12.02.2012

பிட்ஸா -AN INDECENT PROPOSAL

சாலையில் மோட்டார் சைக்கிளில்
பின் வரும் வாகனங்களை கவனிக்க
கண்ணாடி உண்டு ! அதில் உன் முகம்
கண்ட பிறகு சாலை விதிகளை மறந்தேன்
சில நிமிடங்கள் தான் மாயமாகி விட்டாய்
எங்கே நீ தேடி திரிகிறேன்....

இந்த தெருவில் எங்கே வசிக்கிறாய்
பீட்சா கொடுக்க போகும் போதெல்லாம்
ஒவ்வொரு வீட்டிலும் ஏமாற்றமே !
ஜீன்ஸ் அணிந்த தேவதையே
நீ இன்னும் கம்பங்கூழா விரும்புகிறாய் ?

இன்று மீண்டும் சிக்னலில் பார்த்தேன்
பச்சை நிற சுடிதார் பசுமையாய்
அட பச்சை விளக்கு எறிந்ததும்
பச்சை குதிரை தாண்டியவள் போல
ட்ராக் மாறி நீ போகிறாய் நான்
மீண்டும் தடுமாறி வழிதொலைத்தேன்!

அடர்ந்த கருங்காடுகள் போல புருவங்கள்
அதற்க்கு ஒளியுட்ட இரு நிலாக்கள் போல கண்கள்
கேள்விகுறி போல நீளும் மூக்கிற்கு
பதில் சொல்ல லிப்ஸ்டிக் பூசாத உதடுகள்
இன்று இப்படி உன்னை மிக அருகில்
ரசித்ததால் தான் தோற்றேன் !



தினமும் அலையும் நான் உன்னால்
மைல் கணக்கையும் மறந்தேன் மயிலே !
உன்னை தேடி திரிவதாலேயே
பெட்ரோல் விலையேற்றம் என்னை
பாதிக்கவே இல்லை !இதனால் நான்
ஆளும்கட்சிகாரன் என்ற பழியும்
சுமக்கிறேன் தோழி !

மீண்டும் என் முன்னால் நீ ,உன் ஸ்கூட்டியின் நம்பர்
பலகை என்னை பார்த்து புன்னகைகிறது  ! ஆம் 
அதன் எண்கள் 143 குறிப்பால் உணர்த்துகிறாயோ
என்று எனக்கு பெருமை ! நீ இன்னும்
என்னை பார்க்கவே இல்லை என்பதே உண்மை !

நிலவை தொடரும் மேகங்கள் மழையாய்
பூமி வருவதும், மீண்டும் மேகமாகி
நிலவை தொடர்வதும் போல உன்னை
காணாத போது பூமியிலும்
காணும் போது வானிலும் நான் !


சாலையில் மழை பெய்யும் போதெல்லாம் 
side mirrorக்கு குடைபிடிக்கிறேனடி ,
உன் பிம்பம் விழும் என்ற எதிர்பார்ப்பில் !

பார்கிங்கில் நம் வாகனங்கள் உரசிகொண்டு நிற்க
கண்ட நாள் முதல் இந்த நாள் வரை
உள்ளத்தில் கொண்டதை எழுதி
ஸ்கூட்டியின் இதயத்தில் வைத்துவிட்டு
ஒளிந்து கொண்டேன் - வந்து நீ குனிந்த தலை
நிமிராமல் படித்ததும் அதோ கிறிஸ்துமஸ்
மரத்தருகில் நிற்கும் என்னை பார்த்து ஒரு
புன்னகை செய் போதும் -இனி நான் 
புத்தன் போல கூட வாழ்ந்து முடித்திடுவேன் !

-----------------------------------------------------------------


டிஸ்கி : என் நாயகனுக்கு என்ன பதில் கிடைக்கும் கருத்தில் சொல்லுங்கள். அவன் ஜெயிக்க ஓட்டும் போடுங்கள் நன்றி !

அதிகமான ஆங்கில வார்த்தைகள் ஒரு வித்தியாசத்திற்காக சேர்க்கப்பட்டு இருக்கிறது! மன்னிக்கவும் !




No comments:

Post a Comment