7.31.2011

இன்று எனக்கு மரணம் தற்கொலை

இறுதி ஆசை ,இறுதியிலும் ஆசை 


பகலா இரவா தெரியவில்லை 
வீடா மருத்துவமனையா புரியவில்லை 
உடலுடன் உயிருக்கு இன்று என்ன கோபமோ 
முற்றிலும் பிரிவதற்கு தயாராகி விட்டது .

யார் யாரோ என் உணர்வற்ற கைகளோடு 
நேசமாய் இருக்க நிஜமாய் மன்னிப்பு கேட்ககூட 
முடியாமல் குரல் இழந்து நான்.
மொழியின் வலிமை புரிகிறது 
சிந்தையின் முடிவுரை சத்யசோதனையாய் விரிகிறது!

சூடான செய்தி தரும் செய்தித்தாள் கூடமறுநாள் 
சுவையான சாப்பாட்டிற்கும்  பொட்டலமாய் பயன்தரும் 
என் உடம்பின் சூடு ஆறும் முன்பே 
பயனற்று கிடக்குறேனே படுக்கையிலே!

நாடி அடங்கும் வேளையிலே 
ஆடி தள்ளுபடி கூட்டம் போல 
வந்து போகும் மக்கள் கண்டு 
நான் நல்லவனோ என்ற சந்தேகம் 

பொய்யுறைத்த கணங்கள் 
நண்பரின் மனமுடைத்த ஞாபகங்கள் 
வியாபாரத்தில் பதுக்கிய நாட்கள் 
நினைவலையில் தடுமாறிய பொழுதுகள் 
அத்தனையும் வர மீண்டும் சந்தேகம் 
எனக்கு சொர்க்கமா நரகமா?


சாதித்த வேளையிலே கைதட்டியோர் உண்டு 
சோதித்த பொது முகம் திருப்பியோரும் உண்டு 
போதித்தபடி  என் துணைநின்ற மனைவிக்கு 
இன்று போல் கண்ணீர் பலநாட்கள் என்னால்!
நான் பொய் அதிகம் உறைத்தது உன்னிடமே 
அவை அறிந்தும் அறியாமல் ஆதரித்தாய் 

தோழியாய் இன்றுவரை தொடர்ந்தவளே
இனி துரோகியாய் நான் இருக்கமாட்டேன்
விடைபெறும் நேரத்தில் உன் அழுகுரல் 
இசையாய் கேட்கயிலே முத்தமிட 
ஆவல் பொங்குதடி இது 
காதலா காமமா ?

இறைவா இன்று வலுக்கிறது வலி 
காட்சிகள் தர மறுக்கிறது விழி 
வலுவிழந்தபோது நாடினேன் உன் வழி!
பரிட்ச்சைக்கும் சிகிச்சைக்கும் 
இப்படியே நான் பழகிவிட்டேன்.

உன்னை கண்களால் கண்டிருந்தாலும் 
என் உள்ளம் இவ்வாறே இயங்கிருக்கும்.
நன்றி சொன்ன நிமிடங்களை விட 
உன்னை மறந்த தருணங்களே அதிகம்!
யாதுமானவனே இன்று 
ஏதுமில்லாமல் கேக்கிறேன் மன்னிப்பாயா!!

இறுதியாய் நான் திட்டிதீர்த்த பேரனின்
முகம் தேடி தோற்குது விழிகள் !
இமைக்க மறுக்கும் இமைகளில்
எனக்கு பிடித்த கருமை நிறம்
நிரம்பி நிற்கையிலே !

கருணை கொலை விவாதங்கள் ஓய்ந்து 
நான் விரும்பி அருந்தும் குவளையிலே 
என் மூச்சடைக்க பால் 
மீண்டும் மழலை போல 
புரிந்தும் புரியாமல் வாய் திறக்கிறேன் .
இது கொலையா தற்கொலையா ?

கேள்விகள் இன்றி வந்த நான்
கேள்விகளோடு விடைபெறுகிறேன் 
விடை தேடும் ஆசை மட்டும் 
துணையாய் இன்றும் என்னுடன் .

-ரியாஸ் 

52 comments:

  1. தங்களிடமிருந்து இன்னொரு அசத்தல் பதிவு...

    ReplyDelete
  2. தலைப்பு
    மற்றும் கவிதையின் எதிர்பார்ப்பு மிக அருமை...

