8.11.2011

எட்டாவது வள்ளல் -(அரவணைப்போம்- 1)

ஜகாத் = தானங்கள்

(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் , வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.(அல்-குரான் 9-60 )


“இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்” (அல்-குர்ஆன் 2:110)

 நீங்கள் தான் இவருக்கு உதவி செய்ய வேண்டுமென்பதில்லை. என்னைப் போல இந்தத் தகவலை பகிர்ந்தாலே போதும் உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒருவராவது உதவக்கூடும்.
இணையத்தில் எத்தனை மணித்தியாலங்களைச் செலவழிக்கிறோம் சில நிமிடங்களை இதற்கும் செலவழியுங்களேன். ஒவ்வொருத்தரும் 10 பேருக்காவது பகிர்ந்தாலே போதும். நீங்கள் நிறுவனத்தில் வேலை செய்பவரானால் மாதத்தில் ஒரு வேளை தேநீரை இவர்களுக்குக் கொடுத்தாலே போதும் உறவுகளே...
இந்தத் திட்டத்தில் இதுவரை 5 பேர் பயன்பெற்றிருப்பது மிகவும் சந்தோசமான சேய்தியாகும்.

பெயர்- தியாகராசா சந்திரகுமார்
பிறப்பு- 01.02.1967
முகவரி- 18 a/2 முத்து விநாயகபுரம்,
         முத்தையன்கட்டு,
          ஒட்டிசுட்டான்
குடும்பம்- மணமானவர்
        இரண்டு பிள்ளைகள் உண்டு
        லதுசியா (9 வயது)
        தனுப்பிரியன் (5 வயது)
குடும்ப வருமானம்- தோட்டம் (மனைவி மூலம்)
பாதிப்பு- முள்ளந்தண்டில் ஏற்பட்ட காயம் (2006 ல்) காரணமாக இடுப்பின் கீழ் இயங்கா நிலையும். அதனால் எற்பட்டுள்ள பெரும் படுக்கைப் புண்ணும் ஆகும்.
தற்போதைய இவர் செலவுகள்-
மாதந்த மருத்துவச் செலவு (12,000 விற்கு மேல்)
குடும்பச் செலவு 12,000
பரிந்துரைப்பது- மருத்துவச் செலவிற்கான வசதியின்மையால் தீவீர நோய்த் தொற்றுக்க அளாகி அவதிப்படகிறார். இவருக்கான மருத்தவச் செலவையொ அல்லத குடும்பச் செலவையோ பகுதியாகவென்றாலும் ஒரு குழு பொறுப்பேற்பது வரவேற்கத் தக்க விடயமாகும்.

Name- Thiyakaraja santhirakumar
Date of birth- 01/02/1977
Address- 18a/2 muththu vinayagarpuram,
       Muththaijankaddu,
      Oddisuddan.
Married person and 2 children
Name- lathusiya 9 years old.
      Thanuprijan 5 years old.
Family incoming – wife is a farmer.
Affect- injury on spinal cord. (2006)
Medical treatment -12000/=
family budget - 12000/=
suggest for this perso- he's dont take the treatment. so many affected by infection of bedsore.

 தங்களிடம் வேண்டப்படுவது

               இது ஒரு சிறிய சமூக சேவையாகும் இதற்கு அரசியல் ரீதியாக எந்தவித அழுத்தமும் இருக்காது காரணம் இது தனிப்பட்ட மனிதரின் நடவடிக்கையாகும். அதே போல் இங்கு முதலில் அவர்களின் தொலை பேசி இலக்கம் வழங்கப்படமாட்டாது காரணம் தவறான பயன்பாட்டுக்கு ஆளாக்கலாம் அதனால் உதவ முன்வருவோருக்கு மட்டுமே அழிக்கப்படும். அதே போல் அவர்களுக்கான தேவையை நாம் பகிரங்கமாக அறிவிப்போம் நீங்கள் முடிந்ததை செய்யலாம் எவ்வளவு செய்கிறோம் என எமக்கு தெரியத்தரத் தேவையில்லை ஆனால் கட்டாயமான விடயம் என்ன வென்றால் யாருக்குச் செய்கிறோம் என்பதை அறியத் தரவும் காரணம் உதவிகள் எல்லோருக்கும் சமனாகக்கிடைக்க வேண்டும்.
       
தொடர்புக்கு- mathisutha56@gmail.com
எழுத்து வழித் தொடர்புகளே பெரிதும் விரும்பப்படுகிறது.

நன்றிச் செதுக்கலுடன்..
அன்புச் சகோதரன்.
ம.தி.சுதா
நன்றி - நண்பர் ம.தி.சுதா அவர்கள்

10 comments:

  1. ஏற்கெனவே இதை அறிந்து எனது முக நூலில் பகிர்ந்துள்ளேன் .தாங்களும் இதை பகிர்ந்து சேவையாற்றியதற்க்கு நன்றி மாப்ள ...

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி சகோ..

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  4. நல்ல விடயம்.. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. I already read this news.thanks to share. we helps

    ReplyDelete
  6. பகிர்வுக்கு நன்றி!அதிகம் பேரைச் சென்றடைய உதவியிருக்கிறீர்கள்!

    ReplyDelete
  7. பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா... இறைவன் துணையிருக்கட்டும்

    ReplyDelete
  8. புரட்சிப் பையா இத ஏற்க்கனவே நான் என் முகநூளில்
    பகிர்ந்துவிட்டேன் .இருந்தும் உங்கள் கடமை உணர்வைப்
    பாராட்டுகின்றேன் .இன்றும் புரட்சிக் கவிதை போட்டுள்ளேன்
    உங்கள்கள்தரப்பில் இருந்து கருத்து அடமளையாகப் பொழிய
    வேண்டும் இது என் அன்புக் கட்டளை.நன்றி சகோ பகிர்வுக்கு....

    ReplyDelete
  9. புரட்சிப் பையா மன்னிக்கவும் கருத்து இடம்மாறி
    விழுந்துவிட்டது.

    ReplyDelete
  10. ஸலாம் உண்டாவதாக சகோ.ரியாஸ்.
    மனிதநேயமிக்க நல்லதொரு பகிர்வு.
    நலம்பெற பிரார்த்தனைகளும் சேரட்டும்.

    ReplyDelete