1.03.2013

அக்னி நட்சத்திரம் ! அழகிரி vs ஸ்டாலின்



வேலூர் மாவட்ட பாமக முன்னாள் செயலாளர் சாமுவேல் செல்லப்பாண்டியன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் சேர்ந்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை (3.1.2013) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலைஞர் பேசியபோது,
’’ஒரு காலத்தில் மிகமிக வேண்டிய தலைமையாகத்தான் பாமக எனக்கு இருந்தது.  அந்தத் தலைமையைப் பற்றி நான் அவதூறாகவோ அல்லது விமர்சனம் செய்தோ பேசியதில்லை.  ஆனால் வீணாக என்னை வம்புக்கு இழுத்து, நான் பதில் பேசாவிட்டாலும், என்னைத் தரக்குறைவாக அந்தத் தலைமை பேசி வருகிறது.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு திமுக ஆட்சியில் அம்பேத்கருக்கு மணி மண்டபம், அம்பேத்கர் பெயரில் சட்டக் கல்லூரியை அமைத்திருக்கிறோம்.
என்னுடைய மகன் மு.க.அழகிரிக்கு மனைவியாக வாய்த்தவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த காந்தி. என்னுடைய மனைவியை அத்தை என்று காந்தி அழைக்கும்போதும், என்னுடைய மனைவி அந்தப் பெண்ணை மருமகளாக ஏற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போதும் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இப்படிச் சமுதாயத்தில் கலப்பு ஏற்பட்டு, எல்லோரும் மனித ர்கள் என்ற நிலை ஏற்பட வேண்டும். ஜாதியைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தால், நாடு வாழாது. இந்த நலிவுகளைப் போக்கத்தான் ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெறுகின்றன.
பெரியாருக்கும், அண்ணாவுக்கும் சமத்துவத்திலே ஒரு நம்பிக்கையையும், உறுதிப்பாட்டையும் ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஒத்துழைப்பு காட்டியவர் அம்பேத்கர். அவருடைய செயல்பாடுகளைப் போற்றிப் பாதுகாப்பதுதான் திமுகவின் கடமை. இந்தச் சமுதாய மேன்மைக்காக, என் ஆயுள் இருக்கும்வரை பாடுபடுவேன்.
அப்படியானால் அதற்குப் பிறகு என்ற கேள்விக்குப் பதில்தான் ஸ்டாலின். அவரை நீங்கள் மறந்துவிடக்கூடாது’’ என்றார்.

இது இன்று நக்கீரனில் வெளியான செய்தி ...நடந்து கொண்டு இருக்கும் சகோதர பனி(ணி)போருக்கு முற்றுபுள்ளி வைக்குமா அல்லது அரசியல் யுத்தத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லுமா என்பதற்கு  வரும் நாட்களில் விடை கிடைக்கும் ..........

ஒரு டவுட்டு ஒருவேளை அழகிரி அவர்கள் தனி கட்சி தொடங்கினால் அ.தி.மு.க என்றா பெயர் வைப்பார் (அழகிரி திராவிட முன்னேற்ற கழகம் ) ஹி ஹி   

No comments:

Post a Comment