12.30.2012

சத்தியமா TOP 10 இல்லை ! GD BYE 2012

ஆமாங்க எல்லோரும் நாம்ம போதும் போதும்ன்னு சொல்லுற அளவுக்கு டாப் 10 பதிவுகள் தந்துட்டாங்க. சரி நான் என்ன தான் செய்யுறது நினைத்தப்ப 2012 நடந்து முடிந்த சில சுவாரசியங்களை பகிர்ந்து கொள்வோமே என்ற எண்ணத்தில் இன்றைய பதிவு ஒரு கதம்பமாக இதோ உங்களுக்கு ....

இந்த வருடம் மிகவும் அறிய உயிரினங்கள் கண்டுபிடிக்கபட்டன அதில் இந்த முள்ளம் பன்றியும் குரங்கும் அடக்கம் .... இவை அந்த பகுதியில் வசிக்கும் மக்களே கூட அதிகம் கண்டிராத அபூர்வ விலங்குகள்.இவை இரண்டும் இரவில் வேட்டையாடும் மேலும் பூனைகள் போல மின்னும் கண்கள் எல்லாம் இதற்க்கு இல்லை. எனவே இது அதிகம் அறியாபடாத விலங்குகளாம் ...இந்த வருடம் மட்டும் 91 கோல்கள் போட்டு கால்பந்து போட்டியில் புதிய சாதனை படைத்தார் லியோநெல் மெஸ்சி.இதன் மூலம் கேர்ட் முல்லரின் 40 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் .

இந்த வருடம் கோலாகாலமாக நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள் பஞ்சமில்லை . அதில் வெள்ளி பதக்கம் இரண்டு இந்தியர்கள் வென்றனர்.மல்லுயுத்ததில் சுஷில் குமார் மற்றும் துப்பாக்கி சுடுதலில் விஜயகுமார்.மேலும் சானியா நேக்வல் ,மேரி கோம்,ககன் நரங் மற்றும் யோகேஷ்வர் ஆகியோர் வெண்கலம் வென்று சாதனை படைத்தனர்.

இந்த வருட ஒலிம்பிக் போட்டியுடன் தனது ஒய்வை அறிவித்த அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் 22 மெடல்களுடன் புதிய சாகப்தம் படைத்தது கொண்டாடப்பட்டார்.

பாலிவுட் என்று அழைக்கப்படும் ஹிந்தி பட உலகில் இந்த வருடம் 12 திரைப்படங்கள் BLOCKBUSTER வெற்றிகள் பெற்றது அனைத்தும் நூறு கோடிக்கு மேல் வசூல் செய்தது. தமிழ் அதற்க்கு நிகரான வெற்றி துப்பாக்கி படம் மட்டுமே பெற்றது 60 கோடி வசூல். இதை தவிர 16 தமிழ் படங்கள் வெற்றிப்படங்கள்.

ஷேரேயா வர்தன் என்னும் டில்லியை சேர்த்த மாணவி SAT  மற்றும் TOEFL பரிட்சைகளில் 2400 மதிப்பெண்கள் பெற்று புதிய சாதனை படைத்தார்.
இன்னும் பல சுவாரசியங்கள் நம்மை இந்த வருடம் கடந்து போயிருக்கு அதை எல்லாம் நேரமின்ன்மை காரணமாக பதிவிட முடியலை. 2012 சுவாரசியம் மட்டும் தானா சோகமோ இழப்புகளோ இல்லையா என்று கேக்க நினைக்கிறீங்களா. நம்ம சந்தோசமா இருக்கிறோம் என்பதே நம்மகிட்ட சந்தோசம் இல்லாமல் போகும்போது தான் உணர்கிறோம். இந்த வருட சந்தோசமான தருணங்களை மட்டும் நினைத்து பார்த்து இந்த வருடத்திற்கு விடைகொடுப்போம் என்ற எண்ணம் தான் நண்பர்களே காரணம்


2012 இல் தென்பட்ட இந்த இரட்டை வானவில் போல அனைவருக்கும் 2013ஆம் ஆண்டு இரட்டிப்பு சந்தோசங்கள் தந்து சிறப்பாக அமைய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

No comments:

Post a Comment