரு புள்ளியில் இணைந்தால் எப்படி இருக்கும் என ரோல்லிங் ஸ்டோன் புகழ் மிக் ஜக்கேறும் டேவ் ஸ்டேவர்டும் இணைந்து சிந்தித்ததால் உருவான பான்ட் இது. இந்த வருட ஆரம்பத்தில் ஒன்று கூடிய இவர்கள் நல்லா கூடி கும்மியடித்து ஒரு வாரத்தில் 22  பாடல்கள் உருவாக்கினார்கள்.
அதில் ரஹ்மானோடு சேர்ந்து மிக் ஜக்கேர் பாடிய சத்தியமேவே ஜெயதே (வாய்மையே வெல்லும் ) என்னும்உருது பாடலும் ஒன்று .
மேலும் இந்த ஐந்து நட்சதிரங்களும் மிராக்கில் வொர்க்கர்( miracle worker )என்ற பாடலில் ஒன்றாக தோன்ற போறாங்க அதன் அறிமுக வீடியோ தான் இப்ப நீங்க பார்க்க போறது இது மிக சாமர்த்தியமாக எடிட் செய்யப்பட்ட வீடியோ .இதில் நம்ம ரஹ்மான் இருக்கார். அவரை கண்டுபிடிங்க பாப்போம்.6.23.2011

கிளிண்டனும் கில்மா படமும் !!புதிய சர்ச்சை

சம்மி ச்பதேஸ் அப்படின்னு ஒரு பொண்ணு இப்ப கில்மா படங்களில் நடித்து (?????) வருகிறார். அவர் நடித்த Bomb Ass White Booty 13 அப்படிங்குற படம் அரை குறையா அட ச்சை வார்த்தை தடுமாற்றம் அரங்கு நிறைந்த காட்சிகளா ஓடுதாம். இப்ப இதில சர்ச்சை என்னன்னா சம்மி ச்பதேஸ் இப்ப ஒரு பேட்டி கொடுத்திருக்காங்க அதில் நான் புப்பாலோ(BUFFALO) கமுன்னிட்டி காலேஜில் (அது தான் பய புள்ள எருமை மாட்டு மேல மழை பெய்ஞ்ச மாதிரி தெரியுதோ ) படித்து முடித்ததும் 2006 அப்போதையா செனட்டரும் இப்போதைய  செகரட்டரியும் ஆகிய ஹில்லாரி கிளிண்டனிடம் உதவியாளராக இருந்தாராம்.வழக்குரைஞர் ஆக ஆசையும் பட்டாராம் ஆனா கடைசியில் கில்மா பட நாயகி ஆயி இப்போ மாக்சிம் ,ப்ளேபாய் போன்ற பத்திரிகையில் போஸ் கொடுக்கவும் ஆர்வமா இருக்காராம் 
.
சரி இதில் என்ன சர்ச்சை அப்படின்னு கேகுரின்களா .. இதை ஊடகங்கள் ஊதி பெருசாக்குவது தான் ஹில்லாரி கிளிண்டனை வருத்தம் அடைய செய்கிறது.எதிர் கட்சிகள் இதன் மூலம் அவரின் இமேஜை டாமேஜ் செய்ய நினைப்பதும் காதில் புகை வர வைக்குதாம்  ....
லோக்பால் விளையாட்டு ,கிராமத்தான் மூளை

சமிபத்துல பிரிட்டன் பல்கலைகழகம் ஒன்று நடத்திய ஆய்வின் அடிப்படையில் வெளியாகி உள்ள செய்தி இது .கிராமத்தில் வாழும் மக்களை விட நகரத்தில் வாழ்பவர்களுக்கு அதிகம் மனநிலை பாதிக்க படுகிறார்களாம்.நகரத்தில் நிலவும் கொலை கொள்ளை போன்ற பயம் காரணமாகவும் இயந்திர வாழ்க்கை முறையாலும் நாம் இந்த மாதிரி மன உளைச்சலுக்கு ஆளாகிறோம் என்கிறது அவர்கள் ஆய்வு. அதுவும் நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு ச்சிசாப்றேனியா (schizophrenia )என்னும் மனநோய் வர அதிகம் வாய்ப்பு  உள்ளதாம் ...
born and brought up in city ன்னு இனி எவனாவது சொல்லுவானா ஹி ஹி 

