7.04.2011

நண்பேன்டா 2-இது ஒரு தொடர் பதிவு......



 நட்பு ஓர் இனிய கடமை உணர்ச்சி. அது ஓர் அதிர்ஷ்டம் அல்ல என்று கலீல்ஜிப்ரான்


 உன்னைவிட மேம்பட்டவனாய் இல்லாதவனிடம் ஒருபோதும் நட்பு வைக்காதே என்று கன்பூசியசு

நட்பைத் தொடங்கும்போது மெல்லத் தொடங்கு, நட்பு என்று ஆன பிறகு அதை உறுதியாகவும் நிலையாகவும் தொடர் என்று சாக்ரடீசு


கடவுளே நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றுஎதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்கிறேன் என்று லூயி எக்டர் 


என உலக இலக்கியங்களிலிருந்து உள்ளூர் இலக்கியங்கள் வரை நட்பைக் கூறாத எழுத்து வேந்தர்களே இல்லை.

என் வாழ்க்கை ஒரு நாடோடி வாழ்க்கை. என் அப்பாவுக்கு (transfer) மாற்றம் வரும் போதெலாம் பெட்டி படுக்கையை மட்டும் தூக்கி கொண்டு நட்பை தொலைத்தே ஓடிக்கொண்டு இருந்திருக்கிறேன் . உருவங்களும் தொடர்புகளும் மறந்து இருந்தாலும் நெஞ்சில் நிறைந்து  இருக்கும் சிலரை பகிர்ந்து கொள்கிறேன்...


ராஜேஷ் /கிருபாகரன் 
                 பள்ளி கால நண்பர்கள்.இதில் எனக்கும் ராஜேசுக்கும் படிப்பில் போட்டியும் பொறாமையும் இருந்ததுண்டு.வகுப்பில் முதல் இடத்தை மாறி மாறி பிடித்த நாட்கள் இனிமையானவை.கிருபா நான் சொல்வது எல்லாம் சரியாக தான் இருக்கும் என கண்மூடி தனமாக என்னை நம்பிய தோழன்.

சுரேஷ் /ராகேஷ் ;
          ஆறாம் வகுப்பு முதல் தஞ்சையில் படிக்க தொடங்கினேன்.அங்கு நண்பர்களை அறிமுகமானவர்கள்.நான்கு வருடம் நீடித்த நட்பு.ராகேஷ் அதில் மார்வாடி பையன் அவன் கொண்டு வரும் டிபன் பாக்ஸ் எப்பவும் என் கையில் இருக்கும் அவன் வீட்டு சமையல் அறையில் போய் சாப்பிடும் உரிமை பெற்றிந்தேன் .அருமையான நாட்கள் ..தீடிரென்று அவன் மாயமாய் ராஜஸ்தான் போனதும் தொடர்பு அறுந்தது வேதனை ..

           சுரேஷ் படிப்பில் மக்கு ஆனால் விளையாட்டிலும் அன்பிலும் கெட்டிக்காரன். நான் அவனுக்கு  மிக நெருங்கிய உறவு பெண்ணை காதலித்த போது கூட எனக்கு ஆதரவாய் இருந்தான்...(சரி சரி எல்லாம் வயசு கோளாறு தான் ஹி ஹி ) தொழிற்கல்வி பயில அவன் பிரிந்தான் ,,நானும் என் கல்லூரி வாழ்க்கையை நோக்கி திருச்சி சென்றேன் ..

பிரேம்/சதீஷ் /சந்திப் 

 கல்லூரிக்காலம் ஒரு பொற்காலமாகவே நினைவில் தோன்றுகிறது. கவலை கலைந்து திரிவதும், நகைச்சுவையில் நனைவதும், காதலிப்பதும், உறவுகளின் சூழலை மறந்து ஊர்சுற்றுவதும் கல்லூரி நாட்களில் மட்டுமே நிகழக்கூடியவை .நட்பு வட்டம் பெரிதாக இருந்த நேரம் இது அதில் இந்த மூவரும் முக்கியமானவர்கள் .சதீஷ் என் வீட்டுக்கு மிக அருகாமையில் இருந்தான் இருவரும் மொட்டை மாடியே சரணம் என்று கிடப்போம். சந்திப் ரொம்ப திட்டி திட்டி தான் அந்த நாட்களில் நான் படித்து தேறியது எல்லாம்ன்னு சொல்லலாம் .இவன் அந்தமானில் இருந்து இங்கு வந்து படித்தான். பிரேம் ரொம்ப அலட்சியமானவன் ஆனால் வகுப்பில் முதலிடம் என்றுமே அவனுக்கு தான் .