    ReplyDelete
  3. அருமை... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வாழ்வின் கடைசி நாளை காண்பித்திருக்கும் விதம் மிக மிக அருமை ....கிரேட் போயட்!

    ReplyDelete
  5. # கவிதை வீதி # சௌந்தர் said...
    தங்களிடமிருந்து இன்னொரு அசத்தல் பதிவு...
    @@@@@@
    நன்றி சகோ

    ReplyDelete
  6. # கவிதை வீதி # சௌந்தர் said...
    தலைப்பு
    மற்றும் கவிதையின் எதிர்பார்ப்பு மிக அருமை...
    @@@@
    மிக்க நன்றி

    ReplyDelete
  7. மதுரை சரவணன் said...
    அருமை... வாழ்த்துக்கள்
    @@@@

    நன்றி சகோ

    ReplyDelete
  8. koodal bala said...
    வாழ்வின் கடைசி நாளை காண்பித்திருக்கும் விதம் மிக மிக அருமை ....கிரேட் போயட்!
    @@@@

    இது பெரிய வார்த்தை நண்பா மிக்க நன்றி

    ReplyDelete
  9. தேவைகளற்றவனின் அடிமை said...
    nice....
    @@@@@@
    TQ

    ReplyDelete
  10. வாழ்வின் கடைசி மணித்துளிகளில் மனித எண்ண ஓட்டத்தை அருமையான கவிதையாக வடித்துஇருக்கிறீர்கள்!பாராட்டுகள்!

    ReplyDelete
  11. சென்னை பித்தன் said...
    வாழ்வின் கடைசி மணித்துளிகளில் மனித எண்ண ஓட்டத்தை அருமையான கவிதையாக வடித்துஇருக்கிறீர்கள்!பாராட்டுகள்!

    @@@@@@@@@@@
    ஐயா நன்றி .. மிக்க நன்றி

    ReplyDelete
  12. அருமையான தலைப்பு சகோ..

    ReplyDelete
  13. பதற வைக்கிறீங்க.... எம்மாடியோவ்!

    ReplyDelete
  14. படிப்பவர் எவரையும் ஒரு நிமிடம்
    அந்த நிமிடத்தில் கொண்டுபோய் நிறுத்திவைத்து
    நிகழ்காலம் மறக்கச் செய்யும் தரமான பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. தம்பீ!
    நமக்குள்ள என்ன ஒத்துமை
    பாத்தியா ?
    மனிதனின் கடைசி நேரம்
    (மரணம்)அதைப் பற்றி ஒண்ணாவே
    எழுதியிருக்கோம்.
    உங்க வலையும் என் வலையும்
    ஒரே நேரத்திலே வந்திருக்கு
    கோணம் வேறா யிருந்தாலும்
    முடிவு ஒன்றுதானே

    அருமை அருமை அருமை

    புலவர் சா இரமாநுசம்

    ReplyDelete
  16. மரணத்தின் நுனியில் ஒரு மனிதனின் என்ணங்களை சொன்ன விதம் மனதை கனக்க வைத்துவிட்டது....

    அருமையான கவிதை.... திறமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. !* வேடந்தாங்கல் - கருன் *! said...அருமையான தலைப்பு சகோ..

    @@@ரொம்ப சந்தோசமா வந்தது போல இருக்கு ...நன்றி சகோ நன்றி

    ReplyDelete
  18. Chitra said...பதற வைக்கிறீங்க.... எம்மாடியோவ்!

    @@@முதல் வருகை ...தொடர்ந்து வாங்க நன்றி நன்றி

    ReplyDelete
  19. Ramani said...
    படிப்பவர் எவரையும் ஒரு நிமிடம்
    அந்த நிமிடத்தில் கொண்டுபோய் நிறுத்திவைத்து
    நிகழ்காலம் மறக்கச் செய்யும் தரமான பதிவு
    வாழ்த்துக்கள்
    @@@@@
    நட்சத்திர பாராட்டு நன்றி நன்றி

    ReplyDelete
  20. அருமை பாஸ்! வாழ்த்துக்கள்! டைட்டில்தான் டெரரா இருக்கு!

