6.14.2011

விஸ்வரூபம் கமலின் ஒப்பற்ற ஒப்பனைவிஸ்வரூபம் கமலஹாசனே நடித்து இயக்கும் அடுத்த படம். அதன் முதல் கட்ட வேலைகளில் மூழ்கி இருந்த உலக ஞானி நமக்காக பரபரப்புக்கு இடையே அளித்த பேட்டி ......................

செல்வராகவன் இயக்குவதாக சொல்லப்பட்டு இப்போ நீங்களே களத்தில் குதித்து இருப்பது ஏன் ?
என்னவோ அவரின் அசௌகரியம் எனக்கு தெரியாது ,என்னை இயக்குமாறு தயாரிப்பாளர் கேட்டுக்கொண்டதால் நான் காமராவுக்கு முன்னும் நிற்கிறேன் பின்னும் நிற்கிறேன் .தலைப்பே விஸ்வரூபம் என்பதால் எடுத்து தானே ஆகணும் .

உங்களுக்கும் செல்வராகவனுக்கும் சண்டை ?
அடுத்த வருடம் அவருக்கு சௌகரியப்பட்டால் எனக்கும் சம்பளம் சௌக்கியம் என்றால் ஒரு படம் நடிக்க வாய்ப்பு இருக்கு ..

உங்களுடன் இயக்குனர்கள் மோதுவது புதிது அல்லவே ?
மோதல் கணவன் மனைவிக்கு கூட வரும் போகும் .ஆனால் குடும்பம் சிதறக்கூடாது அது தான் முக்கியம்.கணவன் மனைவி பிரியலாம் தாய் தந்தை பிரியக்கூடாது . நான் சகலகலா வல்லவன் என்னை பொருந்தி நடந்தால் பிரச்சனை என்றும் வராது .AS A MATTER OF FACT தயாரிப்பாளருக்கு வேணா வரலாம் .

விஸ்வரூபம் ஹனி பால் என்னும் ஹாலி வுட் திரைப்படத்தை தழுவிய கதை என்பது உண்மையா ?
எனக்கு ஹாலி வுட்டை காபி அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கு சண்முகம் அண்ணாச்சி, அப்பா சிவாஜி ,திலிப் குமார் ,ராஜ்கபூர் போன்றவர்களிடம் இல்லாத ஒன்று அங்க என்ன இருக்கு .நீங்க எல்லாம் டாலரில் டிக்கெட் வாங்க தயாரென்றால் எங்கள் தரம் அவர்களை மிஞ்சும் .இந்த மாதிரி கேள்விகள் நீங்க அவங்கள கேட்பீர்கள் .

ஆனால் அமீர் கான் தன் தயாரிப்புகள் மூலம் அடிக்கடிஆஸ்கார் கதவுகளை தட்டியும் பரிட்சார்த்த முயற்சிகளில் வெற்றியும் பெற்று முன்னிலையில் இருக்காரே ?
அமீர் கான் குள்ளம் தான்னு நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது   இல்லை ஆனால் அவர் சார்ந்து உள்ள சினிமாவின்  வியாபாரம் உயரம். இந்த கோடுகள் எனக்கு விருப்பமானது அல்ல இதை களைந்து பார்க்கும் பக்குவம் உலகுக்கு வேண்டும் . உங்களுக்கும் ஞாபக மறதி அதிகம் அதற்கு வைத்தியம் பார்க்க வேண்டியது என் வேலை அல்ல .

மகள்கள் மற்றும் கௌதமியுடன் வாழ்க்கை எப்படி இருக்கு?
நலமாக இருகிறேன் .இத்துடன் நிறுத்தி விடுங்கள் மேலும் பேசலாம் அதற்கு நான் சுயசரிதை எழுதுவேன் அதுவரை காத்திருங்கள். அவசரப்பட்டு என் பாத்துரும் வந்து எட்டி பார்க்காதீங்க 

விஸ்வரூபம் ஒப்பனை பற்றி?
நீங்க பொத்தான் வைத்து சட்டை போட்டுயருப்பது உங்களுக்கும் ஆச்சரியமில்லை எனக்கும் அப்படி தான் . நடிகன்னுக்கு  ஒப்பனை அவசியம். கதைக்கு ஏற்ற ஒப்பற்ற ஒப்பனை எதிர்பாருங்கள்  

ஹீரோ இன் சோனக்ஷி பற்றி ?
என் நண்பனின் மகள் .தயாரிப்பாளரிடம் அவங்க கால் சீட் இருந்தது அதனால் அவங்க நடிக்கிறாங்க 

முத்த காட்சிகள் எதிர்பாக்கலாமா ?
முத்தம் என்று சொல்லி மொத்தமாய் கதை கேட்டுவிட்டு தான் விடுவீர்கள் போல இருக்கு .இதுவரை மூன்று முறை கதை கேட்டுவிட்ட தயாரிப்பாளருக்கு புரிந்து இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் . அந்த தயாரிப்பாளர் நான் தான் 
***********************************************

சரி இந்த பேட்டியில் எந்த இடத்தில் இது நிஜமல்ல டூப்பு என்பதை கண்டுபிடித்தீர்கள் ....கருத்திடும் போது சொல்லவும் .வாக்களித்து செல்லவும் 18 comments:

 1. !* வேடந்தாங்கல் - கருன் *! said...

