5.07.2011

விரைவில் கட்டவிழ்க்கப்படும் குதிரை



  தமிழ் சினிமாவுல பெரிய பெரிய ஜாம்பவான்கள் கூவிகிட்டு இருந்த இலக்கியமும் சினிமாவும் கை கோர்க்கணும் என்கின்ற காலம் கைகூடிவிட்டதுன்னு தோணுது. சந்தோசமா அதுக்காக ஒரு போடுவோம். 

கே வி ஆனந்த் &  சுபா கூட்டணி தொடங்கி சுசீந்திரன் & பாஸ்கர் சக்தி வரை எல்லாம் இன்ப மயமாக இருக்கு .கோ பட வெற்றியை போலவே வரபோற அழகர் சாமியின் குதிரை படமும் வெற்றி அடைஞ்சா, DVD பார்த்து படம் எடுக்கும் கலாச்சாரம் போயி நல்ல இலக்கியங்கள் சினிமா ஆகும் . (கோ படம் இலக்கியம்ன்னு சொல்லவரல )

கமலஹாசன் மற்றும் மணிரத்தினம் போன்றோர் இதற்கு முன்பே இந்த மாதிரி முயற்சிகள் செய்து இருந்ந்தாலும் அதில் அவர்களின் தாந்தோணி தனம் தான் மேலோங்கி இருந்தது என்பதே உண்மை . பல நல்ல நாவல்கள் சினிமாக்காரங்க கற்பழிச்சதும் நிஜம் தான் .(உதாரணம் பிரிவோம் சந்திபோம்,பிரியா இன்னும் பல) .

            ஆனா இப்போ அப்பு குட்டியை ஹீரோவாக போட்டு சுசீந்திரன் செஞ்ச இந்த முயற்சி வரவேற்க்கதக்கது.சூப்பர் மேனகாவும் ஸ்பைடர் மேனகாவும் குருவின்னும் தலைன்னும் பார்த்து பழகிய கண்களுக்கு இது விஷபரிட்சையே.
பரிட்சையில ஜெயிச்சா உலக திரைபட விழாக்கள் சென்னையில் நடக்கும் அரங்கு நிறைந்த வெள்ளைகார மக்களுடன்.ஸ்டீவன் ஸ்பீல்பேர்க் , கமேரோன் கதை களம் தேடி இங்க வருவாங்க . சினிமா ரசிகனா கடமையை செய்துவிட்டேன் .சரி  நீங்க உங்க கடமையை செயுங்க பாஸ் ( அட வோட்டு போட சொனேன்க )...

இதே மாதிரி பாலாவின் அவன் இவனையும் வரவேற்கிறோம் .ஈகோ பாக்காம ஒண்ணா சேர்ந்து நடிக்கும் டீரேன்டையும் வரவேற்கிறோம். ( என்னமோ சத்யஜித் ரே ரேஞ்சுக்கு பேசிட்டேனோ ஹி ஹி )


No comments:

Post a Comment