5.28.2011

காந்தியின் கண்ணீர் துடைக்காத காங்கிரஸ்

வரலாறு ரொம்ப முக்கியம் நண்பர்களே , வரலாற்றில் பிழைகள் இருந்தால் திருத்த வேண்டியது நமது கடமை.கலைஞரின் பாடலுக்காக (தவறு தான் இருந்தாலும் )சமச்சீர் பாட திட்டமே கைவிட பட்டது போல் அரங்கேறி இருக்க வேண்டிய ஒரு நிகழ்வை ஆளும் கட்சிக்கு நினைவூட்டவே இந்த பதிவு.

வீர சாவர்க்கர் பிறந்தநாளை முன்னிட்டு பார்லிமென்டின் மத்திய மண்டபத்தில் அவரது படத்துக்கு சபாநாயகர் மீரா குமார், பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.இந்த புகைப்படம் பா.ஜ.க ஆட்ச்சியின் போது காங்கிரஸின் (சிறுபான்மையினரின் ஓட்டிற்காக ) பலத்த எதிர்ப்பிற்கு இடையில் வைத்தார்கள் . காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் கொள்ளை அடிப்பதிலேயே கவனமாக இருப்பதால் (தீயா வேலை செய்யணும் ) இந்த புகைப்படத்தை கண்டுகொள்ளவே இல்லை . காந்தி அடிகளின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஒருவருக்கு இந்த மரியாதையை கிடைத்துவிட்டால் இந்த நாட்டில் ஜனநாயகம் என்பது உண்மையை இருட்டடிப்பு செய்வதற்கு மட்டும் தான் பயன்படும் என்பது உண்மையாகி விடும் . அப்படியென்ன தவறு இதில் இருக்கிறது இதோ சில உண்மைகள் நீங்களே படித்து முடிவு செய்யுங்கள் ..

அந்தமானில் சவர்க்காரின் சிறை வாழ்க்கை நிறைய சுவாரசியமானது. அவருடன் சிறையிலிருந்த 92 வயதான தினேஷ் குப்தா என்பவர் ஆக. 9, 2003 அன்று டில்லியில் அளித்த ஒரு பேட்டியில்,

"வி.டி. சவர்க்காரும் நானும் ஒன்றாக சிறையில் இருந்தவர்கள். அவர் ஒன்றும் சிறையிலேயே உயிரைவிட்டு விடவில்லை. சிறையிலேயே உயிரைப் பறிகொடுத்த 8 விடுதலை தியாகிகளுக்கு அவர்களின் நினைவைப் போற்ற போர்ட்ப்ளேயரில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகளுக்கு மத்தியில் சவர்க்காரின் சிலையையும் வைத்திருப்பது அந்த மற்ற விடுதலை வீரர்களையும் அவமானப்படுத்துவதாகும். மேலும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உதவுவதாகக் கூறி மன்னிப்புக் கடிதம் எழுதியனுப்பிய சவர்க்காரை விடுதலைப் போராட்டத் தியாகியாக சித்திரிப்பது மாபெரும் தவறாகும்; தாங்கமுடியாத துன்பமாகும்" என்று குறிப்பிட்டார்.


