12.30.2012

சத்தியமா TOP 10 இல்லை ! GD BYE 2012

ஆமாங்க எல்லோரும் நாம்ம போதும் போதும்ன்னு சொல்லுற அளவுக்கு டாப் 10 பதிவுகள் தந்துட்டாங்க. சரி நான் என்ன தான் செய்யுறது நினைத்தப்ப 2012 நடந்து முடிந்த சில சுவாரசியங்களை பகிர்ந்து கொள்வோமே என்ற எண்ணத்தில் இன்றைய பதிவு ஒரு கதம்பமாக இதோ உங்களுக்கு ....

இந்த வருடம் மிகவும் அறிய உயிரினங்கள் கண்டுபிடிக்கபட்டன அதில் இந்த முள்ளம் பன்றியும் குரங்கும் அடக்கம் .... இவை அந்த பகுதியில் வசிக்கும் மக்களே கூட அதிகம் கண்டிராத அபூர்வ விலங்குகள்.இவை இரண்டும் இரவில் வேட்டையாடும் மேலும் பூனைகள் போல மின்னும் கண்கள் எல்லாம் இதற்க்கு இல்லை. எனவே இது அதிகம் அறியாபடாத விலங்குகளாம் ...



இந்த வருடம் மட்டும் 91 கோல்கள் போட்டு கால்பந்து போட்டியில் புதிய சாதனை படைத்தார் லியோநெல் மெஸ்சி.இதன் மூலம் கேர்ட் முல்லரின் 40 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் .

இந்த வருடம் கோலாகாலமாக நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள் பஞ்சமில்லை . அதில் வெள்ளி பதக்கம் இரண்டு இந்தியர்கள் வென்றனர்.மல்லுயுத்ததில் சுஷில் குமார் மற்றும் துப்பாக்கி சுடுதலில் விஜயகுமார்.மேலும் சானியா நேக்வல் ,மேரி கோம்,ககன் நரங் மற்றும் யோகேஷ்வர் ஆகியோர் வெண்கலம் வென்று சாதனை படைத்தனர்.

இந்த வருட ஒலிம்பிக் போட்டியுடன் தனது ஒய்வை அறிவித்த அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் 22 மெடல்களுடன் புதிய சாகப்தம் படைத்தது கொண்டாடப்பட்டார்.

பாலிவுட் என்று அழைக்கப்படும் ஹிந்தி பட உலகில் இந்த வருடம் 12 திரைப்படங்கள் BLOCKBUSTER வெற்றிகள் பெற்றது அனைத்தும் நூறு கோடிக்கு மேல் வசூல் செய்தது. தமிழ் அதற்க்கு நிகரான வெற்றி துப்பாக்கி படம் மட்டுமே பெற்றது 60 கோடி வசூல். இதை தவிர 16 தமிழ் படங்கள் வெற்றிப்படங்கள்.

ஷேரேயா வர்தன் என்னும் டில்லியை சேர்த்த மாணவி SAT  மற்றும் TOEFL பரிட்சைகளில் 2400 மதிப்பெண்கள் பெற்று புதிய சாதனை படைத்தார்.
இன்னும் பல சுவாரசியங்கள் நம்மை இந்த வருடம் கடந்து போயிருக்கு அதை எல்லாம் நேரமின்ன்மை காரணமாக பதிவிட முடியலை. 2012 சுவாரசியம் மட்டும் தானா சோகமோ இழப்புகளோ இல்லையா என்று கேக்க நினைக்கிறீங்களா. நம்ம சந்தோசமா இருக்கிறோம் என்பதே நம்மகிட்ட சந்தோசம் இல்லாமல் போகும்போது தான் உணர்கிறோம். இந்த வருட சந்தோசமான தருணங்களை மட்டும் நினைத்து பார்த்து இந்த வருடத்திற்கு விடைகொடுப்போம் என்ற எண்ணம் தான் நண்பர்களே காரணம்


2012 இல் தென்பட்ட இந்த இரட்டை வானவில் போல அனைவருக்கும் 2013ஆம் ஆண்டு இரட்டிப்பு சந்தோசங்கள் தந்து சிறப்பாக அமைய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

12.28.2012

பிட்டு படம்



பரீட்சை என்றதும் முதலில் நினைவுக்கு வருவது பயம், பிட்டு என்ற இரண்டும் தான்........ பயம் இருந்தால் பிட்டு மூலம் பயத்தை போக்கலாம் .. பிட்டு இருந்தால் மாட்டி விடுவோமோ என்ற பயம் வந்துவிடும் (இதே வசனத்தை மீண்டுமொரு முறை படிக்கவும்)

பரீட்சையில் பிட்டடிக்கும் மாணவர்களை கண்டு பிடிப்பதற்கே ஆசிரியர்களுக்கு ஆறு மாசம் சிறப்புப் பயிற்சி வழங்க வேண்டும், அதிலும் தொழில்நுட்பப் பிரிவு மாணவர்கள் உலகத்தரத்தில் இருக்கும்...

