6.18.2011

ஜொள்ளு விட கிடைத்த லைசென்சே...மனைவி ....

பாதி மீதி என்ற கணக்குகள் 
பாராமல் நான் கொண்ட காதல் .
அடுத்தொரு பிறவி நமக்கில்லை என்பதால்
யாதுமாய் உனதருகில் அன்புடன் நான் 
தொடரவே விரும்புவதால் உன் கேள்விகள் 
சிலவற்றுக்கு என் பதில் கேளடி கண்மணி 

காதல் குறைந்துவிட்டது என்கிறாய் !
சிகரங்கள் தொட்ட பிறகு 
அங்கேயே தங்கிவிட்டால் விறைத்துவிடுவோம்.
இறங்கித்தான் ஆகவேண்டும்,சாதனையாய்
வெற்றியாய் பெருமிதமாய் காதல் தொடருதடி 
 இதில் குறையேதுமில்லை குறையப்போவதும் இல்லை .

சிறைவைத்து விட்டதாய் சிணுங்குகிறாய் ?
நான் என்ன இராவணனா உன்னை சிறைவைக்க 
கடன்பட்டு கலங்கி நிற்ப்பதால் குழம்பிவிட்டாயோ?
கடவுச்சீட்டு இல்லா பறவை போல் 
உன்னோடு எனக்கும் சிறகடிக்க ஆசைத்தான் 
கொஞ்சம் பொறு ஊக்கம் கொடு 
இறைவன் நாடட்டும் சிறகடிப்போம் !

நிரம்பி வழியும் காதலை 
கொஞ்சமாய் எழுத தெரிந்த எனக்கு 
கொஞ்சலாய் சொல்லத் தெரியவில்லை தான்!
என் காதலை சொல்லில் தேடாதே 
உனக்கான உழைப்பில் உண்மையில் தேடு .

நம் காதலில் கூட புயல் வீசிய பொழுதுகள் 
இருக்கத்தான் செய்கிறது ,அதில் நான் 
தவறிய அத்தனை கணத்திற்கும் 
மன்னிப்பை வேண்டுகிறேன்.
மன்னிப்பாயா கண்மணியே !!!

ரியாஸ் 

என்னோமோ ப்ளாக் எழுதுரின்களே என்னை பத்தி எதாவது எழுதுங்க அப்படின்னு என் பொண்டாட்டி கேட்டா ...அவளுக்கு தமிழ் படிக்க தெரியாதுங்குற நம்பிக்கையில நான் கிறுக்கியது ...ஹி ஹி 

என் தவறுகளை நண்பர்கள் திருத்துவார்கள் என நம்புகிறேன் !!

10 comments:

 1. ம்...ம்...நடக்கட்டும், நடக்கட்டும்

  ReplyDelete
 2. ம்...ம்...நடக்கட்டும், நடக்கட்டும்By ரஹீம் கஸாலி......................அட குருவே வாங்க வாங்க ....நன்றி மீண்டும் வருக

  ReplyDelete
 3. ஆஹா

  மனம் கவர்ந்த வரிகள் நண்பா
  காதலை கனிவாய்
  சொன்ன விதம் அற்புதம்
  சகோதரிக்கு விளக்குங்கள்
  சொக்கி போவார்
  என்னைப் போலவே
  மனதில் தென்றல்
  சாமரம் வீசிய வரிகள்
  காதலை மென்மையாய்
  சொன்ன விதம் அபாரம்

  ReplyDelete
 4. ஆஹா மனம் கவர்ந்த வரிகள் நண்பா காதலை கனிவாய் சொன்ன விதம் அற்புதம் சகோதரிக்கு விளக்குங்கள் சொக்கி போவார் .......அபாரம்By A.R.ராஜகோபாலன்......................நன்றி நண்பா நன்றி நண்பா

  ReplyDelete
 5. @@@@@@@@@@@A.R.ராஜகோபாலன் said...
  உங்களை போல எழுத என்னால் முடியாது ...உங்கள் அன்பிற்கு நன்றி

  ReplyDelete
 6. உங்கள் மனைவி பாக்கியசாலிதான். சொன்னால்தான் காதலா?உங்கள் உள்ளம் பேசும் மொழியே எல்லாம் சொல்லி விடுமே!

  ReplyDelete
 7. @@@@@ சென்னை பித்தன் said...
  உங்கள் மனைவி பாக்கியசாலிதான். சொன்னால்தான் காதலா?உங்கள் உள்ளம் பேசும் மொழியே எல்லாம் சொல்லி விடுமே!
  //////////////////////
  வாங்க ஐயா...ரொம்ப நன்றி ஐயா சரியாய் சொனீங்க

  ReplyDelete
 8. லைசன்ஸ்தார் அப்ரூவல் குடுத்துட்டாரா? ஹா ஹா

  ReplyDelete
 9. சி.பி.செந்தில்குமார் said...
  லைசன்ஸ்தார் அப்ரூவல் குடுத்துட்டாரா? ஹா ஹா
  /////////////////////
  ne he he ...kodutthaaru kodutthaaru

  ReplyDelete
 10. கணவன் மனைவிக்கிடையிலான யதார்த்தம் நிறைந்த குடும்பச் சுமை கலந்த உரையாடலினைக் கவிதை வடிவில் தந்திருக்கிறீங்க,
  உங்களின் நகைச்சுவை உணர்வு கவிதைக்கு மேலும் பலம் சேர்க்கிறது,
  ரசித்தேன் சகோ.,

  ReplyDelete