6.08.2011

இரானுக்கும் இந்தியாவிற்கும் என்ன சம்பந்தம்?

ஈரான் நாட்டின் மகளிர் கால்பந்தாட்ட அணி ஒலிம்பிக் போட்டியின் தகுது சுற்றில் இருந்து வெளியேற்ற பட்டுள்ளது.இது தோல்வியால் அல்ல மாறாக இந்த பெண்கள் இஸ்லாமிய ஹிஜாப் அணிந்து விளையாட கூடாதாம் . இது செய்தி ,ஏன் இதை  இந்தியாவுல சொல்லணும் நம்ம நாட்டு பிரச்சனைகள் பத்தாதா அப்படின்னு தானே யோசிக்கிறீங்க.இல்ல ஆரம்பிச்சுட்டான் மதத்தை பத்தி பேசன்னு நினைக்குரின்களா ?இல்லை நான் எந்த மதமும் சம்மதம் இல்லாதவன்.நான் மார்க்கத்தை பேணி நடக்கும் (முயற்ச்சிக்கும் ) மனிதன். சோ என்னதான் உளருரேன்னு படிச்சு பாருங்க சரியா .............


பெண்களை இந்த விளையாட்டு போட்டிகளில் இருந்து வெளியேற்றியது ஒலிம்பிக் குழுவா அல்லது அவர்களின் மதமா?அந்த பெண்களின் மதம் அவர்களை தலையங்கியுடன்  விளையாட அனுமதி அளித்துள்ளது ஆனால் தலையங்கியுடன் விளையாட அனுமதி அளிக்காதது ஒலிம்பிக் குழு தான். 
தலையங்கி இல்லாமல் விளையாடும் பெண்களை எதுன்னை வக்கிர கண்கள்   பார்வையாலும் சில்மிஷங்களாலும் கற்பழித்து வருகிறது என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. யு டுபில் இருக்கும் வக்கிர வீடியோ காட்சிகள் சாட்சிக்கு போதுமானதாக இருக்கிறது . 


பொதுவாகவே கொஞ்சம் அவங்க அவங்க வேதங்களில் உள்ள செய்திய கொஞ்சம் புரட்டி பாருங்க .நான் புரட்டியதில் இந்த தலைப்புக்கு சம்பந்தம் உள்ள சில உங்கள் பார்வைக்கு 

ரிக் வேதம் பாகம் 8 ஹைம் 33 வசனம் 19 
ரிக் வேதம் பாகம் 10௦ ஹைம் 85 வசனம் 30௦ 
                     பெண்களின் உடை மற்றும் தலையங்கி அணிதல் மேலும் கண்ணியமாக நடந்து கொள்ளுதல் பற்றி சொல்கிறது 

பைபிள் டயு ட்டேரானம்மி  பாகம் 22 வசனம் 5 

                     பெண்கள் தலையங்கி அணிய வேண்டும் என சொல்கிறது ...
மேலும் ஓரிடத்தில்(அந்த வசனம் மறந்துவிட்டது மன்னிக்கவும்  )பெண்கள் தலையங்கி அணியாவிட்டால் அவர்களுக்கு மொட்டை அடித்து தண்டிக்க வேண்டும் எனவும் கூறுகிறது ..

நம்ம நம்ம வேர்கள் இவ்வாறு இருக்க நாம் இதையெல்லாம் மறந்தும் மறக்கடிக்க பட்டும் இருக்கிறோம் ..மறக்காமல் உலகில் அதிமாக பின்பற்றப்படும் (the most practicing religion) ஒரு மதத்தினரை குறி வைத்து இப்படி தாக்குதல் நடத்துவதில் யாருக்கு என்ன லாபம்.இவர்களும் தங்கள் வேதங்களை விட்டு விலகி வரவேண்டும் என்ற நயவஞ்சகம் தான் இது.

சரி நம்ம நம்ம வீட்டுல வேத புத்தகங்கள் இருக்கா? 


       எங்க சார் இருக்கு இருதிருந்தால் இன்னைக்கு எல்லா பெண்களும் தலையங்கியுடன் காட்சி தருவார்கள் ,உலகமே ஒரே கொள்கையோட ஒற்றுமையா இருந்திருக்கும். ஒரு சாரார் படிக்க தான் வேதம் என்றும் அவர்கள் படித்து சொல்வது தான் வாக்கு என்றும் சொல்லி சொல்லியே நம்மை சோம்பேறிகளாகி ஜாதி மதம் என்று பிரித்து கொல்றாங்க.இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும்.

