என் வயது தான் உனக்கும்
நீ எனக்கு முதலாளி
நான் தொழிலாளி.
நிரம்பி வழியும் கல்லாபெட்டியின்
இலட்ச்சங்களை கூட அலட்சியமாக
கடந்து செல்கிறாய் முதலாளியின் மும்முரத்துடன் !
கல்லாபெட்டி என் பொறுப்பில்,முனங்கல்களுடன் !
என் லட்சியங்களை உன் லட்சங்களுடன்
அடைந்திடவே தடுமாறியது மனம்!
உன் நம்பிக்கை எனக்கு நம்பிக்கையளித்ததால்
தடம்மாறினேன் நான் தவிப்புகளுடன் !
ஆண்டுகள் செல்ல செல்ல, இதோ
என் வீட்டுக்கு வெள்ளை அடிக்கிறார்கள்!
உறவினர்கள், வெள்ளை மாளிகை
என்று கைதட்ட தட்ட என்
குற்ற உணர்வுகள் தவிடுபொடியாயின !
விடுமுறையில் வீட்டை பார்க்க போகிறேன்
நதிமூலம் ரிஷிமூலம் என்ற வியாக்கியானங்கள் உதவிசெய்ய,
உறவினர்கள் முன் பெருமை தலைக்கு ஏறி
பலருக்கு நாட்டாமையாக நான் !
நாட்டமை சொம்பை பாதுகாத்தவனாக
விடுமுறை முடிந்து வேலைக்கு
திரும்பிய நாள், நீ (முதலாளி ) தற்கொலை
செய்துகொண்டு பிணமாக கிடக்கிறாய் !
என்னை மரணத்திலும் முந்திவிட்டாய்!
இன்று மட்டும் பொறாமை இல்லை !
உன் அலட்சியத்தை கண்கொட்ட பார்த்த நான்
உன் நம்பிக்கையை, கண்மூடி பார்த்தது புரிந்தது!
உன் தொழில் தொங்கவும் இன்று
தலை தொங்கவும் நானும் ஒரு காரணம்!
இல்லை !நான் மட்டுமே காரணம் !
புண்பட்ட என் மனதில் ஈட்டியாக பாய்ந்தது
உன் வீட்டார் மீண்டும் என்னை நம்பி
பொறுப்பு அனைத்தையும் தந்தது !
வெற்றிகளை ருசித்த பின் மனம்
கற்றுக்கொள்ள் துணிவதே இல்லை!
அந்தரத்தில் நீ தொங்கி - என்
வெற்றிகளையும் கொன்றுவிட்டதால்
கற்க தொடங்கினேன் மாணவனாக !
உன் மனைவி மறுமணமே வேண்டாம் என்கிறாள்
அவ்வளவு காதலிலும் முதலீடு செய்திருக்கிறாய் நீ!
நான் மனிதனாக நேர்வழியை நேசிக்கவும்
கற்றுக்கொண்டேன் உன்னால் !
தொழிலை தலைநிமிர்த்த பாடுபட்டேன்,
என் சேமிப்பை சத்தமின்றி கொட்டினேன் ,
நான் சில காலம் சம்பளமும் துறந்தேன்.
இவை அனைத்தும் உன் உழைப்பே !
அதை நான் மட்டும் அறிவேன் !
பின்பு ஒரு நாள் வெற்றிக்கு பரிசாக
உன் திருமதி எனக்கு வெகுமதி தந்தாள்,
வேண்டாம் என்றேன்,கணக்கு தீர்க்க வழியில்லாமல் !
திருடிய போது திருத்தாத உறவுகள் ,
இன்று என்னை ஏமாளி என்று ஏளனம் செய்தனர்!
நீ என்னை மன்னிக்காதவரை
என் நன்மைகளில் உனக்கும்
பங்கு உண்டாம் ,அதற்காகவே
அதிகமாக நன்மைகள் செய்கிறேன்
இருவரும் மோட்சம் பெற !
