5.08.2011

பாக்கின் குள்ளநரித்தனம் !!!!

ஒசாமா செத்து ஒழிஞ்சு ஒரு வாரம் ஆச்சு ஆனா அந்த கருமத்த பத்தி பேசாம இருக்க முடியல. ஒசாமா டிவி பாக்குறான் ,கக்கூஸ் போறான்னு எதவாது வீடியோவை காட்டி போர் அடிக்குறாங்க ..ஹி ஹி இந்த ஆட்டத்துல நானும் வாரேன்னு சொல்ல தான் இத எழுதுறேன் ..


    ஒசாமாவுக்கு வாசலை திறந்துட்டு  அமெரிக்காவுக்கு கொள்ளை புற வழிய பாக் தொறந்து விட்டதை என்னன்னு சொல்ல ..நம்ம கலைஞர் கனிமொழிக்காக ராசாவை பணயம் வச்ச மாதிரி. அமெரிக்க கிட்ட நல்ல பேர் எடுக்க ஒசாமான்க்குற ஒரு தலையை மட்டும் பலி கொடுத்துருச்சு பாகிஸ்தான் . ஆனா பாக்கின் தீவிரவாத கொள்கைகள் மாறுன மாதிரி தெரியலை.இனி மாறும்ன்னு நம்பிக்கையும் இல்ல .

                           நமக்கு தேவையான தீவிரவாத கும்பலையோ அதோட  தலைவனோயோ பிடிக்கனும்ன்னா அதே கும்பலோ தலைவனோ அமெரிக்காவும் தேடுரவனா இருந்தா மட்டும் தான் புடிக்க முடியும். இந்தியாவில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்கள் எல்லாத்துக்கும் ISIக்கும் லிங்க் இருக்குன்னு விகிலீக்ஸ் ஒரு பயங்கரமான (ஏற்கனவே தெரிந்த ) தகவலை வெளியிட்டு உறுதிபடுத்தி இருக்கு .


     இன்னிக்கு ஒசாமாவுக்கு ஏற்ப்பட்ட கதி தான் நமக்கு நாளைக்கு தலை மேல காத்திருக்கு அப்படிங்குற உண்மைய புரிந்து பாகிஸ்தான் நடந்தால் ,அவங்க நாடு நல்லா இருக்கும்.இல்லன்னா சுடுகாடு தான் மிஞ்சும். 

இந்த நேரத்துல  இன்னொரு செய்தி சொல்ல ஆசைபடுறேன் ,ஒசாமாவை  வீரனும் தியாகின்னும் சொல்லிக்கிட்டு சில முட்டாள்கள் திரியுறாங்க. இது அபத்தம் . உலகதுள்ள உள்ள எல்லா வேதங்களும் சொல்லும் பொதுவான செய்திகளில் ஒன்னு "நீ ஓர் உயிரை கொன்றால்,மனித இனத்தையே கொன்றமாதிரி " . SO , ஒசாமா ஒரு கொலையாளி அவ்வளவே ,வேற ஒரு மண்ணும் இல்லை .!!!

No comments:

Post a Comment