ராமர் , இயேசு மொகம்மது இவர்கள் அனைவர்கள் மீதும் கட்டுகதைகள் யார் சொன்னாலும் நம்பி விடுகிறோம்.உடனே உண்டியலை குலுக்கி கோடிகளை குவித்து விடுகிறார்கள் போலி மதவாதிகள்.

போதும் இதற்கு தயவு செய்து முற்றுபுள்ளி வையுங்கள் அணைத்து வேதங்களையும் படிக்கச் சுலபமான வழிகள் பல இருக்கு ஆனா அதில் சுவாரசியம் கம்மி சோ நம்ம செய்யவே மாட்டோம். 

ஒரு நாத்திக வாதியின் வலைப்பக்கத்தில் போய் வேதம் படிக்க நினைக்காதிங்க அங்கே நமக்கு மேலும் குழப்பமே மிஞ்சும்.தெளிவான மனநிலையுடன் (குற்றம் கண்டுபிடிக்கவே சிலர் படிப்பதுண்டு) நமக்கு நாமே படித்து புரிந்தால் இறைவனை காணலாம் இன்புற்று வாழலாம்.இதுவரை நாம் செய்து வந்த தவறுகள் கூட புரியும் .

நம்ம உடம்புக்கு நோய் வந்தால் டாக்டர்கிட்ட தான் போகணும்.இது காலங் காலமாய் நம்ம உள்ளத்தை ஆட்கொண்டுள்ள நோய் இதற்கு இறைவனின் மாசற்ற வார்த்தைகள் (கட்டளைகள்) மூலமே நிவாரணம் கிட்டும் .
                 


14 comments:

 1. ஸலாம் சகோ.ரியாஸ்.

  சவுக்கடியான பதிவு..! நன்றி..!

  நேற்று இந்த மேட்டரை ட்விட்டரில் விட்டேன்.. இப்படி..!

  ///
  #FIFA
  பெண்ணுரிமைக்கு எதிராக FIFA..! ஆபாச ஆடை அணிய மறுத்த ஈரானின் பெண்கள் கால்பந்தாட்ட அணிக்கு தடை விதித்தது FIFA..!
  ////

  இப்படி ஈரானை அனுமதிச்சா அப்புறம் எல்லா வளைகுடா நாடும் வந்துடும் விளையாட..!

  ரெண்டு அணியும் முழுசா மூடிக்கிட்டு விளையாண்டா ஸ்டேடியத்துக்கு எவனும் வரமாட்டான்... மேட்ச் பார்க்க..!

  எல்லாமே டப்புமா.. டப்பு...!

  எப்படியோ ஒலிம்பிக்கில் அனுமதித்தார்கள்...!

  2008 பீஜிங் ஒலிம்பிக்கில் ஓடினார் பஹ்ரைனின் ருகையா ஹிஜாபுடன்...!
  வென்றார் தங்கப்பதக்கம்..!

  @ (இங்கே அவர் தங்கம் வெல்லும் ஃபோட்டோவை பாருங்கள்)

  அன்று மட்டும் அவர் அனுமதிக்கப்பட்டிருக்காவிட்டால்...?

  இனி நடுநிலையுடன் மக்கள் சிந்திக்கவேண்டும்..!

  முஸ்லிம் பெண்களுக்கான உரிமையை மறுப்பது யார் என்று..?

  ஈரான் அணியை குழிதோண்டி புதைத்துவிட்டு இனி சொல்வார்கள்...
  பெண்ணுரிமையை ஈரான் குழிதோண்டி புதைத்துவிட்டது என்று..!

  ReplyDelete
 2. @முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...//-----//நன்றி சகோ .வாசலாம் .ஆமா இனி நடுநிலையுடன் மக்கள் சிந்திக்கவேண்டும்..! நன்றி நன்றி

  ReplyDelete
 3. அற்புதமான பதிவு ரியாஸ்நடுநிலையின் அர்த்தம் சொன்ன பதிவு நண்பரேபெருமை கொள்கிறேன் உங்கள் பதிவுகளை படித்ததில்உங்களை பின் தொடர்வதில் எல்ல பக்கத்தின் நியாயங்களையும் அலசியவிதம் அபாரம் நண்பரே

  ReplyDelete
 4. அற்புதமான பதிவு ரியாஸ்நடுநிலையின் அர்த்தம் சொன்ன பதிவு நண்பரேபெருமை கொள்கிறேன் உங்கள் பதிவுகளை படித்ததில்உங்களை பின் தொடர்வதில் எல்ல பக்கத்தின் நியாயங்களையும் அலசியவிதம் அபாரம் நண்பரே

  ReplyDelete
 5. சிறந்த பதிவு தோழரே!

