10.28.2012

கொலை+ தற்கொலை = சிறை




வங்கியில் பணம் செலுத்தி
மடியில் கணம் குறைந்ததை எண்ணி
மகிழ்ச்சியுடன் வரும் என்னை நோக்கி
பாய்ந்தன முரட்டு கைகள்
தோலில் வலி உணரும்போதே
செவிக்கும் வசைமொழி விருந்தானது
முரண்டு பிடித்த அந்த கணத்தில்
பளபளவென ஒரு கத்தி
காற்றில் மிதந்தபடி வந்து
வயிற்றில் பாய்ந்தது !

என்னிடம் ஏதும் இல்லாததால்
அவர்களுக்கு இது தோல்வி !
கோபம் அதிகரிக்க சுருண்டு
விழுந்து கிடக்கும் எனக்கு
இலவச இணைப்பாக முகத்தில்
 ஓங்கி ஒரு மிதி !


என்னை குத்திய திருடர்கள்
நிச்சயம் கஞ்சர்களே - சொருகிய
கத்தியையும் விட்டு வைக்காமல்
பிடுங்கி செல்கின்றனர் !

வயிற்றில் வழியும் இரத்தத்தை காண
தைரியம் இல்லை ஆனால் கைகளில்
உணர்கிறேன்- என் ஐம்புலனும்
சிவந்திருப்பதையும்  சிந்தை உணர்த்துகிறது!

பற்களை கடித்துகொண்டு வலியை
பொறுத்துக்கொண்டு இப்படியே என்னை
மாய்த்துகொள்ள  விரும்புகிறேன்.
இது தற்கொலை அல்ல, மரணிக்க
கிடைத்த நுழைவு சீட்டு இதையாவது
சரியாக பயன்படுத்த நாடினேன்.

ஆள் நடமாட்டம் அதிகமில்லை
நானும் சத்தமிடவில்லை
வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில்
முயற்சி செய்துகொன்டிருக்கும் எனக்கு
இது நிரந்தர தோல்வி அவ்வளவே !

தோற்றவர் ஏமாந்தோருக்கு கூட
ஞானிகள் என்று பட்டம் தந்து மகிழ்கிறோம் !
முயற்சிக்கும் என் போன்றோருக்கு
வெறுமையும் விரக்தியும் பரிசானால்
மரணமே மோட்சம் !

மனைவியின் காதலும்
மழலையின் மொழியும்
கண்களில் காட்சிகள் மங்கி
மறையும் கணத்தில் வாழவேண்டும்
என்ற ஆசை தீயை பற்றவைகிறது !

வேண்டாம் நான் இல்லாமல் போனால்
என் உலகம் இன்னும் அழகாக வாய்ப்பிருக்கிறது !
அதை கெடுக்க மனமின்றி கண்மூடி போகிறேன் !
நிச்சயம் கண்விழிப்பேன்  பெரும் பாவம்
செய்யாததால் அது சொர்க்கமாகவே இருக்கும் !


மெல்ல மெல்ல கண் விழிக்கிறேன்
என்னை பார்த்ததும் கதறி மண்டியிட்டு
இறைவனுக்கு நன்றி சொல்கிறாள் மனைவி
வரவேற்கும் வண்ணம் மழலையின் சிரிப்பை
கண்டதும் அன்பும் அறனும் நினைவுக்கு வர
மீண்டும் சிறைப்பட்டேன் !






10.21.2012

ஒரு காதல் Take Off !!!

பேருந்தில் பயணிக்கும் போதெல்லாம்
ஜன்னல் ஓர இருக்கைக்காக பிராத்தனைகள் செய்ததுண்டு !
இன்று முதல் விமான பயணம்
சற்றே கூடுதலான பிராத்தனையுடன்
இருக்கை தேடின  கண்கள் ,ஏமாற்றமே !
ஆனால் கொஞ்சமும் வருத்தமில்லை !
ஆம் ஜன்னல் ஓரத்தில் அழகிய இளம் பெண்
அவள் அருகில் நிலவில் கால்பதித்த சந்தோசத்துடன் நான் !

பொய் சொல்லி வர்ணிக்க வேண்டிய அவசியமில்லா அழகு !
கண்ணியமான உடையில் புத்தக புழுவாய் அவள் !
என் குளியலை நானே சந்தேகத்துடன் நினைத்துபார்க்க வைத்தது
அவள் கூந்தல்,காற்றில் தெளித்த வாசனை !

இறுக்கமாக மூடப்பட்டுள்ள ஜன்னல் வழியே
காற்று வர வழியே இல்லை !
யாரின் பாடலுக்கு உன் கூந்தல் நடனமாடுதோ !
ஓ .. தலைக்கு மேலே குளிறுட்டி !!

முதல் விமான பயணத்தின் நடுக்கம்  மறைத்து
கதாநாயகனாய் முயற்சிக்கும் எனக்கு,
ஒவ்வொரு கணமும் பரிட்சையாகி விட்டதே!
ஆமாம் எந்த பரீட்சைக்கு நீ  இப்படி படிக்கிறாய்!!



உணவு வருகிறது வேண்டாம் என்கிறாய்
உன் குரலும் இனிமை ! உணவை
வாங்கி உண்ணாமல் தவிக்கையில்
என்னை அன்புடன் சாப்பிடுங்கள் என்று அனுமதி தருகிறாய் !
வரபோகும் மனைவி ஊட்டிவிடவேண்டும் என கனவுகள் உண்டு ,
அது நிறைவேறியாதகவே தோன்றுதடி!



உண்ட நான் தெளிவாய் இருக்க
மயக்கத்தில் அவள் புத்தகத்தில்
முகம் புதைத்து தூங்கிபோனாள்!
இதுவரை ஓரக்கண்ணில் பார்த்துவந்த எனக்கு
முழுதாய் முகம் பார்க்க ஆவல்!
அந்த புத்தகத்தை என்னை போல்,
வேறு எவரும் சபித்திருக்க மாட்டார்கள் !!

பயணம் இனிதே நிறைவடந்தாம்!!!
விமானம் தரை இறங்கியது .
என் பயனதட்டுமுட்டுகளை சேகரித்த பின்
அவள் பக்கம் திரும்பினேன்!
யாருக்கோ காத்திருக்கிறாள்
பணிப்பெண் நான்கு சக்கரநாற்காலியுடன் வர
அதில் நன்றியுடன் அமர்கிறாள் என்னவள் !


பின்பு ஒரு நாள் ...,
விழி ஈரத்தோடு நல்ல துணையின்றி
என்னால் நகரக்கூட முடியாது என்கிறாய் ?!
நானும் நல்ல துணையே என வாக்களித்தேன் .

உன்னிடம் காதல் சொன்ன
அந்த கணம் மட்டுமே
நானும் வீரன் என சொல்லிக்கொள்ள  உதவும் !


ஈர்ப்பு தான் காதலா?
பரிதாபம் தான் காதலா?
அவள் நிலைதெரியாமல் அணுஅணுவாய்
ரசித்த குற்றஉணர்வு தான் காதலா?
என்ற கேள்விகளுடன் நான் இருக்கையில்
என் தியாகமே காதல் என்று நன்றியுடன்  அவள் !

என் கேள்விகளோடு காதலும்
நிலைதிருப்ப்பதால் இன்றும்
வானிலேயே மிதக்கிறோம் !

10.18.2012

என் கழுத்தை அறுத்த கத்தி!!

என் கழுத்தை  அறுத்த கத்தி
அதை வாங்கி தந்த பெரியோர் 
அதற்க்கு சானை பிடித்த சான்றோர் 

என் கழுத்து அறுப்படும் போது தோள்கொடுத்தோர் !
யாரையும் மன்னிக்கும் பக்குவம் 
மரணிக்கும் வரை இல்லை!

அவர்கள் முயற்சியில் உயிர் பிரிந்து இருந்தால் 
அடங்கி அடக்கம்மாகி இருப்பேன் ,
ஆனால் இருவருக்குமே தோல்வி !
வலியுடன் நான், வேறு வழி தேடி அவர்கள் !

இரத்தம் வழிந்தால் தான் வன்முறை 
என்று எவன் சொன்னது ?!
உறவு சங்கிலியால் தூக்கிலடப்பட்டவர்கள் பலர் !

துரத்தும் காலம் விரட்டும் நாள் வரும் 
அன்று ஏமாற்றியோருக்கு தண்டனை நிச்சயம் உண்டு !
ஏமாந்த என்போன்றோருக்கு 
பரிசுயேதும் உண்டோ பரம்பொருளே !

--------------------------------------ரியாஸ்