11.05.2013

தன் பெயரில் ஒரு தெரு! உலகை வென்ற ஆஸ்கார் நாயகன்!


ரண்டு ஆஸ்கார் விருதுகள், இரண்டு கிராமி விருதுகள், ஒரு BAFTA(British Academy of Film and Telivision Arts) விருது, ஒரு கோல்டன் குளோப் விருது, நான்கு தேசிய விருதுகள், பதினைந்து ஃபிலிம்ஃபேர் விருதுகள், பதிமூன்று ஃபிலிம் ஃபேர் South விருதுகள் உட்பட மேலும் பல விருதுகள் வாங்கி இந்தியாவிற்கே புகழ் பெற்றுத்தந்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்தியா என்ன செய்தது என்பதை விட அவர் பிறந்த தமிழகம் என்ன செய்தது...


ஏ.ஆர்.ரஹ்மான் இல்லாமலேயே இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியதை விட என்ன செய்ய முடியும். இசைப்புயல் என்ற பட்டம் மட்டும் தான் ஹாலிவுட் சென்று ஆஸ்கார் அவார்ட் வாங்கியபோது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இருந்த ஒரே பட்டம். டாக்டர் பட்டம் கூட ஆஸ்கார் வாங்கிய பின்பு அளிக்கப்பட்டதே.

ஆனால் தற்போது கனடா நாட்டிலுள்ள மர்க்கம் எனும் ஊரின் ஒரு தெருவிற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரை வைத்து பெருமைப்படுத்தியிருக்கிறது அந்நாடு. ஏ.ஆர்.ரஹ்மானின் முழுப்பெயரான ‘Allah-Rakha Rahman’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த தெருவிற்குச் சென்று, அந்த பெயர்ப்பலகையை கையில் தாங்கியபடி ஃபோட்டோ எடுத்துக்கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் இந்த செய்தியை டுவிட்டரில் பகிர்ந்துகொண்டார். 

மேலும் ரஹ்மானின் புகைப்படத்துடன் 100 ஆண்டு இந்திய சினிமாவை கௌரவிக்கும் வகையில் தபால் தலையையும் வெளியிட்டு உள்ளது .  நன்றி   நக்கீரன்