7.31.2011

இன்று எனக்கு மரணம் தற்கொலை

இறுதி ஆசை ,இறுதியிலும் ஆசை 


பகலா இரவா தெரியவில்லை 
வீடா மருத்துவமனையா புரியவில்லை 
உடலுடன் உயிருக்கு இன்று என்ன கோபமோ 
முற்றிலும் பிரிவதற்கு தயாராகி விட்டது .

யார் யாரோ என் உணர்வற்ற கைகளோடு 
நேசமாய் இருக்க நிஜமாய் மன்னிப்பு கேட்ககூட 
முடியாமல் குரல் இழந்து நான்.
மொழியின் வலிமை புரிகிறது 
சிந்தையின் முடிவுரை சத்யசோதனையாய் விரிகிறது!

சூடான செய்தி தரும் செய்தித்தாள் கூடமறுநாள் 
சுவையான சாப்பாட்டிற்கும்  பொட்டலமாய் பயன்தரும் 
என் உடம்பின் சூடு ஆறும் முன்பே 
பயனற்று கிடக்குறேனே படுக்கையிலே!

நாடி அடங்கும் வேளையிலே 
ஆடி தள்ளுபடி கூட்டம் போல 
வந்து போகும் மக்கள் கண்டு 
நான் நல்லவனோ என்ற சந்தேகம் 

பொய்யுறைத்த கணங்கள் 
நண்பரின் மனமுடைத்த ஞாபகங்கள் 
வியாபாரத்தில் பதுக்கிய நாட்கள் 
நினைவலையில் தடுமாறிய பொழுதுகள் 
அத்தனையும் வர மீண்டும் சந்தேகம் 
எனக்கு சொர்க்கமா நரகமா?


சாதித்த வேளையிலே கைதட்டியோர் உண்டு 
சோதித்த பொது முகம் திருப்பியோரும் உண்டு 
போதித்தபடி  என் துணைநின்ற மனைவிக்கு 
இன்று போல் கண்ணீர் பலநாட்கள் என்னால்!
நான் பொய் அதிகம் உறைத்தது உன்னிடமே 
அவை அறிந்தும் அறியாமல் ஆதரித்தாய் 

தோழியாய் இன்றுவரை தொடர்ந்தவளே
இனி துரோகியாய் நான் இருக்கமாட்டேன்
விடைபெறும் நேரத்தில் உன் அழுகுரல் 
இசையாய் கேட்கயிலே முத்தமிட 
ஆவல் பொங்குதடி இது 
காதலா காமமா ?

இறைவா இன்று வலுக்கிறது வலி 
காட்சிகள் தர மறுக்கிறது விழி 
வலுவிழந்தபோது நாடினேன் உன் வழி!
பரிட்ச்சைக்கும் சிகிச்சைக்கும் 
இப்படியே நான் பழகிவிட்டேன்.

உன்னை கண்களால் கண்டிருந்தாலும் 
என் உள்ளம் இவ்வாறே இயங்கிருக்கும்.
நன்றி சொன்ன நிமிடங்களை விட 
உன்னை மறந்த தருணங்களே அதிகம்!
யாதுமானவனே இன்று 
ஏதுமில்லாமல் கேக்கிறேன் மன்னிப்பாயா!!

இறுதியாய் நான் திட்டிதீர்த்த பேரனின்
முகம் தேடி தோற்குது விழிகள் !
இமைக்க மறுக்கும் இமைகளில்
எனக்கு பிடித்த கருமை நிறம்
நிரம்பி நிற்கையிலே !

கருணை கொலை விவாதங்கள் ஓய்ந்து 
நான் விரும்பி அருந்தும் குவளையிலே 
என் மூச்சடைக்க பால் 
மீண்டும் மழலை போல 
புரிந்தும் புரியாமல் வாய் திறக்கிறேன் .
இது கொலையா தற்கொலையா ?

கேள்விகள் இன்றி வந்த நான்
கேள்விகளோடு விடைபெறுகிறேன் 
விடை தேடும் ஆசை மட்டும் 
துணையாய் இன்றும் என்னுடன் .

-ரியாஸ் 

7.30.2011

ஜெயலலிதாவுடன் மீண்டும் இணைத்தார் வைகோ


நெல்லையில் ம.தி.மு.க.,சார்பில் வரும் செப்டம்பர் 15ல் திறந்தவெளி மாநாடு நடத்தப்படுகிறது. மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது. 

கட்சி பொதுச்செயலாளர்  வைகோ தலைமை வகித்தார். 

ஆலோசனைக்கு பிறகு வைகோ,    ’’மத்திய அரசு உத்தேசித்துள்ள அணைகள் பாதுகாப்பு சட்டம் என்பது இந்திய ஒருமைப்பாட்டிற்கு வேட்டுவைக்க கூடியதாகும்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவை காலில் போட்டு மிதித்துவிட்டு, கேரள அரசு தங்கள் மாநிலத்தில் உள்ள அணைகளைபராமரிக்கவும், உடைக்கவும் உரிமை உள்ளது என அக்கிரமமான சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.



