8.01.2011

இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கை எம்பிக்கள்:பரபரப்பு வீடியோ

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் எம்பிக்கள் சிறப்பு விருந்தினர்களாக, இந்திய நாடாளுமன்ற மக்களவையில் கலந்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. 


மக்களவை கூடியதும் பேசிய சபாநாயகர் மீராகுமார், சிறப்பு விருந்தினராக வந்திருந்த இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் சமன் ராஜபக்சே உள்ளிட்டவர்களை எம்பிக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

மேலும் இலங்கை எம்பிக்களை, மக்களவை உறுப்பினர்கள் இன்முகத்துன் இந்தியாவிற்கு வரவேற்க வேண்டும் என்றும் மீராகுமார் கேட்டுக்கொண்டார். 

இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்பிக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது தம்பிதுரை எம்பி தலைமையில் எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள், போர்க்குற்றம் சாட்சியில் சிக்கியிருக்கும் இலங்கை பிரதிநிதிகள் இந்திய நாடாளுமன்றத்தில் இருக்கக் கூடாது என்றனர். 

உறுப்பினர்களின் எதிர்ப்பால் சபாநாயகர் மீராகுமாரால் உரையை வாசிக்க முடியவில்லை. விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பதுதான் இந்தியர்களின் கலாச்சாரம் என்று மீராகுமார் கூறியதையடுத்து உறுப்பினர்கள் அமைதியாகினர்.


16 comments:

 1. இந்த காங்கிரஸ் காரனுங்கக்ளை என்ன பண்னா தகும..

  ReplyDelete
 2. ஒரு நல்ல விஷயத்துக்குத்தான் குரல் எழுப்பியிருக்காங்க!

  ReplyDelete
 3. யாராவது சவுண்டு விட்டா அத அடக்கரதிலேயே இருக்கானுங்க

  ஒரு நல்ல விசயத்திற்காக தானே குரல் எழுப்பினாங்கோ .

  ReplyDelete
 4. ஆகா...சந்தர்ப்பம் பார்த்து அடிச்சிருக்காங்களே,.

  ReplyDelete
 5. இன்றைய வலைச்சரத்தில் தங்களை
  அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
  நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

  ReplyDelete
 6. உபசரிப்பு இந்தியா கலாச்சாரம்
  கொல பண்றது இலங்கை கலாச்சாரம் போல

  ReplyDelete
 7. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  இந்த காங்கிரஸ் காரனுங்கக்ளை என்ன பண்னா தகும..
  @@@
  கொலை

  ReplyDelete
 8. சென்னை பித்தன் said...
  ஒரு நல்ல விஷயத்துக்குத்தான் குரல் எழுப்பியிருக்காங்க!
  @@@
  ஆமாம் ஐயா

  ReplyDelete
 9. M.R said...
  யாராவது சவுண்டு விட்டா அத அடக்கரதிலேயே இருக்கானுங்க

  ஒரு நல்ல விசயத்திற்காக தானே குரல் எழுப்பினாங்கோ .
  @@@@
  ஆமாம் நண்பா

  ReplyDelete
 10. நிரூபன் said...
  ஆகா...சந்தர்ப்பம் பார்த்து அடிச்சிருக்காங்களே,.
  @@@@
  அதான்

  ReplyDelete
 11. Ramani said...
  இன்றைய வலைச்சரத்தில் தங்களை
  அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
  நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
  @@@
  என் வாழ்வில் மறக்க முடியாத அறிமுகம்
  நூறாவது பதிவும் உங்கள் அறிமுகமும் ஒரே நாளில்
  நன்றி நன்றி நன்றி

  ReplyDelete
 12. ஆமினா said...
  உபசரிப்பு இந்தியா கலாச்சாரம்
  கொல பண்றது இலங்கை கலாச்சாரம் போல
  @@@@@@@@@
  ஆமாம் சகோ

  ReplyDelete
 13. நீங்கள் வெளியிட்ட அதே செய்தியை இலங்கை தமிழ்மிரர் இணயதளத்தில் பார்த்தேன். அதற்கு இலங்கை தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும், நீங்கள் வெளியிட்ட செய்திக்கு இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதிற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை காண முடிந்தது.
  http://www.tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/25664-2011-08-01-09-29-35.html

  ReplyDelete
 14. எதிர்ப்பு குரல் கொடுத்த நம்மாட்களுக்கு பாராட்டுகள்... அடங்க மாட்டாமல் நம்மை அடக்குவதிலேயே குறியாக இருக்கானுவ

  ReplyDelete
 15. baleno said...
  நீங்கள் வெளியிட்ட அதே செய்தியை இலங்கை தமிழ்மிரர் இணயதளத்தில் பார்த்தேன். அதற்கு இலங்கை தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும், நீங்கள் வெளியிட்ட செய்திக்கு இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதிற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை காண முடிந்தது.
  http://www.tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/25664-2011-08-01-09-29-35.html

  @@@
  நன்றி நண்பா

  ReplyDelete
 16. மாய உலகம் said...
  எதிர்ப்பு குரல் கொடுத்த நம்மாட்களுக்கு பாராட்டுகள்... அடங்க மாட்டாமல் நம்மை அடக்குவதிலேயே குறியாக இருக்கானுவ
  @@@@@
  ஆமாங்குறேன்

  ReplyDelete