11.29.2012

NPV-AR ரஹ்மான் தாயரித்த படம் இளையராஜா இசை

அட என்ன ஆச்சர்யம் ... ஆனா உண்மைதாங்க .. நம்ம கௌதம் மேனனின் போட்டன் காத்தாஸ் நிறுவனத்தின் மேஜர் ஷேர் ஹோல்டர் AR ரஹ்மான். விரைவில் போட்டன் காத்தாஸ் நிறுவனம் தாயரித்து வெளிவர இருக்கும் படம் நீ தானே என் பொன் வசந்தம் .. இந்த படம் கெளதம் மேனனே இயக்கி இருக்கார் ஜீவா சமந்தா மற்றும் பலர் நடித்து இருக்காங்க. இந்த படத்துக்கு இசை இளையராஜா .

என்னங்க இப்ப தலைப்பு சரிதானே ...

சும்மா பரபரப்புக்கு சொன்னேன்னு தப்பு சொல்லாதீங்க ஆமா !!!11.27.2012

மகளே உன் சமத்து !அழகுக்கு அர்த்தம் தந்தவள்
அறிவுக்கு மோட்சம் கொடுத்தவள்
சிரிப்பொலியை கவிதையாக்கினாள்
அழுகையை  இசையாக்கினாள்
சேட்டைகளையும் ரசிக்க வைக்கிறாள்
நடை பயில என் கைகோர்கிறாள்
உன் சின்ன மடியில் தலைவைத்து
படுக்கும் போதெல்லாம் செத்துவிட
தோணுதடி செல்ல மகளே !


இந்த கவிதையில் புதுமைகள் ஏதுமில்லை
 நீ கருபொருளானதை தவிர !
இப்படி நாங்கள் கொட்டும் அன்பை
திருப்பி தருவது என்பது மட்டும்
 மகளே உன் சமத்து !11.25.2012

அழைப்பிதழ் -அவளுக்கு மறுமணம்!!!கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரென்றால் 
விவாகரத்து தான் அறுவடை நாளோ ?
நம் அறுவடை நாளில் உனக்கு 
தீபாவளி கொண்டாட்டம் !- நான் 
நரகாசுரன் ஆனதை எண்ணித்தான்  நொந்தேன் !நமக்குள் ஒத்து போகாததால் 
நம் காலம் ஒத்திகையாகிவிட்டது !
போகிற போக்கில் இன்று 
உன் திருமண அழைப்பிதழ் கண்டு 
கண்கள் ஏனோ பனித்தன 
இறுதியாய் ஒருமுறை மன்னித்து விடு !அழைப்பிதழ் தருவாய் என எதிர்பார்ப்பு ஏதுமில்லை !
தெரிந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சியே  !
ஆம் இனி உன் நினைவுகளை அசை 
போடுவது கூட அநாகரிகம் அல்லவா !உன் காதில் விழாது என்றாலும் 
நம் அத்தியாயத்தின் முடிவுரை 
எழுதுகிறேன் இருவரும் பயன்பெற 
கேளடி தோழியே !

நீயும் நானும் சரிநிகர் சமானம் 
என்பதை நம் தவறுகள் தானே உணர்த்தியது !
உணர்ந்தாயா என் பார்வையில் நீயும் 
உன் பார்வையில் நானும் குற்றவாளிகள் என்பதை !

புதிய பாதையில் நீ செல்லும் போது 
கவனிக்க வேண்டிய பலகைகள் உண்டு !
முற்று புள்ளிக்கு முன் அதில் சில இதோ ....

எதிர்வாதத்திற்கு அணை போடு 
பிடிவாதத்தை களையெடு 
அன்பு கலை கணக்கின்றி பழகு !
நித்தமும் காதலை நிருபணம் செய் !

தொட்டதும் துலங்கிடும் வரம் 
யாருக்கும் கிடைத்ததில்லை 
தோல்விகளில் சிறகடித்தால் தான் 
சிகரம் தொடமுடியும் !
எனவே பொறுமையும் பழகு!