அத்தகைய சட்டங்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு மாறாக கேரள அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு வலுவூட்டும் வகையில் டில்லியில் மத்திய பணியில் உள்ள கேரளத்தை சேர்ந்த அதிகாரிகள் வஞ்சமாக நிறைவேற்ற முடிவு செய்துள்ளார்கள்.


 இதனை எதிர்த்து தமிழக முதல்வர் கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கை வரவேற்கத்தக்கது. இந்த பிரச்னையில் மொத்த தமிழகமும் ஒரு குரலாக எழவேண்டும். 


இத்தகைய அநீதியான சட்டத்தை நிறைவேற்ற விடக்கூடாது. சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைவரும் முதல்வரின் குரலுடன் ஒன்றுபட்டு குரல் எழுப்பவேண்டும்.


இதன் மூலம் தெற்கு சீமைக்கே பாதிப்பு ஏற்படும். இதனால் அந்தந்த மாநிலங்களில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் அந்தந்த மாநிலங்களுக்கே சொந்தம் என அறிவிக்கும் நிலை ஏற்படும். அதற்கு வழிவைக்க கூடாது என எச்சரிக்கிறேன்’’ என்று கூறினார்.

நன்றி :
நக்கீரன்.காம்...
இன்று காபி காலையில் குடித்தேன் அதனால காப்பி பேஸ்ட் ஹி ஹி ...
இதுவரை ஒன்பது காபி குடித்து இருக்கிறேன் ...ஹி ஹி 






7.29.2011

பழைய காதலி -ஜெயலலிதா-ராஜபக்சே-கலைஞர்!!!

என் முன்னாள்(ல்) காதலி 



உன்னை பார்த்து பரவசப்பட்டே பழகிய கண்கள் 
அன்று குற்றஉணர்வில் பார்வை தாழ்த்திக்கொண்டது 
சூரியன் இல்லா வானம் போல பொட்டு இழந்து நீ 
வாயில்லா சாட்சியான குழந்தையுடன் நான்!

பொட்டு எங்கே என்றேன் நான் ?
பெண்ணா நான் என்றாய் நீ?

உன்னை பிரிந்தபோது அழுத கண்ணீர்
மீண்டும் எட்டி பார்க்க என் குழந்தையின் 
பிஞ்சு விரல்கள் கண்ணீர் துடைக்குதடி!

வட்டிக்கும் ரொட்டிக்கும் வேர்வை சிந்துகிறேன் 
கண்ட காட்சி மறக்க முடியாமல் கண்ணீர் வடிக்கிறேன்.

தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகம் போல 
என் கண்கள் கண்ணீர் தர மறுத்தால் என்ன ?

உன்னால் நிலைகுலைந்த நான் 
எவர் சீர்கெட்டாலும் 
சமசீர் வேண்டாம் 
என சொல்லும் ஜெயலலிதாவிடம்
மனஉறுதியை கேட்டேன் !

கருணை இல்லாமல் கொன்று குவிக்கும்
ராஜபக்சேவிடம் கல்நெஞ்சை கேட்டேன்
உன் நிலை மறப்பதற்கு ..

வீடு மனைவி மக்கள் என வாழ 
கலைஞரிடம் சுயநலம் கேட்டேன் 
உன்னை மறப்பதற்கு ....

இவர்களுக்கு வாக்களித்தவர்கள் ஏமாந்ததை போலவே
கேட்டது கிடைக்காமல் நானும் ஏமாந்தேன்!
இவர்கள் ஏமாற்றுவதை போல உன்னை
மறந்ததாய் நானும் ஏமாற்றுகிறேன் !!
-ரியாஸ் 

7.28.2011

நடிகையின் திடுக் கதை


அந்த அழகு நடிகையின் ரூம் கதவு தட்டப்பட்டது.நடிகை தூக்கம் கலைந்து எழுந்து கதவை திறந்தாள், தாயின்  கலவர முகம் கண்டு அதிர்ந்தாள்.என்ன என்ற வினாவுக்கு அன்றைய தொலைக்காட்சியின் தலைப்பு செய்தி பதிலானது.

"பிரபல நடிகர் மயூர் கானுடன் நடிகை கார்லின் கோப்ரா உல்லாசம்" என்று படுக்கை அறை காட்சிகள் ஒளிபரப்பானது.தனது மொபைல் போனை சட்டென்று ஆப் செய்தாள் லேன்ட் லைன் இணைப்பும் துண்டிக்க பட்டது.இரண்டு நாட்களுக்கு முன்பு கோவாவில் போதையில் அரங்கேறிய சல்லாப காட்சிகள் எப்படி வெளியானதேன்று குழம்பினாள்.

தாயாரின் தொலைபேசியில் மயூர் கான் பேசினார் ...

கோப்ரா : ஹலோ 
 மயூர் : என்னது 
கோப்ரா : எனக்கு தெரியாது ..

