6.11.2011

அடச்சீ ச்சே இதுவா கன்னி முயற்சி !!ஹி ஹி

முகமூடி 


கண்ணாடி முன் கூட கண்மூடி 
முகம் பார்க்கவைக்கும் முகமூடி 

ஏன் எதற்கு என்று கேட்காமல் 
என் அப்பன் தந்ததால் அணிந்துகொண்டேன் ..
நண்பர்களும் அவ்வாறே அணிந்திருக்க கண்டேன் ..நண்பன் என்று தோள்சாய்ந்தாலும் 
சகோதரன் என்று கை குலுக்கினாலும் 
என் முகமூடி அவிழவில்லை
அவர்களுக்கும்  அப்படியே

மூட்டிக்கொண்ட வேளைகளில் கூட 
எதிரிகளாய் நண்பன்தான் நிறமாறினானே ஒழிய
முகமூடி அவிழவில்லை எவருக்கும். 

சிறகு முளைத்ததாய் சொன்ன வயதில் 
சில கருப்பு சட்டைக்காரர்கள் முகமூடி இல்லாமல் 
பார்த்த ஞாபகம் . 
அதுவும் கூட அர்த்தங்களில்லா
முகமூடி தான் என பின்னாளில் புரிந்தது. 


 ஐம்புலன்களையும் முகமூடி மறைப்பதால்
குரங்கை வைத்து நல்லது சொன்னாலும்  கேட்பதில்லை.
குறளை கொண்டு நல்லது சொன்னாலும் கேட்பதில்லை.
நல்லவற்றை தேடுவதற்கு யாருக்கும் நேரமில்லை .


இப்படியே கழிந்த நாட்களில் 
நான் தெளிந்த பொழுதில் 
துறந்தேன் முகமூடியை 

உணர்ந்தேன் என் முகவுரையை.

முகமூடி துறந்த பின்பே 
அகிலதின் அழகு புரிந்தது 
அன்பின் வழி தெரிந்தது 
மனிதம் கொல்லும் அத்தன்னை 
வேஷத்திருக்கும் ஆயுதமாய் 
என்னை துரத்திய முகமூடி எனக்கு இனி 
ஒரு பொழுதும் வேண்டாம்.

இன்னும் முகமூடி எதுவென புரியாதோர்க்கு!
யானைகள் முகமூடி அணிவதில்லை தான் ,
அதுக்களுக்கும் இது பிடிக்கும் 
பிடித்தால் அதுவும் கொல்லும்
நம்மைபோலவே !
**********

சபையில் நிச்சியம் எனக்கு முட்டை ,கல் ,தக்காளி அடி விழாது என்கிற தைரியத்தில் கிறுக்கியது ..என் முதல் படைப்பு . நேர்மையான விமர்சனங்கள் மற்றும் திருத்தங்கள் வரவேற்கபடுகிறது ...
                                                  உங்கள் அன்பு ரியாஸ் 

6 comments:

 1. ""முகமூடி துறந்த பின்பே
  அகிலதின் அழகு புரிந்தது
  அன்பின் வழி தெரிந்தது
  மனிதம் கொல்லும் அத்தன்னை
  வேஷத்திருக்கும் ஆயுதமாய்
  என்னை துரத்திய முகமூடி எனக்கு இனி
  ஒரு பொழுதும் வேண்டாம்.""


  முகம் மூடி இருந்த கைகளை
  சற்றே விளக்கி
  கவித்துவமாய்
  முகமூடி
  கவிதை எழுத வைத்து இருக்கீங்க நண்பரே

  அற்புத கருத்தை
  நிதர்சனமாய்
  சொன்ன விதம்
  கம்பீரம்

  ReplyDelete
 2. @A.R.ராஜகோபாலன் said...நல்லவேளை யாரும் இன்னும் திட்டவில்லை !! ஹையா ஒருத்தர் பாராட்டுறார் .நன்றி அன்பரே .

  ReplyDelete
 3. மேட்டர் என்னோமோ ஒரு மாத்ரீனு இருகுன்ம்னு உள்ள போன ,,எல்லாம்,,, மூடி,,, கிடக்கு ,,

  ReplyDelete
 4. இப்ப எல்லாம் இப்படிதான் நல்லது சொல்ல வேண்டியதா இருக்கு mr. ashraf khan ..tq come again

  ReplyDelete
 5. முக மூடி கவிதையூடாக மனித மனங்கள் பலவற்றை அலசியுள்ளீர்கள்..

  ஒவ்வோர் மனிதனும் ஓர் முகமூடியுடன் தான் வருகிறான் என்பதனை அழுத்தமாகச் சொல்கிறது உங்கள் கவிதை.
  முதல் முயற்சியே அருமையாக இருக்கிறது சகோ.

  தொடர்ந்தும் எழுதுங்க சகோ.

  ReplyDelete
 6. @@@@நிரூபன் ........நன்றி சகோ ...

  ReplyDelete