ஜப்பானிய மாணவர்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை .. பிட்டு அடிப்பதில் புது அத்தியாயத்தையே உருவாக்கி விட்டார்கள்.

-------------
இது முகநூளில் நண்பர் அஸ்ரப் பகிர்ந்து இருந்தார்.....நான் உங்களுடன் பகிர்ந்து உள்ளன் ...

12.27.2012

இளையராஜாவின் COPYயங்கள்

திரை இசையில் இன்ஸ்பிரேசன் என்று சொல்லப்படும் காப்பிகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் நாம் அதிகம் போற்றும் மதிக்கும் சிலர் அதற்க்கு விதிவிலக்காக இருப்பார்கள். நம்ம இசைஞானி அப்படி ஒரு விதிவிலக்காக தான் நான் நேற்றுவரை நினைத்திருந்தேன். கிழே உள்ள மூன்று பாடல்களையும் கேட்டு பார்த்து சொல்லுங்கள்

பூவரம்சம் பூ பூத்தாச்சு .....



Ilayaraja copied YATHRA song from SOUND OF MUSIC




அடுத்து வருவது நம்ம ஒலக நாயகனே மேடையில் சொன்ன செய்தி தான். 

தேவர் மகன் திரை படத்தில் இடம்பெற்ற இஞ்சி இடுப்பழகா பாடல் 




இது நான் முகநூளில் பகிர்ந்த ஒரு படம் ..அதற்க்கு இப்படி தலைப்பும் தந்து இருந்தேன் .....
EVEN RATS R PLAYING GOOD MUSIC ... FED UP WITH COPYCATS....
ராகங்கள் ஒரு கோடி எதுவும்  புதிது இல்லை என்ற ராஜா சாரின் வரிகள் மட்டும் ஆறுதல் அளிக்கிறது ...

தொடர்புடைய பதிவு :

சிகரம் தொட்டது யாரு ?ராஜாவா A.R.ரஹ்மானா ?

40 தொகுதிகளிலும் ஜெயிக்க கிடைத்த விதை -ஜெ

இன்று டெல்லியில் நடைபெற்ற  தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. அதில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களும் கலந்து கொண்டார். அங்கு அணைத்து முதல்வர்களுக்கும் பத்து நிமிடமே பேச அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் தமிழகத்தின் இப்போதைய பிரச்சனைகளை பத்து நிமிடத்தில் யாராலும் சொல்ல முடியாது மணிகணக்கில் வேண்டும்.நிற்க  இது தான் சாக்கு என்று பத்து நிமிட பேச்சை பஸ்ஸர் அழுத்தி நிறுத்திய கோபத்தால் தன்னை அவமான படுத்திவிட்டதாக ஆவேசப்பட்டு வெளியேறி ,ஜெ தனது அரசியல் இருப்பை(கடுப்பை) மீண்டும் நிலைநிறுத்தி உள்ளார்.

இதனால் தமிழகதிற்கு என்ன நன்மை ! ஆனா முதல்வரின் இந்த ஸ்டன்ட் இன்ஸ்டன்ட் ஹிட் பாருங்க நம்ம கலைஞர் ஐயாவே "ஜெயலலிதாவை அவமதித்திருந்தால் கண்டிக்கத்தக்கது "என்று சொல்லிவிட்டார். இதுவே வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரங்களிலும் முதலிடம் பிடிக்கலாம்.தமிழக பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க எங்களை 40 தொகுதியிலும் வெற்றி பெற வைத்தால் தமிழகத்தின் துயர் துடைப்போம் என்ற வாக்குறுதிகள் அனல் பறக்கும் மேலும் இலவசங்கள் என அடுக்கினால் ஜெவின் பிரதமர் கனவு பலித்தாலும் பலிக்கும் .....