மயூர் :என்னை மிரட்ட பாக்குறியா ..நீ தே ...ன்னு சொல்லி உன் மார்கெட்டை காலி பண்ணிடுவேன் ,,
கோப்ரா : ஐயோ சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது ..

மயூர் :எல்லாம் நான் பிரைவேட் டிடெக்டிவ்  வைத்து செக் பண்ணிட்டேன் ..உன்னோட யு டுப் சேனல் மூலமா உங்க வீட்டு  ஐ பி அட்ரஸ்லிருந்து  தான் இந்த  வீடியோ வெளியாய் இருக்கு 

கோப்ரா :நீங்க என்ன சொன்னாலும் நான் கேக்குறேன்...நானா விரும்பி தான் உங்களுடன் தங்கினேன்.உங்க ரூமில் தானே  இருந்தோம் எப்படி இப்படி எல்லாம் நடந்தது  எதுவுமே தெரியாது ..விளக்கை அனையுங்கன்னு கூட கெஞ்சினேன் நீங்க தான் கேக்கலை ..ஐயோ தற்கொலை செஞ்சுக்கலாம்னு தோணுது..

மயூர்: தப்பு  தப்ப யோசிக்காதே...ரெண்டு   நாள் எல்லா ஷூட்டிங்கும் கான்செல் பண்ணு  யாருக்கும் பேட்டி  கொடுக்காதே ..நா சாந்திரம் உன் வீட்டுக்கு வர்றேன் 

கோப்ரா : சரி 
***************

இடைப்பட்ட வேளையில் நம்பர் ஒன் தொலைகாட்சிகள் தொடங்கி புலனாய்வு பத்திரிக்கைகள் மற்றும் மஞ்சள் பத்திரிக்கைகள் வரை அனைவரும் பல கதைகள், கேள்விகள் எழுப்பின.

 தன் சொந்த மகள் நடத்திய பேஷன் ஷோவை தலைமையேற்று தொடங்கி வைத்த மதவாத  கட்சி தலைவர்  ஒருவர் நம்ம கலாச்சாரத்தை கெடுத்த இந்த நடிகரையும் நடிகையையும் நாடு கடத்த வேண்டும் என  பேட்டி கொடுத்ததும். 

தொண்டர்கள் என்ற பெயரில் குண்டர்கள் பலர் நடிகையின் வீட்டு முன்பு போராட்டம் நடத்தி வன்முறையில் ஈடுப்பட்டனர்.நடிகரின் படம் ஓடும் திரை அரங்குகள்  சூறையாடப்பட்டன 

இப்படி நாடே பரபரப்பான பின் அமைதி காக்க முடியாமல் அன்றே GONE-2  இயக்குனரின் அறிவுரை படி  நடிகரும் நடிகையும் சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்க முடிவு செய்தனர்.

திட்டபிட்ட படியே நடிகர் மயூர் கானும் நடிகை கார்லின் கோப்ராவும் தங்களை இயல்பாகவே காட்டி கொண்டார்கள் ..தயார் செய்து வைத்திருந்த அறிக்கையை மயூர் கான் முதலில் படித்தார்.."நீங்கள் டிவியில் ஒளிபரப்பிய படுக்கை அறை காட்சியானது நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்து அடுத்து வெளிவரபோகும் GONE-2 பட காட்சிகள் அது எப்படி வெளியானது  என்று தெரியவில்லை..அதை கண்டுபிடிக்க காவல் துறையின் உதவியை நாடி உள்ளோம்.நாங்கள் நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்திய கலாச்சாரத்தை போற்றி ஏற்று வாழ்த்து வருகிறோம். எங்களை வாழவைக்கும் ரசிகர்களின் மனம் நோகாமல் நடந்து கொள்ளவே விரும்புகிறோம்.சமுதாய அக்கறையுடன் இந்த படுக்கை அறை காட்சிகள் வரபோகும் படத்தில் இருந்து நீக்க கோரி தயாரிப்பாளரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.இனி என் படங்களில் முத்த காட்சிகளோ படுக்கை அறை காட்சிகளோ இருக்காது என்ற ரசிகர்கள் மற்றும் தாய்குலங்களிடம் உறுதி  அளிக்கிறேன்.நடிகர்களும் மனிதர்களே எங்கள் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து பத்திரிகை நண்பர்கள் கற்பனை செய்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்." என அறிக்கை நிறைவு பெற்றது. பத்திரிக்கையாளர்களின் சரமாரி கேள்விகள் அனைத்திற்கும் இருவரும் சாமர்த்தியமாய் பதில் அளித்தனர் .


ரகசியமாய் திட்டம் போட்டு இவை அத்துன்னையையும் அரங்கேற்றிய GONE-2 பட இயக்குனர் கம் தயாரிப்பாளர் வெள்ளிகிழமை ரிலீஸ் ஆக போகும் படத்திற்கு கிடைத்த பப்ளிசிட்டியால் மகிழ்ந்து போயி இருந்தார்.

--------------------------------------------------------------------------முற்றும் -----------------------------------------------








பதிவுலகில் நுனிபுல்லின் கீபோர்டும்???

கடை வீதியில் -உன்
கடை கண் பார்வைக்கு -இந்தியாவின்
கடன் தீர்க்க பல 
கோடிஸ்வரர்கள்  தயார் !

வரி ஏய்ப்பு செய்யும் 
வல்லுனர்கள் கூட -உன் 
வடிவிற்கு கேள்வியே  கேட்க்காமல் 
வாரி இறைக்க துணிந்தனர் !

சூது வாது இல்லாமல் -நீ 
சாலையில் போகையில் 
உன் பார்வை யாரை கடந்தது என்று 
சூதாட்டமே நடக்குதடி !

மழைக்கும் உன் மீது காதல் 
வெயிலுக்கும் உன் மீது காதல் 
உன்னால் உன் ஊரே இதமான 
தட்ப வெப்பத்தில் குளிர்காயுதடி!

இத்துன்னை பெருமைகளையும் 
வாசலில்  செருப்போடு கழட்டி வைத்துவிட்டு  
கண்ணாடியில் அன்று புதிதாய் 
திருஷ்டியாய்  அரும்பியுள்ள பருவை  பார்த்து 
வேதனையில்  என் கற்பனை காதலி !

- ரியாஸ் 

தலைப்பு செய்தி :
கம்பன் வீட்டு கட்டு தறியும் கவிபாடும் என்பார்கள் ...உங்க பதிவுகள் படிப்பதால் என்னால்  இப்படி உளற முடியுது  ...நன்றி ..பொறுமையா படித்ததிற்கு ..ஹி ஹி இன்னும் பொறுமையா இருந்தால் ஒரு நாள் இல்ல ஒரு நாள் நல்ல கவிதை கிடைத்தாலும் கிடைக்கும் ஹி ஹி 

7.26.2011

ரஞ்சிதா வாழ்க்கையில் விளகேற்றிய நக்கீரனும் சன் டிவியும்

இங்கே கண்டிப்பாக போலி சாமியார்கள் மட்டுமே அனுமதி.நீங்க சீரியஸ் ஆளாக இருந்த இங்கயே இப்படியே ஆப்பிட்டு ஆயிடுங்க ..சும்மா சிரிக்க கொஞ்சம் சிந்திக்க மேலே படிங்க ....

போலி சாமியார் சந்திக்கும் சவால்கள்.

குரு: இன்றைய உரை பற்றிய   போர்டு மாட்ட சொன்னேனே ..மாட்டியாச்சா?

சிஷ்யன் : போலி சாமியார் சந்திக்கும் சவால்கள். அப்படின்னு போட்டிருகேன்னு சாமி .

குரு:மடையா இப்படி பகிரங்கமாவா போடுவாய் ! நாதாரித்தனம் பண்ணினாலும் நாசூக்கா , நம்ம ஆளுங்களுக்கு மட்டும் புரியுற மாதிரி எழுதணும்.ரொம்ப நல்லவங்க நிறைய பேர் இருக்காங்க அவங்க கோவிசுக்கவும் கூடாது ..கவனம் தேவை ..கவனக்குறைவு தான் நம்ம பண்ணுற மிக பெரிய தவறு ...

சிஷ்யன் : மிடில் கிளாஸ் மக்களை குறி வைத்து தானே நம்ம உரைகள் இருக்கும் இன்னைக்கு  என்ன  டார்கெட் வேற  மாதிரி இருக்கு 

குரு : இந்த போலிகள் எல்லாம் நம்மள ஓவர்டகே பண்ணி போயி ஆயிரம் கோடி மூவாயிரம் கோடி அப்படீனு சேர்த்துபுட்டு எப்படியோ மாட்டிகிராணுக  
அவனுங்க  தான் இப்ப நமக்கு அடிமைகள் பணம் காய்க்கும் மரங்கள். பயத்தில இருக்கும் போது முடிந்தவரை புடிங்கிடலாம்... இலவச இணைப்பா நடிகைகள் கூட கிடைக்க வாய்பிருக்கு

சிஷ்யன் : அட நல்ல திட்டம் தான் குருவே ..புதுசா ஒருத்தன் சாமியாராக வந்து இருக்கான்...காலையில இருந்து உங்களை பாக்கணும்ன்னு ஒரே அடம் பண்ணுறான்..

குரு:வரசொல் ..
ஜெயம் உண்டாக்கட்டும் ....மாயை உன் கண்களை மறைத்து இருந்தது!! உன்னை இன்று முதல் சமாதி மோட்சம் கிடைக்க போகுது ...வா மகனே வா ..உன் பெயர் என்ன

புதியவர் : ராஜசேகர்

குரு:இந்த பேரு வச்சாலே சாமியார் ஆக தோணுமோ..நீ ஏன் சாமியார் ஆக ஆசை படுகிறாய்

புதியவர் :சாமி எனக்கு ரெண்டு பொண்டாட்டி ..சமாளிக்க முடியல ..வாழ்க்கை வெறுத்து போச்சு காசி ராமேஸ்வரம் போகலாம்ன்னு நினைத்தேன் ..இப்போ பேப்பர் டிவி எல்லாம் பார்த்து இங்கே வந்து சேர்ந்தேன் ..

