5.23.2011

பிழையற்ற கனிமொழியும் நிலைபெற்ற கலைஞரும்

            2  ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குல தீர்ப்பு வெளியாகிவிட்டதோன்னு நினைச்சி வந்தா உங்களுக்கு ஏமாற்றமே ,இல்ல கலைஞர் தான் தன் மக்களை காப்பதை விட நாட்டின் இறையாண்மையை காப்பதே என் கடமைன்னு சொல்லுவார் நம்பி இங்க வந்து இருந்தாலும் ஏமாற்றமே.சும்மா நான் எல்லோரும் திட்டி தீர்த்து கொண்டுயிருக்கையில் ஒரு மாற்றத்திற்கு கனிமொழியின் கவிதை தொகுப்பில் இருந்து ஒரு நல்ல கவிதையை தேடி பிடித்து பாராட்டிட்டு போவோமேன்னு பார்க்குறேன் ... அதுல பாருங்க நான் இதுக்கு முன்னால இவங்க கவிதைகளை படித்தது இல்ல ,இதற்காகவே வலைபாயுந்து தேடி பிடித்தேன் ,கனிமொழியின் கவிதை படித்தவர்கள் பாராட்டியதை .(விமர்சங்களை விட்டுடுவோம் கனி பாவம் )


அப்பா

சின்ன வயதில்
செய்த தவறுகளுக்கெல்லாம்
பூச்சாண்டியாய் உன்
பெயரைத்தான் சொன்னாள்
அம்மா

காலையில் கணக்குப் பாடம்
குழம்பியபோது
பத்திரிகையில் புதைந்த
உன் தியானத்தை எப்பிடிக்
கலைப்பது?

விடுமுறை நாள்களில்
சினிமாவுக்குப் போக
அம்மாவைத் தூதுவிடுவதே
ஆபத்தற்றதாய் இருந்தது

வாரம் ஒருமுறை
பின் சீட்டில் வைத்து
தேக்காவுக்கு அழைத்துச் சென்றது

உன் கால் செருப்பு
ஓசையில்
வீடு அமைதியானது

அப்பாவுக்குப் பிடிக்கவில்லை
என்று குட்டை ஸ்கர்ட்டை
அம்மா எதிர்த்தது

இதுதான் நீ என்று
பதிந்துபோய்விட்டது

பெருமாள் கோயிலில்
யாரோ ஒருவன்
கையில் பிடித்துக்கொடுத்தபோது
நடுங்கிய உன் கைகளில்
தெரிந்த நேசத்தை ஏன் ஒளித்துவைத்தாய்
இத்தனை காலமாய்?


-கனிமொழி --------இனி  
பாராட்டு வரிகள் சில ...


எண்ணங்கள் மட்டுமல்ல கனிமொழியின் கவிதையின் வடிவமும் புதிது. அவரிடம் தனி கற்பனை வளம் உள்ளது. மாற்றுக் கட்சியினரும் பாராட்டும் அளவுக்கு அவரது படைப்புகள் உள்ளன.
கனிமொழியின் கவிதை திறனுக்கு அவரது ஜீன்களும் ஒரு காரணம். அதனால் தந்தைக்கு மட்டுமல்ல பாட்டனாருக்கும் அவர் கடமைப்பட்டுள்ளார் என்கிறார் முன்னாள் அமைச்சர் அன்பழகன்.

எழுத்தாளர் ஜெயகாந்தன்: கனிமொழியின் “சிகரங்களில் உறைகிறது காலம்’ என்ற கவிதை நூலை ஒரு மாதமாக திரும்ப திரும்ப படித்து வருகிறேன். படிக்க படிக்க யோசிக்க தூண்டுகிறது
என்று குறிப்பிட்டுள்ளார் .
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ம. இராஜேந்திரன்: தமிழக நவீன இலக்கிய வரலாற்றில் ஏற்பட்ட வெற்றிடத்தை சரியான நேரத்தில் நிரப்பியுள்ளார் கனிமொழி.“புதிரான விளைச்சல்’ என்று அனைவரும் வியக்கும் அளவுக்கு கனிமொழியின் படைப்புகள் உள்ளன. மரபுகளை அப்படியே ஏற்காமலும், முற்றிலும் புறக்கணிக்காமலும் அதனை விசாரணைக்கு உள்படுத்தியுள்ள பாங்கு பாராட்டத்தக்கது என்கிறார்.
எழுத்தாளர் சுஜாதா விகடனில் கனிமொழியின் மற்ற அடையாளங்களை மறந்துவிட்டு, கவிதைகளை மட்டும் தனிமைப்படுத்திப் பார்க்க இந்தத் தொகுப்பில் சந்தர்ப்பம் கிடைக்கிறது. 
பெண்ணியம் பேசும் கவிஞராக இவரைச் சிலர் தப்பர்த்தம் பண்ணிக் கொள்கிறார்கள். மற்ற விஷயங்களுடன் பெண்ணின் சமூக பாத்திரத்தை உன்னிப்பாகக் கவனிக்கும் கவிஞராகத்தான் இவரைப் பார்க்கிறேன். பெண் கவிஞர், கவிதாயினி போன்ற அடைமொழிகள் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார் .


சரி இதெல்லாம் சொல்றதால என்னைய தி.மு.க காரன்னு நினைச்சுராதிங்க 
நம்மள நன்றி மறந்த தமிழர்கள்ன்னு யாரும் சொல்லக்கூடாது இல்லையா அதனால இந்த மறுப்பக்கத்தை நினைவு கூர்ந்தேன் ..


3 comments:

  1. எழுத்துப்பிழைகள் உள்ளன....சரிபார்க்கவும்..

    ReplyDelete
  2. பெருமாள் கோயிலில்யாரோ ஒருவன்கையில் பிடித்துக்கொடுத்தபோதுநடுங்கிய உன் கைகளில்தெரிந்த நேசத்தை ஏன் ஒளித்துவைத்தாய்இத்தனை காலமாய்?நல்ல கவிதை , இந்த நேரத்தில் இப்படி ஒரு கவிதையை தேடி பிடித்து பதிவிட்டதற்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  3. A.R.ராஜகோபாலன் , NKS.ஹாஜா மைதீன் வருகைக்கு நன்றி ...பிழைகள் திருத்திவிட்டேன்

    ReplyDelete