6.08.2011

உதயசூரியனை கண்காணிக்க வருகிறார் ஆதித்தியா


நம்ம சூரியன் (அட வானத்துல இருக்குற சூரியன் தாங்க ) பற்றி இத்தனை நாள்ளா நம்மக்கு எல்லாம் ரொம்ப கம்மியான விஷயங்கள் தான் தெரிஞ்சு வச்சிருகோமாமே. அதனால அத பத்தி இன்னும் அதிகமா ஆராய்ச்சி பண்ணி தெரிஞ்சுக்க நம்ம இஸ்ரோ ஆதித்தியா 1 அப்படிங்குற பேர்ல ஒரு விண்கலத்தை ருபாய் 200 கோடி செலவுல வானத்தில் மிதக்க விட போறாங்களாம்.நம்ம பூமியில் இருந்து சுமார்  800கிலோமீட்டர் தூர உயிரதில் இருந்து சூரியனை பற்றி தகவல்கள் புட்டு புட்டு வைக்க போகிறார் ஆதித்தியா. ஏற்கனவே  சந்திரயான் வெற்றிகரமாக நிலவை ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கு , சூரியனை  வேவு பாக்க இந்தியாவுல இருந்து மொதோ மொதோ போக போற விண்கலம் இது.இதனால வானிலை மாற்றங்கள் ,குளோபல் வார்மிங் பற்றி பல அவசியமான தகவல்கள் கிடைக்குமாம் .

ஒரு டவுட்டுங்க  என்னன்னா ரொம்ப நாள்ளா அமெரிக்காவும் ரஷ்யாவும் போட்டி போட்டு கிட்டு விண்கலம் அனுப்பியும் , சூரியனை பற்றி ரொம்ப கம்மியான விஷயம் தான் எங்களுக்கு தெரியிம்ன்னு சொல்றது விசித்திரமா தானே இருக்கு ...இப்படி ஒரு பதிவை போட்டுட்டு நானும் அரைகுறையா போக கூடாது அதனால நேத்து நாசா வெளியிட்டுள்ள சூரியன் பற்றிய புத்தம் புது வீடியோ ....


பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக உங்கள் கண்கள் இதுவரை கண்டிராத காட்சி 
சில அறிய  புகைப்படங்கள் 

அட நம்புங்கள் இதுவும் சூரியன் தான் 

இத பத்தி பள்ளிகூடத்தில ஒழுங்கா படிச்சு இருந்தா இன்னும் பயனுள்ள பதிவா இதை தந்து இருக்கலாம் நம்ம தான் நுனிப்புல் ஆச்சே சோ இவ்வளவுதான் என்னால முடிந்தது ....வரட்டா 

6 comments:

  1. அருமையான வீடியோவும் புகைப் படங்களும்! மேலும் அறிய ஆவலைத்தூண்டுகிறது!

    ReplyDelete
  2. @சென்னை பித்தன் said...வாங்க ஐயா.. டெய்லி உங்களை எதிர்பார்ப்பேன் இன்னைக்கு வந்ததற்கு நன்றி .. மீண்டும் வருக

    ReplyDelete
  3. ரியாஸ் நீங்களும் அரசியல்ல குதிச்சிட்டிங்கலோன்னு நினைச்சேன் , இது திருமதி கனிமொழியின் மகன் அதித்யா பற்றிய செய்தியோன்னு நினைச்சி உள்ளே நுழைஞ்சேன் , நல்ல அறிவியல் பதிவு கலக்கல்

    ReplyDelete
  4. @A.R.ராஜகோபாலன் said...//----------//நன்றி வருகைக்கு சகோ

    ReplyDelete
  5. புதிய தோர் அறிவியற் தகவலை அருமையான வீடியோ பகிர்வுடன் அரசியல் தலைப்போடு இணைத்து தந்துள்ளீர்கள். பகிர்விற்கு நன்றி சகோ.

    ReplyDelete
  6. நிரூபன் said...//---//நன்றி சகோ ..மீண்டும் வருக

    ReplyDelete