குரு: ரெண்டு பொண்டாட்டியை சமாளிக்க முடியாத நீ சாமியாராக முடியாது என்றே தோணுது ...உனக்கு யோகா தெரியுமா ?

புதியவர் :ஐயா பணக் கஷ்டம் அதுதான் சமாளிக்க முடியலை ..கோடிகள் புரளும் பொது நாங்களும் நித்தம் நித்தம் கலக்குவோம் ...யோகவெல்லாம் நமக்கு உடம்பு வளையாது சாமி ..

குரு:ஒரு முடிவோடு தான் வந்து இருக்கே ஜெயம் உண்டாகட்டும் ...சரி இன்றைய உரையை நீ வந்து கவனமா கேட்டு குறிப்புகள் எடுத்துக்கோ ...உனக்கு தேவையான அணைத்து உதவிகளும் செய்யப்படும் ...பயிற்சி முடிந்து
நீ சொந்தமா மடம் தொடங்கி பிசினெஸ் செய்யும் பொது இருபது சதவீதம் எனக்கு தந்து விடனும் ....சரியா ...கிழே ஆக்ரேமென்ட் ரெடியா இருக்கும் போயி சைன் பண்ணு ...ஜெயம் உண்டாக்கட்டும் ...

அன்றைய உரைக்கான டிஸ்கசன் தொடங்கியது 


சிஷ்யன் :  சக கூட்டாளிகள் எல்லாம் வராங்க இவங்க கிட்ட பேச மிக பெரிய ஞானம் தேவை ...

குரு: ஒரு மண்ணும் தேவை இல்லை வரவன் எல்லாம் கொலை,கற்பழிப்பு சொத்து குவிப்பு என்ற தில்லாலங்கடி வேலை செய்தவன் தான்...முன்கூட்டியே   நான் எல்லோறுக்கும் உன்னை பற்றிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளதுன்னு ஒரு மிரட்டல் ஈமெயில் அனுப்பிவிட்டேன் ...

சிஷ்யன் : குருவே மார்க்கெட் இழந்த மலை தொடர் வே நடிகை வந்து இருக்காங்க ..

குரு:ஹி ஹி ..வர சொல்லு

நடிகை : இன்றைக்கு பேசுவதற்கு நீங்க கேட்ட குறிப்புகள் எல்லாம் இன்டர்நெட்டில் தேடி கொண்டுவந்தேன் இதோ ... எல்லாம் மணிரத்தினம் பட டயலாக் மாதிரி சின்னதா நச்சுன்னு இருக்கும் ...நடுவுல நீங்க உங்க சாமியார் எபக்ட் சேர்த்துக்க மகனே ,குழந்தாய் இறைவன் ஜெயம் சர்வம் சந்தோசம்  அப்படின்னு கொஞ்சம் சேர்த்துக்கோங்க

குரு: குணா பட கமல் மாதிரி சொல்றியே கள்ளி ...

சிஷ்யன் : பணக்கார பக்க்தர்களுக்கு பினாமியா இருக்குறதை முதல்ல நிறுத்தனும் ...

குரு:அவங்க தான் நமக்கு விளம்பரமே ஆனா வில்லங்கம் வராம இருக்க அவங்க பிடி நம்ம கிட்ட இருக்கணும் நம்மளும் பேராசை படாம இருக்கணும் .

நடிகை : சினிமாகாரி கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்

குரு:அது உண்மை தான் சபலத்தில் ரஞ்சிதா விடம் நித்தி மாட்டிகிட்ட மாதிரி இனி யாரும் மாட்ட கூடாது ...மார்கெட் இழந்த ரஞ்சிதா இன்று சினிமாவில் சம்பாதித்ததை விட அதிகம் சம்பாதித்து விட்டதாக கேள்வி ..பிளான் பண்ணி எவிடேன்சே இல்லாமல் பார்த்துக்கணும் ...

சிஷ்யன் : அரசியல்வாதிகள்

குரு:அவங்க பிடி நம்மகிட்ட இருக்கணும் கொஞ்சம் ஸ்லிப் ஆனோம் கொலை பலி கூட விழும் ..

சிஷ்யன் : சரி சரி ஒருமணி நேர உரை தயார் ....

குரு:போலி சாமியார்கள் சந்திக்கும் பிரச்சனைகள்  எல்லாம் இதில் வந்துவிட்டதல்லவா ....

நடிகை : பத்திரிக்கைகள்

குரு:அவங்க உங்க பின்னாடி தான் அதிகம் சுத்துவாங்க ..நானா போயி வெறும் வாயில் அவுல் கொடுத்து மாட்டிகிட்டா தான் வம்பே .....

