5.03.2011

உலா வரும் சரித்திரமும் தரித்திரமும் 3

 கணேஷ் குடவோலை முறைபற்றி விவரிக்க தொடங்கினார் .  குடவோலை முறை ராசராச சோழன் காலத்திற்கு முன்பே இருந்து வந்ததது தம்பி, அதன்படி ஓர் ஊருக்கு ஓர் தலைவர் தேர்தேடுக்க படுவார். அவரது வேலை என்னவென்றால் கிராம சபையின் கடமைகள் வரி வசூல் செய்வது,  நிலத்தின் விளைச்சலைக் கொண்டு வரியின் அளவை முடிவு செய்வது, தொடர்ந்து 2 ஆண்டுகள் வரி செலுத்தாத‌வர்களின் நிலங்களைப் பறிமுதல் செய்து அவற்றை ஏலம் விட்டு வரியைப் பெறுவது ஆகியவை.சுருக்கமாகச் சொன்னால் இன்றைய கட்டைப் பஞ்சாயத்திற்கு இணையானவை. வசந்த் ஆச்சர்யம் மீளாமல் சார் இதற்கு ரூல்ஸ் ஏதும் இருக்கான்னு கேட்டான் .பின்ன இல்லாமலா ஒரு குடும்பத்தில்லிருந்து ஒருவருடைய பெயர் மட்டும் ஊரின் சார்பில் நியமிக்கப்படும்.வசந்த் இடைமறித்து அஹா குடும்ப அரசியலுக்கு ஆப்பு ஆனா கருணாநிதி தப்பு இல்லைன்னு சொல்றாரு வரலாறு தெரிந்தும் .கணேஷ் சிரித்துவிட்டு தொடர்ந்தான் பெண்கள் நியமிக்கப்பட்டதாகத் தெரியவில்லை ,பரவாயில்லை  சார் இப்ப 33 % தானே கேக்குறாங்க கொடுத்துருவோம் என்றான் வசந்த்.கணேஷ் வயசு கூட முக்கியம் தம்பி ஆதுவும் 35 முதல் 60 வயதிற்க்குள் இருக்கணும் .உடனே வசந்த் அஹா இதை கேட்டால் பல பெருசுகளுக்கு கண்ணை கட்டுமே என்றான் . பேசிக்கொண்டு இருக்கையிலே பிரம்மதேய பணியில் இருப்பவர் (லாயர் மாமே) ஒருவரை கண்டதும் கணேஷ் ஓடோடி அருகில் சென்று கைகொடுத்து வணங்கி விட்டு வந்தார், வசந்த்தும் கூடவே சென்றான் இருவரையும் வாழ்த்திவிட்டு சென்றார் அந்த பெரியவர் .  யார் சார் இது என வசந்த் கேட்க இது என் கொள்ளு தாத்தாவின் தாத்தா என்றார் கணேஷ் அவர் பெயர் கணேச பட்டர். (மீண்டும் சுஜாதா டச் ! கலக்குரோம்ல ).

                            சார் அடுத்த விதி என்ன வசந்த் கேட்க கணேஷ் தொடர்ந்தார் குறைந்த அளவு 1/4 வேலி நிலம் இருக்க வேண்டும். குடியிருக்க சொந்த வீடு இருக்க வேண்டும். ஆனால் இதற்கும் விதி விலக்கு உண்டு வேதப் படிப்பில் சிறந்தவன், நான்கு பாஸ்யத்தில் ஒன்றினையேனும் நன்கு கற்று இருந்தால் அவனுக்கு 1/8 வேலி நிலம் இருந்தால் போதும் என்றவுடன் வசந்த் புலம்பினான்  ஆனா இப்ப இந்த ஒரு கருமத்துக்கு தான் எந்த அருகதையும் தேவைஇல்லை பட் ரவுடியாக  இருந்தா பிளஸ். கேளுங்க தம்பி அடுத்த விதி ஒருவர் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து உறுப்பினராக இருந்தால் அவர் அந்த வாரியத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட முடியாது.சபாஷ் வச்சொம்ல அடுத்த ஆப்பு என்றான் வசந்த் . அப்புறம் சார்ன்னு கேட்க ஒழுக்கமற்றவராகவும் சரிவரக் கணக்கு காட்டாதவராகவும் இருந்தால் அவர் பெயர் குடத்திலிடப்படமாட்டாது என்று கணேஷ் முடித்தார். சார் இந்த வரலாற்று ஆதாரங்களை கொண்டு தேர்தல் ஆணையத்தில் சில மாற்றங்களை செய்து அப்புறம் ஜன லோக்பால் சட்டத்தையும் நடை முறைபடுதிட்டால் ஊழல் நம்ம நாட்டுல குறையும் அல்லவா என கேட்டான் வசந்த் . வாங்க தம்பி இதை நம்ம ராஜராஜ சோழனிடமே கேட்போம் என்றார் கணேஷ் .





 நாளை ராஜராஜ சோழனோடு ஓர் பேட்டி ......
                                    
                                          


No comments:

Post a Comment