8.17.2011

பிறந்த நாள் பரிசு சங்கு ஊஊஊ ....ரஷ்யாவில் நடந்த உண்மை சம்பவம்.லயல டுபிகொவ (LYAYA TUPIKOVA) என்னும் பெண்ணுக்கு அன்று பிறந்த நாள்.எல்லா பெண்களை போலவே தன் கணவன் தன்னை முதலில் வாழ்த்த வேண்டும் அவன் கையில் இருந்து ஒரு ரோஜா பூவாவது பரிசாக கிடைக்க வேண்டும் என்று ஏங்கி காத்திருக்கிறாள் .

கணவன் வந்தவுடன் அவனுக்கு ஆச்சர்யம் கொடுக்க காண்டல் லைட் டின்னெர் (CANDLE LIGHT DINNER) {சத்தியமா இதை தமிழில் எப்படி சொல்லுறதுன்னு தெரியலை }கூட தயாராகிவிட்டது.

கணவன் கஹ்ல்பிக் (KHALPIK) என்ன காரணமோ தன் மனைவியின் பிறந்த நாளை மறந்து எதுவும் வாங்கி வராமல் வந்து சேருகிறார் வீட்டுக்கு.குளித்து விட்டு பசியுடன் உணவுக்கு காத்திருக்கையில்,தன் பிறந்த நாளை மறந்த கணவன் மீது ஆத்திரம் கொண்ட மனைவி அடுப்படியில் இருந்த பெரிய கத்தியுடன் வந்து நெஞ்சின் மேல் சதக் சதக் என குத்த அந்த இடத்திலேயே உயிர் பிரிகிறது.

கணவனுக்கு பிறந்த நாளில் சங்கு ஊதிவிட்டு கம்பி எண்ணி கொண்டு இருக்கிறார் மனைவி.

என்ன கொடுமை சார் இது ...
                 இது தேவையா ..பிறந்த நாள் என்பது நாம் மரணத்தை நெருங்கி விட்டோம் என்பதை நமக்கு ஞாபக படுத்தும் நாள்.அதில் எதுக்கு கொண்டாட்டம் ..இன்னைக்கு எத்துனை பேர் வீட்டுல பிறந்த நாளை கணவன் அல்லது மனைவி மறந்து விட்டதை எண்ணி வருந்துறோம் சலித்துகொல்கிறோம். அந்த நாளில் கொண்டாட்டங்களை தவிர்த்து நான் மரணத்தை மிகவும் நெருங்கிவிட்டேன் என எண்ணி நம்மை நாமே சுய பரிசோதனை செய்து பார்க்கும் ஒரு நாளாக மாற்றி கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா. கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே 

இந்த செய்தி படித்ததும் தோணியது இது...

நான் மரணத்தை நெருங்கிவிட்டதை
கை தட்டி பாட்டு பாடி கேக் வெட்டி 
கொண்டாடுகிறார்கள்,கேட்டால் 
பிறந்தநாளாம் என்னை பெற்றவள் 
மறுபிறவி எடுத்த நாள் அவளுக்கு 
செய்ய வேண்டிய மரியாதைகள் 
அத்துணையும் இன்று எனக்கு எதற்கு ?
அவள் முதியோர் இல்லத்தில் வாடையிலே!!

-ரியாஸ் 


53 comments:

 1. தன்னுடைய பிறந்த நாளை பிறர் மகிர்ழ்ந்து கொண்டாட வேண்டும்....

  தாமே கொண்டாடி மகிழ்வதில் அர்த்தமே இல்லை....

  எனக்கும் இந்த பிறந்தாள் கொண்டாடத்தில் நம்பிக்கை இல்லை...

  எப்படியோ அவருக்கு தன்னுடைய மனைவியின் பிறந்தநாளிலே இறந்த நான் வந்திருக்கு...

  ReplyDelete
 2. உண்மை!நம் வாழ்வின் மற்றுமொரு ஆண்டு குறைந்து விட்டது என்பதை உனர்த்தும் நாள்தான்!பாவம் அக்கணவனுக்கு ஆயுளே முடிந்து விட்டதே-
  நீதி-யாரும் மனைவியின் பிறந்தநாளை மறக்காதீர்கள்!

  ReplyDelete
 3. ஆஹா பிறந்த நாள் என்பது..சங்கூதும் நாளை நெருங்கிக்கொண்டிருக்கும் நாள் என சொல்லி அசத்திவிட்டீர்கள்... இனி பிறந்த நாள் கொண்டாடுவோருக்கு இந்த பதிவு ஞாபகம் வரட்டும் ஹா ஹா ஹா

  ReplyDelete
 4. த.ம 4 மற்றதில் ஊமக்குத்துகள்

  ReplyDelete
 5. பனித்துளியின் ஆயுள் கூட மனிததுளிக்கு இல்லை.

