5.19.2011

நல்லபடியா வசிக்க வாசிங்க "கற்றுணர்'' எனும் முழக்கமே என் மனத்தாழ்வாரங்களில் கணந்தோறும் எதிரொலித்தது...

""நான் கற்றுணரத் துவங்கினேன். என்னுடைய பழைய நம்பிக்கைகள் மாறுதலுக்குள்ளாகத் துவங்கின. எமது முந்தைய புரட்சியாளர்களிடம் பிரதானமாக விளங்கிய நம்பிக்கையின் அடிப்படையிலான வழிமுறைகள், இப்பொழுது தெளிவான, உறுதியான கருத்துக்களால் நிரப்பப்பட்டன. மாயாவாதமோ, குருட்டு நம்பிக்கையோ அல்ல, மாறாக யதார்த்தவாதமே எங்கள் வழியாயிற்று. அத்தியாவசியத் தேவையையொட்டிய பலாத்காரப் பிரயோகமே நியாயமானதாகும். அனைத்து மக்கள் இயக்கங்களுக்கும் சாத்வீகம் ஒரு விதி என்ற அடிப்படையில் இன்றியமையாததாகும். மிக முக்கியமாக, எந்த லட்சியத்திற்காக நாம் போராடுகிறோம் என்பதைக் குறித்த தெளிவான புரிதலோடிருக்க வேண்டும்."
....
பகத் சிங் அவர்களின் கடிதங்களில் காண பட்ட வரிகள் இவை ....

வாசிக்கும் அல்லது படிக்கும் பழக்கத்தால் ஓர் புரட்சி உருவான வரலாறுகள் இப்படி பல இருக்க . அந்த நல்ல பழக்கத்தை டிவி பெட்டியிடமும் ,சினிமாவிடமும் அடகு வைத்துவிட்ட நாம் எங்கே செல்கிறோம் .படிக்கும் பழக்கத்தால் ஏற்படும் நன்மைகள் என்னனு பார்போமா


புத்தகங்கள் அதிகம் வாசிப்போர், குறைவாக புத்தகங்கள் வாசிப்பவர்களுடன் ஒப்பிடும் பொழுது பத்தில் ஒரு பங்கு அளவே மிக குறைவாக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். எனவே, வாசித்தல் என்பது மன அழுத்தத்தை வெகுவாக குறைப்பதில் பெரும் பணியாற்றுகிறது.


 வாசிப்பானது சிறுவர்களின் மூளையின் கட்டமைப்பை ஆக்கபூர்வமாக மாற்றிவிடுகின்றது என்று சிறுவர் விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள் கூறுகின்றனர்.

நூல்கள் வாசிப்பது என்பது ஓர் அற்புதக் கலை. இசைக் கருவிகளை மீட்டுவது மட்டும் வாசிப்பல்ல. நூல்களைப் படிப்பதும் வாசிப்புதான். வாசிப்பு மனதை ஒருமுகப்படுத்தி நினைவுத்திறனைக் கூட்டும். கற்பனையையும் அறிவின் மேதா விலாசத்தையும் செழுமை செய்யும். புதிய புதிய பொருள்களைத் தந்து கொண்டே இருக்கும். வாசிப்பது என்பது சிறுகதையல்ல, அது ஒரு தொடர்கதை.

 சரி வாசிக்கும் பழக்கம் பழக வேணும் புரிந்துரிச்சு அதுக்காக கில்மா பட விமர்சனம் ,சினிமா கிசுகிசு ,மஞ்சள் பச்சை கதைகள் இதெல்லாம் படிச்சிப்புட்டு பிட்டு படம் பாக்க கிளம்பபிடாது..கொஞ்சம் இப்படி யோச்சிச்சு பாருங்க, உலக பயங்கரவாதியான ஒசாமா தன்னுடைய வேதத்தை படித்து இருந்தால் இவள்ளவு உயிர் சேதத்தை தவிர்திருக்கலாம் ,அதே மாதிரி நரேந்திர மோடி தன்னுடைய வேதத்தை படித்திருந்தால் ஒரு இனப்படுகொலையை தவிர்திருக்கலாம்....இப்படி வேதங்களை படித்தால் ஆன்மிக குழப்பக்கங்க்களை தவிர்த்து மக்கள் மத்தியில் ஒற்றுமை பிறக்கலாம். போலி மதபோதக்கர்கள் ,மதவாத அரசியல் ,ஜாதி கட்சிகள் அனைத்திற்கும் குட் பை சொல்லலாம் ..நல்ல நடுநிலையான அரசியல் பத்திரிக்கைகள் பதிவுகள் படிப்பதன் மூலம் பாமர மக்களை நம்பி அரசியல் வியாபாரம் செய்யும் சுயநல நயவஞ்சகர்களிடம் இருந்து நாட்டை காக்கலாம் , நல்ல இல்லக்கிய்களை புரட்ட புரட்ட கலாச்சார சீரழிவை குறைக்கலாம் , அப்படியே மூன்றாம்தர சினிமாக்கள் படைப்புகள் அனைத்துக்கும் முற்றுபுள்ளி வைக்கலாம் .
  
               
ஆதலினால் வாசிபோம் நல்லதை தேடி தேடி .....


டவுட்டு :: நான் இன்னும் வாசிக்க ஆரம்பிச்ச ஒருவேளை கொஞ்சம் சுவாரசியமா எழுதுவேனோ ? 

6 comments:

 1. நண்பரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்...
  வந்துப்பாருங்கள்..

  புதுசு புதுசா சொல்றாங்கயா..

  http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_20.html

  ReplyDelete
 2. வாசிப்பின்
  மகத்துவம் சொன்ன
  வீரிய வரிகள்
  வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 3. ரியாஸ்... எல்லா பதிவர்களும் சினிமாவையும் அரசியலையும் குத்தகை எடுத்துக்கொண்ட நிலையில்(நான் உட்பட), உங்களின் எழுத்து உண்மையிலே எனக்கு வித்தியாசமாக படுகிறது. தொடர்ந்து இதே திசையில் செல்லுங்கள், நீங்கள் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெறுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. சரி... மே மாதத்தில் இவ்வளவு பதிவுகளா??? வேலை கொஞ்சம் கம்மியோ?

  ReplyDelete
 5. ஹி ஹி அண்ணன் ஆர்வ கோளாறு நான் தான் ரொம்ப கம்மியா எழுதுரன்னு நினைதேன்

  ReplyDelete
 6. அன்பின் ரியாஸ் அஹமது

  வாசிப்பு என்றுமே மன வளத்திற்கும் உடல் நலத்திற்கும் நல்லது. வாசிக்க வாசிக்க நம் திறமை மெருகேறும். நலல சிந்தனையில் விளைந்த நல்லதொரு இடுகை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete