பல்லவி
--------------
எலே கீச்சான் ...
ஏலே கீச்சான்
அப்பன் பாட்டன் சாதிச்சான்
முன்னேற முத்தெடுக்க
முடிவெடு கீச்சான் !
முக்காடு முழுசா தொறந்தாச்சு
முடிசூடும் வேளை வந்தாச்சு !
கோரஸ் :
வலைவிரிக்கிரோம் வலைவிரிக்கிறோம் கடலம்மா
மீன் விழுந்தால் அறை வயுறு !
வலை அறுந்தால் கால் வயுறு !
சரணம் 1:
கடலும் அன்னை
மண்ணும் அன்னை
வானம் தானே தந்தை தந்தை !
மண் காற்றை கொண்டு புயலை அனுப்ப
கடல் பொங்கி எழுந்து சுனாமி அனுப்ப
அட தீராத சக்களத்தி சண்ட சண்ட
வானம் மழை தந்து சமாதானம் செய்ய செய்ய
ஏறி இறங்கி எங்க பொழப்பு
காணப்போச்சு எங்க ஓடத்தின் துடுப்பு !
கோரஸ் :
கண்ணீரும் உப்பு
கடல் நீரும் உப்பு
கடலுக்கு சோகம் புரிய
ஏதையா வாய்ப்பு !
(எலே கீச்சான் ...)
சரணம் 2 :
மீனுக்கும் அரசியல் தெரியும் போல
எல்லை தாண்டி ஒளிஞ்சுக்குது !
எல்லை தாண்டி நாங்க போனா
சூடுபட்டு வாறோம் தோழா தோழா
இது சமுத்திரத்தின் ரத்தசரித்திரம்
கடலில் எங்கள் ரத்தம்
கலப்பது தாங்க தரித்திரம்!
முடியும் என்றே முயற்சிகள் செய்கிறோம்
விடியும் என்றே நம்பிக்கை கொண்டோம் !
கோரஸ் :
கண்ணீரும் உப்பு
கடல் நீரும் உப்பு
கடலுக்கு சோகம் புரிய
ஏதையா வாய்ப்பு !
(எலே கீச்சான் ...)
----------------------------------------------------------------------------------------------
பாடல் வெளியாகுரதுக்கு முன்னாடி இந்த பாட்டு இப்படி இருக்குமோ என்ற என் எதிர்பார்ப்பு ....ஹி ஹி
பல்லவி இது நாயகனின் அறிமுக பாடலாக இருக்கும் என்ற நினைப்பிலும் ,
முதல் சரணதில் கடல் வாழ் மக்கள் சந்திக்கும் இயற்க்கை சீற்றங்களையும் ,இரண்டாம் சரணத்தில் இன்றைய வேதனைகளையும்
சொல்லி பார்த்தேன் !
SORRY MR. MADAN KARKY ..
ஆனா மதன் கார்க்கியும் ரஹ்மானும் சேர்ந்து கொடுத்து இருக்கும் அருமையான பாடல் இங்கே இருக்கு கேட்டு பாருங்க ...
Tweet |
No comments:
Post a Comment