கட்டிலுக்கு கூட பொம்மைகள் போதும் 
என்னும் காலம் இது -எனவே அவனுக்கு 
புது கவிதையாக பொக்கிஷமாக இரு !
பாதுகாக்க அல்ல ஆராதிக்கவே அழகு  !என்னால் உனக்கு ஏற்பட்ட 
காயங்களுக்கு இனி மன்னிப்பு எதற்கு ?
ஆயினும் நான் அதில் பாடம் கற்கிறேன் 
இனி எனக்கும் ஒருத்தி விளக்காய் வரலாம் 
அவளுக்கு எரிபொருளாய் இதயம் தந்திடவே !
எனவே நன்றிகளோடும் வாழ்த்துகளோடும் 
உன் திசை மறந்து ,புதிய திசை நோக்கி ........!

11.11.2012

அழையா விருந்தாளி ! -150 வது பதிவு


கல்யாணம் ,காதுக்குத்து 
புதுமனை புகுவிழா ,வளைகாப்பு ,
இப்படி எங்கும் எதற்கும் 
அழைக்காமல் வந்தவர்களுக்கு முதலில் கிடைப்பது ,
முகசுழிப்பும் வேண்டா வெறுப்பான உபசரிப்பும் தான் !
அழைக்காமல் வந்து நமக்கு ஊக்கமளித்து 
செல்லும் விருந்தினர்கள் அனைவருக்கும் 
முகமலர்ச்சியும் வாழ்த்துக்களும் கிடைப்பது 
பதிவுலகில் மட்டும் தான் !

இப்படி வந்து வாழ்த்தி தட்டி கொடுத்து என்னை இன்று 150வது பத்தி வரை கூட்டி வந்துள்ள அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி !

இது சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டிய தருணம் ! தவறுகளை குறைத்து தரத்தை அதிகரித்து பதிவுகள் படைக்க ஆசைபடுகிறேன் . அதற்கும் உங்கள் அன்பையும் ஆதரவையும் நாடி ( அட இவன் அடங்க மாட்டான் போல இருக்கேன்னு நீங்க சொல்லுறது கேக்குது )
   அனைவருக்கும்  தீபாவளி வாழ்த்துக்கள் !    


11.09.2012

அபிஷேக்பச்சன் ,ஐஸ்வர்யா ராய் ,ஆராதியா முதன் முறையாக


தந்தை 


கலவிக்கு பின் கருவாகி 
கருவறையில் சிசுவாகி 
மகளாக பிறந்ததும் 
எப்படி தாயானாய் !

தாய் 


கணிக்க முடியாத இறைவனின் அன்பை 
நினைத்து போற்ற தாய்மை தந்தவளிடம் 
என்னவரின் முத்தங்களை குத்தகைக்கு 
கொடுத்ததில் பொறாமை துளியும் இல்லை !


மகள் திணிக்கப்பட்ட தாய்பால் நிறுத்தியதும் 
மனதில் பதிந்தது முதல்ஏக்கம்,
இதை சொல்லவோ பாடவோ 
இன்னும் தமிழ் உதவவில்லை !
அதற்குள் என் ஏக்கம் மறந்தும் மறத்தும் 
போய்விடும் -அதுவரை உங்கள் 
தவறுகளுக்கும் சரிகளுக்கும் மத்தியில் 
சிறகடித்துக்கொண்டு இருக்கிறேன் !
சந்திக்க போகும் ஏக்கங்கள் என் 
சிறகுகள் அனைத்தையும் ஓடிக்கும்வரை !

முற்றும் -------------------------


டிஸ்கி :
வறண்டு போன வருகை பதிவை அதிகரிக்கவே இந்த தலைப்பு மன்னிக்கவும் ! நிற்க முதன் முறையாக இவர்கள் மூவரும் ஒரு கவிதைக்கு மாடலாக இருந்தது கூகுளுக்கே தெரியாத செய்தி !! ஹி ஹி ஹி 
11.07.2012

பெருமை கொள்ளாதே கொல்லும் !
பணம் பந்தியில் என்கிறாய் - அது
குப்பையிலும் சிரிக்கத்தான் செய்யும்.
பார்க்கும் நம் வயிறு தான் எரியும்!