விதை நான் போட்டது ...................ஹி ஹி.... எனக்கு அரசியல் அவ்வளவா தெரியாது இந்த செய்திகளை படித்ததும் டக்குனு தோனுச்சு ............



12.23.2012

பிரபுதேவாவின் முக்காபுலா மீண்டும் 3Dயில்



ABCD இது பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் ஹிந்தி திரைப்படம் . இது இந்தியாவின் முதல் டான்ஸ் 3D திரைப்படம். இதன் முன்னோட்டம் இன்று வெளியானது. முக்காபுலா பாடலுக்கு புது வடிவம் கொடுத்து மீண்டும் பரபரப்பை ஏற்ப்படுத்த முயற்சித்து இருக்கிறார்கள். இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் திரைக்கு வர இருக்கிறது !

12.20.2012

உலகம் அழியாது !அன்பால் ஒன்றாக இணையும் வீடியோ !



மாயன் காலண்டர் பீதியில் இருந்து மீள A.R.ரஹ்மான் நேற்று ஒரு பாடல் வெளியிட்டு உள்ளார் . அது அன்பால் உலகம் இணையும் என்று சொல்லும் பாடல் . உலகிற்கு இந்தியாவில் இருந்து அன்பை கொண்டாட சொல்லும் பாடல் அதன் காணொளியை ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ...
ஹிந்தியில் கேட்க்க


 

12.19.2012

கவிஞர் வாலி மீது வழக்கு பாயுமா !!!




கவிஞர் வாலி ஐயா அவர்கள் , சமகால அரசியல் நிகழ்வுகளை காதல் அல்லது காமெடி பாடல்களில் சுவைபட  திணித்து ருசி கூட்டுவதில் வல்லவர். அதில் மிக சமிபத்தில் வெளியான எதிர் நீச்சல் என்னும் படத்தில் மின்வெட்டு பற்றி சொல்லி அசத்தி இருக்கிறார். முகநூல் ட்விட்டர் என்ற பல வலைதளங்களில் மின்வெட்டு பிரச்னை பற்றி பல நகைச்சுவை துணுக்குகள் வந்துள்ளது . ஆனால் அனுபவமிக்க கவிஞர் ஐயா அவர்களின் இந்த பாடல் வரிகள் கவனம் ஈர்க்க தவறவே இல்லை .....

சிவா கார்த்திகேயன் நடிக்கும் படம் தான் இந்த எதிர் நீச்சல்,இது நடிகர் தனுஷ் தயாரித்து இருக்கிறார் ,இதற்க்கு கொலைவெறி இசை அனிருத் !

நானும் இப்படி ஒரு நாள் என் முகநூளில் எழுதி இருந்தேன் ....

மின்சாரம் இல்லாத இரவுகளில் கூட
மின்னுகிறது உன் முகம் !
எனக்கு ஒளியாய் நீ
உனக்கு விசிறியாய் நான் !!

மின்சாரம் இல்லாமல் வாடும் நண்பர்களுக்கு சமர்ப்பணம் இந்த (காதல் )ஆறுதல் 

---------------------------------------------riyaz


12.18.2012

தல அஜித் Accident அதிர்ச்சி வீடியோ


சமிபத்தில் நடிகர் அஜித் நடித்து கொண்டு இருக்கும் விஷ்ணுவர்தன் படத்திற்கான ஷூட்டிங்கில் விபத்து ஏற்ப்பட்டது அனைவருக்கும் தெரியும் . அந்த அதிர்ச்சி தரும் வீடியோ இப்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சண்டை காட்சிகளில் அஜித் எப்போதும் ரிஸ்க் எடுப்பார் .இந்த விபத்துக்களுக்கு பிறகும் அந்த படத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து நடித்து முடித்து கொடுத்து அஜித் தலை தான் என்பதை மீண்டும் நிருபித்து இருக்கிறார்...

12.15.2012

அடியே -கடல் பாடல் +வரிகளுடன்




மனச தொரந்தாயே நீ
எங்கிருந்து வந்தாயோ  நீ 
அடியே ...
அடியே 
என்ன .... எங்க நீ கூட்டி... போறா ?
அடியே ...
அடியே ........
 எங்க நீ கூட்டி போறா ?
என்ன எங்க நீ கூட்டி போறா ?
பல்லாங்குழி பாதை புரியல உன்னை நம்பி வாரானே 
இந்த காட்டுப்பய ஒரு ஆட்டுக்குட்டி போல 
உன் பின்னே சுத்துறேனே I
பல்லாங்குழி பாதை புரியல உன்னை நம்பி வாரானே 
இந்த காட்டுப்பய ஒரு ஆட்டுக்குட்டி போல 
உன் பின்னே சுத்துறேனே I
அடியே ...
அடியே 
என்ன எங்க நீ கூட்டி போறா ?
அடியே ...
அடியே 
என்ன எங்க நீ கூட்டி போறா ?


