6.15.2011

போலி மாலை, காக்கா கழிவு,காந்தி சிலை


அதிக நேரம் டிவி பார்ப்பதினால் சர்க்கரை நோய், இதய அடைப்பு மற்றும் இளம் வயதில் மரணம் ஆகியவை ஏற்படும் என்று அமெரிக்காவிலுள்ள "ஹார்வர்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்' என்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தனது ஆராய்ச்சிகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளது.
வீட்டுல மெகா சீரியல் பாக்காட்டி பூரி கட்டை ,விளக்கமாரை விட ....ஹி ஹி 

ஐரோப்பிய விண்வெளிக் கழகம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்பிட்டர் எனும் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. இது தொடர்ந்து விண்வெளியிலிருந்து படங்கள் எடுத்து அனுப்பி வருகிறது. செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்தபோது, அங்கு மகாத்மா காந்தியின் முகத் தோற்றமுடைய ஒரு பெரும் பாறையைக் கண்டதாக மட்டியோ லானியோ என்பவர் தெரிவித்துள்ளார்.

 மகாத்மா காந்தியை நினைவுபடுத்தும் வழுக்கைத் தலை, கனத்த புருவம், மீசை ஆகியவற்றைக் கொண்ட தோற்றமுள்ள பாறையைக் கண்டதாக, படங்களை ஆய்வு செய்த அவர் கூறியுள்ளார்.
அரசியல்வாதிகளின் போலி மாலை காக்காவின் கழிவுகள் இல்லாமல் அங்கே அவர் நிம்மதியா இருக்கட்டும்!! (ஹை டைட்டில் டைட்டில்) 

 இந்தியாவின் ரோஹன் போபண்ணா  பாகிஸ்தானின் குரேஷியுடன் இணைந்து ஜெர்மனியில் நடைபெற்ற கேரி வெப்பர் ஓபன் டென்னிஸ் போட்டியில் போபண்ணா பட்டம் வென்றார். தொடர்ந்து ஜெர்மனியின் ஹாலே நகரில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியிலும் அவர்கள் பட்டம் வென்றனர். இதனால் போபண்ணா தரவரிசையில் முன்னேறியுள்ளார்.போபண்ணா - குரேஷி ஜோடி இரட்டையர் பிரிவில் 6-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
அட இப்படி எல்லாத்திலையும் ஒற்றுமையா இருந்தா இருவருக்கும் (இந்தியா -பாக் )வெற்றிமேல் வெற்றி தான் ..ம்ம்ம் 

மகளிர் ஒற்றையர் தரவரிசையில் சானியா மிர்சா 58 இடத்தில் இருந்து 60 இடத்துக்குத் பின்தங்கியுள்ளார்.
சிபி அண்ணன் ஜோக் ஞாபகம்  வருது : பாகிஸ்தானுக்கு அதிகம் விளையாடுறார் போலிருக்கு ஹி ஹி 

மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையிலிருந்து ரஜினி நலமுடன் திரும்பியிருக்கிறார்.அங்கிருந்து நேற்று முதல்வர் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசினார். 
ஆஸ்ரம் பள்ளி கட்டணம் குறைப்பது பற்றி ஏதும் பேசினீர்களா 

பிரம்மபுத்திர நதியின் குறுக்கே சீனா அணை கட்டியிருப்பதால் நீரை மடை மாற்றம் செய்துள்ளது குறித்து அசாம் மாநில முதல்வர் தருண்கோகய் , வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார். சீனாவின் இந்த நடவடிக்கையால் அசாம் மாநில விவசாயப்பணிகள் பாதிக்கும் என்றார்.
ஸ்டேட் விட்டு ஸ்டேட்டே சரிபன்னமுடியல இதுல நாடு விட்டு நாடா அட போடா 

சமிபத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட மிட் டே பத்திரிக்கை நிருபருக்கு அமுல் நிறுவனம் ,இப்படி தன் விளம்பர பலகையால் " நல்லதை செய் பயபடாதே " என்று சொல்லி மரியாதையை செய்தது.இது தான் நேற்று ட்விட்டரில் டாப் ஹிட்டுகள் பெற்றதாம் .
அட வெண்ணைன்னு யாரும் சொல்லமுடியாது ..


சந்திர கிரகணத்தை முன்னிட்டு நம்ம கூகிள் வலைப்பக்கத்தில் இன்றைய டூடில் பார்தீங்களா ..அதில் நீங்கள் கண்டது நேற்று நேரடியாக படமாக்க பட்ட வீடியோ பதிவு தான் ..


இந்த மாதிரி சந்திர கிரகணம் பாக்க நூத்தி நுப்பது வருஷம் காத்துயிருக்கனுமாமே ,சரி சரி நம்ம பல இடங்களில் இருந்து 
இப்படி ஆசை தீர பார்த்துக்க வேண்டியது தான் .....


பல்சுவை பதிவர்ன்னு பேர் வாங்க இப்படி கதம்பம் தொடுக்கனும்ன்னு சொன்னாங்க ....நல்ல கேட்டுக்கோங்கோ நானும் பல்சுவை பதிவர் தான் ,நானும் பல்சுவை பதிவர் தான் ,நானும் பல்சுவை பதிவர் தான் ஆமா ஹி ஹி 

12 comments:

 1. மணக்கும் கதம்பம்தான். ஏற்றுக்கொண்டு வழிமொழிகிறேன் நீங்கள் ஒரு பல்சுவைப் பதிவர் என்பதை!

  ReplyDelete
 2. மணக்கும் கதம்பம்தான். ஏற்றுக்கொண்டு வழிமொழிகிறேன் நீங்கள் ஒரு பல்சுவைப் பதிவர் என்பதை!By சென்னை பித்தன் ////சும்மா ஒரு பிநிஷிங்க்க்காக சொன்னது ,நன்றி ஐயா

  ReplyDelete
 3. அட கலக்கல் காமெடி கும்மி..

  ReplyDelete
 4. அட கலக்கல் காமெடி கும்மி..By !* வேடந்தாங்கல் - கருன் *! நன்றி நண்பா

  ReplyDelete
 5. கதம்ப செய்தி உண்மையில் ரசிக்கும் படிஇருந்ததுங்க...

  தொடருங்கள்...

  ReplyDelete
 6. ஒத்துகொள்கிறேன் நிங்க பல்சுவை பதிவர்னு

  ReplyDelete
 7. கதம்ப செய்தி உண்மையில் ரசிக்கும் படிஇருந்ததுங்க... தொடருங்கள்...
  By # கவிதை வீதி # சௌந்தர்///
  நன்றி நன்றி நன்றி மீண்டும் வருக

  ReplyDelete
 8. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  ஒத்துகொள்கிறேன் நிங்க பல்சுவை பதிவர்னு
  ///////////////
  நன்றி நன்றி நன்றி மீண்டும் வருக

  ReplyDelete
 9. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  இன்று எனது வலையில்
  அவன்-இவன் திரைவிமர்சனம்

  காலையிலேயே படித்து ஓட்டும் போட்டாச்சு ....
  நீங்க தான் லேட்டு

  ReplyDelete
 10. நவரச பதிவு நண்பா, அசத்துறிங்க பல்சுவை பதிவர் என்கிற பட்டத்தை நானே சுயமாய் வழங்குகின்றேன் வாழ்க பல்சுவை பதிவர் ரியாஸ் வாழ்க பல்சுவை பதிவர் ரியாஸ் வாழ்க பல்சுவை பதிவர் ரியாஸ்

  ReplyDelete
 11. நவரச பதிவு நண்பா, அசத்துறிங்க பல்சுவை பதிவர் என்கிற பட்டத்தை நானே சுயமாய் வழங்குகின்றேன் By A.R.ராஜகோபாலன்///அஹா நண்பா சும்மா ஒரு பிநிஷிங்க்க்கு சொனேன் ...கிண்டல் பண்ணாதிங்க மீ பாவம்

  ReplyDelete