5.11.2011

வெளிவராத ஒசாமாவின் திக் திக் பேட்டி!!                            புத்தகத்தில் படித்த படி அனைத்தும் செய்துவிட்டேன்.நானும் வெள்ளை உடையுடன் மெழுகு வர்த்தியை கொளுத்திவிட்டு தியானா நிலையில் அமர்தேன்.

ஆவிகளுடன் பேசுவது எப்படி என்ற புத்தகம் வாங்கியதில் இருந்து இது  எனது எட்டாவது  முயற்சி.அரை மணி நேரத்திற்கு பிறகு ஓர் அழுகுரல் என்னை தொந்தரவு செய்தது.நான் என் மேல் மிகுந்த அன்பை பொழிந்த என் பாட்டியையோ அல்லது தீர்க்க தரிசனம் நிறைத்த பெரியவர்களையோ காணும் ஆவலில் அழுகுரலை பொருட்படுத்த வில்லை .ஆனால் அழுக்குரல் அதிகரித்து இம்சை பண்ணியது .யாரென்று பார்த்தால் உலகமே கண்டு பயந்த ஒசாமா , சரி இவன்கிட்ட பேசினால் தான் என்னவென்று தோன்றவே நெருங்கி சென்றேன் .

          ஒசாமா "நான் மண்ணாய் பிறந்தஇருக்க  கூடாதா! கை சேதமே " என்று புலம்பியவாரே  அழுதுகொண்டு இருந்தான். நான் திக் திக் என்று மனம் படபடப்புடன் "சார்"  என்றேன் ...(இனிஎங்கள் உரையாடல் )

 

ஒசாமா: நல்லவுங்க எல்லாம் வலதுபக்கம் இருக்காங்க , அங்க போ

விட்டு செல்ல மனமில்லாமல் நான் : உங்க காயத்துக்கு மருந்து போட்டது யாரு ?

ஒசாமா:வலதுபுறத்தில் இருந்து தெரசான்னு ஒரு அம்மா வந்து மருந்து போட்டாங்க!

 

நான் : உங்ககிட்ட சில கேள்வி கேக்கலாமா ?

ஒசாமா: இங்க ஏற்கனவே என்கிட்டே கேட்ட கேள்விகளுக்கு என்னால பதில் சொல்ல முடியல?என் கை,கால்,வாய்,கண் எல்லாமே எனக்கு எதிரா சாட்சி சொல்லிக்கிட்டு இருக்கு நீ வேற என்ன கேக்க போற ?

 

நான் :நீங்க 2001 லயே இறந்து விட்டீங்கன்னு  சொல்றாங்க சிலர்?நீங்க நேசமா எப்ப இறந்தீங்க ?

ஒசாமா:5வினாடியோ 10 நிமிஷமோ முன்னாடி தான் இங்க வந்த மாதிரி இருக்கு ?

நான்: நீங்க எப்படி இறந்தீங்க ?

ஒசாமா : என் உயிர் பிரியும் நேரம்  மிகுந்த வலி நிறைந்ததாக இருந்தது.என் உயிர் பறிக்கப்பட்டதை தவிர வேர் எதையும்  நான் அறியமாட்டேன் ?வேணும் என்றால் ஒபாமா இங்க இருந்தா கேட்டுகோ...


நான்: ஏன் அழுகுறீங்க ?

ஒசாமா: மனிதனாய்  பிறந்தும் மிருகமாய் வாழ்ந்ததை  எண்ணி அழுகுறேன் ?

நான்:நீங்க போராளின்னு சொல்றாங்க சிலர் ?

ஒசாமா : இல்லை நிச்சயம் இல்லை.போருக்கு  என்று உள்ள நெறிகள் ஏதையும் பின்பற்றவில்லை . அப்பாவி மக்கள்ளை கொன்ற நான் போராளி இல்லை .

காந்தி,புத்தர்,ஏசு,முஹம்மது வழியில் வாழ ஆசை படுகிறேன் ? மீண்டும்  ஓர் வாய்ப்பு கேட்டு இறைவனிடம் அழுகிறேன்

 

நான்:காந்தி, ஏசு  பற்றி உங்களுக்கு தெரியுமா ?

ஒசாமா :இங்க வந்து எனக்கு உபதேசம் பண்ணிட்டு போனாங்க . அன்பு வழியே சிறந்ததுன்னு ?இப்ப நான் என்ன பண்ணமுடியும் ஐயோ கை சேதமே .....(அழுகை )

நான் : உங்கள்  வேதம் நீங்க படித்தது இல்லையா ?

ஒசாமா : படித்தேன் ஆனால் ஷைத்தான் என்னை வழி கெடுத்து விட்டான்.நமது  குரானில் தெளிவாக இறைவன் சொல்லிவிட்டான் "எந்த மனிதன் ,கருணைமிக்க இறைவனின் அறிவுரையை விட்டுவிட்டு அலட்சியமாக  இருக்கின்றானோ அவன் மீது ஒரு ஷைத்தானை நாம் ஏவி விடுகின்றோம் . அவன் இவனுக்கு நண்பனாகி விடுகின்றான்.அந்த ஷைத்தான்கள் இப்படிப்பட்டவர்களை நேர்வழியில் வரவிடாமல் தடுக்கின்றன. ஆனால் அவர்களோ தாம் சரியான வழியில் சென்றுகொண்டு இருபதாக எண்ணிக்கொண்டு இருகேன்றனர் " என்பதர்க்கு ஏற்ப வாழ்ந்து விட்டேனே நான் ,கை சேதமே(அழுகை )

நான்:ஜிஹாத் என்னும் வார்த்தையே குர்ஆனில் இல்லைன்னு சொல்றாங்களே ?

ஒசாமா :ஆம்.பாலஸ்தீனிய மக்களுக்காக அமெரிக்காவை நான் அஹிம்சை  வழியில் எதிர்த்து இருக்கணும் . இஸ்லாம் என்ற மார்க்கத்துக்கும் மனித இனத்துக்குமே கூட தவறான முன் உதாரணம் ஆகிவிட்டேன் ..(அழுகை )

 நான்: அண்ணல் நபி முகம்மதை பார்த்தீர்களா ?

ஒசாமா:  தாய் மொழியில் உபதேசம் செய்தும் படித்து புரிந்து கொள்ளாத என் மீது மிகுந்த கோபத்தில் இருக்காராம் . அதனால அவரை எந்த முகத்துடன் பார்பேன் நான் ...

ஓ( வென்று அழுகை பெரிதாகிறது ..)

 

பரிதாப நிலை பார்த்து , மேலும் அங்கு நிற்க முடியாமல் வெளியேறிவிட்டேன் .{முற்றும்}

 

குறிப்பு :பேய் ,ஆவி பிசாசு ,பில்லி ,சூனியம் , செய்வினை  இதில் எனக்கு அறவே நம்பிக்கை இல்லை .. பிரசார  நெடி இல்லாமலும் யாரும் மனமும் நோகும் படியும் இல்லாமலும் நல்ல விஷயம் பகிரவே இந்த ஆவி பேட்டி .

 

வேண்டுகோள் : நண்பர்களே என் கருத்து கூறிய விதம் தவறாக இருப்பின்னும் நோக்கத்திற்கு மதிபளித்து மன்னிக்குமாறு கேட்டு கொள்கிறேன் .


 


              


          


No comments:

Post a Comment