நம்ம ஊர்ல ஐ ஐ டி மாணவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு வீடியோ கேம் உருவாக்கி இருக்காங்க ,கேம் பேரு லோக்பால் .இந்த விளையாட்டு லஞ்சத்தை கொடுப்பதும் வாங்குவதுமா இருக்குது இது யாரு லஞ்சம் கம்மியா வாங்குறாங்களோ அவங்க தான் வெற்றியாளர்கள் ...
இந்த விளையாட்டில் கூட நம்ம கவர்மென்ட் ஆபீசர்கள் வெற்றிபெற மாட்டாங்க என்ன சொல்லுறீங்க ரம்பத்தால் அறுக்கும் சத்தம்,போர்டில் எழுதும் பொது  சாக் பீசிளிருந்து எழும் சத்தம் போன்றைவை உங்களுக்கு அலர்ஜியா அதைவிட மிகவும் எரிச்சல் உண்டாக்கும் சத்தம் குழந்தையின் அழுகையாம்.இது பலரிடம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை ...இதற்க்கு சிலர் ஆய்வாளர்கள் மறுப்பும் சொல்லி உள்ளனர் .
சுகமான சுமை தானே 


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சக்ராமென்டோ நகரைச் சேர்ந்தவர் காயாங்க் (29). இவரது குழந்தை அடம் பிடித்து அழுது சேட்டை செய்தது. இதனால் எரிச்சல் அடைந்த காயாங்க், குழந்தையை அடித்து உதைத்தார். பலமாக தாக்கியதால் குழந்தை இறந்தது.
மேலே சொன்ன ஆய்வு உண்மை தாங்கோ ...இப்படியும் சிலர் 

லண்டனில் சென்ற வருடம் சிறந்த மருத்துவர் என்ற பதக்கம் வென்ற ஒரு மருத்துவர்,தான் செய்த  அறுவை சிகிச்சையில் நடந்த தவறுக்கு வருந்தி தற்கொலை செய்துகொண்டார் .அந்த நோயாளியின் நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது ...
இங்க பாருடா !!ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு கொப்பளம் வந்தாலே சிலர் துடி துடி ன்னு துடிகிறாங்க தவறுக்கு எங்க வருந்துறாங்க இங்க 

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டு திகார் சிறையிலுள்ள திமுக எம்பி கனிமொழி, அங்கு மெழுகுவர்த்தி செய்யக் கற்றுக் கொள்வதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தந்தையின் உருக்கத்தை சிம்பால்லிக்கா உணர்கிறாரோ 
இப்படி உழைத்த காசுதாம்மா நிலைக்கும் 
1983 க்கு   அப்புறம் ஜேம்ஸ் பாண்டு திரைப்படம் இந்தியாவில் படமாக்க பட இருக்கிறது.  மும்பையில் ஷூட்டிங் செய்வதற்கானஆயத்த  பணிகள் ஆரம்பம் ..
அட !!!இந்தியாவை கொஞ்சம் அழகா காட்டுங்க பாஸ் 

6.22.2011

அவளை மறக்க ஒரு மனம் வேண்டும் !!

