6.03.2011

கிட்னி விற்று ஐ -போன் வாங்கிய கொடுமை ...

         சீனாவில் அன்ஹுய் மாகாணத்தில்  ஒரு பதினேழு வயது விடலை பையன் தன் வசதிக்கு மீறிய விலையில் உள்ள ஐ -போன் வாங்குவதற்க்காக ,தனது பெற்றோருக்கு கூட தெரியாமல் தனது வலது கிட்னியை விற்று தனது ஆசையான ஐ-போனை வாங்கியுள்ளார். 

தனது மகனின் கையில் ஐ -போனை பார்த்தும் உடல்நிலை மாற்றங்களை பார்த்தும் சந்தேகப்பட்ட அவனது தாயார் விசாரித்ததில் கிட்னி விற்ற விடயம் தெரிந்து அதிர்ந்து உள்ளார் . இதை பற்றி காவல் நிலையத்தில் புகார் குடுத்து விட்டு ,இந்த கொடுன் செயல் புரிந்தவர்களை பிடித்து தண்டனை வாங்கி தருவேன் என பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளார் .போலீசார் திவீரமாக  விசாரித்து வருகிறார்கள்.

இந்த மாதிரி செய்திகள் நம்மை நிச்சியமாக  பாதிகின்றன. நாமமும் கூட இதற்கு பொறுப்பாளிகள் தான் .நமது குழந்தைகளோடு நாம் அதிக நேரம் செலவிட வேண்டும் .நமது பொருளாதார நிலையை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.வீண் விரயம் , ஆடம்பரம் போன்ற பகட்டு கள்ளி செடிகள் முளைக்கையிலையே கிள்ளி எரிந்திட வேண்டும் . 

வீட்டுக்கு வீடு செய்ய வேண்டிய புரட்சி இது.இப்படி செய்ய இந்த இயந்திர உலகத்தில் சாத்தியமாகுமா.

 .சாத்தியம் தான் GENERATION GAP  என்னும் மாயையை புறம்தள்ளி விட்டு நண்பர்கள் போல் பழகும் பெற்றோர்கள் அதிகம் பார்க்கிறோம். அவர்கள் தங்கள் குழந்தைகளிடம் இன்னும் மனம்விட்டு பேச வேண்டும் .
.இருப்பதை கொண்டு இன்பமாய் வாழ்தல் இனிது என்பதை தானும் பழகி தம் குழந்தைகளுக்கும் பழக்க வேண்டும்.
.பணவேட்டை ஒன்றே குறி என்பதை கடந்த சிந்தை கொள்ளுதல் வேண்டும் .வாழ்வில் அன்பும் ஒழுக்கமும் பேணும் கண்ணியம் வேண்டும் .

இதெல்லாம் நம்ம ஒவ்வொரு வீட்டிலும் தொடங்கி விட்டால் , ஊழலை ஒழிக்க        யாரும் உண்ணாவிரதம் இருக்க வேண்டியதில்லை தானே ஒழிந்துவிடும். நல்ல ஆரோக்கியமான சமுதாயமும் உருவாகும். 12 comments:

 1. சலாம் உண்டாகட்டும் சகோ. ரியாஸ் அஹமது,

  தன் மகனின் உடலில் கிட்னி களவு போனதை கூட அறியாத அளவுக்கு பெற்றோர் பாராமுகமாக இருக்கிறார்களே..!

  அதே நேரம், அவன் கையில் ஐ போன் இருப்பது மட்டும் பணம் நாடும் கண்ணுக்கு பளிச்சென தெரிகிறது..!

  கொடுமை..!

  இவர்களுக்கு பதிவில் அருமையான அறிவுரைகள் கூறியுள்ளீர்கள்..!

  பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 2. நாகரீகப் பொருள் மோகம் எந்த அளவுக்குப் போகிறது என்பதைப் பார்த்தால் வயிற்றில் அமிலம் சுரக்கிறது. இந்நிலையில் பெற்றோரின் பொறுப்பு நிச்சயம் அதிகமாகிறது!
  நல்ல பதிவு!

  ReplyDelete
 3. @முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...நன்றி மீண்டும் வருக .சலாம் சகோ

  ReplyDelete
 4. @ சென்னை பித்தன் said...//.............//நன்றி ஐயா ,,, மீண்டும் வாங்க

  ReplyDelete
 5. @NKS.ஹாஜா மைதீன் said...ஆமாம். பெருங் கொடுமை ,,,

  ReplyDelete
 6. நமது குழந்தைகளோடு நாம் அதிக நேரம் செலவிட வேண்டும் .நமது பொருளாதார நிலையை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.வீண் விரயம் , ஆடம்பரம் போன்ற பகட்டு கள்ளி செடிகள் முளைக்கையிலையே கிள்ளி எரிந்திட வேண்டும்

  உண்மையான வரத்தை ரியாஸ் , குழந்தை வளர்ப்பின் தத்துவம் இதுதான் ,

  ஆடம்பரம் இளைய சமுதாயத்தினரை எப்படி
  ஆட்டிபடைக்கிறது என்பதன் சரியான எடுத்துக்காட்டு
  நல்ல பதிவு நண்பரே

  ReplyDelete
 7. @ A.R.ராஜகோபாலன் said...நன்றி நண்பரே ,,,,,,,,,,

  ReplyDelete
 8. பாஸ் காலம் கெட்டுப் போச்சு, இந்த நிலமை எங்கள் நாடுகளுக்கு வரக் கூடாது சகோ.

  பிள்ளைகளைச் சரியாக வளர்க்காத பெற்றோரின் பாராமுகம் தான் இதற்கான காரணம்.

  ReplyDelete
 9. நிரூபன் said...//....................//உலகில் யாருக்கும் வரக்கூடாது சகோ ,நன்றி

  ReplyDelete
 10. பெற்றோர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய
  முக்கியமான தகவலைத் தந்துள்ளீர்கள்.அத்துடன்
  அவர்கள் தம் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய
  பயிற்சி தாங்கள் குறித்தது நடைமுறைச் சாத்தியமானதே!...
  இதை என் அனுபவத்தில் சொல்கிறேன்.பகிர்வுக்கு நன்றி
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. @அம்பாளடியாள் said...
  ///........///

  முதல் வருகை என் முதல் நன்றி ...இங்கே முதல் தேவையில்லை ஆதலால் தொடர்வோம் நன்றி மீண்டும் மீண்டும் varuka

  ReplyDelete