கோவிலை ஒட்டி உள்ள ஏரி அருகே இருவரும் அமர்தோம் . பரஸ்பரம் அறிமுகம் செய்துக்கொண்டோம் .என்னோடு துணையாக இருப்பவர் தொல்பொருள் ஆராயிச்சியாளர் பெயர் கணேஷ் .என் பெயர் தெரியும் தானே வசந்த் ( எப்படி என்னோட சுஜாதா டச் ! )இப்ப நாங்க பார்துகொண்டிருப்பது மாசற்ற இயற்கை எழில் ....அலைகடல் போன்ற ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது.அந்த ஏரியின் நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர் வளத்தை அளித்துக் கொண்டிருந்தது.பெண்கள் கூட்டம் ஒன்று எங்களை கடந்து சென்றது நான் உற்சாகமானேன்.(கலை கண் தாங்க) பெண்களின் கூந்தல்களைத் தாழம்பூ, செவ்வந்திப்பூ, மல்லிகை, முல்லை, செண்பகம் முதலிய மலர்கள் கொத்துக் கொத்தாய் அலங்கரித்தன.மேக் அப்கின்கிற பேருல இப்ப உள்ள பெண்கள் தங்கள் ஆழகை கெடுத்துகிறாங்க தோனுச்சு.அப்போது ஒரு வாலிப வீரன் குதிரை கடந்து சென்றுகொண்டிருந்தான்.கணேஷ் என் காதில் இவர் தான் வல்லவரையன் வந்தியத்தேவன் என்றார். நான் குதிக்கிறேன் ஐயோ ஐயோ கேமரா இருந்த போட்டோ பிடிதிருப்பேனே ,காஸ்டிங்கிற்கு உதவி இருக்குமே. புலம்பிக்கொண்டே நடக்க தொடங்கினோம்.
ஓர் அழகிய மாளிகைக்குள் (ஷாப்பிங் மால் ) நுழைத்தோம்.சுவர்களில் பல அழகிய வர்ணங்களில் தீட்டியிருந்த அற்புதமான சித்திரங்களைப் பார்த்துப் பார்த்துப் புளகாங்கிதம் அடைந்தோம்.பலாச் சுளைகளும் வாழைப் பழங்களும் கரும்புக் கழிகளும் பலவகைத் தின்பண்டங்களும் விற்பவர்கள் ஆங்காங்கே கடை வைத்திருந்தார்கள்.எங்களுக்கு எல்லாம் இலவசமாக கிடைத்தது.ரசித்து சுவைத்தோம் கண்ட கண்ட உரத்தை போட்டு இந்த பழங்களின் சுவையை நாம் இழந்த்துட்டோம் .ஓரிடத்தில் ஒரு பெருங்கூட்டம் நின்று கொண்டிருப்பதையும், அந்தக் கூட்டத்துக்குள்ளேயிருந்து யாரோ சிலர் உரத்த குரலில் வாக்குவாதம் செய்யும் சத்தம் வருவதையும் கவனித்தோம் . என்ன விவாதம் நடைபெறுகிறது என்பதை அறிந்து கொள்ள எங்களுக்கு ஆவல் பீறிட்டுக்கொண்டு எழுந்தது.அருகில் சென்றதும் இதுதான் குடவோலை வாக்கெடுப்பு முறை என கணேஷ் கூறினார்.
சார் அப்பவே வாக்கெடுப்பு முறை எல்லாம் இருந்துச்சா அப்படின்னு நான் கேட்டேன். ரொம்ப கண்ணியமான முறையில் வாக்கெடுப்பு நடக்கும் தம்பின்னு சொன்னார். நான் ஆர்வமாக கேட்க தொடங்கினேன் ...........
பகுதி 1
Tweet |
[ma]தங்களின் வருகைக்கு நன்றி[/ma]
ReplyDelete