சில பல வருடங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் தனது திருமணம் பற்றி அறிவிக்க ஒரு ப்ரெஸ் மீட் வைத்தார்.அதில் யாரும் தனது திருமணதிற்கு வர வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.அப்போது கோபம் கொண்ட பத்திரிக்கையாளர் ஒருவர் மீறி வந்தால் என்ன செய்விர்கள் என்றார்.அதற்கு
ரஜினி "I WILL SHOOT YOU" என்று பதில் அளித்தார் .இது அப்போ பெரிய சர்ச்சை ஆனது பின்பு ரஜினி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார்.
இப்படி புகழின் உச்சியில் இருந்த போது சறுக்கிய ரஜினி பின்னாளில் பக்குவம் அடைந்து இன்று பலருக்கு உதாரணமாக வாழ்த்து வருகிறார்.
அதே போல் சில வருடங்களுக்கு முன்பு ஷாருக்கான் மலேசியாவில் ஒரு ப்ரெஸ் மீட்டிற்கு ஒரு மணி நேரம் தாமதமாக வந்தார்.வந்தவர் நாகரிகமாக மன்னிப்பு கூட கேட்க்காமல் அமர்ந்தார்.அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிருபர்களிடம் "YOU ARE PAID FOR IT ,WHY SHOULD I " என்றார். பின்பு சர்ச்சையாகி அவரும் மன்னிப்பு கேட்டார்.
ஷாருக் இன்று வரை தொடர்ந்து இந்த மாதிரி பிரச்சனைகளில் சிக்கி வருகிறார் .
இத சொல்லுற நான் மாட்டும் ஒழுங்கா ரெண்டு நாள் முன்னாடி ஹிட்ஸ்க்கு ஆசைப்பட்டு ஒரு பொல்லாத தலைப்பு வைத்து குட்டு வாங்கினேன்.
புகழ் என்னும் போதை படுத்தும் பாடு தான் இது.வெற்றிகள் வரும் போது நாம் செய்வது எல்லாம் சரியாக தான் இருக்கும் என நினைத்து நாம் எல்லோருமே பாதாளத்தில் விழுந்து விட கூடிய அபாயம் இருக்கிறது. இதற்க்கு உதாரணங்கள் பல உலக வரலாற்றில் உண்டு. அதே போல விதிவிலக்கும் உண்டு .
உதாரணமாக நம்ம ஆஸ்கார் நாயகன் ரஹ்மான் . தன் முதல் படத்திற்கே தேசிய விருது வாங்கிய போதும் சரி இப்போ ஆஸ்கர் வாங்கிய போதும் சரி அவர் சொன்னது " எல்லா புகழும் இறைவனுக்கே " என்பது தான். இதை பற்றி
டைரக்டர் ஷங்கர் ஒரு பேட்டியில் "ரஹ்மான் ஆஸ்கர் வாங்கியதை விட ,அதை ஏற்று கொண்ட பக்குவம் தான் ஆச்சிரியம் அளிக்கிறது" என்றார்.
இந்த நிலையை நாம் அனைவரும் பெற என்ன செய்யணும். வெற்றி எனக்கு இறைவனால் நாடப்பட்ட ஒன்று எனவும் என் முயற்சிக்கு இறைவன் தந்த பரிசு என்றும் எண்ணம் கொள்ளுதல் வேண்டும்.அப்படி நினைத்தால் நான் கர்வம், பெருமை, திமிர் போன்ற குணங்களில் தீங்கில் இருந்து தப்பிக்கலாம் . இதை நம் மனதில் நிறுத்தி கொள்ளவே இறைவன் விதியை படைத்தான் என கூறுகிறது இறைவனின் வேதம்
" உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தி உள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்."
அல்குர்ஆன் 57:23எனவே நண்பர்களே சகோதர சகோதரிகளே வாங்க உழைப்போம் உயர்வோம்
பிறருக்கு உதவுவோம் ஆனால் தற்பெருமை புகழ் என்னும் போதைகளை விட்டு விடுவோம்.இந்த பதிவை உங்களோடு பகிர்வதன் மூலம் நான் பயன் பெறுவேன் என்ற நம்பிக்கையில் பதிவிடுகிறேன்.நன்றி
குறிப்பு:
மேலே குறிப்பிட்ட பிரபலங்களும் அவர்கள் சம்பந்தப்பட்ட உண்மை சம்பவங்களும் பிரச்சார நெடி இல்லாமல் சுவாரசியமாக எழுதுவதற்காக மட்டுமே. அவர்களின் தனிப்பட்ட அல்லது ஆன்மீக வாழ்க்கை சரி என்றோ தவறு என்றோ கூறுவது எமது நோக்கம் அல்ல.
Tweet |
Vs முதல் ரசிகன்...
