8.01.2011

சச்சின் 100 வருமா வராதா + ஓர் அதிர்ச்சி


ஒவ்வொரு போட்டியிலும் எதாவது ஒரு சாதனை படைக்கும் சச்சின் டெண்டுல்கருக்கு நேற்று  இங்கிலாந்தில் தோல்வியில் முடிந்த டெஸ்ட் போட்டி நூறாவது டெஸ்ட் போட்டி.தப்பா சொல்லவில்லை அதாவது இந்தியாவுக்கு வெளியில விளையாடும் நூறாவது டெஸ்ட் போட்டி.சரியா இப்போ.....இந்தியாவுக்கு வெளியில ஆடிய நூறு போட்டிகளில் சச்சினின்  சராசரி 56.52 ஆகும்.டெஸ்ட் போட்டியில் அதிக பட்சமாக 248 ஓட்டங்களை பங்களாதேஷுக்கு எதிராக தாக்காவில் அடித்த சச்சின் ,தனது 51 டெஸ்ட் சதங்களில் 29தை வெளிநாடுகளில் தான் அடித்துள்ளார்.

மொத்தமா 179 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளதும் கூட சாதனை தான்...

சச்சின் 100 அடிப்பாரா மாட்டாரா என்பது தான் இன்னைக்கு மில்லியன் டாலர் கேள்வி? உங்களுக்கு ஒன்னு தெரியுமா? 453 ஒருநாள் போட்டிகளில் 48 சதங்கள் அடித்த சச்சின் தனது முதல் 79 ஆட்டங்கள் வரை சதம் அடிக்கவில்லை.அதேசமயம் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.அது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி ,வாகர் யூனுஸின் பந்துவீச்சில்  ஒரு பந்து சச்சினின் வாயில் பட்டு ரத்தம் வழிந்தது. அதை பொருட்படுத்தாமல் பதினாறு வயதான இளம் கன்று சதம் அடித்ததை யார் மறக்க முடியும்.

சச்சின் இந்த போட்டியிலே சதம் அடிப்பார் என்று நம்பி ஏமாந்த கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். நான் கொஞ்சம் அதிகமாவே ஏமாந்தேன் ஏன்னா சச்சினின் சதத்தோடு எனது நூறாவது பதிவையும் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டு தயார் செய்த பதிவு இது ....ஏங்க நானே 100 அடித்துவிட்டேன் சச்சின் அடிக்க மாட்டாரா .நிச்சயம் அந்த சாதனை சச்சின் மட்டுமே செய்வார் விரைவில் செய்ய வாழ்த்துக்கள் ...

அப்படியா நீ என்ன உருப்படியா  எழுதி கிழித்தாய்ன்னு கேட்டா பதில் ஒன்னுமில்லைன்னு தான் வருது. என்னைக்காவது நல்லா எழுத ஒரு பயிற்சி , ஒரு தேடல் என எல்லாமே உங்களோட பகிந்து வருகிறேன்னு சொல்ல ஆசைபடுகிறேன். என்னை தொடரும் 57 நண்பர்களுக்கும், இந்த நூறு பதிவில் ஒரு லட்சம் ஹிட்சுக்கு  காரணமான  திரட்டிகளுக்கும் நன்றி ...

என் எழுத்தால் யார் மனமாவது புண்பட்டு இருந்தால் இந்த வேளையில் மன்னிப்பும் கேட்டுகொள்கிறேன் ....

நூறுல பல பேர் பாராட்டியதும் ,கொஞ்சம் மன நிறைவு அளித்தவையும் ம்ம்கும் இவளவுதான் தேருது இதுவும் உங்கள் அன்பும் ஆதரவினாலும் மட்டுமே சாத்தியம் ஆனது ....நன்றி நன்றி ...28 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

  என்னடா ஒரே கணக்கு மழை பொழியுதுன்னு பார்த்தேன்..... மகிழ்ச்சியான அதிர்ச்சி இடையில் கிடைத்தது....

  சதத்திற்கு வாழ்த்துக்கள் சகோ

  மாஷா அல்லாஹ் அழகான எழுத்து நடை,கவி திறமை உங்களுக்கு!!
  தொடர்ந்து வலையுலகில் கலக்குங்க!!!

  நீங்களே சதம் அடிச்சுட்டீங்க... இந்த சச்சினுக்கு என்ன வந்துச்சாம்? :))

  ReplyDelete
 2. 1000 அடிக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. அன்பர் நண்பருக்கு ரமலான் நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. சச்சினும் அடிக்கவும், மேலும் பல ஆயிரம் சென்ஞ்சுரி பதிவுகளை நீங்களும் அடிக்க மனமார வாழ்த்துக்கள் நண்பா

  ReplyDelete
 5. சச்சின் அடிக்காட்டி என்ன ...அதான் நீங்க அடிச்சிட்டீங்களே .......வாழ்த்துக்கள் மாப்ள !

  ReplyDelete
 6. நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே .

  மேன்மேலும் பதிவு தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. நூறு
  சாதனையின் அடையாளம்
  முயற்சியின் அங்கீகாரம்
  இன்னும்
  நிறைவாய்
  நிஜமாய்
  நிதர்சனமாய்
  அற்புதமாய்
  அசத்தலாய்
  ஆயிரமாயிரம்
  படைப்புகளை
  பிரமாண்டமாய்
  படைக்க
  நலமான
  வளமான
  வலிமையான
  வாழ்த்துக்கள் நண்பா

  மாஷா அல்லா

  ReplyDelete
 8. ஆமினா said...
  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
  நீங்களே சதம் அடிச்சுட்டீங்க... இந்த சச்சினுக்கு என்ன வந்துச்சாம்? :))
  @@@@@

  வாலைக்கும் சலாம் ....
  நன்றி சகோ

  ReplyDelete
 9. வாழ்த்துகள்.செட்டில் ஆயிட்டீங்க! நின்னு ஆடுங்க ரியாஸ்!

  ReplyDelete
 10. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  வாழ்த்துகள் நண்பா
  @@@@@@@
  நன்றி சகோ

  ReplyDelete
 11. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் நண்பா

  ReplyDelete
 12. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  1000 அடிக்க வாழ்த்துக்கள்
  @@@@
  நன்றி சகோ

  ReplyDelete
 13. மாய உலகம் said...
  அன்பர் நண்பருக்கு ரமலான் நல் வாழ்த்துக்கள்
  @@@@@@@
  நன்றி சகோ

  ReplyDelete
 14. மாய உலகம் said...
  சச்சினும் அடிக்கவும், மேலும் பல ஆயிரம் சென்ஞ்சுரி பதிவுகளை நீங்களும் அடிக்க மனமார வாழ்த்துக்கள் நண்பா
  @@@@@@@
  மிக்க நன்றி

  ReplyDelete
 15. koodal bala said...
  சச்சின் அடிக்காட்டி என்ன ...அதான் நீங்க அடிச்சிட்டீங்களே .......வாழ்த்துக்கள் மாப்ள !
  @@@@
  ஹி ஹி மிக்க நன்றி

  ReplyDelete
 16. M.R said...
  நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே .

  மேன்மேலும் பதிவு தொடர வாழ்த்துக்கள்
  @@@@
  மிக்க நன்றி

  ReplyDelete
 17. A.R.ராஜகோபாலன் said...
  நூறு
  சாதனையின் அடையாளம்
  டைக்க
  நலமான
  .....
  வாழ்த்துக்கள் நண்பா

  மாஷா அல்லா
  @@@@
  மிக்க நன்றி நன்றி சகோ

  ReplyDelete
 18. சென்னை பித்தன் said...
  வாழ்த்துகள்.செட்டில் ஆயிட்டீங்க! நின்னு ஆடுங்க ரியாஸ்!
  @@@@@@@@@
  ஐயா ரொம்ப நன்றி ...
  நீங்க என்னை ரன் அவுட் ஆகிடுறீங்க
  சில நாள் வராமல் இருப்பதை சொன்னேன்

  ReplyDelete
 19. மாய உலகம் said...
  வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் நண்பா
  @@@@@

  இப்ப தான் கவனிச்சு இருக்கீங்க ஹி ஹி மிக்க நன்றி

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள் நண்பா , தங்களை போல நானும் நேற்று சச்சினின் நூறை எதிர்பார்த்து எமார்ந்தவன் தான்

  ReplyDelete
 21. நூறுக்கு நூறு நூறாய் பெருக வாழ்த்துக்கள்.

  வலைச்சர அறிமுகத்திற்கு பெருமை மிகு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 22. கந்தசாமி. said...
  வாழ்த்துக்கள் நண்பா , தங்களை போல நானும் நேற்று சச்சினின் நூறை எதிர்பார்த்து எமார்ந்தவன் தான்

  @@@@@
  அப்படியா ...என்ன பண்றது ..ELLAM விதி வாழ்த்துக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 23. இராஜராஜேஸ்வரி said...
  நூறுக்கு நூறு நூறாய் பெருக வாழ்த்துக்கள்.

  வலைச்சர அறிமுகத்திற்கு பெருமை மிகு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
  @@@@@@@@@

  மிக்க நன்றி

  ReplyDelete
 24. நூறு பதிவுகளை 5 மாதங்களில் எட்டுவது என்பது
  உண்மையில் ஒரு இமாலய சாதனைதான்
  சாதனைகள் நூறாக ஆயிரமாக வளர
  எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 25. Ramani said...
  நூறு பதிவுகளை 5 மாதங்களில் எட்டுவது என்பது
  உண்மையில் ஒரு இமாலய சாதனைதான்
  சாதனைகள் நூறாக ஆயிரமாக வளர
  எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  @@@@
  சகோ உங்களால் எனது இந்த நூறாவது பதிவு மறக்க முடியாத பதிவானது..மிக்க நன்றி ...நன்றி நன்றி

  ReplyDelete
 26. வணக்கம் சகோ,
  நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்,

  தொடர்ந்தும் கலக்கலான பதிவுகளோடு நடை போட வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. சச்சினின் நூறாவது சதம்..எதிர்பார்ப்பினைக் கூட்டும் ஒரு விடயம். பொறுத்திருப்போம், எம்மை ஏமாற்ற மாட்டார் என நினைக்கிறேன்.

  ReplyDelete