ஒருமுறை மரணித்து விட்டு
என்னை ஓராயிரம் முறை கொன்றவனே ,
உன்னை சந்திக்கும் நாளில்
என் தலை குனிந்தே இருக்கும்,
நாக்கை தொங்கவிட்டுவிட்ட உனக்கு
என்னை திட்டிதீர்க்க வலு இருக்குமா?
Tweet |
நீங்க ஒரு இலக்கியவாதி ஜி.....
ReplyDeleteநீங்க அரசியல்வாதி அதான் படிக்கமாலே கமெண்ட் போட்டு இருக்கிங்க ஜி
Deleteஇந்தக்கதையுடன் கூடிய தங்கள் கவிதை எனக்கு மிகவும் பிடித்துப்போனது.
ReplyDeleteகுற்றம் செய்தவனுக்கு அவன் செய்த குற்றமே மனதை உறுத்தி உறுத்தி தண்டனை கொடுத்துக்கொண்டே இருக்கும்.
அது தூக்கு தண்டனையை விட மிகப்பெரிய சித்திரவதையுடன் கூடிய தண்டனை தான்.
அழகாகச் சொல்லியுள்ளீர்கள்
தொடர்வேன் நண்பா >>>>>>>
சொல்ல வந்த செய்தியை சரியாக சொல்லிருக்கேன் என்ற நம்பிக்கையை தந்தது உங்கள் வார்த்தைகள் நன்றி நன்றி
Delete//என் வயது தான் உனக்கும்
ReplyDeleteநீ எனக்கு முதலாளி
நான் தொழிலாளி.//
நெஞ்சினில் துக்கம், மனதினில் வேதனை ஏற்பட இதுவே மாபெரும் COMPLEX ஆக அமைந்து விடுகிறது, இன்றும் பல அலுவலங்களிலும் கூட.
வயதான ஊழியர் சொல்வார், ஓர் உயர் இளம் அதிகாரியைப்பார்த்து:
”என் சர்வீஸ் அளவு கூட உன் வயது இருக்காது. நீ என்னை வேலை வாங்க முடியுமா” என்று.
>>>>>>
அமாம் ஐயா , மிக சரி சில விதிவிலகுகள் உண்டு ..அவர்கள் அபூர்வ ராகங்கள் .. இதோ நீங்கள் அப்படி ஓர் ராகமே சக நண்பரின் தவறை மிகவும் கண்ணியம்மாக சுட்டிக்காட்டும் பண்பாளர் ...நன்றி ஐயா
Delete//என் லட்சியங்களை உன் லட்சங்களுடன்
ReplyDeleteஅடைந்திடவே தடுமாறியது மனம்!
*உன் நம்பிக்கை எனக்கு நம்பிக்கையளித்ததால்*
தடம்மாறினேன் நான் தவிப்புகளுடன் !//
இதில் மூன்றாவது வரி *...* வெகு அருமை.
ஒருவன் மற்றொருவன் மீது வைக்கும் நம்பிக்கையே அந்த மற்றொருவனுக்கு தவறு செய்யவும் நம்பிக்கை அளிப்பதாக [எதிர்மறை எண்ணங்களால்] அமைந்து விடுகிறது என்பதை வெகு அழகாகக் கொண்டு வந்துள்ளீகள். இது தான் நம்பிக்கை துரோகம் என்பதும்.
>>>>>
நட்சத்திரத்திடம் இருந்து நட்சத்திர பாராட்டு ..மிக்க நன்றி
Delete//ஆண்டுகள் செல்ல செல்ல, இதோ என் வீட்டுக்கு வெள்ளை அடிக்கிறார்கள்! உறவினர்கள், வெள்ளை மாளிகை என்று கைதட்ட தட்ட என் குற்ற உணர்வுகள் தவிடுபொடியாயின !//
ReplyDeleteஅற்புதமான சொல்லாடல் + எழுத்து நடை.
//விடுமுறையில் வீட்டை பார்க்க போகிறேன். நதிமூலம் ரிஷிமூலம் என்ற வியாக்கியானங்கள் உதவிசெய்ய, உறவினர்கள் முன் பெருமை தலைக்கு ஏறி பலருக்கு நாட்டாமையாக நான் !//
இன்றும் பலரின் பெரிய பெரிய பங்களாக்களின் அஸ்திவாரங்கள் கொலைகள், மணல் கொள்ளைகள், நம்பிக்கை துரோகம், திருட்டு, வழிப்பறி, மிரட்டல், அரசியல் செல்வாக்கு, லஞ்ச லாவண்யங்கள் முதலியவைகளால் தான் கட்டப்பட்டிருக்குமோ என எண்ணத்தோன்றுகிறது.
>>>>>
எல்லோரும் அப்படி அல்ல ஆனால் வேதனையுடன் சொல்லவேண்டிய விஷயம் பலர் ...அப்படி தான் ! என்ன பண்ண சொளுறீங்க ..
Deleteமாற்றம் வர வேண்டும் மனித மனங்களில் சந்தோசத்தை பகட்டில் தொலைக்காமல் நேர்மையும் உண்மையும் தான் உண்மையான நிம்மதி என்று மனிதர்கள் அனைவரும் உணரும் நாள் வரவேண்டும் ....நன்றி ஐயா உங்கள் கருத்துக்கள் வலு சேர்கின்றன என் கவிதைக்கு நன்றி
//மாற்றம் வர வேண்டும் மனித மனங்களில் சந்தோசத்தை பகட்டில் தொலைக்காமல் நேர்மையும் உண்மையும் தான் உண்மையான நிம்மதி என்று மனிதர்கள் அனைவரும் உணரும் நாள் வரவேண்டும்//
DeleteArt of Living என்று ஓர் அமைப்பு உள்ளது. உங்களுக்கும் அது பற்றி தெரிந்திருக்கலாம். எனக்கும் இன்றுவரை அதுபற்றி முழு விபரங்கள் ஏதும் தெரியாது.
இருப்பினும் எனக்கு மிகவும் வேண்டியப்பட்ட ஒருவருக்காக, அவரின் அன்புக்காக சமீபத்தில் ஓர் நெருக்கடியான வேலையை நான் ஒரு சவாலாக ஏற்றுக்கொள்ளும்படி ஆனது.
அதாவது இந்த ART OF LIVING அமைப்பில் திரு. ரவி சங்கர் குருஜி என்பவர் 05.12.2012 அன்று புதுடெல்லியில் தன்னார்வத் தொண்டர்களுக்கு ஆங்கிலத்தில் ஓர் நீண்ட உரையாற்றியுள்ளார்கள்.
அதை 48 மணி நேரத்திற்குள் தமிழில் மொழியாக்கம் செய்து தர வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது என்னிடம்.
என் உடல்நிலை மற்றும் சோம்பேறித்தனம் முதலியவற்றாலும், மின்சாரம் இல்லாததாலும், நெட் கனெக்ஷம் சரிவர கிடைக்காததாலும், அதை செய்ய நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.
பிறகு ஒருவழியாக, அந்த வேலையை நான் செய்து தருவதாக ஒத்துக்கொண்டு விட்டதால், இரவு முழுவதும் தூங்காமல் கண்விழித்து ஒருவழியாக முடித்து, அவர்கள் சொன்ன 48 மணி நேர கெடுவுக்குள் அனுப்பியும் விட்டேன்.
அதை நான் மொழியாக்கம் செய்யும் போதே எனக்குள் ஓர் உற்சாகமும், ஆர்வமும், நம்பிக்கையும் ஏற்பட்டது.
