5.17.2011

பாலிவுட் இசை பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி ..செய்திகளை முந்தி தரும் பதிவு என்னும் பாரம்பரியம் தொடர்கிறது ...( ரொம்ப ஓவர் தான் என்ன பண்றது நீங்க சொல்லமாடீங்க)..

 யாஷ் சோப்ரா என்னும் ஐம்பது ஆண்டுகள் இந்தி திரையுலகை தன் நிகர்ரற்ற படைப்புகளால் கட்டி போட்டிருக்கும் ஓர் இயக்குனர்.முதன் முதலாக நம்ம இசை புயல் எ.ஆர் . ரஹ்மான் கூட கூட்டணி அமைகிறார்.இது இசை பிரியர்கள் ரொம்ப நாள் எதிர்ப்பார்த்த கூட்டணி.யாஷ் சோப்ரா தாதாசாகெப் பால்கே விருது,பத்மா புஷன் விருதுகளால் சிறப்பிக்க பட்டவர் .யாஷ் சோப்ரா அவர்களின் திரை பட பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியா கானங்கள் .நம்மவர் அவரது இன்னும் பெயரிட படாத இந்த ஷாருக்கான் படத்துக்கு துள்ளல் இசை தர போகிறார் ...

இந்த கூட்டணி பற்றி ரஹ்மான் கூறுகையில் "இசையும் காதலும் இன்றியமையாத கரு பொருட்களாக இருக்கும் யாஷ்ஜி அவர்களின் படத்திற்கு 
இசை அமைப்பதில் மகிழ்ச்சி " என்றார் .மேலும் யாஷ் சோப்ரா "இந்தியாவிற்கு உலகெங்கும் இருந்து பெருமை தேடி தந்த ரஹ்மான், என் படத்திற்கு இசை அமைப்பது  மகிழ்ச்சி " என்றார் .

 நான் காத்திருகிறேன்  கேட்பதற்கு , நீங்க கேட்டதுக்கு ஒட்டு போடுங்கோ ...
1 comment: