5.25.2011

5 நிமிட பீப்ளி லைவ்

எனக்கு பிடித்த பாடல்கள் சில உங்களோட பகிர்ந்து கொள்ள ஆசை ...அதில் ஒரு மாறுதல் இருக்கணும் என்றும் விரும்பினேன் .இல்லாத மூளையை கசக்கி பிழிந்ததில் எல்லோராலும் கவனிக்க படாத பாடல்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்புள்ள பாடல்கள் என வித்தியாசம் காட்டுவோம் என்று தொடங்குகிறேன் .
இந்த பாடல் 5 நிமிட பீப்ளி லைவ் என்று சொல்லலாம். ஒரு கிராமத்து வெள்ளந்தி மனிதனின் சுக துக்கங்கள் வைரமுத்துவின் வரிகளில் மிளிரும் தோதான இசையும் அழகு சேர்க்கும்.மறைந்த மலேசியா வாசுதேவனோடு சேர்ந்து இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களும் பாடிய பாடல். கேட்டு பாருங்க ..
இந்த படமே கவனிப்பாரற்று போனதால் இந்த பாடலும் ஹிட் ஆகவில்லை . மிக சிறந்த இசைஞானியின் பாடல்களுள் இதுவும் ஒன்று.இதை ஒரு புதியவர் பாடியிருந்தார் ..நாளில்  பாதி  இருளில்  போகும் இயற்கையில் ,வாழ்வின்  பாதை  நன்மை  தீமை  தேடலில் என அழகிய வாலியின்  வரிகளும் குறிபிடத்தக்கவை.
இப்ப எனக்கு மட்டும் தோன்னும்ன்னு நினைக்கிற தொடர்ப்பு பாடல் ரெண்டு நீங்க கேட்டு பார்த்து உங்க கருத்தை சொல்லுங்க ...இந்த ரெண்டு பாடல்களின் மொழியே வேற,இசை அமைப்பாளரும் வேற  இருந்தும் எனக்கு ஒன்னை கேட்டால் மற்றொன்று ஞாபகம் வருவதை தவிர்க்க முடியல.ரெண்டும் சிறந்த பாடல்கள் இதோ 
இப்ப இதை கேளுங்களேன் ...ஒருவேளை பாடலின் situvation ஒரே மாதிரி இருப்பதாலயோ 


              

6 comments:

 1. கிராமத்து மணங் கமழும் முதலிரு பாடல்களும் ஒத்துப் போகின்றன சகோ,

  ReplyDelete
 2. நிரூபன் said...//கிராமத்து மணங் கமழும் முதலிரு பாடல்களும் ஒத்துப் போகின்றன சகோ,//வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ

  ReplyDelete
 3. >>உங்க கருத்தை சொல்லிட்டு போங்க நல்லா இருந்தா தொடர்ந்து சொல்றேன் இல்லைன்னா இன்னையோட கடையை மூடிவிடுகிறேன் ...

  ஹா ஹா இப்படி சொன்னா ஆளாளுக்கு நல்லா இலைம்பாங்களே?

  ReplyDelete
 4. சி.பி.செந்தில்குமார் said...//ஹா ஹா இப்படி சொன்னா ஆளாளுக்கு நல்லா இலைம்பாங்களே?///அப்படியா சொல்றீங்க , எதுக்கு வம்பு அந்த வரியை நீக்கி விட்டேன் ... நன்றி நண்பரே

  ReplyDelete
 5. மிகச்சிறந்த பாடல் தேர்வுகள் ரியாஸ் , ஹே ராம் இசையில் தொடங்குதம்மா பாடல் அஜோய் சக்ரபர்த்தி என்பவரால் பாடப்பட்டது

  ReplyDelete
 6. A.R.ராஜகோபாலன் said...///மிகச்சிறந்த பாடல் தேர்வுகள் ரியாஸ் , ஹே ராம் இசையில் தொடங்குதம்மா பாடல் அஜோய் சக்ரபர்த்தி என்பவரால் பாடப்பட்டது/////நன்றி நம்பரே,,, உங்கள் தகவலுக்கு நன்றி

  ReplyDelete