11.23.2011

பெற்றதும் -பெயர் பெற்றதும்

இறைவன் அருளால் ,எங்களுக்கு இன்று பெண்குழந்தை பிறந்துள்ளது !


படத்தில் உள்ளது மாடல் குழந்தை 

என் மகளை கொஞ்சும் நேரம் குறைந்து விடுமோ
என்ற அச்சத்தில் பெண்குழந்தை சுக பிரசவம்
இரண்டே வார்த்தையில்  பதிலளித்தேன்
அனைவருக்கும்  தொலைபேசியில் !

இக்ரா முனாஜா (IQRA MUNAZZAH )
என பெயர் வைத்துள்ளோம் ...

இக்ரா என்னும் அரபு வார்த்தையில் இருந்து தான் குரான் என்னும் பெயர் வந்தது ....

மேலும் நபிகள் நாயகம் அவர்களுக்கு முதன் முதலில் ஓதி காட்ட பட்ட இறைவசனம் இக்ரா என்னும் வார்த்தையில் இருந்தே தொடங்கும்

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக . அல் -குரான் 96-1 

எனவே இக்ரா !!, இக்ரா  என்றால் படி/ஓது என்று பொருள் ...

எதை படிக்க சொல்லுறது சரி நிலையானதை/நீதியானத்தை/புனிதமானதை படிக்க சொல்லுவோம் என முனாஜா என பெயர் வைத்தோம் ...

ஆம் MUNAZZAH என்றால் நிலையான/புனிதமான/நீதி தவறாத என்று பொருள்.

கவிதையாய் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன் ...ஆனால் என் மகிழ்ச்சியில் தமிழ் தாய் கூட ஆனந்த கண்ணீர் தான் தந்தாள் வார்த்தைகள் தரவில்லை ...

11.13.2011

அடித்து நொறுக்கப்பட்ட அணு மின் நிலையம்!!படங்கள்
படங்களை பார்க்கும் போது உள்ளம் பதறுகிறது .மயிரிழையில் ஜப்பான் மட்டும் அல்ல உலகமே தப்பியுள்ளது நன்றாக தெரிகிறது .


ஜப்பானில் சுனாமியால் அடித்து நொறுக்க பட்ட அணு மின் நிலையத்தின் படங்கள் இன்றைய டைம் பத்திரிக்கையில் வெளியானது.அந்த படங்கள் தான் நீங்க பார்ப்பது. இப்ப நல்ல யோசிங்க நண்பர்களே நமக்கு கூடங்குளம் அணு மின் நிலையம் தேவையில்லை அதற்க்கு எதிரான போராட்டதிற்கு எதாவது ஒரு வகையில்   ஆதரவு அளிப்போம் .....

11.06.2011

THE DIRTY PICTURE- கில்மா விமர்சனம் -FIRST ON NET

                                                                                    வித்யா பாலன் 

                                                 சில்க் ஸ்மித்தா 

                                                                                    கில்மா படம் 


இதை எதிர் பார்த்து வந்தோருக்கு பல்பு ..சும்மா பளிச்சுன்னு எரியுது பாருங்க ஐயோ ஐயோ ....இனி சில டர்ட்டி படங்களும் விமர்சனமும் ...இது மிடுசுபிசுய் பாருங்க பாஸ் எவ்வளவு டர்ட்டியா இருக்கு ..வித்யா பாலன் போன்ற சமுக ஆர்வலர்களிடம் முறை இட்டு சுத்தம் செய்யணும் ...

இந்த டர்ட்டி பாய் ரொம்ப தர்தி போல... எத போட்டு குளிப்படுறது ...
இது டர்ட்டி பண்ற இடம் தான் ஆனா ரொம்ப டர்ட்டி ஆயி போச்சு ஹி ஹி ...

அட இது எந்த சில்க்கோடா பெட்ரூமும் இல்லை ,டர்ட்டி யான பாச்சுலர் பெட்ரூம் ...
டர்ட்டி கிட்சன் ,,,எவ்வளவு நல்ல சமையல் குறிப்பும் இங்கே எடுபடாது ..

டிஸ்கி :

அது என்ன கில்மா விமர்சனம் என்று சிலர் நெற்றி கண் திறக்கலாம் ...
டர்ட்டி (DIRTY) கில்(ஸ்) மா அதுதான்