    ReplyDelete
  21. புலவர் சா இராமாநுசம் said...
    தம்பீ!
    நமக்குள்ள என்ன ஒத்துமை
    பாத்தியா ?
    மனிதனின் கடைசி நேரம்
    (மரணம்)அதைப் பற்றி ஒண்ணாவே
    எழுதியிருக்கோம்.
    உங்க வலையும் என் வலையும்
    ஒரே நேரத்திலே வந்திருக்கு
    கோணம் வேறா யிருந்தாலும்
    முடிவு ஒன்றுதானே

    அருமை அருமை அருமை

    புலவர் சா இரமாநுசம்
    @@@@

    ஐயா உங்கள் பாராட்டு மிகவும் சந்தோசமும் ஊக்கமும் அளிக்கிறது

    ReplyDelete
  22. ஆமினா said...
    மரணத்தின் நுனியில் ஒரு மனிதனின் என்ணங்களை சொன்ன விதம் மனதை கனக்க வைத்துவிட்டது....

    அருமையான கவிதை.... திறமைக்கு வாழ்த்துக்கள்
    @@@@@

    நன்றி நன்றி

    ReplyDelete
  23. ஜீ... said...
    அருமை பாஸ்! வாழ்த்துக்கள்! டைட்டில்தான் டெரரா இருக்கு!

    @@@
    முதல் வருகை ...தொடர்ந்து வாங்க நன்றி நன்றி

    ReplyDelete
  24. தலைப்பு பயமுறுத்திடிச்சி

    ReplyDelete
  25. அருமையான கவிதை ,

    சாதித்த வேலையில் கைதட்டல் ,

    சோதித்த வேலையில் முகம் திருப்பல்

    வேதனையான உண்மையும் கூட

    ReplyDelete
  26. ஆர்.கே.சதீஷ்குமார் said...
    தலைப்பு பயமுறுத்திடிச்சி

    @@@@
    அப்ப தானே வரிங்க நீங்க நன்றி சகோ வருக்கைக்கு

    ReplyDelete
  27. M.R said...
    அருமையான கவிதை ,

    சாதித்த வேலையில் கைதட்டல் ,

    சோதித்த வேலையில் முகம் திருப்பல்

    வேதனையான உண்மையும் கூட

    @@@@@
    ஆமாம் சகோ
    நன்றி சகோ வருக்கைக்கு

    ReplyDelete
  28. அஸ்ஸலாமு அழைக்கும் சகோ

    அருமையான கவிதை.

    ரமலான் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. ஆயிஷா அபுல். said...
    அஸ்ஸலாமு அழைக்கும் சகோ

    அருமையான கவிதை.

    ரமலான் நல்வாழ்த்துக்கள்.

    @@@@@@@@@@@@@

    வளைக்கும் சலாம்...

    நன்றி சகோ

    உங்களுக்கும் ரமலான் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  31. வாழ்வின் இறுதிக் கணங்கள் எவ்வாறு அமைந்து கொள்ளும் என்பதனை, அனுபவித்து எழுதியது போல, உணர்ச்சிப் பெருக்குடன் எழுதியிருக்கிறீங்க.

    வார்த்தைகள்- இதுவா வாழ்க்கை என எம்மைப் பார்த்துக் கேள்வி கேட்க வைக்கிறது.

    ReplyDelete
  32. மரண வலி அப்படியே கண்களுக்கு எதிரே நிற்கிறது. இது ஒரு நாள் அனைவருக்கும் ஏற்பட போவது தானே ?அசத்திட்டீங்க தோழா ! நன்றி ......

    ReplyDelete
  33. நிரூபன் said...
    வாழ்வின் இறுதிக் கணங்கள் எவ்வாறு அமைந்து கொள்ளும் என்பதனை, அனுபவித்து எழுதியது போல, உணர்ச்சிப் பெருக்குடன் எழுதியிருக்கிறீங்க.