மீன தூக்கி ரேக்க வரஞ்சா 
வானம் மேலே வீசி எறிஞ்ச 
பறக்க பழக்கரியே 
எங்கிருந்து வந்தாயோ நீ !
அடியே ...
அடியே 
என்ன எங்க நீ கூட்டி போறா ?
அடியே ...
அடியே 
என்ன எங்க நீ கூட்டி போறா ?
கண்ணால கண்ணாடி செஞ்சு 
என் அச்சத்தை காட்டுறியே 
என் தூசி  துரும்பெல்லாம் தட்டி 
உள்ளம் வெள்ளை அடிக்கிறியே 
அடியே ...
அடியே 
என்ன எங்க நீ கூட்டி போறா ?
அடியே ...
அடியே 
என்ன எங்க நீ கூட்டி போறா ?
ஒஹ் ..பூமி விட்டு சொர்கத்துக்கு 
நீ வானவில்லில் பாத விரிச்சா 
மனச கயிராக்கி 
இழுத்து போறாயே நீ ..
சொர்க்கம் விட்டு பூமி வந்தால் 
மீண்டும் கிழக்கில் சூரியன்தான் 
நான் விழிச்சு பாக்கையிலே 
கலஞ்சு போவாயோ நீ 

அடியே ...
அடியே 
என்ன எங்க நீ கூட்டி போறா ?
அடியே ...
அடியே 
என்ன எங்க நீ கூட்டி போறா ?

-மதன் கார்கி 


இன்று வெளியாகி உள்ள கடல் பாடல் இது . வித்தியாசமான இசை அருமையான வரிகள் என்று இந்த அடியே மனசை கொள்ளை அடிக்குறா ..
இது ப்ளுஸ் /சாப்ட் ராக் என்று ஏதேதோ  சொல்லுறாங்க ,எதுவாக இருந்தாலும் இது தமிழுக்கு புதுசு ...இனி நம்ம மீனவ நண்பர்கள் ஏலேலோ ஐலசா என்ற எல்லையை தாண்டி பாட போறாங்க ... 

12.13.2012

விஸ்வரூபம் விஷபரிட்சையே !


பழக்கம் இல்லாத சப்தம் ,திடுக்கிட்டு திரும்பினால்
பீதியில் அலறி ஓடும்  மக்கள் ஒருப்பக்கம்
குருதிபுனலில் கதறும் மக்கள் ஒருப்பக்கம்
இல்லாத வீரத்தை தேடாமல்
இருக்கின்ற ஈரத்தினால் கதருவோருக்கு
உதவ நாடியது மனம் !


இது மனிதகூட்டத்தின் எரிமலை கோபம்
இயலாமையால் இன்று வெடித்துள்ளது
இன்னும் வெடிக்கும் என்ற அச்சத்தால்  பல
தோழமை கைகள் தடுக்கின்றன உதவிடும் என்னை !

அங்கே ரத்த வெள்ளத்தில் மிதப்பதும் நண்பர்களே

பாதுகாப்பு வளையம் தாண்டி செல்லும் போது 
கண்டகாட்சிகள் பலவற்றை கண்ணீர்
 மறைத்துவிட்டதால் கண்ணீருக்கு நன்றி! 
எஞ்சிய  சில மனக்கண்ணில் நிலைத்ததே சாபம்!

பால்வாங்க வந்த பெரியவர்,

பால்குடி மறக்காத குழந்தை, 
தாயின் அணைப்பில் இருந்ததற்கு 
சாட்சியாய் தாயின் கைமட்டும் 
குழந்தையோடு இருக்க -தாய் 
எங்கோ சின்னாபின்னமாகி! 
அனைவருக்கும் பால் ஊற்ற கூட 
பிரோயோஜன படாததால்  பால் பாக்கெட்டும்
உயிரிழந்து கொண்டிருக்கு!