அதாவது குற்றங்களோ லஞ்சமோ இல்லாத புதிய பாரதத்தை உருவாக்க ஆக்கபூர்வமாக என்ன செய்யலாம் என்பதை பற்றி அழகாக உள்ளது அந்த அவரின் பேச்சு.
அந்த என்னுடைய தமிழாக்கத்தை அவர்களின் WEB PAGE அப்படியே வெளியிட்டுள்ளார்கள்.
முடிந்தால் நேரம் கிடைக்கும் போது படித்துப்பாருங்கள்.
அதிலும் நாம் சொல்லும் மனித மனங்கள் மாற வேண்டும் / மாற்றப்பட வேண்டும், உலக ஒற்றுமை ஓங்க வேண்டும், மனித சமுதாயத்தில் உள்ள அனைவரையுமே சொந்தக்காரர்களாக நினைத்து ஒருவர் மேல் ஒருவர் அன்பினைப் பொழிய வேண்டும் என்ற கருத்து தான் கடைசியில் சொல்லப்பட்டுள்ளது. அதற்கான வழிமுறைகளும்
சொல்லப்பட்டு, எடுத்துக்காட்டுகளும், உதாரணங்களும் அருமையாக விளக்கப்பட்டும் உள்ளன.
இணைப்பு:
http://wisdomfromsrisriravishankartamil.blogspot.in/2012/12/blog-post_5.html
தலைப்பு:
நம் பாரதத்தை மேம்படுத்த சேவை மனப்பான்மையுள்ள தொண்டர்களே,முன்வாருங்கள்!
அன்புடன்
VGK
,,,ஒருசில பக்திப்பாடல்கள், ஸ்லோகங்கள், பிரார்த்தனைகளை செய்வதோ, ஒருசில புனித யாத்திரைகளை மேற்கொள்வதோ மட்டுமே ஆன்மிகம் அல்ல. நல்ல மனிதத்தன்மைகளின் மதிப்பினை நமக்குள் உருவாக்கிக் கொண்டு நாம் வாழவேண்டும்.////////////
Delete////தங்களின் மன அழுத்தத்துடன் கூடிய தவறான கருத்துக்களை உருவாக்கிக் கொண்ட இவர்களை அதிலிருந்து விடுவித்துக் கொள்ள எந்தவிதமான சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் அளிக்கப்படாமல் போனதே இவர்கள் குற்றவாளிகளாக மாறக் காரணமாக அமைந்துள்ளது./////
surerb translation sir ......this article is everyone must read
//என்னை மரணத்திலும் முந்திவிட்டாய்!
ReplyDeleteஇன்று மட்டும் பொறாமை இல்லை !//
சூப்பர். பொறாமைப்பட்டு இவனும் சாகவா முடியும்?
//உன் அலட்சியத்தை கண்கொட்ட பார்த்த நான்
உன் நம்பிக்கையை, கண்மூடி பார்த்தது புரிந்தது!
உன் தொழில் தொடங்கவும் இன்று
தலை தொங்கவும் நானும் ஒரு காரணம்!
இல்லை ! நான் மட்டுமே காரணம் !
புண்பட்ட என் மனதில் ஈட்டியாக பாய்ந்தது
உன் வீட்டார் மீண்டும் என்னை நம்பி
பொறுப்பு அனைத்தையும் தந்தது !//
அருமை நண்பரே அருமை. இங்கு தான் நீங்க நிற்கிறீர்கள்.
திருடன் கையிலேயே சாவியை ஒப்படைத்த கதையாகக் கதையில் [கவிதையில்] ஓர் திருப்பம் இங்கே! ;)
அச்சா, பஹூத் அச்சா !!
>>>>>>>
///சூப்பர். பொறாமைப்பட்டு இவனும் சாகவா முடியும்?///
Deleteமுடியாது ... அது எப்படி முடியும் .......
/////////////அருமை நண்பரே அருமை. இங்கு தான் நீங்க நிற்கிறீர்கள்.
திருடன் கையிலேயே சாவியை ஒப்படைத்த கதையாகக் கதையில் [கவிதையில்] ஓர் திருப்பம் இங்கே! ;)
அச்சா, பஹூத் அச்சா !!//////////////////////////
நன்றி ஐயா .... ரொம்ப நன்றி .... நீங்க ஹிந்தியில் சொல்லியதால் நானும் நம்ம பிரதமர் சொல்லும் பஞ்ச் டைலாக் சொல்லுறேன்
டீக் ஹை ..பகத் ஷுக்கிரியா ........
//வெற்றிகளை ருசித்த பின் மனம்
ReplyDeleteகற்றுக்கொள்ள் துணிவதே இல்லை!
*அந்தரத்தில் நீ தொங்கி - என்
வெற்றிகளையும் கொன்றுவிட்டதால்*
கற்க தொடங்கினேன் மாணவனாக !//
இதைத்தான் கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் என்பார்கள் எங்களில் சிலர்.
//*அந்தரத்தில் நீ தொங்கி - என்
வெற்றிகளையும் கொன்றுவிட்டதால்* //
இதை எழுதிய தங்கள் கைகளைப்பிடித்து எனக்கும் அந்தரத்தில் தொங்கிட ஓர் ஆசை பிறக்குதைய்யா! ;)))))
அபாரமான வரிகள், ஐயா. அசந்து போனேன்.
>>>>>
இது ஆஸ்கர் அல்ல அதற்கும் மேலான நோபல் பரிசு போல தோன்றுது எனக்கு ...ரொம்ப நன்றி
Delete//உன் மனைவி மறுமணமே வேண்டாம் என்கிறாள்
ReplyDelete*அவ்வளவு காதலிலும் முதலீடு செய்திருக்கிறாய் நீ!*
நான் மனிதனாக நேர்வழியை நேசிக்கவும்
கற்றுக்கொண்டேன் உன்னால் !//
இப்போதாவது புத்தி வந்ததே.
//*அவ்வளவு காதலிலும் முதலீடு செய்திருக்கிறாய் நீ!*//
சிந்தித்து எழுதியுள்ள சிறப்பு வரிகள். ;)))))
>>>>>
ஒவ்வொரு வரிகளையும் குறிப்பிட்டு அந்த கதையின் கதாப்பாத்திரத்துடன் உரையாடல் போல நீங்கள் கொடுத்து இருக்கும் கமென்ட்டுகளும் கவிதை போல இருக்குது ஐயா நன்றி நன்றி நன்றி
Delete//பின்பு ஒரு நாள் வெற்றிக்கு பரிசாக உன் திருமதி எனக்கு வெகுமதி தந்தாள், வேண்டாம் என்றேன்,கணக்கு தீர்க்க வழியில்லாமல் !//
ReplyDelete”திருமதி ஒரு வெகுமதி” என்ற விசுவின் படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அது போலவே தங்களின் இந்த வரிகளும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
//திருடிய போது திருத்தாத உறவுகள், இன்று என்னை ஏமாளி என்று ஏளனம் செய்தனர்!//
உருப்படாத, உருப்படவும் விடாத உறவுகள், இருந்தென்ன லாபம்? குள்ள நரிக்கூட்டங்கள் அல்லவோ. ;)
>>>>>
இந்த குள்ள நரிகூட்டங்கள் தான் தடுமாறும் மனிதரின் மயக்க நிலையில் இருந்து மீள விடாமல் தடுக்கும் அயோக்கியர்கள் ........சரியாக சொன்னீர்கள் ஐயா
Delete//நீ என்னை மன்னிக்காதவரை என் நன் மைகளில் உனக்கும் பங்கு உண்டாம், அதற்காகவே அதிகமாக நன்மைகள் செய்கிறேன் இருவரும் மோட்சம் பெற!//
ReplyDeleteஅற்புதமான அபூர்வமான நல்ல எண்ணங்கள். திருந்திய உள்ளத்தின் திறமையான வெளிப்பாடுகளை இந்த வரிகளில் கொடுத்துள்ள உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.