புகைபிடிப்பது உடல் நலத்திற்கு கேடானது ..
குடி குடியை கெடுக்கும் அப்படின்னு இனிமே ரொம்ப சின்னதாக கண்ணுக்கே தெரியாத அளவுல எழுதிபுட்டு இந்த மாதிரி மக்கள் உயிரை குடிக்கும் சிகரெட்டு வியாபாரம் செய்ய முடியாது .
புகைபிடிப்பதால் ஏற்ப்படும் தீமைகளை அதற்கான விளம்பரங்கள் மற்றும்  சிகரெட்டு பெட்டிகள் அனைத்திலும் படங்களாக (பாடங்களாக ) காண்பிக்க வேண்டும் என்று ஒரு சட்டம் அமலுக்கு வந்துள்ளது அமெரிக்காவில் .இது சிங்கப்பூர்,மலேசியா போன்ற நாடுகளில் ஏற்கனவே உள்ள சட்டம் தான் என்றாலும் இது கூடுதல் சிறப்பு வாய்ந்தது ஏனென்றால் ஒரு சிகரெட்டு பெட்டியில் இருபது முதல் ஐம்பது சதவித இடத்தை இந்த படங்கள் ஆக்கிரமிக்க வேண்டும் என கூறியுள்ளது தான் .
இதோ சில மாதிரி புகைபடங்கள் ,இதனை பார்த்து சொல்லுங்கள் நண்பர்களே நம்ம நாட்டிலும் இந்த சட்டம் வரணுமா வேணாமா ....


இந்த மாதிரியே குடி பழக்கத்தின் கொடுமையை விளக்கும் படங்கள் நம்ம குடி மகன்களின் கண்ணில் படும்படி செய்தால் மாற்றம் வரும் .

நம் கைகளை கொண்டு நமக்கு  நாமே   தேடி  கொள்ளும்  தீமைகளில் இருந்து  நம்மை  காக்க இது மாதிரி செயல்கள் நம் நாட்டிலும் வரவேண்டும் இதற்கு அரசாங்கம் முன் வரவேண்டும் ,,,,,


6.20.2011

214 கோடி எங்கே cbi பதில்


இன்று உச்ச நீதி மன்றத்தில் நீதிபதிகள் சதாசிவம், பட்நாயக் ஆகியோர் கனிமொழியின் ஜாமீன்  மனுவை விசாரித்தனர். இந்த வழக்கு தொடர்பான முழு விவரத்தையும், கலைஞர் தொலைக்காட்சிக்கு சென்ற 214 கோடி என்னாச்சு என்றும் விளக்கம் அளிக்க சி.பி.ஐ.,க்கு 20 ம் தேதி வரை அவகாசம் வழங்கியது. இதனையடுத்து சி.பி.ஐ., தாக்கல் செய்த பதில் மனுவில், கலைஞர் தொலைக்காட்சிக்கு சென்ற 214 கோடி லஞ்சப்பபணம்தான். இது லோனாக பெறப்பட்டது என போலியான ஆவணஙகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கு முக்கிய நிலையில் இருப்பதால் இவருக்கு ஜாமீன் வழங்க கூடாது, மீறி வழங்கினால் வழக்கின் தன்மைக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் கூறியுள்ளனர். இதனால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட வில்லை ...இது எல்லோறுக்கும் தெரிந்த தகவல் 

கலைஞர் தொலைக்காட்சியில் முதலீடு செய்ததாக கூறப்படும் கோடி ரூபாய் கடனாக பெற்றது அல்ல என்பதை மட்டும் தான் சிபிஐ நிருபித்துள்ளது.அது லஞ்ச பணம் தான் என்பதற்கான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.இந்நிலையில் பல வெளிநாடுகளில் இந்த பணம் தற்போது புழக்கத்தில் இருப்பதாகவும் அதை அங்கிருந்து மீண்டும் எதாவது ஒரு முதலீட்டின் மூலம் வெள்ளை பணமாக(white money) மாற்றி மீட்டு எந்த பினாமியின் பெயரிலாவது பாதுகாப்பது தான் திட்டமாம். சிபிஐ க்கு இவை அனைத்தும் தெரிந்தாலும் எந்த ஆதாரத்தை வைத்து இதை நிருபிக்க போகிறார்கள் என்பதை பொருத்து இருந்து பார்ப்போம். 

உண்மைகளை கண்டறிந்தும் அதை நிருபிக்க போராடி வரும் இந்த அவல நிலையை பார்க்கும் பொது நெஞ்சு பொறுக்குது இல்லையே ....

6.19.2011

இதுவரை நாம் பார்த்திராத சச்சின் டெண்டுல்கர்


மிக சமிபத்தில் ஒரு மராட்டிய தொலைக்காட்சிக்கு சச்சின் அளித்த பேட்டியில் இருந்து சுட சுட சுட்ட சில துணுக்குகள்.....

படிப்பில் மார்க் வாங்குவதை விட கிரிக்கெட்டில் ரன் ஸ்கோர் பண்ணுவதில் அதிகம் ஆர்வம் உள்ளதை பார்த்த அப்பா அதில் சச்சினை முழுமையாக ஈடுபட ஊக்கமளித்து உள்ளார்.

அதற்க்கான பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதற்கு ஆரம்பித்தார் சச்சின். அப்போது அவரின் நண்பர்கள் பலர் பயிற்சி வகுப்பை கட் அடித்துவிட்டு பக்கத்தில் உள்ள வடபவ் கடைக்கு செல்வது வழக்கமாம் .நம்ம சச்சினுக்கும் அந்த சபலங்கள் வந்தாலும் நம்ம அப்பா தன் மேல் கொண்டுள்ள நம்பிகையைக்கும் அன்பிற்கும் மதிப்பளித்து அந்த மாதிரியெல்லாம் செய்தது இல்லையாம் .

அந்த தருணங்களில் தனது அண்ணன் மற்றும் தனது பயிர்ச்சியாளரின் பங்கு மிகவும் முக்கியமானது என்றும் கூறினார் சச்சின் .

சச்சினுக்கு நிச்சல் என்றாலே ஒரு உதறல் வந்துடுமாம்.தலைக்கு மேலே தண்ணீர் வந்தாலே பயம் வந்து விடுவதால் நிச்சலை முடிந்த அளவு தவிரித்து விடுவாராம்.


பத்திரிக்கைகளிலும் நாளிதழ்களிலும் தன் புகைப்படமோ செய்தியோ வருவது என்பது தன் குடும்பத்தினருக்கு பெரிய ஆச்சிரியமும் சந்தோசமும் அளிக்கும் என்கிறார் டைம் பத்திரிகைகயின்  அட்டையில் கூட இடம் பிடித்து விட்ட நம்ம சச்சின் .

தனது வெற்றின் ரகசியம் ஒழுக்கம் தான் என்கிறார் சச்சின். கிரிக்கெட் மேல் கொண்டுள்ள தீராத பற்றின் காரணமாக தனது உணவு பழக்கங்களில் கூட ஒரு ஒழுக்கத்தை கடைபிடிதாராம் .அதற்கு உதாரணமாக இரண்டு சம்பவங்களை நினைவு கூறுகிறார் .....

அஹ்மேடபாத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு ஆட்டத்தின் போது,அஹ்மேடபாத்தில் உள்ள சூடான தட்பவெப்பத்தை சமாளிக்க காரமான உணவுவகைகள் மற்றும் அசைவ உணவுகளை நான்கு நாட்களுக்கு தவிர்த்து விட்டாராம்.இதனால் உடல் சூடு அதிகரிக்காது அந்த இடத்தில் விளையாட உடலும் பொருந்தி போகும் என்கிறார் .

அட நம்ம சென்னையில் விளையாடனும்ன்னா சச்சின் என்ன பண்ணுவார் தெரியுமா ...இங்கேயும் வெயில் காலம் என்றால் நடுஇரவில் அலாரம் வைத்து எழுந்து நிறைய தண்ணீர் குடித்து விட்டு தூங்குவாராம். தன் உடல் விளையாட்டிற்கு முன் ஹைட்ரேட் ஆக இது உதவுமாம் .

அது இஷ்ட்டத்துக்கு அதிஸ்ட்டம் எல்லாம் யாருக்கும் வரவே வராது ,,இந்த மாதிரி கஷ்ட்ட பட்டு தேடினால் மட்டும் தான் வரும் !!சரிதானே ...இனி சச்சின் பற்றிய படங்கள் சில