பணம் பத்தும் செய்யும் என்கிறாய் - அது
ஒன்றும் செய்யாது மனிதரின் மனமே 
தடுமாரும் தாறுமாறாய் தரம்கெட்டு !


விரலுக்கு ஏற்ற வீக்கம் என கூறி 
விரலே உனக்கு அதிகம் என
ஏளனம் செய்கிறாய்! நீ வெற்றிகளை 
சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு 
என் தோளில் தோல்விகளை ஏன் 
சுமக்க செய்கிறாய் !
படிக்கட்டுகளில் இருக்கும் எனக்கு 
உன் பகட்டால் கீறல்கள் பல 
இருப்பினும் நன்றி சொல்வேன் உனக்கு ,
வெற்றிகளை கொண்டாடுவது தான் 
தோல்வி என்ற பாடம் புகட்டியதர்க்கு!

கனரக வாகன ஓட்டுனரின் தோள்களுக்கு 
வாகனத்தின் சுமை தெரியாதிருப்பதை போல 
வெற்றிகளை சுமக்காதிருக்கும் பக்குவம்
எனக்கு வரும்வரை வெற்றி 
வேண்டவே வேண்டாம் பரம்பொருளே !!

11.06.2012

விண்ணை தாண்டி வருவாயா!

உன் முகத்தை மேகம் மறைத்தாலும்
தீயிட்டு கொளுத்தி பார்க்க ஆவல் வரும் 
இங்கு உன் முகம் மறைப்பதோ 
என் சிகரெட் புகை ! புகையை 
கைகளால் விரட்டியபடியே முழுநிலவின் 
தரிசனம் கண்டேன் ! அப்படியே உன் 
கவனமும் ஈர்க்கிறேன்,கண்டும் காணாமல் 
கடந்து போகிறாய் காதலில் 
நான் உறைந்து போகிறேன்!


நீ கடந்து போவதை வேடிக்கை 
பார்ப்பதே என் வாடிக்கையாகிவிட்டது!
நண்பர்கள் தவிர்த்து சிகரெட் மறைத்து 
காத்திருக்கும் குட்டி சுவரே சொர்கமானது!
கண்ணோடு கண் பார்கிறேன்-நீ 
காணாத கணம் பார்கிறேன் 
அனைத்திலும் பவுர்ணமி நிலவானாய் !
நீ வாராத நாட்கள் அமாவாசை எனக்கு 
என் விண்வெளியிலும், அது அபசகுனம் தான்  !


வெறுப்பாய் ஒரு முறை கூட 
நீ கடந்ததில்லை என்னை !
அந்த தைரியத்தில் காதலை 
கடிதமாக மிக துரிதமாக 
தந்துவிட்டு காத்திருக்கிறேன்!
பல நாட்கள் மண் பார்த்தே செல்கிறாய் 
பதில் ஏதும் சொல்லாமல்!

உன் கொலுசின் ஓசையிலேயே 
கலவரம் அடையும் என் மனம் 
இன்று நீ வெட்கத்துடன் நெருங்கி 
வரும் போது ஏதோ சிந்தனையில்!

பிடித்திருக்கிறது என்கிறாய் !
எரிமலையாய் வெடித்து உன்னை 
திட்டி தீர்க்கிறேன்! துடித்து அழுது 
ஓடி மறைகிறாய், உயிர் பிரிவதை 
முதன் முதலாக பார்த்தவனாக நானும்,
அந்த சாலையையே மறந்து போகிறேன் !

நான் உனக்காக காத்திருந்த போதெல்லாம் 
கண்ணியம் காத்தாய் ,அதுவே உன் 
எதிர்காலம் காத்தது தோழியே!
ஆம் அன்று  சிகரெட் புகை -உன் 
முகம் மட்டும் மறைக்கவில்லை !என் 
காதலையும் மறைத்து விட்டது போ!
மருத்துவர் தேதி குறித்துவிட்டார் 
இனி உன்னை தேடி என்ன பயன்!
நீ என்னை நாடி என்ன பலன்!