இன்னும் உயிர் உள்ளவர்களுக்கு உதவிட

அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு நான்
சிவப்பு விளக்குகளுடன் அம்புலன்சுகள்
சீறி பாயுந்து சென்றதும் வீதியில்
பிணமானவர்களும் உதவியவர்களும்
மட்டுமே இருக்கிறோம் !

ஜாதி மத பேதங்கள் தொலைந்து
ஒற்றுமையாக பிணக்குவிலாக மனிதர்கள்
வழிந்து ஓடும் குருதிப்புனலில்
குருதி பேதமும் தொலைத்திருந்தது!


நடக்கையில் எறும்புகளை மிதித்து
கொன்ற அனுபவங்கள் அனைவருக்கும் உண்டு .
இது எறும்புகளின் கோவமோ ?!
புத்தனுக்கும் கோபம் வரும்
காலம் இது -என் சந்தேகத்தில் பிழையில்லை !

சமர்பிக்க சொல்லும் இறைவனிடம்
சமர்ப்பித்து இருந்தால் சங்கடங்கள் தீரும்!
பொறுமையின்றி உயிரெடுத்து கொன்றுகுவித்து
யாருக்கு நீதியை நிலைநாட்ட போகிறார்கள்
இந்த ஆத்திரக்காரர்கள் -கோபத்தின்
 விஸ்வரூபம் விஷபரிட்சையே !

என் கருப்பு சட்டையிலும் செங்குருதி
திட்டு திட்டாய் தெரிவதை பார்த்து நொந்த
அதே கணம் மீண்டும் ,
அதே சப்தம் கேட்டது.-இந்த முறை
எனக்கு உதவிட அழைக்க யாருமில்லை !


தீப்பிடித்து எறியும் சட்டையையும்
அணைக்க வலுவில்லாமல் நான் !
ஐயோ சற்றுமுன்  காலிழந்த ஆடவனின் 
முகம் போல் என் முகமும் 
சிதைந்திருக்குமோ -எங்கே வலிக்கிறது 
கூறிப்பிட்டு சொல்ல வலுவின்றி 
மயக்க நிலைக்கு செல்கிறேன்!
மிருகங்களுக்கு நடுவில் மனிதனாக
இருக்கத்தானே முயற்சிதேன் எனக்கேன்
இந்த தண்டனை இறைவா ?

இல்லை!சரியே !கண்ட காட்சிகள்
சாபம் என்றேன் சாகும் வரம் தந்துவிட்டாய்
நன்றிகள் கோடி பரம்பொருளே !
வலிதான் பொறுக்க முடியவில்லை
சீக்கிரம் முற்றுப்புள்ளி வை
எனக்கும், நடக்கும் அத்தனை போருக்கும் !

12.12.2012

D..T...H ....! நல்ல தாளிப்பு

எல்லாரும் DTH  DTH  ன்னு சொல்லுராங்களே அதை பத்தி எழுதாலாம்ன்னு ..
யோசிச்சேன் யோசிச்சேன் ......... கடைசியில நாட்டுபுற பாடல் வடிவுல ஒரு பாட்டு எழுதலாம்ன்னு விஸ்வரூபம் எடுத்துட்டேன் ஹி ஹி .. படித்து பார்த்து ருசி எப்படின்னு சொல்லுங்க .....

(D)தமோதரன் (T)தூத்துக்குடி (H)ஹம்சலேகா 

தாமோதரன் தூத்துக்குடி 
ஹம்சலேகா காரைக்குடி 
சேர்ந்த கதை நீயும் படி !

 என் வீட்டு அடுப்பு எரிஞ்சா
படுக்கையில் கிடக்கும் 
பெருசுக்கும் பத்தியம் மறக்கும் !
கமகமக்கும் சமையலால கையபுடிசேன் !
சந்தோசமா இருப்பதால பாட்டுபடிச்சேன் !

சரணம் 1 

வலை வீசி புடிச்ச மீன 
நெய்பூசி பொறிக்குரா !
புளி கறைச்சி மாங்கா சேர்த்து 
மீன்கொழம்பு வைக்கிறா !
கடுகோடா கருவேப்பில்லை 
போட்டு தாளிச்சு வாசம் சேக்குரா ! 
நேசம் வளக்குறா !
நல்லா தாளிச்சு தாளிச்சு 
அவ தாலிக்கு நூறு முடிச்சு !