    வார்த்தைகள்- இதுவா வாழ்க்கை என எம்மைப் பார்த்துக் கேள்வி கேட்க வைக்கிறது.
    @@@@@
    நண்பா உங்கள் கருத்துக்கள் என்றுமே தனித்தன்மை உடன் ஊக்குவிக்கும்

    ReplyDelete
  34. யாழினி said...
    மரண வலி அப்படியே கண்களுக்கு எதிரே நிற்கிறது. இது ஒரு நாள் அனைவருக்கும் ஏற்பட போவது தானே ?அசத்திட்டீங்க தோழா ! நன்றி

    @@@@
    நன்றி நன்றி
    தொடர்ந்து வாங்க

    ReplyDelete
  35. //நாடி அடங்கும் வேளையிலே ஆடித்தள்ளுபடி கூட்டம்போல்வந்து போகும் மக்கள் கண்டுநான் நல்லவனோ என்ற சந்தேகம்//சூப்பரான வரிகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  36. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //நாடி அடங்கும் வேளையிலே ஆடித்தள்ளுபடி கூட்டம்போல்வந்து போகும் மக்கள் கண்டுநான் நல்லவனோ என்ற சந்தேகம்//சூப்பரான வரிகள். பாராட்டுக்கள்.

    @@@@@@
    ரொம்ப நன்றி ஐயா ...நீண்ட இடைவேளைக்கு பின் வந்து இருக்கீங்க ..நன்றி நன்றி

    ReplyDelete
  37. மரணம் அழைக்கும் கடைசி வினாடி வாழ்க்கையின் தேடலை யோசிக்கும் ஜீவன்..... இது வாழ்க்கையின் எல்லைவரை சென்று யோசித்தால் மட்டுமே.. இந்த பதிவின் தாக்கம் சாத்தியம்... அருமை நண்பரே

    ReplyDelete
  38. மாய உலகம் said...
    மரணம் அழைக்கும் கடைசி வினாடி வாழ்க்கையின் தேடலை யோசிக்கும் ஜீவன்..... இது வாழ்க்கையின் எல்லைவரை சென்று யோசித்தால் மட்டுமே.. இந்த பதிவின் தாக்கம் சாத்தியம்... அருமை நண்பரே
    @@@@@@@
    பெரிய வார்த்தை நன்றி நண்பரே ...

    ReplyDelete
  39. அருமையான பதிவு நண்பா
    கடைசி
    கணங்களின்
    கடுமையை
    வலிமையான
    வார்த்தைகளின்
    வழியே
    உண்மையின்
    உணர்வுகளின் வழியே
    உருவகப் படுத்தி
    இருப்பதுஅருமை

    ReplyDelete
  40. மரணம் பற்றிய கவிதைக்கு 'வாவ்' சொல்ல வைத்துவிட்டாய் தம்பி!!!

    ReplyDelete
  41. பிளாக்கின் லே அவுட், டைட்டில், டைட்டில் டிசைன் கவிதை 4ம் அழகு

    ReplyDelete
  42. மரணத்தருவாயில் மனிதனுக்கு இவ்வளவு ஞானோதயங்களா? ரொம்ப அருமை!! பெரும்பாலும் கவிதை படிப்பதில்லை.. உங்கள் கவிதை அழகாக யோசிக்கவைக்கிறது!! மரணத்தை விட கொடியது.. அதற்க்கு முன்பான தருணங்கள்!!!!

    ReplyDelete
  43. மனிதனின் அகம் உணரும் வேலை
    அற்புத உணர்வுகளின் கோர்வை
    அப்பட்டமான ஆழ்மனம் அருமை

    ReplyDelete
  44. இறுதி நாளில் இப்படியெல்லாம் யோசிக்காமலிருக்க இப்போதாவது மாறிவிடு என்பது போல் இருந்தது தங்கள் கவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  45. இறுதி நாளின் நுனி வரை சென்று வரவைத்த வரிகள் சிறப்புங்க. தலைப்புக்கு ஏற்ற நுனிப்புல் படங்கள் வெகுவாக கவர்ந்தன.

    ReplyDelete
  46. அன்பின் ரியாஸ் - அருமையான கவிதை - மனிதனின் இறுதி நாளன்று அவன் படும் துயரம் - விளக்கமான கவிதை - படங்களூம் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  47. வணக்கம்
    ரியாஸ் அஹமது (அண்ணா)

    அருமையான கவிதை படிக்கும் போது மனதை ஒருகனம் ரணமாக்கி விட்டது பாரட்டுக்கள் அண்ணா

    விடைபெறும் நேரத்தில் உன் அழுகுரல்
    இசையாய் கேட்கயிலே முத்தமிட
    ஆவல் பொங்குதடி இது
    காதலா காமமா
    அருமையான வரிகள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  48. very good Riyas...vunakkul ippadi oru kavingana..?

    ReplyDelete