5.04.2011

உலா வரும் சரித்திரமும் தரித்திரமும் 4

 மன்னரை பார்க்கும் ஆவலுடன் அரண்மனை நோக்கி விரைந்தார்கள் கணேஷும் வசந்தும்.அரண்மனை  வாசலில் யானைகளும், குதிரைகளும், ரிஷபங்களும், அந்த மிருகங்களையெல்லாம் பிடித்துக் கட்டுவோரும், ஆங்காங்கு தீவர்த்தி தூக்கிப் பிடித்து வெளிச்சம் போடுவோரும், தீவர்த்திகளுக்கு எண்ணெய் விடுவோருமாக, ஒரே கோலாகலமாயிருந்தது.திறந்திருந்த வாசலில் வேல்பிடித்த வீரர்கள் சிலர் நின்று கொண்டிருந்தார்கள் கணேஷ் வசந்த் இருவருக்கும் வரவேற்ப்பு அளித்து நடுநயமான ஓர் மாடத்தில் மன்னர் வருகைக்காக காத்திருந்தனர்.
                எந்தவொரு பில்ட் ஆப்பும் இல்லாமல் மிக மிக எளிமையாக தனது அரியணையில் வந்து அமர்தார் மன்னர் ராஜராஜ சோழன் .அவருடைய முகத்தில் பொலிந்த அழகு, மனித குலத்துக்கு உரியதாக மட்டும் இல்லை; தெய்வீகத்தன்மை பொருந்தியதாக இருந்தது.தற்போதைய பேச்சு வ்ழக்கிலயே பேச தொடங்கினார், கணேஷ் ஆச்சரிமாக "அய்யா எப்படி இக்கால தமிழ் பேசுறிங்க "என்றான்."நான் எங்கள் தமிழ் பேசினால் உங்களுக்கு புரியுமா (இல்ல எழுதுற எனக்கு தான் தெரியுமா) தவிர டைம் மெஷின்ல யாராவது வந்து வந்து என் தமிழையே மறக்க அடிச்சுட்டாங்க . நேற்று கூட கே எஸ் ரவிக்குமார் வந்து ராணா பட கதை விவாதம் பண்ணிட்டுபோனாறு" என்றவுடன் வசந்த் குறுக்கிட்டு "மன்னர் மாதிரியே இல்லையே ரொம்ப சிம்பிள்லாக இருக்கீங்களே" என கேட்டான்."நம்ம கலையிலும் இலக்கியத்திலும் மிகைப்டுத்தியே பழகிவிட்டோம்.நீங்க பாக்குறது நிஜம்"என்றார்.கணேஷ் தான் கேட்க விரும்பிய முதல் கேள்வியை கேட்டார் "நீங்கள் தான் இந்தியாவின் முதல் பேரரசர் நிலமளந்து நாட்டுப் பகுப்பு செய்தது , ஊர்ச் சபைகளும் மக்களும் பயன் பெற திருக்கோயில்களில் பொதுவுடைமை வங்கிகளைச் செயல்படுத்தியது அதனால உங்கள் பார்வையில் இன்றய இந்தியா எப்படி இருக்கு " . மன்னர் வருந்தி பதில் அளித்தார் "வருந்துகிறேன் மக்களை நினைத்து ,கோபபடுகிறேன் ஜனநாயக கொலையாளிகளை நினைத்து "என்றார் .தொடர்ந்து வசந்த் குறும்பாய் கேட்டான் "மன்னருக்கு ஜனநாயகத்தின் மேல நம்பிக்கை இல்லையோ ?".மன்னர் "அரசியல் வாதிகள்  மேல் நம்பிக்கை இல்லை தம்பி ஜனநாயகதிற்கு வித்திட்டதே நாங்கள் தானே, இப்ப உள்ளவர்கள் மக்களின் கல்வி வளர்ச்சிக்கோ வாழ்க்கை தர வளர்ச்சிக்கோ பாடுபட்டதாக  தெரியவில்லை, குடும்ப வளர்ச்சி ,கூட்டாளிகள் வளர்ச்சி சுயநலம் மட்டுமே குறிகொள்ளாக கொண்டு உள்ளனர் "என்றார் .கணேஷ் " அந்தகாலத்தில் குடி, தீவிரவாதம் ,மணற்கொள்ளை போன்ற கண்ராவி எல்லாம் இருந்ததா? என்று கேட்க மன்னர் தொடர்ந்தார் "மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த காலகட்டத்திலேயே கள்ளைக் காய்ச்சத் தெரிந்திருந்தான் தம்பி, என் எதிரிகள் தான் திவுரவாதிகள் ஆனால் அவர்களும் அப்பாவி மக்களை கொல்லமாட்டார்கள், ஆறும் ஏரிகளும் நிரம்பி வழியும் போது மணற்கொள்ளைக்கு வாய்ப்பு இல்லையே"என்றார்.
                  கணேஷ் ஐயா மீண்டும் நீங்களே வந்து எங்களுக்கு நல்லாட்சி தாங்களேன் என்றார்.மன்னர் "நல்ல நல்ல எழுத்தாளர்கள் மிகைபடுத்தியே ஒரு சிறப்பான இடத்தில் என்னை வைத்துவிட்டீர்கள் நான் அப்படியே இருந்து விடுகிறேன்.நீங்கள் கட்டியுள்ள ஊழல் கோட்டைகள் தகர்க்க என்னால் இயலாது." என்றார்.எங்களுக்கு நல்ல வழியாவது கூறுங்களேன் என்று கணேஷ் கேட்க மன்னர் " நேற்றைய வடைபஜ்ஜி ப்ளாக்கில் உள்ள பதிவையே வழி மொழிகிறேன் நான்" என்றார்.வசந்த் வழக்கம் போல் "அந்தபுரத்தில் ராணியார்கள் எத்துனை பேர்" மன்னர் முறைத்துவிட்டு "உங்கள் இருவருக்கும் நேரம் முடிந்தது சென்று வாருங்கள் " என கூறி விரட்டிவிட்டார் .
            கணேஷ் வசந்த் இருவரின் டைம் மிஷின் நேரமும் நிறைவடைந்தது.வசந்த் அந்த காலத்தை விட்டு வெளியேற மனமில்லாமல் " சார் இங்க காக்கா கூட அழகா இருக்கு,இங்கயே இப்படியே தங்கிருவோம் " என்றான்.கணேஷ் மறுத்து "தம்பி நம்ம சரித்திரமாவது கலப்படம் இல்லாமல் இருக்கட்டும் வா கிளம்புவோம் "என்றான். 
                                       
                 நன்றி மீண்டும் சந்திபோம் ....(அலாரதிங்க plz)
                              

No comments:

Post a Comment