ஒரு வழியாக அ.தி.மு .க பெருபான்மையான இடங்களில் வாகை சூடி விரைவில் முடி சூடவும் போகிறது . வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன் .இனி பலி வாங்கும் படலம் தொடரும், ஆரம்பமே அதிரடியா தான் இருக்கு.இதனால் நாட்டின் இழப்புகள் ஈடுசெயயப்டுமாயின் சரிதான் .ஒன்றை நினைவு கூற விரும்புகிறேன் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு எதிர்கட்சி தலைவியாக சட்டபேரவைக்கு வந்து ஜனநாயக கடமையை செய்ய தவறியவர் தான் இன்று முதல் அமைச்சர் . கொடை நாட்டில் இருந்து கோட்டை வரை வந்து அமர்ந்தற்கு மீடியாக்களும்,தி.மு .கவின் குடும்ப அரசியலும், ஊழலும் உதவியது . இதை தக்க வைத்துக் கொள்ள செல்வி முயற்சிக்க வேண்டும் .செய்வார் என நம்புவோம் ...
தி.மு .க வின் எதிர்காலம் கலைஞர் ஐயாவின் வயதை வைத்து பார்க்கும் பொழுது கேள்வி குறியாக இருப்பதை தே.தி.மு .க பயன்படுத்தி கொள்ள வேண்டும்.வரும் ஐந்து ஆண்டுகளில் சிறப்பான எதிர்கட்சியாக செயல்பட்டு மக்கள் மன்றத்தில் நீங்கா இடம் பிடிக்க வேண்டும் .அதற்கு அவர் சினிமாவுக்கு முழுக்கு போட்டு முழு நேர களப்பணி ஆற்றவேண்டும் . இதுவும் நடக்கும் என்று நம்புவோம் ...
தி.மு.க தனது உட்கட்சி புசல்களை களைந்து (அட குடும்ப சண்டையை தான் சொல்றேன் ) சம்பாதித்தது எல்லாம் போதும் என நினைத்து ,கட்சி ஒருகிணைப்பு மற்றும் மக்களின் நிஜமான பிரச்சனைக்கு குரல் கொடுத்தும் வந்தால் மீண்டும் காட்சிகள் மாறும் .
Tweet |
முதல் நம்பிக்கை
ReplyDelete