ReplyDeleteஆன்மீகம் மனிதனை நல்வழிப்படுத்துகிறது....
ReplyDeleteஇந்த ரமலான் மாதத்திற்கு ஏற்ற பதிவுதான் ..
ReplyDeleteநல்ல அறிவுரை மாப்ள ...பின்பற்ற முயற்சி செய்கிறேன் ..
ReplyDeleteவணக்கம் சகோ,
ReplyDeleteபுகழுக்கு ஆசைப்படுவதால் ஏற்படும் விபரீதங்களை அருமையான அனுபவ விளக்கம் மூலமாகப் பகிர்ந்திருக்கிறீங்க.
நன்றி சகோ.
Very correct . . Yesterday I meet one police complaint againt my last week post . . .
ReplyDeleteஉழைப்போம் ,உயர்வோம் ,உதவுவோம்
ReplyDeleteநான்,என்னால் போன்ற அகந்தை வேண்டாம்
நல்ல விஷயங்கள் சொல்லியிருக்கிறீர்கள்
பகிர்வுக்கு நன்றி
தமிழ் மணம் ஆறு
ReplyDeleteTO # கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteவாங்க வாங்க
TO # கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஅதுதான் நிஜம் ,,,நன்றி சகோ மிக்க நன்றி
TO !* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteநன்றி சகோ
TO koodal bala said...
ReplyDeleteமுதல் சந்தோசம் ..நன்றி சகோ
TO நிரூபன் said...
ReplyDeleteதனித்துவமான கருத்துக்கள் சொல்லும் நண்பருக்கு மிக்க நன்றி
TO "என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteஎன்ன நண்பா சொல்லுறேங்க எந்த பதிவு அது ..இப்பவே கண்ணா கட்டுதே ..வருக்கைக்கும் கருத்திற்கும் நன்றி
TO M.R said...
ReplyDeleteவருக்கைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ மிக்க நன்றி
TO M.R said...
ReplyDeleteவாக்கிற்கு ஸ்பெஷல் நன்றி
தமிழ்மணம் ஏழாவது ஓட்டு ரியாஸ்!
ReplyDeleteபுகழ் ஒரு போதை!
ReplyDeleteஎல்லா புகழும் இறைவனுக்கே
ReplyDeleteஅகந்தையை அளிப்பது நல்லது என்பதை அழகான உதாரணங்களுடன் சொல்லியிருக்கிறீர்கள்... எல்லா புகழும் இறைவனுக்கே நன்றி நண்பரே
ReplyDeleteநானும் இப்படித்தான் சகோ எல்லாப் புகழும்
ReplyDeleteஇறைவனுக்கே என்று சொல்லிவிடலாம் என்றுதான்
வலைத்தளத்தில் குதித்தேன் .அதுக்குப்பிறகு என்
நினைப்பு றொம்பவே மாறிப்போச்சு.இப்பெல்லாம்
தூங்கும்போதுகூட ஹிட்சும்,போலோவர்சும்தான்
அடிக்கடி வந்து போகுது ஹி....ஹி...ஹி....நன்றி
சகோ பகிர்வுக்கு........
TO சென்னை பித்தன் said...
ReplyDeleteமிக்க நன்றி ஐயா
TO சென்னை பித்தன் said...
ReplyDeleteஉண்மை உண்மை ... மிக்க நன்றி
TO ராக்கெட் ராஜா said...
ReplyDeleteஉங்கள் வருகை ரொம்ப மகிழ்ச்சி அளிக்குது
நன்றி
TO மாய உலகம் said...
ReplyDeleteவருக்கைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா
TO அம்பாளடியாள் said...
ReplyDeleteரொம்ப நாளாச்சு புதுமை பெண்ணை பார்த்து வாங்க வாங்க நன்றி
மன நிறைவைத் தந்த பொறுப்பான பதிவு
ReplyDeleteஉருவில் சுருக்கமாகவும் ஆனால்
படிப்பவர் மனதுக்கு மிக நெருக்கமாகச்
செல்லும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
to Ramani said...
ReplyDeleteநன்றி சகோ ..உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது
புகழுக்கு ஆசைப்படுவதால் ஏற்படும் விபரீதங்களை அருமையான விளக்கம் மூலமாகப் பகிர்ந்திருக்கிறீங்க.நல்ல அறிவுரைநன்றி
ReplyDeleteTO மாலதி said...
ReplyDeleteநன்றி முதல் வருகை தொடர்ந்து வாங்க சகோ ..நன்றி
நல்ல பதிவு அருமை
ReplyDeleteபுலவர் சா இராமாநுசம்
புதுமைப் பையா எனது புரட்சிக் கவிதை காத்திருக்கின்றது
ReplyDeleteமுடிந்தால் உங்கள் கருத்து மழையைப் பொழிந்து தள்ளுங்கள் .