  நீங்களுமா?


  ஒரு காதலின் சவப்பெட்டியாய் ...!

  மாப்ளை நீயுமா? ஹா ஹா

  ReplyDelete
 2. நீங்களுமா? ஒரு காதலின் சவப்பெட்டியாய் ...!By !* வேடந்தாங்கல் - கருன் /////////நன்றி சகோ நீங்க என்னை படிக்கும் போதேல்லாம் நான் உங்களை படித்துகொண்டு இருகிறேன் .நன்றி

  ReplyDelete
 3. ரீல் பேட்டியா? ஹா ஹாBy சி.பி.செந்தில்குமார்//////////நன்றி நன்றி

  ReplyDelete
 4. மாப்ளை நீயுமா? ஹா ஹாBy சி.பி.செந்தில்குமார் ////////////////////எல்லோருக்கும் விளம்பரம் தேவைபடுது விடுங்க ..நம்ம அண்ணன் தானே

  ReplyDelete
 5. நண்பா உங்களின் கற்பனை என்னை எல்லாமுமே நிஜம் தன் என என்ன வைக்கிறது கமலை நன்கு கூர்ந்து கவனித்து அவதானித்து இருக்கீங்க மிக நாள் பதிவு அப்புறம் ஓடும் போட்டாச்சி

  ReplyDelete
 6. நண்பா உங்களின் கற்பனை என்னை எல்லாமுமே நிஜம்.......பதிவு அப்புறம் ஓடும் போட்டாச்சிBy A.R.ராஜகோபாலன்////நன்றி நண்பா

  ReplyDelete
 7. கமலை மிக அவதானித்து எழுதியுள்ளீர்கள்....... பாராட்டுக்கள்.

  ReplyDelete
 8. கமலை மிக அவதானித்து எழுதியுள்ளீர்கள்....... பாராட்டுக்கள்.By சி.கருணாகர///////////நன்றி உங்கள் பாராட்டு சந்தோசம் அளிக்கிறது

  ReplyDelete
 9. கமல் பேட்டியில் முதல் இரண்டு பதில் வரை சந்தேகமில்லை...கலர் ஓவரா இருக்கு எடுத்து விடுங்க

  ReplyDelete
 10. நீங்களுமா?


  ஒரு காதலின் சவப்பெட்டியாய் ...!
  //
  நீங்களும் விளம்பரமா...வால் மாதிரி இது எதுக்கப்பா

  ReplyDelete
 11. கமல் பேட்டியில் முதல் இரண்டு பதில் வரை சந்தேகமில்லை...கலர் ஓவரா இருக்கு எடுத்து விடுங்க By ஆர்.கே.சதீஷ்குமார் ////அப்படியா உங்களுக்கு சபாஷ் நீங்கள் தான் இன்றைய வெற்றியாளர் ,,,

  ReplyDelete
 12. நீங்களுமா? ஒரு காதலின் சவப்பெட்டியாய் ...! // நீங்களும் விளம்பரமா...வால் மாதிரி இது எதுக்கப்பாBy ஆர்.கே.சதீஷ்குமார் ..............................ஒரு விளம்பரம் தான் விடுங்க பாஸ் நம்ம அண்ணன் தானே

  ReplyDelete
 13. ஓட்டு போட்டாச்சி..By ஆர்.கே.சதீஷ்குமார்..........................நன்றி நன்றி சகோ மீண்டும் வருக ..ரொம்ப மகிழ்ச்சி

  ReplyDelete
 14. பாஸ், பதிவினைப் படித்தேன், ஆனால் கமல் பேட்டியில் கௌதமி பற்றிக் கேட்டிருப்பது தானே தவறு;-))

  ReplyDelete
 15. பாஸ், பதிவினைப் படித்தேன், ஆனால் கமல் பேட்டியில் கௌதமி பற்றிக் கேட்டிருப்பது தானே தவறு;-))By நிரூபன் நன்றி சகோ ....கமலும் கௌதமியும் இப்போ கணவன் மனைவி போல் living together .அதான் கேட்டேன் ..நன்றி சகோ

  ReplyDelete