                                       (தாமோதரன் தூத்துக்குடி)

சரணம் 2 

சின்ன வெங்காயம் 
சிறுசா நறுக்கி 
தேங்கா பாலை 
தலையில தெளிச்சி 
கேப்ப ரொட்டி சுட்டா பாரு 
நான் இரும்பாயி இழுப்பேன் தேரு !

நெய்குத்தல் அரிசியோட 
முழுகாம இருப்பதாக காத கடிக்குரா
 நாவு இனிக்க காது இனிக்க 
உரைக்கும் முறுக்கு மீசை கூட இனிக்க 
வாயெல்லாம் பல்லாச்சு டீ 
நோவெல்லாம் மறந்தாச்சு டீ !

                                  (தாமோதரன் தூத்துக்குடி)

மண்ணும் வேணாம் 
பொன்னும் வேணாம் 
உன் மண்பானை சமையல் போதும் 
மண்டை போகும் காலம் வரைக்கும் !


-----------
பல்பு வாங்குனவுங்க எல்லாம் வரிசையா ஒட்டு போடுங்க ....
இது கிராமிய பல்பு !







டூமில்




அட ஒன்னும் இல்லைங்க ! பவர் ஸ்டார் பேரை போட்டாலே ஹிட்ஸ் அள்ளும்ன்னு சொல்லுறாங்க . அதை பரிசோதித்து பார்க்க தான் இந்த டூமில் பதிவு ............அட கோவ படாதீங்க பாஸ் இனி பல்பே தரமாட்டேன் இங்கே பாருங்க பல்பை போட்டு உடைச்சுட்டேன் சரியா............



12.10.2012

வெள்ளை மாளிகையும் முதலாளியின் தற்கொலையும்!!!


என் வயது தான் உனக்கும்
நீ எனக்கு முதலாளி
நான் தொழிலாளி.

நிரம்பி வழியும் கல்லாபெட்டியின்
இலட்ச்சங்களை கூட அலட்சியமாக
கடந்து செல்கிறாய் முதலாளியின் மும்முரத்துடன் !
கல்லாபெட்டி என் பொறுப்பில்,முனங்கல்களுடன் !

என் லட்சியங்களை உன் லட்சங்களுடன்
அடைந்திடவே தடுமாறியது மனம்!
உன் நம்பிக்கை எனக்கு நம்பிக்கையளித்ததால்
தடம்மாறினேன் நான் தவிப்புகளுடன் !

ஆண்டுகள் செல்ல செல்ல, இதோ
என் வீட்டுக்கு வெள்ளை அடிக்கிறார்கள்!
உறவினர்கள், வெள்ளை மாளிகை
என்று கைதட்ட தட்ட என்
குற்ற உணர்வுகள் தவிடுபொடியாயின !

விடுமுறையில் வீட்டை பார்க்க போகிறேன்
நதிமூலம் ரிஷிமூலம் என்ற வியாக்கியானங்கள் உதவிசெய்ய,
உறவினர்கள் முன் பெருமை தலைக்கு ஏறி 
பலருக்கு நாட்டாமையாக நான் !

நாட்டமை சொம்பை பாதுகாத்தவனாக
விடுமுறை முடிந்து வேலைக்கு
திரும்பிய நாள், நீ (முதலாளி ) தற்கொலை
செய்துகொண்டு பிணமாக கிடக்கிறாய் !
என்னை மரணத்திலும் முந்திவிட்டாய்!
இன்று மட்டும் பொறாமை இல்லை !


உன் அலட்சியத்தை கண்கொட்ட பார்த்த நான்
உன் நம்பிக்கையை, கண்மூடி பார்த்தது புரிந்தது!
உன் தொழில் தொங்கவும் இன்று
தலை தொங்கவும் நானும் ஒரு காரணம்!
இல்லை !நான் மட்டுமே காரணம் !
புண்பட்ட என் மனதில் ஈட்டியாக பாய்ந்தது
உன் வீட்டார் மீண்டும் என்னை நம்பி
பொறுப்பு அனைத்தையும் தந்தது !

வெற்றிகளை ருசித்த பின் மனம் 
கற்றுக்கொள்ள் துணிவதே இல்லை!
அந்தரத்தில் நீ தொங்கி - என் 
வெற்றிகளையும் கொன்றுவிட்டதால் 
கற்க தொடங்கினேன் மாணவனாக !

உன் மனைவி மறுமணமே வேண்டாம் என்கிறாள்
அவ்வளவு காதலிலும்  முதலீடு செய்திருக்கிறாய் நீ!
நான் மனிதனாக நேர்வழியை நேசிக்கவும் 
கற்றுக்கொண்டேன் உன்னால் !


தொழிலை தலைநிமிர்த்த  பாடுபட்டேன்,
என் சேமிப்பை சத்தமின்றி கொட்டினேன் ,
நான் சில காலம் சம்பளமும் துறந்தேன்.
இவை அனைத்தும் உன் உழைப்பே !
அதை நான் மட்டும் அறிவேன் !


பின்பு ஒரு நாள் வெற்றிக்கு பரிசாக 
உன் திருமதி எனக்கு வெகுமதி தந்தாள்,
வேண்டாம் என்றேன்,கணக்கு தீர்க்க வழியில்லாமல் !
திருடிய போது திருத்தாத உறவுகள் ,
இன்று என்னை ஏமாளி என்று ஏளனம் செய்தனர்!

நீ என்னை மன்னிக்காதவரை
என் நன்மைகளில் உனக்கும்
பங்கு உண்டாம் ,அதற்காகவே
அதிகமாக நன்மைகள் செய்கிறேன்
இருவரும் மோட்சம் பெற !


ஒருமுறை மரணித்து விட்டு
என்னை ஓராயிரம் முறை கொன்றவனே ,
உன்னை சந்திக்கும் நாளில்
என் தலை குனிந்தே இருக்கும்,
நாக்கை தொங்கவிட்டுவிட்ட உனக்கு
என்னை திட்டிதீர்க்க வலு இருக்குமா?


12.09.2012

மணிரத்னத்தின் கடல் பாடல் -ஏலே கீச்சான்


பல்லவி 
--------------
எலே கீச்சான் ...
ஏலே கீச்சான் 
அப்பன் பாட்டன் சாதிச்சான் 
முன்னேற முத்தெடுக்க 
முடிவெடு கீச்சான் !
முக்காடு முழுசா தொறந்தாச்சு
முடிசூடும் வேளை வந்தாச்சு !

கோரஸ் :

வலைவிரிக்கிரோம் வலைவிரிக்கிறோம் கடலம்மா 
மீன் விழுந்தால் அறை வயுறு !
வலை அறுந்தால் கால் வயுறு !


சரணம் 1:

கடலும் அன்னை 
மண்ணும் அன்னை 
வானம் தானே தந்தை தந்தை !

மண் காற்றை கொண்டு புயலை அனுப்ப 
கடல் பொங்கி எழுந்து சுனாமி அனுப்ப 
அட தீராத சக்களத்தி சண்ட சண்ட 
வானம் மழை தந்து சமாதானம் செய்ய செய்ய 
ஏறி இறங்கி எங்க பொழப்பு 
காணப்போச்சு எங்க ஓடத்தின் துடுப்பு !


கோரஸ் :

கண்ணீரும் உப்பு 
கடல் நீரும் உப்பு 
கடலுக்கு சோகம் புரிய 
ஏதையா வாய்ப்பு !

                                                        (எலே கீச்சான் ...)
சரணம் 2 :

மீனுக்கும் அரசியல் தெரியும் போல 
எல்லை தாண்டி ஒளிஞ்சுக்குது  !
எல்லை தாண்டி நாங்க போனா 
சூடுபட்டு வாறோம் தோழா தோழா 
இது சமுத்திரத்தின் ரத்தசரித்திரம் 
கடலில் எங்கள் ரத்தம் 
கலப்பது தாங்க தரித்திரம்!

முடியும் என்றே முயற்சிகள் செய்கிறோம் 
விடியும் என்றே நம்பிக்கை கொண்டோம் !
                                                  
கோரஸ் :

கண்ணீரும் உப்பு 
கடல் நீரும் உப்பு 
கடலுக்கு சோகம் புரிய 
ஏதையா  வாய்ப்பு  !
                                                 (எலே கீச்சான் ...)
----------------------------------------------------------------------------------------------

பாடல் வெளியாகுரதுக்கு முன்னாடி இந்த பாட்டு இப்படி இருக்குமோ என்ற என் எதிர்பார்ப்பு ....ஹி ஹி 

பல்லவி இது நாயகனின் அறிமுக பாடலாக இருக்கும் என்ற நினைப்பிலும் ,
முதல் சரணதில் கடல் வாழ் மக்கள் சந்திக்கும் இயற்க்கை சீற்றங்களையும் ,இரண்டாம் சரணத்தில் இன்றைய வேதனைகளையும் 
சொல்லி பார்த்தேன் !

SORRY MR. MADAN KARKY ..



ஆனா மதன் கார்க்கியும் ரஹ்மானும் சேர்ந்து கொடுத்து இருக்கும் அருமையான பாடல் இங்கே இருக்கு கேட்டு பாருங்க ...


12.02.2012

பிட்ஸா -AN INDECENT PROPOSAL

சாலையில் மோட்டார் சைக்கிளில்
பின் வரும் வாகனங்களை கவனிக்க
கண்ணாடி உண்டு ! அதில் உன் முகம்
கண்ட பிறகு சாலை விதிகளை மறந்தேன்
சில நிமிடங்கள் தான் மாயமாகி விட்டாய்
எங்கே நீ தேடி திரிகிறேன்....

இந்த தெருவில் எங்கே வசிக்கிறாய்
பீட்சா கொடுக்க போகும் போதெல்லாம்
ஒவ்வொரு வீட்டிலும் ஏமாற்றமே !
ஜீன்ஸ் அணிந்த தேவதையே
நீ இன்னும் கம்பங்கூழா விரும்புகிறாய் ?

இன்று மீண்டும் சிக்னலில் பார்த்தேன்
பச்சை நிற சுடிதார் பசுமையாய்
அட பச்சை விளக்கு எறிந்ததும்
பச்சை குதிரை தாண்டியவள் போல
ட்ராக் மாறி நீ போகிறாய் நான்
மீண்டும் தடுமாறி வழிதொலைத்தேன்!

அடர்ந்த கருங்காடுகள் போல புருவங்கள்
அதற்க்கு ஒளியுட்ட இரு நிலாக்கள் போல கண்கள்
கேள்விகுறி போல நீளும் மூக்கிற்கு
பதில் சொல்ல லிப்ஸ்டிக் பூசாத உதடுகள்
இன்று இப்படி உன்னை மிக அருகில்
ரசித்ததால் தான் தோற்றேன் !



தினமும் அலையும் நான் உன்னால்
மைல் கணக்கையும் மறந்தேன் மயிலே !
உன்னை தேடி திரிவதாலேயே
பெட்ரோல் விலையேற்றம் என்னை
பாதிக்கவே இல்லை !இதனால் நான்
ஆளும்கட்சிகாரன் என்ற பழியும்
சுமக்கிறேன் தோழி !

மீண்டும் என் முன்னால் நீ ,உன் ஸ்கூட்டியின் நம்பர்
பலகை என்னை பார்த்து புன்னகைகிறது  ! ஆம் 
அதன் எண்கள் 143 குறிப்பால் உணர்த்துகிறாயோ
என்று எனக்கு பெருமை ! நீ இன்னும்
என்னை பார்க்கவே இல்லை என்பதே உண்மை !

நிலவை தொடரும் மேகங்கள் மழையாய்
பூமி வருவதும், மீண்டும் மேகமாகி
நிலவை தொடர்வதும் போல உன்னை
காணாத போது பூமியிலும்
காணும் போது வானிலும் நான் !


சாலையில் மழை பெய்யும் போதெல்லாம் 
side mirrorக்கு குடைபிடிக்கிறேனடி ,
உன் பிம்பம் விழும் என்ற எதிர்பார்ப்பில் !

பார்கிங்கில் நம் வாகனங்கள் உரசிகொண்டு நிற்க
கண்ட நாள் முதல் இந்த நாள் வரை
உள்ளத்தில் கொண்டதை எழுதி
ஸ்கூட்டியின் இதயத்தில் வைத்துவிட்டு
ஒளிந்து கொண்டேன் - வந்து நீ குனிந்த தலை
நிமிராமல் படித்ததும் அதோ கிறிஸ்துமஸ்
மரத்தருகில் நிற்கும் என்னை பார்த்து ஒரு
புன்னகை செய் போதும் -இனி நான் 
புத்தன் போல கூட வாழ்ந்து முடித்திடுவேன் !

-----------------------------------------------------------------


டிஸ்கி : என் நாயகனுக்கு என்ன பதில் கிடைக்கும் கருத்தில் சொல்லுங்கள். அவன் ஜெயிக்க ஓட்டும் போடுங்கள் நன்றி !

அதிகமான ஆங்கில வார்த்தைகள் ஒரு வித்தியாசத்திற்காக சேர்க்கப்பட்டு இருக்கிறது! மன்னிக்கவும் !