  ReplyDelete
 6. TO # கவிதை வீதி # சௌந்தர் said...

  நன்றி சகோ உங்கள் உடன் வருக்கைக்கும் கருத்திற்கும்

  ReplyDelete
 7. அன்பு அளவுக்கு மிஞ்சினாலும் பிரச்சனை தான் போல..

  ஒவ்வொரு பிறந்தநாளும் மரணம் நெருங்குவதை சொல்லும் சேதி...ஆனால் அதை நினைத்து கலங்காமல் கொண்டாடுவது தப்பில்லை தானே...

  ReplyDelete
 8. TO சென்னை பித்தன் said...

  நன்றி ஐயா

  ReplyDelete
 9. TO சென்னை பித்தன் said...

  நன்றி ஐயா ,
  நீதி ஆணியே புடுங்க வேண்டாம் என்பது ஐயா ஹி ஹி பிறந்த நாளே வேணாம் ஐயா சரிதானே

  ReplyDelete
 10. TO மாய உலகம் said...

  அது தான் நண்பா ,மிக்க நன்றி

  ReplyDelete
 11. TO மாய உலகம் said...

  மிக்க நன்றி

  ReplyDelete
 12. TO இராஜராஜேஸ்வரி said...

  பனித்துளி ன்னு சொல்லி எனக்கு திடுக் கொடுத்த சகோ ஹி ஹி நன்றி நன்றி ...

  ReplyDelete
 13. தன்னுடைய பிறந்த நாளை பிறர் மகிர்ழ்ந்து கொண்டாட வேண்டும்....

  சரிதான் ....!

  ReplyDelete
 14. TO இராஜராஜேஸ்வரி said...

  ரொம்ப ரொம்ப நன்றி சகோ

  ReplyDelete
 15. Some people are so afraid to die that they never begin to live.--Henry WAN

  The first breath is the beginning of death.--Thomas

  If you spend all your time worrying about dying, living isn't going to be much fun. ~From A television show

  எனவே கலக்கமும் வேண்டாம் கொண்டாட்டமும் வேண்டாம் என்கிறேன் நான் ...
  கொண்டாடி கலக்கத்தை மறப்போம் என்கிறீர் நீங்க ...
  ITS UP TO YOU BUDDY

  நன்றி நண்பா வருக்கைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 16. TO ஈரோடு தங்கதுரை said...

  வாங்க வாங்க முதல் வருகை நன்றி தொடர்ந்து வாங்க சகோ

  ReplyDelete
 17. இப்படியும் ஒரு காட்டேரியா?

  www.panangoor.blogspot.com

  ReplyDelete
 18. தன்னுடைய பிறந்த நாளை பிறர் மகிர்ழ்ந்து கொண்டாட வேண்டும்....

  தாமே கொண்டாடி மகிழ்வதில் அர்த்தமே இல்லை.... ரிபீட்டு...

  ReplyDelete
 19. உண்மைதான் சகோ ...
  நல்லாய்த்தான் யோசிச்சிருக்கிறீங்க..
  நல்ல பதிவு,,,
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 20. தமிழ் மணம் 9

  ReplyDelete
 21. தங்கள் கவிதை வரி வேதனை தரும் விஷயம் அடங்கியுள்ளது .

  நல்ல யோசனை பிறந்த நாள் பற்றி

  ReplyDelete
 22. TO காந்தி பனங்கூர் said...

  ஆமா சகோ உண்மைதான் இது ..நன்றி

  ReplyDelete
 23. TO !* வேடந்தாங்கல் - கருன் *! said...

  TQ TQ TQ

  ReplyDelete
 24. TO "என் ராஜபாட்டை"- ராஜா said...

  TQ TQ

  ReplyDelete
 25. TO "என் ராஜபாட்டை"- ராஜா said...

  TQ VERY MUCH

  ReplyDelete
 26. TO vidivelli said...

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 27. TO M.R said...


  நல்ல வேலை என் கவிதையே வேதனையான விசயமோன்னு நினைத்து பயந்து விட்டேன் ..
  ஹி ஹி நன்றி நன்றி