சிஷ்யன் : நன்றி குரு நான் சென்று வருகிறேன்

குரு:டே எங்கடா

சிஷ்யன் : மெக்ஸிகோ நாட்டில் ஒரு அக்கௌன்ட் திறந்தாச்சு , ஆந்திராவுல
நாளை நான் கட்டிய கோவிலை வைத்து நான் இனி பிழைத்து கொள்வேன்
வரட்டா ...

குரு: இருபது சதவிதம் எனக்கு மறந்துடாதே ..

சிஷ்யன் : சாமி உங்க பிடி இப்ப  என் கையுல

குரு:அட பாவி

சிஷ்யன்   நடிகையுடன் வெளியேறினான் ...........



7.25.2011

புலிகளுக்கு கிடைத்தது விடுதலையா கண்துடைப்பா

மிருக கடத்தலும் உலகை உலுக்கும் விஷயங்களில் ஒன்று அதற்கு கடத்தல் காரர்கள் அதிகம் பயன்படுத்தும் ட்ரான்சிட் பாயிண்ட் தாய் லாந்து.. இன்று தாய்லாந்து ஏர் போர்ட்டில் பிடிப்பட்ட சில அப்பாவி மிருகங்களின் படங்கள் சில 
மில்லியன் கணக்கில் தாய்பாட்டை (thai bhat) கொடுத்து என் வாயை கட்டி கொண்டுபோறான் பங்களாதேஷில் இருந்து ..ஆ .ராசாவின் வாயை கட்ட முடியலை நாங்க என தப்பு பண்ணுனோம் இப்படி பண்ணுறீங்க 

என்னை ஒரு துபாய்காரன் கடத்திட்டு போக பார்த்தான் ஹி ஹி பயபுள்ள மாட்டிகிச்சு ...அரபு நாட்டு பெண்களை சைட் அடிக்க நினைத்தேன் முடியாதோ ?
என்னையும் அதே துபாய்காரன் தான் பிரேசிலில் இருந்து கடத்திட்டு போறான் ..என் ஆசையிலும் மண் தான் 
நானும் தான் நம்ம பிறந்து மூணு மாசம் தான் ஆகுது அதுக்குள்ளே ஆசையை பாரு அதான் நம்மை கூடுக்குள போட்டு கொல்றாங்க 
காசு இருத்த எதையும் வாங்கலாம்னு நினைக்கும் மனிதர்களே ...நீங்க அழிய போறீங்க என்று சொல்லி சிரிக்கும் கரடி குட்டி.... டி.ஆர் அல்ல 

இந்த சிறுத்தை குட்டி பிறந்து ரெண்டு மாசம் தான் ஆவுது ...நாடு விட்டு நாடு பிழைக்க போகும் மனிதர்களே உங்கள் வீட்டு ஞாபகங்கள் போலவே எனக்கு என் காட்டு ஞாபகங்கள்...என் தாய் மடியில் என்னை சேர்க்க குரல் கொடுங்கள் 
நானும் சிறுத்தை தான் எனக்கு தான் விலை அதிகமாம் ...என் ஓட்டம் ,வீரம் எல்லாம் இனி இந்த கூண்டுக்குள் தான் ...
மயக்க மருந்து கொடுத்து பொம்மைகளோடு பொம்மையாய் கடத்த பட்ட புலிக்குட்டி நான் ...நன்றி காப்பற்றியதர்க்கு ....ஆனா இது விடுதலையா இல்லை கண்துடைப்பா ...மீண்டும் எங்களை காட்டிலா விட போறீங்க ஜூவிலோ அல்லது காப்பகத்திலோ தானே .......

நெஞ்சை தொட்டு சொல்லுங்க கடைசி படம் மனசை ஏதோ பண்ணுது ...

உலகையே திரும்பி பார்க்க வைத்த பதிவர்

போடோஷாப் மற்றும் html லில் கில்லாடியான அல்லாஹபாத்தை சேர்ந்த கோவிந்த் திவாரி தான் இப்போ பதிவுலக சூப்பர் ஸ்டார் ...இவரின் வலைப்பக்கம் ஹிட்டுக்களால் நிரம்பி வழியுதாம் இங்கே அப்படி என்ன இருக்கு போய் நீங்களே 

சிதம்பரத்தை போட்டுகொடுத்த ஆண்டிப்பட்டி

இன்று சுப்ரிம் கோர்ட்டில் நம்ம ராசா தன பக்க நியாங்களை எடுத்து வைத்தார் ..
அதில் சில முக்கிய டக்கால்டிகள் ....

நான் இந்த முடிவு எடுத்தது அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு  தெரியும் அவரும் இதற்க்கு அனுமதி அளித்தார் மேலும் இது பிரதமரின் கண்காணிப்பில் நடந்ததே என்கிறார்.