இன்று ஒவ்வொருவரும் உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கிறோம் யாருமே நம் நாட்டில் இல்லை.ஊருக்கு போகிற போது கூட சந்திக்க வாய்ப்பு கிடைப்பதில்லை.
அரசர்குளம்

               என்னடா ஒரு ஊர் பேரையே எழுதி இருக்கேன்னு பாக்குறிங்களா. கடந்த ஐந்து வருடமா நான் மலேசியாவில் குப்பை கொட்டுறேன் இங்கே வந்ததிலிருந்து அரசர்குளம் என்னும் சின்ன சிங்கப்பூர் வாழ் மக்களின் அன்பிலும் ஆதரவிலும் தான் வாழ்ந்து வருகிறேன்.இந்த ஊரில் நான் சில மணி 
நேரங்கள் தான் தங்கி இருப்பேன் ஆனால் அங்கே  பள்ளிவாசலில் பணிபுரியும் ஊமை பெரியவர் முதல் பணக்கார பெரியவர்கள் வரை அனைவரின் நட்புடன் இருந்து வருகிறேன்.

2011

          இப்போ இந்த பதிவுலகம் மூலம் 46 நண்பர்கள் கிடைக்க பெற்று முகம் பாராமல் குரல் கேட்காமல் கை குலுக்காமல் நட்பு பாராட்டி வருகிறோம் ...இந்த  நட்பு தொடரும் 

இந்த தொடர் பதிவை எழுத அழைத்த குரு அண்ணன் கசாலி அவர்களுக்கு நன்றி கூறி...நான் அழைப்பது 




18 comments:

  1. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    Friendship never fails
    @@@@@@
    நீங்க வலைச்சர பொறுப்பில் இருப்பதால் உங்களை நான் தொந்தரவு செய்யவில்லை...yes friendship never
    fails

    ReplyDelete
  2. அன்பு நண்பா
    நாட்களின்
    நகருதலில்
    நலியாத
    நல்ல
    நட்பை
    நயம்பட சொன்னது
    நன்று ,
    துணைக்கு என்னையும்
    அழைத்தது
    பெருதலுக்கரிய பெருமை
    நண்பனின் அன்புகட்டளைக்கு மறுப்பேது
    இன்றே எழுதுகிறேன்
    நன்றி.

    ReplyDelete
  3. ஹா ஹா அப்போ நான் எதிரியா? இருக்கட்டும்யா

    ReplyDelete
  4. உங்கள் நண்பர்கள் பற்றி அழகாக எழுதிவிட்டீர்கள்!
    கொஞ்சம் டைம் கொடுங்க!உங்கள் அன்புக் கட்டளையை நிறைவேற்றுகிறேன்!

    ReplyDelete
  5. நண்பா..
    என்னையும் இழுத்து விட்டாச்சா ?

    ReplyDelete
  6. சி.பி.செந்தில்குமார் said...
    ஹா ஹா அப்போ நான் எதிரியா? இருக்கட்டும்யா
    @@@@@@
    நண்பா தோழா குருவே உங்களை எதிரியா நினைக்க முடியுமா .நீங்க என் bf

    அட best பிரின்ட்ன்னு சொன்னேன்

    ReplyDelete
  7. A.R.ராஜகோபாலன் said...
    அன்பு நண்பா
    நாட்களின்
    நகருதலில்
    நலியாத
    நல்ல
    நட்பை
    நயம்பட சொன்னது
    நன்று ,
    துணைக்கு என்னையும்
    அழைத்தது
    பெருதலுக்கரிய பெருமை
    நண்பனின் அன்புகட்டளைக்கு மறுப்பேது
    இன்றே எழுதுகிறேன்
    நன்றி.
    @@@@@@
    உங்கள் பதிவு மிக சிறப்பாய் இருக்கும் நானெல்லாம் பக்கத்தில் நிற்க கூட முடியாது ..நன்றி நண்பா