  ReplyDelete
 28. கண்ணா என்ர மண்டைக்கு எட்டினவரையில பிறந்தநாள்
  என்பது பிள்ளைகள் பெத்தவர்களிடம் வருசா வருசம் நல்
  ஆசிகளைப் பெற்றுக்கொண்டு தீர்க்காயிசா வாளுறதர்க்காகக்
  கொண்டாடுவாங்க.சிலபேர் போட்ட மொய்ய வாங்குவதற்காகக்
  கொண்டாடுவாங்க ,இன்னும் சிலபேர் இந்த அநியாய உலகத்தில
  இருந்து கெதியில போய்ச் சேரவேண்டும் என்று காத்துக்கிடந்து
  இதச் சொல்லாமலே அந்த நாள் எம்மை நெருங்கும் சந்தோசத்த
  ஊரக் கூப்பிட்டு கொண்டாடுவாங்க.இன்னும் பலபேர் அதுதா யூத்துங்க தங்களுக்கு கலியாணம் கட்டிக்க வயசு வந்தாச்சென்று காட்டுறதுக்காகவே கொண்டாடுங்கள்.ஆனா இன்றைய காதலி நாளைய மனைவி தங்கள் புருசன்மாரின் அன்பு உண்மையானதா
  என்று வருசா வருசம் நீங்க உங்க கருத்துப்பெட்டிய செக் பண்ணுற
  மாதிரி காத்திருந்து செக் பண்ணுவாங்க அங்கதானையா இந்தப் பொண்ணும் தப்புப் பண்ணீட்டா.....இதுக்காக பிறந்த நாள எதுக்காதீங்க
  வருசத்தில 365 நாள் சமைச்சுப் போடுறவள் ஆசய நிறைவேத்தி
  வையுங்க அத விட்டுப்புட்டு எதுக்கு சாமி செம்பத் தூக்குறீங்க?...
  இந்தப் புரட்சிப் பெண் உங்கள கடுமையா எச்சரிக்கிறா.........
  அம்புட்டுத்தா.
  ஆனாலும் இந்தமாதிரி பொண்ணுங்களும் பாசமும் வேண்டவே வேண்டாம்

  ReplyDelete
 29. சத்தியமா இதை தமிழில் எப்படி சொல்றதுன்னு தெரியல//
  மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தி இரவு உணவருந்தும் முறையாம் :) ஹி...ஹி....ஹி.....

  கொடுமைக்கார மனைவி அமைஞ்சா இப்படி தான் :)

  ReplyDelete
 30. தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக...

  சகோ.ரியாஸ்,

  பெரிய விஷயத்தை சிம்பிளாக உங்கள் பாணியில் சொல்லி இருக்கிறீர்கள். அருமை.

  இவ்வுலகில் நீங்கள் யாருடைய வயதை How old are you என்று ஆங்கிலத்தில் வயசை கேட்டாலும்...

  உலகில் யாருமே....

  I'm 25 years young...
  I'm 50 years young...
  I'm 75 years young...

  என்று சொல்வதில்லையே..!

  நேற்று பிறந்த ஒரு குழந்தையின் வயதை ஒருவர் அதன் பெற்றோரிடம் கேட்டார்.

  How old is this baby..?

  பெற்றோரின் பதில்...

  One day old..!

  பார்த்தீர்களா சகோ.ரியாஸ்..?

  அந்த நேற்று பிறந்த young பேபி கூட "One day old"--ஆகிருச்சாம்..!
  young இல்லையாம்..!

  கேட்டுக்கிட்டீங்களா..?

  ஆக... இதன்மூலம் நான் சொல்ல வாறது என்னன்னா...
  ...
  ...
  ...

  வயசு குறைஞ்சா பிறந்தநாள் கொண்டாடுங்கப்பா..!

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..!

  ReplyDelete
 31. ம்ம்ம்ம் தமிழ்மனம் 12 voted

  ReplyDelete
 32. இப்படி ஒரு நிகழ்சியா...?
  அட! கடவுளே
  புத்தி பேதலித்த பெண்! பாவம்
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 33. வணக்கம் பாஸ்,
  எப்படி இருக்கிறீஇங்க?

  ReplyDelete
 34. காண்டல் லைட் டின்னெர் (CANDLE LIGHT DINNER) {சத்தியமா இதை தமிழில் எப்படி சொல்லுறதுன்னு தெரியலை }கூட தயாராகிவிட்டது.//

  மெழுகுதிரி விருந்துபசார இரவு..

  அவ்....இப்படிச் சொல்லலாமா.

  ReplyDelete
 35. நான் மரணத்தை நெருங்கிவிட்டதை
  கை தட்டி பாட்டு பாடி கேக் வெட்டி
  கொண்டாடுகிறார்கள்,கேட்டால்
  பிறந்தநாளாம் என்னை பெற்றவள்
  மறுபிறவி எடுத்த நாள் அவளுக்கு
  செய்ய வேண்டிய மரியாதைகள்
  அத்துணையும் இன்று எனக்கு எதற்கு ?
  அவள் முதியோர் இல்லத்தில் வாடையிலே!!//

  அவ்...நச்சென்று முகத்தில் அறையும் வரிகள்.

  ReplyDelete
 36. என்னக்கும் இந்தப் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மீது ஆர்வம் இல்லை பாஸ்.