நான் செய்தது தவறு என்றால் எனக்கு முன்பு இந்த துறையில் மந்திரிகளாய் இருந்த அனைவரும் என்னுடன் சிறைக்கு வர வேண்டும் என்றார் ..
(தயாநிதி வருவாரு அதுவரை பொறுமை காக்கவும் )

ப.சிதம்பரம் இதை பற்றி கேட்டதற்கு கருத்து கூறவில்லை ...

பா ஜா க வினர் பிரதமரையும் சிதம்பரத்தையும் பதவி விலக கூச்சல் போடுராங்கோ .....

ஆட்டம் சூடு பிடிக்குது ...மேலும் தெரிந்து கொள்ள வேண்டியவை ..


 டி.பி., ரியாலிட்டி, யூனிடெக் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு சட்ட ரீதியாக நடந்திருக்கிறது. இது பிரதமருக்கு தெரியும் படியே நடந்தது. இதனை அவர் மறுக்கட்டும், தவறு இருந்திருக்கும பட்சத்தில் பிரதமர் அதனை தடுத்திருக்கலாம், காபினட் கொடுத்த அறிவுரையின் பேரில் ஒதுக்கப்பட இந்த விவகாரத்திற்கு நிதி அமைச்சர் சிதம்பரமும் ஒப்புதல் கொடுத்துள்ளார். பா.ஜ.,வை சேர்ந்த அருண்ஷோரி 26 லைசென்ஸ்களும், தயாநிதி 25 லைசென்ஸ்சுகளும் ஒதுக்கியிருக்கி்ன்றனர். நான் 122 லைசென்ஸ் கொடுத்திருக்கிறேன். இவைகளில் எண்ணிக்கைதான் வித்தியாசம். ஆனால் கொள்கை ஒன்றுதான். இப்படி இருக்கும்பட்சத்தில் என்னிடம் மட்டும் கேள்வி எழுப்பப்படுவது ஏன் ? இதில் எங்கே குற்றம் நடந்திருக்கிறது ? இதில் எங்கே சதி நடந்திருக்கிறது ? நான் குற்றமற்றவன்.


எனது காலத்தில் ஏழைகள் பயன் அடைந்தனர்: எனது அமைச்சர் காலத்தில் மக்களுக்கு சேவை புரிந்துள்ளேன் . நான் அமைச்சராக இருந்தபோது மொபைல் அழைப்பு கட்டணம் மிக குறைந்த அளவிற்கு குறைக்கப்பட்டது. எல்லோரும் மொபைல் போன் பெற வேண்டும் என விரும்பினேன். அதற்கான வாய்ப்பையும் உருவாக்கி கொடுத்தது எனது கொள்கை. இதன் காரணமாக நாட்டில் உள்ள ரிக்ஷா தொழிலாளி முதல் அனைத்து ஏழை மக்களும் பயன்அடைந்தனர்.இவ்வாறு அவர் வாதிட்டார். இவ்வாறு வாததுரை நடந்ததாக அவரது வக்கீல் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., கடந்த 21 ம் தேதி முதல் 23 ம் தேதி வரை வாதிட்டனர். ராஜாவின் வாதம் இன்று முதல் துவங்கியிருக்கிறது. ராஜா கடந்த பிப்.2 ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

7.24.2011

கமேராவுக்குள் புகுந்த பென்சில் பேய்

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பேன் ஹெயனே என்னும் புகைப்பட கலைஞர் மற்றும் ஓவியர் ஒருவரின் படைப்புகள் இவை ...பார்த்ததும் பிடித்தது ...சுட்டேன் 
உங்கள் முன் பதிவிட்டேன் 

பார்த்து ரசித்து ..வாக்களித்து செல்பவர்கள் ரொம்ப நல்லவர் ...நீங்க நல்லவர் தானே 











இதெல்லாம் ஏற்கனவே நாங்க பார்த்தது தான் என்போருக்கு ...நாளை இல்லுசியன் வகை புகைப்படங்களின் தொகுப்பு ..அது எப்படி இருக்கும் என்போருக்கு இதோ ஒரு சாம்பிள் ...

எங்க எனக்கு ஒன்னும் புரியலை இந்த படம் பார்த்து ...உங்களுக்கு எதாவுது புரியுதா? ,,நாளை தொகுப்பிற்கு அவசியம் வரவும் 

பிஞ்சிலேயே பளுத்த கலைஞர் வயது 20

தி.மு.க.வின் செயற்குழு கூட்டம் கோவை சிங்காநல்லூர் அண்ணா வளாகத்தில் நேற்று நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். கூட்டத்தில் பேசிய பெரும்பாலான செயற்குழு உறுப்பினர்கள் கட்சிக்கு புது தெம்பும், புத்துணர்ச்சியும் அளிக்க புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றனர்.
 
அதற்கு தகுதியானவர் மு.க. ஸ்டாலின்தான். அவர் இக்கட்டான காலகட்டத்தில் சரியாக வழி நடத்தி சென்றுள்ளார். பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளார். தொண்டர்களிடம் கண்ணியமான நட்பு வைத்துள்ளார். தொண்டர்களுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளார். எனவே மு.க. ஸ்டாலினை தலைவராக நியமிக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் பேசினர்.
 
இதற்கு பதில் அளித்து தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-
 
தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்த வயதிலும் 20 வயது இளைஞர் போல் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வருகிறார். எனவே தி.மு.க. தலைமை மாற்றம் என்ற பேச்சு இப்போது எழவில்லை. தலைமை மாற்றம் என்பது இப்போது அவசியமில்லை.
 
இவ்வாறு அவர் பேசினார்.
 
மு.க. ஸ்டாலினை தலைவராக்க வேண்டும் என செயற்குழு உறுப்பினர்கள் பேசும்போது மத்திய மந்திரி மு.க. அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கு இருந்தனர். ஆனால் அவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. கொங்கு நாடு முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி சேர்ந்ததன் மூலம் கடந்த தேர்தலில் தி.மு.க. வுக்கு பெரிய அளவில் எந்த வித பலனும் இல்லை. தவறான கணிப்புகள் மூலம் கூட்டணி அமைத்து தேர்தலில் தோற்றுவிட்டோம் என்று சில செயற்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
 
இலவச திட்டங்களை மட்டுமே நம்பியதால் தேர்தலில் தோல்வியை சந்திக்க நேர்ந்தது எனவும் தெரிவித்தனர். தி.மு.க. வை அழித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு கட்சியினர் மீது நில அபகரிப்பு வழக்குகளை போட்டு வரும் அ.தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் கூறினார்கள்.
---------------
மாலைமலரில் இந்த செய்தி படித்தவுடன் மனதில் தோன்றிய டவுட்டுதான் தலைப்பு 

அம்மாவின் காவலில் புதிய புலிகள்

தலையில் மண் அள்ளி போடறது என்பது இதுதான் ..அட என் பதிவை பார்க்க வந்ததை சொல்லவில்லை ..
பின்னழகில் மயங்கி இங்கே நின்று விடாதீங்க அம்மணி சாணி போடும் நேரம் ...
பாகிஸ்தானில் வாடகைக்கு விடப்படும் குதிரைகள் முதலாளியின் தொலைபேசி நம்பருடன் ,அட பாவிகளா மனுசங்களை பாம் வைச்சு கொலுறீங்க மிருகங்களுக்கு இப்படி மலிவு விலை மார்க்கெட்டிங்கா ???
பாகிஸ்தானில் நடக்கும் இந்த மலிவு விலை மார்க்கெட்டிங்கிற்கு எதிராக கிளம்பும் ஸ்பெயின் நாட்டுக்கு குதிரைகள் 
அந்த குதிரை போராட்டத்திற்கு அமெரிக்காவிலும் அதரவு பெருகி இந்த கருப்பு வெள்ளை ஜோடிகள் நடைபயணம் .........
உலகெங்கும் பெருகி வரும் ஆதரவை பார்த்து எங்களின் ஆறாம் அறிவு விழித்து விட்டது ...இனி எங்களையும் இப்படி வைத்து வித்தை காட்டாதீங்க
உலகிற்கு நாமும் நம் ஒற்றுமையை காட்ட வேண்டிய நேரம் இது ... கரடியும் நாயும் கட்டிபிடித்து நட்பு பாராட்டும் காட்சி !!!
சீனாவில் ஒரு பாம்பு பண்ணையில் பிடித்த படம் ..இந்த பண்ணையில் உணவுக்கும் மருதிர்க்கும் என ஆண்டொன்றுக்கு மூன்று மில்லியன் பாம்புகள் சுவாஹா 
குட்டி நீர்யானை ஒரு ஜூவில் 

மனிதர்கள் விழிக்கும் வரை உறக்கம் என உறங்கும் காண்டாமிருகம் ...
பிரான்சில் நடைபெற்ற அழகு போட்டியில் வெற்றிபெற்ற களைப்பில் உறங்கும் 
இருபது மாதங்கள் ஆனா நாய்குட்டி ...

நம்ம வழி தண்ணி வழி
கிராபிக்ஸ் அல்ல கவிதை ...ஆஹா 
காடுகளை அழித்து வீடுகள் கட்டினால் நாங்கள் இப்படி வாழ பழகிக்க வேண்டும் போல ...
அவன் இவன் விஷாலுக்கு முன்பே நான் ஒன்றை கண்ணோடு ஹிட் ஆனவன் ..அவார்ட் எனக்கு கிடைக்குமா ?
என் பேரில் யாருடா பலாப் படம் எடுத்தது என சீறுது ...
மீண்டும் ஒரு கவிதை 


அம்மாவின் முதுகில் உறங்கும் எறும்பு தின்னி ..
இது தான் தலைப்பு செய்தி ....அம்மாவின் காவலில் பூமிக்கு 
புத்தம் புதிதாய் வந்துள்ள புலிகள் அல்ல சிங்கக்குட்டிகள் .ஹி ஹி