  தொடர்ந்து எழுதுங்கள். நானும் இதே தலைப்பில் நேற்று ஒரு பதிவிட்டுள்ளேன்.

  ReplyDelete
 6. Brother.. the bible verse is Corinthians 11:6

  ReplyDelete
 7. I condemn FIFA's decision and disagree with them. In my life, I argued for Muslim women's right with my Manager (I live in USA) when she said things against Hijab and Burqa in an official meeting about diversity and ethics. Having said that,I don't understand the title of the post? I believe India is a secular nation, your title and post gives a (indirect) meaning that India is a Hindu nation, Do you think everybody - so called hindus and Indian citizens - follows Rig Veda? You need to think clearly and write otherwise stop writing.
  Mohan

  ReplyDelete
 8. @A.R.ராஜகோபாலன் said...
  நன்றி நண்பரே ...உங்கள் வார்த்தைகள் நம்பிக்கை தருகிறது .நான் தொடர்ந்து எழுத நீங்களும் எளிய தமிழில் ரிக் வேதம் என்ற புத்தகம் வாங்கி படிங்க .நானும் படிக்கிறேன் சந்தேகம் வந்தால் உங்களை கேட்பேன் .நன்றி

  ReplyDelete
 9. @சுவனப்பிரியன் said...
  நன்றி முதல் வருகை மீண்டும் வருக

  ReplyDelete
 10. @Anonymous said...
  Brother.. the bible verse is Corinthians 11:6
  tq friend i will post this in my article once i go through the verse . tq for reading and sharing a important info . tq come again

  ReplyDelete
 11. @Anonymousr Mr.mohan said...
  tq bro for ur understanding and support for hijaab.india is a secular nation, am proud to be part of it.and i blame everyone in my article whoever forgot their roots r responsible for their laziness of not reading and understanding their own scripture.this arcticle didnt cry for irans scoccer team but for da whole of humanity. the title is just for attracting hits sorry if i hurt u ..plz come again tq tq tq

  ReplyDelete
 12. @சி.பி.செந்தில்குமார் said...சீரியஸ் பதிவு போல..//அப்பறம் நம்மள காமெடி பீஸ் வெளிய காட்டிக்க கூடாதுன்னு நீங்க தானே சொன்னீங்க ஹி ஹி

  ReplyDelete
 13. //நாத்திக வாதியின் வலைப்பக்கத்தில் போய் வேதம் படிக்க நினைக்காதிங்க அங்கே நமக்கு மேலும் குழப்பமே மிஞ்சும்.தெளிவான மனநிலையுடன் (குற்றம் கண்டுபிடிக்கவே சிலர் படிப்பதுண்டு) நமக்கு நாமே படித்து புரிந்தால் இறைவனை காணலாம் இன்புற்று வாழலாம்.இதுவரை நாம் செய்து வந்த தவறுகள் கூட புரியும் .

  நம்ம உடம்புக்கு நோய் வந்தால் டாக்டர்கிட்ட தான் போகணும்.இது காலங் காலமாய் நம்ம உள்ளத்தை ஆட்கொண்டுள்ள நோய் இதற்கு இறைவனின் மாசற்ற வார்த்தைகள் (கட்டளைகள்) மூலமே நிவாரணம் கிட்டும்.//

  மிகவும் அருமையானதோர் அலசல் கட்டுரை. நிறைவாக எழுதி முடித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. பகிர்வுக்கு நன்றிகள்.

  நேரம் கிடைக்கும் போது எனது இந்த இணைப்புக்குச் சென்று பாருங்கள்:

  இணைப்பு: http://gopu1949.blogspot.in/2012/04/blog-post_9165.html

  தலைப்பு: ”கடவுள் இருக்கிறாரா? அல்லது கடவுள் இல்லையா?”
  சூடான சுவையான விவாதங்கள்.

  அன்புடன் VGK

  ReplyDelete