  ReplyDelete
 37. to அம்பாளடியாள் said...
  நான் இந்த பதிவில் இரண்டு பாலினரையும் சேர்த்து தான் சொல்லி இருக்கேன்..காலம் பூரம் நம்மோடு இருக்கும் துணையின் அன்பும்,அக்கறையும் ,பாசமும் அந்த ஒரே நாளில் தான் புரிந்து கொள்ள முடியுமா ?
  மேலை நாட்டு குருட்டு கலாச்சாரம் நமக்கு எதுக்கு என்று தான் கேக்குறேன் சகோ ?

  ReplyDelete
 38. to ஆமினா said...
  ha ha ha tq very much sister

  ReplyDelete
 39. to ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~

  வா அழைக்கும் சலாம் சகோ ..
  நன்றி உங்கள் வருக்கைக்கும் பாராட்டுக்கும் ..

  //பெரிய விஷயத்தை சிம்பிளாக உங்கள் பாணியில் சொல்லி இருக்கிறீர்கள்.//
  அட அப்படி ஒன்னு இருக்கா, காமெடி தானே பனுறீங்க ஹி ஹி ..

  நீங்க சொன்னது ரொம்ப சரி வயசு குறைந்தா சந்தோசம் கொண்டாடலாம்

  ReplyDelete
 40. to Riyas said...

  நன்றி சகோ .மிக்க நன்றி

  ReplyDelete
 41. to புலவர் சா இராமாநுசம் said...

  ஆமாம் ஐயா ...வேதனையான செய்தி ..
  நன்றி உங்கள் வருக்கைக்கும் கருத்திற்கும்

  ReplyDelete
 42. to நிரூபன் said...
  வாங்க வாங்க ...
  நன்றி சகோ ,,,,,

  ReplyDelete
 43. to நிரூபன் said...

  இப்படி கூட சொல்லலாமே நல்லா இருக்கு சகோ

  ReplyDelete
 44. to நிரூபன் said...

  ரொம்ப நன்றி சகோ ...கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 45. to நிரூபன் said...

  இதை கேட்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு நன்றி சகோ

  ReplyDelete
 46. உங்களின் பிறந்த நாள் பற்றிய சிந்தனை உண்மையில் பாராட்டுகளுக்கு உரியன காரணம் இன்று எல்லோரும் பிறந்தவர்கள் நிலைத்து இருக்க போகிறோம் என்றெண்ணி பால பிழைகளை செய்து மரித்து போகின்றனர் வாழ்வில் ஒரு அகவை குறைந்து மரணத்திற்கு ஆயத்தமாகி வருகிறோம் என எண்ணுவதில்லை பாராட்டுகள் நல்ல சிந்தனை தொடர்க....

  ReplyDelete
 47. கண்ணா என்ர மண்டைக்கு எட்டினவரையில பிறந்தநாள்
  என்பது பிள்ளைகள் பெத்தவர்களிடம் வருசா வருசம் நல்
  ஆசிகளைப் பெற்றுக்கொண்டு தீர்க்காயிசா வாளுறதர்க்காகக்
  கொண்டாடுவாங்க
  (இதுதான் உண்மை வரவேற்கத் தக்கது இல்லயா?........)

  ஆனா இன்றைய காதலி நாளைய மனைவி தங்கள் புருசன்மாரின் அன்பு உண்மையானதா
  என்று வருசா வருசம் நீங்க உங்க கருத்துப்பெட்டிய செக் பண்ணுற
  மாதிரி காத்திருந்து செக் பண்ணுவாங்க

  (இது கொடுமை நிராகரிக்க வேண்டியது இல்லயா?...)

  ஆனாலும் இந்தமாதிரி பொண்ணுங்களும் பாசமும் வேண்டவே வேண்டாம்
  ( இத வாசியுங்க இதுதான் விசயம் இது எப்புடி இருக்கு?.....)

  உங்களைச் சூடாக்க எனக்கு வழி தெரியல சார் .என் வலைத்தளத்துக்கு
  ஏன் வரவில்லை?...ரொம்பக் கோவமா இருக்கின்றேன் .அருமைச்
  சகோதரரே இதற்க்கு தண்டணை மொத்தமாக பத்து ஆக்கம் வாசித்துக்
  கருத்திடவும் .இது எப்புடி??????.........ஹி....ஹி..........ஹி......

  ReplyDelete
 48. சரி உங்களை சிரிக்க வைக்க ஒரு
  நகைச்சுவை .இத இப்புடியே
  வாசியுங்க.

  இப்படி ஒரு நிகழ்சியா...?
  அட! கடவுளே
  புத்தி பேதலித்த பெண்! பாவம்
  புலவர் சா இராமாநுசம்

  இது எப்புடி இருக்கு ஹி.....ஹி....ஹி...

  இராமாநுசம் பாவம் என்றாகிவிட்டது .

  கருத்தின்கீழ் பெயர் இணைந்த விதத்தில்

  ReplyDelete