அவருடன் சிறையிலிருந்த விஸ்வநாத் மாத்தூர் என்பவர், "ஒரு கோழையைப் புரட்சியாளனாக தூக்கி நிறுத்துவது கேலிக் கூத்தாகும்" என்று கடந்த பி.ஜே.பி. ஆட்சியில் சவர்க்கார் படத்தை நாடாளுமன்றத்தில் வைத்தபோது தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
தினேஷ் குப்தாவும், மாத்தூரும் மட்டுமல்ல, சவார்க்கருடன் சிறையில் இருந்த வங்காளத்தின் திரிலோகநாத் சக்ரவர்த்தி அவர்கள் தனது சுயசரிதை நூலில் தங்களை சிறை அதிகாரிகளுக்கு எதிராகப் போராடத்தூண்டி விட்டு, தான் மட்டும் (சவார்க்கர்) நல்ல பிள்ளையாக இருந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளாமல் விட்டதைக் குறிப்பிட்டிருக்கிறார். இதை சவார்க்கரும் 'அந்தமானில் எனது ஆண்டுகள்' என்ற நூலில் ஒப்புக் கொண்டுள்ளதாக பிரபல வரலாற்றாளர் பிபின் சந்திரா கூறுகிறார்.
காந்திஜி படுகொலை தொடர்பாக ஒன்பது பேர் மீது குற்றம் சுமத்தப்படிருந்தது. ஆத்ம சரண் ஐசிஎஸ் என்பவர் சிறப்பு நீதிபதியாக நியமிக்கப்படிருந்தார். செங்கோட்டையில் வழக்கு நடைபெற்றது. அந்த ஒன்பது பேர் மீநாதுராம் கோட்சே. நாராயண ஆப்டே, விஷ்ணு கார்கரே, மதன்லால் பாவா, சங்கர் கிஸ்தயா, கோபால் கோட்சே, டாக்டர் பார்ச்சுரே, சாவார்க்கர், திகம்பர் பட்கே ஆகியோர்.

இவ்வளவு சர்ச்சைகள் நிரம்பிய மனிதருக்கு இந்த மரியாதையை கொடுத்து வருங்கால சந்ததிகளுக்கு தவறான முன்னுதாரணம் ஆவதை தடுக்குமா காங்கிரஸ் ??????????????????


6 comments:

  1. சலாம் சகோ.ரியாஸ்...
    போலிகளை கிழித்தெறியும் அருமையான இடுகை.
    மிக்க நன்றி.

    மெய்யாலுமே காங்கிரஸ் எதிர்த்திருந்தால்... இந்நேரம் அந்த சாவர்க்கார் இருந்த தடம் கூட அங்கே இருந்திருக்காது..!

    எல்லாருமே போலிகள். பாஜகவின் மறுபக்கம்தான் காங்கிரஸ்.

    ReplyDelete
  2. . கருத்திற்கும் வருகைக்கும் நன்றி சகோ ..

    ReplyDelete
  3. காந்தியின் கண்ணீர் துடைக்காத காங்கிரஸ், எப்படி நண்பரே காங்கிரஸ் காந்தியின் கண்ணீரை துடைக்கும் , அதன் காரணமே அவர்கள் தானே , வரலாறு இதுபோல் திருத்த படுவது வருங்கால சந்ததியினரை தவறான பாதைக்கே அழைத்து செல்லும் , நல்ல பதிவு

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி ... உங்கள் கருத்து புரியவில்லை நண்பரே A.R.ராஜகோபாலன் said... ///வரலாறு இதுபோல் திருத்த படுவது வருங்கால சந்ததியினரை தவறான பாதைக்கே அழைத்து செல்லும் , நல்ல பதிவு ///?????????????

    ReplyDelete
  5. தேசத் துரோகிகளை சுதந்திர போராட்ட தியாகிகள் போல் சித்தரிக்கும் போக்கு கடந்த சில வருடங்களாகவே நடந்து வருகிறது. வரலாற்று திரிபு என்பது நமது தேசத்தில் நீண்ட நெடுங்காலமாக இருந்து வருவது தான் ரியாஸ். ஒரு தேசத்தின் உண்மை வரலாறை மறைத்து பொய் வரலாற்றை புகுத்த நினைக்கும் நயவஞ்சகர்களை விட இந்த தேசத்திற்கு பேராபத்து வேறு எதுவும் இல்லை.

    ReplyDelete
  6. சிராஜ் said...////தேசத் துரோகிகளை சுதந்திர போராட்ட தியாகிகள் போல் சித்தரிக்கும் ...................////நன்றி . நன்றி ...

    ReplyDelete