அழுத என்னவளின் கண்ணீரை
துடைக்க கைகள் நீளவே விரும்புகிறது
மனதை கல்லாக்கி பொறுத்துக்கொள்கிறேன் !
மனம் கல்லாக இருந்திருந்தால் தான்
நான் காதலித்து இருப்பேனே!


உன் வானில் நீ சிறகுகளுடன் 
சந்தோசமாய் வாழவே பிராத்திக்கிறேன் 
அதற்கே ஆசைப்பட்டு 
ரகசியம் காத்து விரைவில் 
மண்ணோடு மண்ணாக போகிறேன்!
உறக்கமின்றி அலைபாயும் மனம் 
இன்றும் கேட்க்கும் ஒரே கேள்வி 
விண்ணை தாண்டி வருவாயா ??!!

நாளை நான் இல்லாதுபோனபின்
என் நிலை நீ புரிந்துகொண்டு
எனக்காக கண்ணீர் விட்டால்
எரிந்து கருகிய என் மனதில்
அப்போதும் மழை பெய்யும்!


11.04.2012

ar ரஹ்மான் செஞ்சது நியாயமா ?

ரெகார்ட் டான்ஸ்,குத்து பாடகளின்  இசை வெளியிடுகளே மிக பிரமாண்டமாக, காதுகூசும் அளவுக்கு பெருமை பேச்சுக்களுடன் அரங்கேறும் நாட்களில் ஒரு அழகிய தமிழ் கவிதைக்கு இசையையும் கவிதையாகவே படைத்துவிட்டு   வழமை போலவே அமைதிகாக்கிறார் ரஹ்மான் .. நெஞ்சை வருடும் பாடல்
 


கடல்- முதல் பாடல்

மணிரத்னம் இயக்கும் ‘கடல்’ முதல் பாடலை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டிருக்கிறார். காதுக்கு இனிமையான பாடல் இதோ உங்கள் கண்களுக்கும்.
‘வைரமுத்து கவிதைகள்’ என்ற என் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள மௌனத்தின் புதைந்த கவிதைகள்(பக்கம் 706) என்ற கவிதைதான் பாடலாகியுள்ளது.

பல்லவி

நெஞ்சுக்குள்ள
ஒம்ம முடிஞ்சிருக்கேன்- இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

வெள்ளைப் பார்வை வீசிவிட்டீர் முன்னாடி
இதத் தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வலதுகைக் கெடியாரம்
ஆனை புலியெல்லாம் அடுக்கும் அதிகாரம்

நீர் போன பின்னும் 
நிழல் மட்டும் போகலயே போகலயே
நெஞ்சுக்குள்ள நிழல் வந்து விழுந்துருச்சே
அப்ப நிமிந்தவ தான் 
அப்பறமாக் குனியலையே! குனியலையே!
கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே

நெஞ்சுக்குள்ள
ஒம்ம முடிஞ்சிருக்கேன்-இங்க 
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

சரணம்-1

பச்சி ஒறங்கிருச்சு
பால்தயிராத் தூங்கிருச்சு
இச்சி மரத்து மேல
எல கூடத் தூங்கிருச்சு

காச நோய்க் காரிகளும்
கண்ணுறங்கும் வேளையில
ஆசநோய் வந்தமக
அரை நிமிசம் தூங்கலையே!

நெஞ்சுக்குள்ள ஒம்ம
முடிஞ்சிருக்கேன்!- இங்க 
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ ?

சரணம்-2

ஒரு வாய் எறங்கலையே
உள்நாக்கு நனையலையே
ஏழெட்டு நாளா
எச்சில் முழுங்கலையே!

ஏழை இளஞ்சிறுக்கி
ஏதும் சொல்ல முடியலையே
ரப்பர் வளவிக்கெல்லாம்
சத்தமிட வாயில்லையே!

நெஞ்சுக்குள்ள ஒம்ம
முடிஞ்சிருக்கேன்!- இங்க 
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ ?
-------------------------------------------------------------------------------------------------