>>>>>
thank you !thank you . infinite thanks to u sir with infinite love
Delete//ஒருமுறை மரணித்து விட்டு
ReplyDeleteஎன்னை ஓராயிரம் முறை கொன்றவனே,//
அட்டகாசமான முத்திரை வரிகள் இவை.
//உன்னை சந்திக்கும் நாளில் என் தலை குனிந்தே இருக்கும், நாக்கை தொங்கவிட்டுவிட்ட உனக்கு
என்னை திட்டிதீர்க்க வலு இருக்குமா?//
வெகுவான என் மனம் திறந்த பாராட்டுக்கள்.
நல்ல இந்த படைப்பினை சமுதாய நலனுக்காக வெளியிட்டுள்ள தாங்கள் ஒரு மிகச்சிறந்த படைப்பாளி. வாழ்க உமது இத்தகைய பண்புகளும் படைப்புகளும்.
மனமார்ந்த ஆசிகள் ... நண்பரே. வாழ்க! வளர்க!!
அன்புடன்
VGK
உண்மையில் என் கண்கள் கலங்கி விட்டது ஐயா இந்த வரிகளை படித்ததும் ...........ஆயிரம் ஆயிரம் கோடி நன்றிகள்
Deleteஉன் நம்பிக்கை எனக்கு நம்பிக்கையளித்ததால்
ReplyDeleteதடம்மாறினேன் நான் தவிப்புகளுடன் !//
நம்பிக்கை துரோகம் செய்து மறுபடி திருந்தி வாழும் மனசாட்சி பேசுவதை கேட்கும் மனிதன் கதை அருமை.
நீ என்னை மன்னிக்காதவரை
என் நன்மைகளில் உனக்கும்
பங்கு உண்டாம் ,அதற்காகவே
அதிகமாக நன்மைகள் செய்கிறேன்
இருவரும் மோட்சம் பெற !//
நல்ல செயல்.
தவறு செய்து விட்டால் வாழ்நாள் முழுவது அனுபவிக்கும் தண்டனை மிக கொடியது..
நன்றி சகோ ..மிக்க நன்றி வருகைக்கும் கருத்திற்கும் ...மேலும் நல்ல படைப்புகளோடு மீண்டும் மீண்டும் உங்களை சந்திக்க ஆவல் உண்டு ...
Deleteமுதலாளித்துவத்தின் நிழல் கூட தொழிலாளியின் மனிதத்தை உதாசீனப்படுத்தும் அய்யா.தொழிலாளியின் குரல் கேட்கும் முதலாளி சாத்தியப்படும்வரை முதலாளிகளின் மரணம் செயற்கையானதுதான் அய்யா. நல்ல சமூகஅக்கறையுள்ள பதிவு.நன்றி.பொங்கல் வாழ்த்துகள் அய்யா.
ReplyDeleteவருகைக்கு நன்றி சகோ ....
Deleteஇங்கே முதளித்துவம் பற்றி ஏதும் சொல்லவில்லை சகோ ..
ஒரு துரோகியின் மனதை படம் பிடித்து இருக்கிறேன் ..
நன்றி நன்றி
நீங்கள் சொல்லும் அவலம் நடந்துகொண்டு தான் இருக்கு என்ன பண்ணுறது
வெற்றிகளை ருசித்த பின் மனம்
ReplyDeleteகற்றுக்கொள்ள் துணிவதே இல்லை!
அந்தரத்தில் நீ தொங்கி - என்
வெற்றிகளையும் கொன்றுவிட்டதால்
கற்க தொடங்கினேன் மாணவனாக !
அருமை
ரொம்ப நன்றி சகோ ... உண்மையான வரிகள் ..கவனித்து சொன்னதற்கு மிக்க நன்றி
Deleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி ஐயா ..உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
Delete