    ReplyDelete
  8. சென்னை பித்தன் said...
    உங்கள் நண்பர்கள் பற்றி அழகாக எழுதிவிட்டீர்கள்!
    கொஞ்சம் டைம் கொடுங்க!உங்கள் அன்புக் கட்டளையை நிறைவேற்றுகிறேன்!
    @@@@
    ஐயா அனுபவமிக்க உங்கள் நட்பில் எங்களுக்கு பாடம் சொல்லுங்கள் ...காத்திருக்கிறேன் ...என்னையும் வாசித்ததற்கு நன்றி

    ReplyDelete
  9. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    நண்பா..
    என்னையும் இழுத்து விட்டாச்சா ?
    @@@@@
    நட்பை நினைத்து எழுதுவது சுகமா தான் இருக்கு ...என்ன நாகரிகம் கருதி நிறைய சென்சார் பண்ணவேண்டி இருக்கு ஹி ஹி

    ReplyDelete
  10. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    சரி எழுதிடுவோம்..
    @@@@@
    வாழ்த்துக்கள் நன்றி நண்பா

    ReplyDelete
  11. யோ புதுமைப் பையா எல்லாம் நல்லாத்தானையா இருக்குது.
    நா அங்க தனியா நின்னு ஏராளமான புரட்ச்சி பண்ணிக்கிட்டு
    இருக்கேன் நீ பாட்டுக்கு அரட்ட அடிச்சிட்டு இருக்கிற.இதுக்கு
    தண்டனையா பத்துத் தலைப்பு வாசிச்சு பத்துக்குட்டு போடல
    இனிமே ஊ மூஞ்சியிலயே முழிக்கமாட்டன் எண்டு அறுதியும்
    இறுதியும் உறுதியுமாச் சொல்லுறன்.பாரதியோட புதுமைப் பெண் நா சொன்னா சொன்னதுதா..................

    ReplyDelete
  12. வணக்கம் பாஸ்,
    எப்படி இருக்கிறீங்க?

    ReplyDelete
  13. என் வாழ்க்கை ஒரு நாடோடி வாழ்க்கை. என் அப்பாவுக்கு (transfer) மாற்றம் வரும் போதெலாம் பெட்டி படுக்கையை மட்டும் தூக்கி கொண்டு நட்பை தொலைத்தே ஓடிக்கொண்டு இருந்திருக்கிறேன் . உருவங்களும் தொடர்புகளும் மறந்து இருந்தாலும் நெஞ்சில் நிறைந்து இருக்கும் சிலரை பகிர்ந்து கொள்கிறேன்...//

    ஆமாம் பாஸ், எனக்கும் எங்கள் நாட்டுப் போர்ச் சூழல் காரணமகாகவும், இடப் பெயர்வு காரணமாகவும் இதே நிலமை ஏற்பட்டிருக்கிறது,

    பல நண்பர்கள் போர் அரக்கனுக்குப் பலியாகிருக்கிறார்கள்.

    பல நண்பர்களினை முகவரிகள் இன்றித் தொலைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  14. நண்பர்களினைப் பற்றிய பதிவினூடாக, உங்கள் இளமைக்கால நினைவலைகளை மீட்டியுள்ளதோடு,
    நட்பு என்பதற்கான நனி சிறந்த அர்த்ததினையும் தந்திருக்கிறீங்க.

    ReplyDelete
  15. இந்த தொடர் பதிவை எழுத அழைத்த குரு அண்ணன் கசாலி அவர்களுக்கு நன்றி கூறி...நான் அழைப்பது//

    உங்கள் அழைப்பிற்கு நன்றி சகோ,

    இந்த ஞாயிற்றுக் கிழமை மாலை வரை புதிய பதிவுகளைத் தவிர்க்க முடியாத காரணங்களால் எழுத முடியாது,..

    நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக எழுதுகிறேன் பாஸ்,

    மன்னிக்கவும்.

    ReplyDelete
  16. தம்பீ
    நட்பின் பெருமையை வள்ளுவர்
    ஐந்து அதிகாரங்களாக எழிதியுள்ளார்
    என்றால் அதன் பெருமையை எடுத்துச்
    சொல்லவும் வேண்டுமோ

    உடுக்கை இழந்தவன் கை போல
    உதவும் நட்பை எழுதுங்கள்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete